search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94356"

    சியோமி நிறுவனத்தின் Mi பேனட் 3 ஃபிட்னஸ் டிராக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MiBand3



    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi பேன்ட் 3 ஃபிட்னஸ் டிராக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    புதிய Mi பேன்ட் 3 மாடலில் 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அல்லது எஸ்எம்எஸ் மெசேஜ்களில் அதிக எழுத்துக்களை டிஸ்ப்ளே செய்யும். முந்தைய Mi பேன்ட் 2 சாதனத்தில் 0.42 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. புதிய Mi பேன்ட் சாதனத்தில் 5ATM வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீருக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்திலும் பேன்ட் பயன்படுத்த முடியும்.

    புதிய Mi பேன்ட் 3 சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவிட்டி டிராக்கிங் வழங்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி, நடைபயிற்சி மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்த ரியல்-டைம் டேட்டாவை வழங்குகிறது. முன்பக்கம் பட்டன் புதிய பேன்ட்-லும் வழங்கப்பட்டு இருககிறது. சியோமி Mi பேன்ட் 3 சாதனம் 20 நாட்கள் ஸ்டான்ட்-பை வழங்கும் 110 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:

    - 0.78 இன்ச் OLED 128x80 பிக்சல் டிஸ்ப்ளே
    - கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்
    - போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography - PPG)
    - இதய துடிப்பு சென்சார்
    - உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது
    - செடன்ட்டரி ரிமைன்டர்
    - 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி
    - 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்
    - ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)
    - 110 எம்ஏஹெச் லி-ஐயன் பாலிமர் பேட்டரி

    சியோமி Mi பேன்ட் 3 பிளாக் ரிஸ்ட் பேன்ட் உடன் வருகிறது. எனினும் இந்த ஃபிட்னஸ் டிராக்கரை புளூ மற்றும் ஆரஞ்சு நிறங்களிலும் வாங்க முடியும். இந்தியாவில் புதிய Mi பேன்ட் 3 விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதன் விற்பனை செப்டம்பர் 28-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.
    சியோமி இந்தியா நிறுவனம் புதிய உலக சாதனை படைத்து கின்னஸ்-இல் இடம் பிடித்துள்ளது. #Xiaomi



    சியோமி இந்தியா நிறுவனம் உலகின் மிகப்பெரிய மின்விளக்கு மோசேக் லோகோ கட்டமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    சியோமியின் Mi லோகோ 9,690 மின்விளக்குகளால் உருவாக்கப்பட்டுள்ளது. சியோமி இந்தியாவின் விளபம்ர பரிவினரின் சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த மின்விளக்கு மோசேக் லோகோ செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் Mi பிரான்டை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.



    இந்தியாவில் சியோமி பிரான்டு பிரபலமாக முக்கிய காரணமாக இருக்கும் சியோமி இந்தியா ஊழியர்கள் மற்றும் Mi பிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட சின்னமாக இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விளம்பர துறையில் சியோமியின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.

    புதிய உலக சாதனையுடன் Mi ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஒன்றை பெங்களூருவில் புதிதாக திறந்துள்ளது. இந்த விற்பனை மையம் சியோமி தலைமையக கட்டிடத்தின் தரைதளத்தில் அமைந்துள்ளது.
    சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் இதன் விற்பனை சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. #MiBand3



    சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 சாதனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட் ஃபிட்னஸ் பேன்ட் சாதனம் அமேசான் வலைதளத்தில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அமேசானில் இடம்பெற்றிருந்த டீசரின் படி Mi பேன்ட் 3 சாதனம் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.

    செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் இணைக்கப்பட்ட சாதனங்களுடன் சியோமியின் புதிய Mi பேன்ட் 3 சாதனமும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டீசரின்படி Mi பேன்ட் 3 மாடலில் ரியல்-டைம் ஃபிட்னஸ் டிராக்கிங் மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi பேன்ட் 3 முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 



    சியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:

    - 0.78 இன்ச் OLED 128x80 பிக்சல் டிஸ்ப்ளே
    - கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்
    - போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography - PPG)
    - இதய துடிப்பு சென்சார்
    - உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது
    - செடன்ட்டரி ரிமைன்டர்
    - 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி
    - 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்
    - ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)
    - 110 எம்ஏஹெச் லி-ஐயன் பாலிமர் பேட்டரி

    சியோமி Mi பேன்ட் 3 பிளாக் நிறம் மற்றும் பேன்ட்கள் கிராஃபைட் பிளாக், ஹாட் ஆரஞ்சு மற்றும் டீப் புளு நிறங்களில் கிடைக்கிறது. Mi பேன்ட் 3 சீனாவில் 169 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,7890) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேன்ட் 3 என்எஃப்சி வேரியன்ட் 199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,095) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் Mi A2 ஸ்மார்ட்போன் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் புளு நிறங்களில் விற்பனையாகி வந்தது. #MiA2 #Xiaomi



    சியோமி நிறுவனத்தின் Mi A2 ஸ்மார்ட்போன் ரெட் எடிஷன் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் அறிமுகமான சமயத்தில் Mi A2 பிளாக், கோல்டு மற்றும் புளு நிற வேரியன்ட்களை கொண்டிருந்தது. புதிய சிவப்பு நிற ஸ்மார்ட்போனின் பெசல்கல் கருப்பு நிறம் கொண்டிருக்கின்றன. சியோமி Mi A2 மாடலின் புளு மற்றும் கோல்டு நிற வேரியன்ட்களில் வெள்ளை நிற பெசல் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    சியோமி Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், 20 எம்பி சோனி IMX376 செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    Mi A2 ஸ்மார்ட்போனில் தற்சமயம் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருந்தாலும், இந்த ஆண்டிற்குள் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள Mi A2 பின்புறம் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்

    – 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    – அட்ரினோ 512 GPU
    – 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    – 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    – ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
    – டூயல் சிம் ஸ்லாட்
    – 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
    – 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
    – 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    – கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    – 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – குவால்காம் க்விக் சார்ஜ் 4+

    சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் ரெட் எடிஷன் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய MiA2 ஸ்மார்ட்போன் Mi.com மற்றும் அமேசான் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. #MiA2 #Xiaomi
    சியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #mi8Lite #Xiaomi



    சியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.2 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 AIE, 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமராக்கள், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    போனின் டிஸ்ப்ளேவில் வெவ்வேறு விதமாக செல்ஃபிக்களை எடுக்க ஏதுவாக வித்தியாசமான நிறங்களை பிரதிபலிக்கும். இத்துடன் கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ், பின்புறம் கைரேகை சென்சார், 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi 8 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜிபி  / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.9
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல்
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 1.8um பிக்சல்
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

    சியோமி Mi 8 லைட் ஸ்மார்ட்போன் அரோரா புளு, சன்செட் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. சியோமி Mi 8 லைட் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் இந்திய மதிப்பில் ரூ.14,835, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1699 யுவான் இந்திய மதிப்பில் ரூ.18,020 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1999 யுவான் இந்திய மதிப்பில் ரூ.21,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சியோமி Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் பிரெஷர் சென்சிட்டிவ் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கைவிரலை திரையில் வைத்ததும், ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் இந்த தொழில்நுட்பம் Mi 8 மாடலில் உள்ளதை விட 29% வரை வேகமாக இயங்குகிறது.



    சியோமி Mi 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.21 இன்ச் 2248x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 18:7:9 AMOLED டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி  / 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.8, OIS
    - 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.4, 1.0μm பிக்சல்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பிரெஷர் சென்சிட்டிவ் கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சன்செட் கோல்டு, பிளாக் மற்றும் டிரான்ஸ்பேரன்ட் டைட்டானியம் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 3199 யுவான் இந்திய மதிப்பில் ரூ.33,945 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 3599 யுவான் இந்திய மதிப்பில் ரூ.38,192 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் ஐந்து புதிய சாதனங்கள் செப்டம்பர் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #Xiaomi #SmarterLiving



    சியோமி நிறுவனத்தின் புதிய சாதனங்கள் செப்டம்பர் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி Mi ஏர் பியூரிஃபையர், டிவி, Mi பேன்ட் 3 மற்றும் பாதுகாப்பு கேமரா உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படுகிறது. 

    முன்னதாக ஸ்மார்ட்டெர் லிவிங் பிரிவில் ஐந்து சாதனங்கள் அறிமுகம் செய்வதாக டீசர் புகைப்படத்தை வெளியிட்டது. சியோமி வெளியிட இருக்கும் சாதனங்களை முன்கூட்டியே சரியாக கணிப்பவர்களுக்கு வியப்பூட்டும் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து பேருக்கு எஃப்-கோடுகளும் வழங்கப்பட இருக்கிறது.



    சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் இதயம் படம் இடம்பெற்றிருப்பதால் மே மாதம் சியோமி அறிமுகம் செய்த Mi பேன்ட் 3 இம்முறை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டீசரில் உள்ள பாப்கான் படம், புதிய Mi டிவி மாடலையும், Mi ஏர் பியூரிஃபையர் மேக்ஸ் உள்ளிட்டவை அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

    இறுதியில் கண் போன்ற படம் டீசரில் இடம்பெற்றிருப்பதால், கேமரா மற்றும் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியோமி சாதனங்கள் அறிமுகமாக இன்னும் ஒரு வாரம் காலம் இருக்கும் நிலையில், சாதனங்கள் குறித்த மேலும் சில விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.
    சியோமி நிறுவனத்தின் Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. #Xiaomi #MiA2



    சியோமி Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த அறிமுகமானது. முதற்கட்டமாக ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், MiA2 ஸ்மார்ட்போன் இனி ஓபன் சேல் முறையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று போகோ எஃப்1 மாடலும் ஓபன் சேல் முறையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சியோமி MiA2 மாடலில் 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், 20 எம்பி சோனி IMX376 செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    Mi A2 ஸ்மார்ட்போனில் தற்சமயம் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருந்தாலும், இந்த ஆண்டிற்குள் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள Mi A2 பின்புறம் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்

    – 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    – அட்ரினோ 512 GPU
    – 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    – 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    – ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
    – டூயல் சிம் ஸ்லாட்
    – 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
    – 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
    – 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    – கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    – 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – குவால்காம் க்விக் சார்ஜ் 4+

    சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் லேக் புளு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Xiaomi #MiA2
    சியோமி நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Xiaomi #Mi8
     


    சியோமி நிறுவனத்தின் Mi 8 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலுக்கான இரண்டு வீடியோ டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது. டீசர்களில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி Mi 8 யூத் எடிஷன் மாடலில் புளு, பர்ப்பிள் மற்றும் ட்விலைட் கோல்டு கிரேடியன்ட் நிறங்கள் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

    மே மாதத்தில் Mi 8, Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் மற்றும் Mi 8 எஸ்.இ. போன்ற மாடல்களை சீனாவில் வெளியிட்டது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்கான அழைப்புகளை அனுப்பியிருக்கிறது. செப்டம்பர் 19-ம் தேதி சீனாவின் செங்டுவில் நடைபெற இருக்கும் விழாவில் Mi 8 யூத் எடிஷன் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    சியோமி Mi8 யூத் எடிஷன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm சிப்செட்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3250 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி Mi8 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் பிளாக், ரோஸ் கோல்டு, கோல்டு, வைட், புளு, ரெட், கிரே, சில்வர், கிரீன், புளு-வைலட் கிரேடியன்ட், பர்ப்பிள்-கோல்டு கிரேடியன்ட் போன்ற நிறங்களில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட இருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Mi8Youth



    சியோமி நிறுவனம் Mi8, Mi8 எக்ஸ்ப்ளோரர் மற்றும் Mi8 எஸ்.இ. எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் மே மாதத்தில் அறிமுகம் செய்தது. 

    இந்நிலையில், சீனாவின் செங்டுவில் புதிய ஸ்மார்ட்போன் வெளியிடுவதற்கான அழைப்புகளை சியோமி வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 19-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. டீசரில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் Mi8 யூத் எடிஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அழைப்பிதழில் 8 என்ற எண் மற்றும் செங்குத்தாக வைக்கப்பட்ட டூயல் பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. சில தினங்களுக்கு முன் M1808D2TE மாடல் நம்பர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைத்தளத்தில் லீக் ஆகியிருந்தது. 



    சியோமி Mi8 யூத் எடிஷன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm சிப்செட்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3250 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி Mi8 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் பிளாக், ரோஸ் கோல்டு, கோல்டு, வைட், புளு, ரெட், கிரே, சில்வர், கிரீன், புளு-வைலட் கிரேடியன்ட், பர்ப்பிள்-கோல்டு கிரேடியன்ட் போன்ற நிறங்களில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Redmi6A #Redmi6pro



    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன.

    ரெட்மி 6ஏ மாடலில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ A22  பிராசஸர், 2 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE GPU
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.



    ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE8320 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
    - 5 எம்பி இரண்டாவது கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது.  



    ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486, 1.25μm பிக்சல், PDAF, f/2.2, EIS
    - 5 எம்பி இரண்டாவது கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ ரெட், புளு, கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

    ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.7,999 என்றும் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளத்தில் மட்டும் செப்டம்பர் 10-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

    சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 16 ஜிபி வேரியன்ட் விலை ரூ.5,999 என்றும் 32 ஜிபி ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi.com தளத்தில் மட்டும் செப்டம்பர் 19-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. க்ளியர் கேஸ் உடன் கிடைக்கும் ரெட்மி 6 ப்ரோ மாடல் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 11-ம் தேதி துவங்குகிறது.

    சியோமி நிறுவனத்தின் Mi வயர்லெஸ் சார்ஜர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் சார்ஜர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mi வயர்லெஸ் சார்ஜர் என அழைக்கப்படும் புதிய சாதனம் அதிகபட்சம் 10வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச சாதனங்களில் பொதுவான Qi தரத்தை சப்போர்ட் செய்யும் புதிய சியோமி வயர்லெஸ் சார்ஜரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி Mi வயர்லெஸ் சார்ஜரில் டெம்ப்பரேச்சர் ப்ரோடெக்ஷன், ஷார்ட் சர்கியூட் ப்ரோடெக்ஷன், பவர் ப்ரோடெக்ஷன் மற்றும் ஓவர்-வோல்டேஜ் ப்ரோடெக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் சியோமி Mi மிக்ஸ் 2எஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் 7.5 வாட்ஸ் அவுட்புட் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி நோட் 9 மற்றும் இதர மாடல்களுக்கு அதிகபட்சம் 10 வாட் வரையிலான அவுட்புட் வழங்குகிறது.



    சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் சிறப்பம்சங்கள்:

    அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய வயர்லெஸ் சார்ஜரின் மேல்பக்கம் சிலிகான் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்துவித சாதனங்களுக்கும் பொருந்திக் கொள்ளும் வகையில், Qi தரத்திற்கான சப்போர்ட் கொண்டுள்ள Mi வயர்லெஸ் சார்ஜரில் உள்ள எல்.இ.டி. இன்டிகேட்டரை பார்த்தே பயனர்கள் தங்களது சாதனத்தின் சார்ஜிங் விவரத்தை தெரிந்து கொள்ள முடியும்.

    மேலும் இதன் வயர்லெஸ் சார்ஜிங் தூரம் 4எம்.எம். வரை இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன் கேசில் இருந்து எடுத்தாலும் சார்ஜ் ஆகும்ம். இத்துடன் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று பயனர்களின் சாதனங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய Mi வயர்லெஸ் சார்ஜரில் க்விக் சார்ஜ் 2.0 அல்லது க்விக் சார்ஜ் 3.0 அடாப்டர் பயன்படுத்தும் போது அதிகபட்சம் 7.5 வாட் அல்லது 10 வாட் திறன் வழங்குகிறது. இந்த சார்ஜரை வழக்கமான 5V/ 2A அல்லது 5V/ 2.4A உடன் இணைக்கும் போது 5வாட் திறன் வழங்கும்.



    சியோமி Mi வயர்லெஸ் சார்ஜரில் யு.எஸ்.பி. டைப்-சி இன்டர்ஃபேஸ் மற்றும் அதிகபட்சம் 40 டிகிரி வரையிலான வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டுள்ளது. புதிய சார்ஜருடன் யு.எஸ்.பி. டைப்-சி – யு.எஸ்.பி. கேபிள் வழங்கப்படுகிறது.

    சீனாவில் புதிய சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் விலை CNY 69 அதாவது இந்திய மதிப்பில் ரூ.721 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீன சந்தையில் ஏற்கனவே விற்பனை துவங்கியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் வெளியிடுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விவரம் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #RedmiNote5Pro



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ சிவப்பு நிற எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை பிளாக், புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை செய்து வந்தது. புதிய சிவப்பு நிற எடிஷனின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுகளில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிவப்பு நிற எடிஷன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட் விற்பனை ஏற்கனவே துவங்கி, தற்சமயம் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக Mi.com தளத்தில் கிடைக்கும் நோட் 5 ப்ரோ மாடல் விரைவில் ப்ளிப்கார்ட் தளத்திலும் கிடைக்கும். 



    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்  
    - 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் 
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
    - கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி
    ×