search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் சேரவேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார். #ParliamentElection #BJP #RamdasAthawale #ADMK #AMMK
    புதுச்சேரி:

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று புதுச்சேரிக்கு வந்தார். தனது துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர்,  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேரவேண்டும்.

    தமிழகத்தின் நலனை கருதி அ.ம.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். #ParliamentElection #BJP #RamdasAthawale #ADMK #AMMK
    புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயவேணி சென்ற கார் மீது மர்ம நபர்கள் இன்று திடீரென தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #CongressMLA #CarAttack
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விஜயவேணி.  இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், விஜயவேணி இன்று மாலை காரில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இவரது காரை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் அவரது காரின் கண்ணாடிகள் உடைந்தன.

    இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ சென்ற கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #CongressMLA #CarAttack
    புதுவையில் டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை காராமணிக்குப்பம் மாரியம்மன் நகர் மூவேந்தர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது62). இவர் புதுவை கால்நடை துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது இவர் ரெயின்போ நகரில் கால்நடைகளுக்கான கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை மனோகரன் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ரூ. 1½ லட்சம் பணத்தை எடுத்து பேக்கில் வைத்து தனது காரில் கொண்டு வந்தார். காரை கிளினிக் அருகே நிறுத்திவிட்டு கிளினிக் உள்ளே சென்றார். பின்னர் வீட்டுக்கு செல்ல காரை எடுக்க வந்தபோது காரின் பக்கவாடு கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரில் பேக்கில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வங்கி புத்தகம், ஏ.டி.எம். கார்டுகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வங்கியில் இருந்து நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மனோகரன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
    புதுவை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய முதலியார் சாவடியில் தனியார் விருந்தினர் விடுதி உள்ளது. அங்கு புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அதில், ஒரு விடுதியில் கேரள வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாடி விட்டு வெளியே வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அவர்களிடம் மோதலில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினர். வழிப்பறியிலும் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் விசாரித்தனர். கேரள வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டது பெரிய முதலியார் சாவடியை சேர்ந்த பாலச்சந்தரன் (வயது 20), காளிமுத்து (22), அப்துல்லத்தீப் (20) என்பது தெரிய வந்தது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #TN #Pondicherry
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. சென்னையை பொறுத்தமட்டில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. நேற்று காலையில் இருந்தே மழைக்கான அறிகுறியுடன் ரம்மியமான சூழல் காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரையிலும் மழை பெய்யவில்லை.

    இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    குமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஆணைக்காரன் சத்திரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    சிதம்பரம், சேத்தியாதோப்பு, ராமநாதபுரத்தில் தலா 3 செ.மீ., ராமேசுவரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார் கோவில், மன்னார்குடி, சென்னை விமான நிலையம், சீர்காழி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், நெய்வேலியில் தலா 2 செ.மீ., குடவாசல், வலங்கைமான், வானூர், நன்னிலம், நீடாமங்கலம், நாகை, மயிலாடுதுறை, வந்தவாசி, திருச்செந்தூர், விழுப்புரம், ஜெயங்கொண்டம், பாபநாசம், உத்திரமேரூர், ஆலங்குடி, திருவாடானையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. #Rain #TN #Pondicherry
    அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி பெரியார்நகர் சங்கோதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 60). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவரது மனைவி வனஜா(50). இவர்களுக்கு வெங்கடேஸ்வரி, ஹேமலதா, தீபாவதி(23) என 3 மகள்கள் உள்ளனர். இதில் வெங்கடேஸ்வரி, ஹேமலதா ஆகிய 2 பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

    தீபாவதி மாலத்தீவில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் புதுவை திரும்பினார். தற்போது புதுவை மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தனர்.

    அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் பாலகிருஷ்ணன் சண்டை போடுவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. இதனை வழக்கமான சண்டை தான் என அருகில் இருந்தவர்கள் கருதினர். நேற்று காலை வெகுநேரமாகியும் பாலகிருஷ்ணன் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன், வீட்டுக்குள் பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தொங்கியதை பார்த்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் அந்த வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கதவின் பூட்டை உடைந்து உள்ளே சென்று பார்த்ததில் பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பூட்டப்பட்டு கிடந்த மற்றொரு அறையின் கதவின் அடிப்பகுதி வழியாக ரத்தம் வெளியே வந்து உறைந்து கிடந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த கதவை திறந்து பார்த்தனர். அங்கு வனஜாவும், தீபாவதியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கட்டையால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

    இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் அந்த வீட்டின் முன் கூடினர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு காணப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் மகள் தீபாவதிக்கு அடுத்த மாதம் நடைபெற இருந்த திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதும், இதனால் ஆத்திரமடைந்து மனைவி, மகளை கொலை செய்துவிட்டு பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    மனைவி, மகளை கொலை செய்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் எனவும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. #PuducherryAssembly #NominatedMLAs
    புதுடெல்லி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த நிலையில், ஆளுநரே நேரடியாக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.



    இவர்களது நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், நியமனம் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

    அதன்பின்னர் தொடர்ந்து நடந்த வாதப் பிரதிவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என அறிவித்தனர். மேலும்  எம்எல்ஏக்கள் நியமனம் விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்றும் அறிவுறுத்தினர். #PuducherryAssembly #NominatedMLAs
    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4, 5 மற்றும் 6-ந்தேதிகளில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #TN
    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



    4, 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யலாம். நாளை முதல் அநேக இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rain #TN
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குனர் ஆர்.சித்தார்த்தன், தலைமை பொது மேலாளர் வி.கோபாலகிருஷ்ணன், பொது மேலாளர் எஸ்.அண்ணாமலை, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பிராந்திய சில்லரை விற்பனை தலைவர் சந்தீப் மகேஸ்வரி மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மாநில சில்லரை விற்பனை தலைவர் வி.நாகராஜன் ஆகியோர் கூட்டாக, சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு படிம எரிபொருள் சக்தி முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கேற்ப பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    பெட்ரோல் விற்பனை 8 சதவீதமும், டீசல் விற்பனை 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்.

    இதன்படி, தமிழகத்தில் 5,125 மற்றும் புதுச்சேரியில் 132 என மொத்தம் 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் புதிதாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான டீலர்களை நியமிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

    பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்க விண்ணப்பிக்க புதிய வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான எளிதான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    பெட்ரோல் நிலையம் அமைக்க நிலம் இருப்பவர்களும், நிலம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அதிகாரிகள் கேட்கும்போது, பெட்ரோல் நிலையம் அமைக்க நிலம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். முதன் முறையாக கம்ப்யூட்டர் மூலம் டீலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக அமைந்திருக்கும்.

    நகர்ப்புறங்களில் பெட்ரோல் நிலையம் தொடங்க ரூ.65 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையும், கிராமப்பகுதிகளில் தொடங்க ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையும் செலவாகும். இந்த புதிய பெட்ரோல் நிலையங்கள் நெடுஞ்சாலை பகுதிகள், வயல்வெளிகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் அமைக்கப்படும்.

    இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலின் அளவு மற்றும் தரம் குறைவாக இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மோசடி நடந்தாலோ அதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    அதேபோல் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டரின் எடை குறைந்தாலோ, கூடுதல் பணம் கேட்டாலோ ஏஜென்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டியின்போது இந்தியன் ஆயில் நிறுவன பொதுமேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) சபீதா நட்ராஜ் உடனிருந்தார்
    கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Puducherry
    புதுச்சேரி :

    கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயலை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.  இதனிடையே புதுச்சேரி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் மாணவர்களின் புத்தகம் உள்ளிட்ட பொருட்களும் சேதம் அடைந்துள்ளது.

    இந்நிலையில் திருவாரூரில் உள்ள 5 தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Puducherry
    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி தமிழகத்தை நெருங்குவதால் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #rain #Chennai #WeatherResearchCenter
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டி போட்டது. அதன்பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

    இந்தநிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதியில் நேற்று முன்தினம் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (20-ந்தேதி) தமிழகம், புதுச்சேரி கடலோரப்பகுதியில் நிலைகொள்ளக்கூடும். இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதுமேலும் மேற்கு திசையில் நகர்ந்து நாளை (20-ந்தேதி) தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர பகுதிகளில் நிலை கொள்ளக்கூடும்.

    இது அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும். தொடர்ந்து நாளை (20-ந்தேதி) மற்றும் 21-ந்தேதிகளில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.

    அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மற்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    எனவே மீனவர்கள் 20,21-ந்தேதிகளில் தமிழக கடற்கரை மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 20,21-ந்தேதிகளில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யும்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் இன்றுவரை தமிழகம் முழுவதும் 24 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆனால் 30 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். இது 20 சதவீதம் குறைவாகும்.

    சென்னையில் இதுவரை 21 செ.மீ மழை பெய்துள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில் 53 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். இது 60 சதவீதம் குறைவாகும். இன்னும் டிசம்பர் மாதம் வரை மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #rain #Chennai #WeatherResearchCenter
    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார். #Storm #Rain
    சென்னை:

    கஜா புயல் கரையை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று கூறியதாவது:-

    தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை (18-ந்தேதி) மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. அதன் பிறகு 19, 20-ந்தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளும்.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான தமிழகத்தை நோக்கி நகரும். இதன் காரணமாக வருகிற 19-ந்தேதி தமிழகம், புதுவையில் மழை பெய்யத் தொடங்கும். தொடர்ந்து 20, 21-ந் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.



    அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்யும். நாளைய தினம் மழை எச்சரிக்கை எதுவும் இல்லை.

    மீனவர்கள் 18, 19-ந்தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 19, 20-ந்தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Storm #Rain
    ×