search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94356"

    சியோமி Mi A2 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #XiaomiMiA2


    சியோமி நிறுவனத்தின் MiA2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்டு 8-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் MiA2 அமேசான் தளத்தில் டீசர் பக்கத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது. எனினும் MiA2 இந்திய விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    ஜூலை மாத துவக்கத்தில் ஸ்பெயினில் அறிமுகமான MiA2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகமான MiA1 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். அமேசான் இந்தியா தளத்தில் MiA2 ஸ்மார்ட்போனுடன் Notify Me பட்டன் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. 

    ஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி நிறுவனம் MiA2 மாடலின் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலை அறிமுகம் செய்யாமல், இந்தியாவில் பேஸ் வேரியன்ட் ஆக 4 ஜிபி ரேம், 64 ஜிபி வேரியன்ட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் MiA2 மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 



    சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 4 இல் 1 – 2.0um பிக்சல்கள்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 4 இல் 1 – 2.0um பிக்சல்கள், சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 249 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.20,065), 64 ஜிபி விலை 279 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22,485) என்றும் டாப் என்ட் 6ஜிபி ரேம், 128 ஜிபி வேரியன்ட் விலை 349 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.28,130) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #XiaomiMiA2 #smartphone
    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கும் நிலையில், மேலும் இரு நிறுவனங்கள் இதுபோன்ற ஸ்மார்ட்போனினை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #smartphone


    சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சியோமி மற்றும் ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2019-இல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எK்ஸ் என அழைக்கப்படலாம் என்றும் சமீபத்தில் வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஃப் என அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங்கை தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியான நிலையில், சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 



    இருநிறுவனங்களும் சீன நிறுவனங்களிடம் இருந்து மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எல்ஜி நிறுவனமும் விநியோகம் செய்யலாம் என கூறப்படுகிறது. சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளிப்புறம் மடிக்கும் படி வடிவமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் உள்புறம் மடிக்கக்கூடிய வடிவமைப்பை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்போவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எம்மாதிரியான வடிவமைப்பு கொண்டிருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும் சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படுகின்றன. சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் போட்டி நிறுவன மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. #Xiaomi #smartphone
    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த 10000 எம்.ஏ.ஹெச். மற்றும் 20000 எம்.ஏ.ஹெச். பவர் பேங்க் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. #Xiaomi #GST


    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 10,000 எம்.ஏ.ஹெச். மற்றும் 20,000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு பவர் பேங்க்-களின் விலை ரூ.100 வரை அதிகரிக்கப்பட்டது. 

    இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. வரிமுறையில் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து Mi பவர் பேங்க் விலையை குறைப்பதாக சியோமி அறிவித்துள்ளது. தற்போதைய விலை குறைப்புக்கு பின் Mi பவர் பேங்க் விலை 10,000 எம்.ஏ.ஹெச். மாடலுக்கு ரூ.799, 20,000 எம்.ஏ.ஹெச். பவர் பேங்க் 2i விலை ரூ.1,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சியோமி அறிமுகம் செய்த போதே பவர் பேங்களின் விலை இதே தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பவர் பேங்க்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான ஜி.எஸ்.டி. 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய Mi பவர் பேங்க் 2i பெயரை தவிர வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பழைய மாடல்களை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதன் அளவுகளில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பவர் பேங்களிலும் இருவித ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் லோ-பவர் மோட் வழங்கப்பட்டிருக்கிறது. பயனர்கள் இதனை ஆக்டிவேட் செய்ய பவர் பட்டனை இருமுறை அழுத்தினால் போதுமானது.

    பவர் பேங்க் கொண்டு Mi பேன்ட் மற்றும் Mi ப்ளூடூத் ஹெட்செட்களை சார்ஜ் செய்ய முடியும். 10000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i மாடலில் மெட்டல் வடிவமைப்பும், 20000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i மாடலில் ABS ரக பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பவர் பேங்க் கைகளை விட்டு நழுவாமல் இருக்கும். #Xiaomi #GST
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. #Samsung #Xiaomi

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் முன்னணி இடத்தை சாம்சங் மீண்டும் பிடித்துள்ளது. 2018 இரண்டாவது காலாண்டு வரையிலான விற்பனையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியை பின்னுக்குத் தள்ளி சாம்சங் முதலிடத்தை பிடித்தது.

    இதுகுறித்து கவுண்ட்டர்பாயின்ட் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் சாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்களின் விற்பனை அந்நிறுவனத்தை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

    சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போன் 2018 இரண்டாவது காலாண்டு முடிவதற்குள் முதல் 5 இடங்களில் நுழைந்திருக்கிறது. இதனுடன் கேலக்ஸி ஜெ2 (2018) மற்றும் கேலக்ஸி ஜெ4 உள்ளிட்ட மூன்று மாடல்கள் மட்டும் இந்த காலக்கட்டத்தில் சாம்சங் விற்பனை செய்திருந்த மொத்த ஸ்மார்ட்போன்களில் சுமார் 50% அதிகம் ஆகும்.


    கோப்பு படம்

    இந்தியாவில் 2018 இரண்டாவது காலாண்டில் 29% பங்குகளுடன் சாம்சங் முதலிடத்தை பிடித்திருக்கிறது, இது சாம்சங் 2017 இரண்டாவது காலாண்டில் பெற்றதை விட 5% அதிகம் ஆகும். சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து சியோமி நிறுவனம் 28% பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சியோமி நிறுவனத்துக்கு இது முந்தைய ஆண்டை விட 16% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்ற சீன நிறுவனங்களான விவோ, ஒப்போ மற்றும் ஹானர் உள்ளிட்டவை முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்திருக்கின்றன. இவை முறையே 12%, 10% மற்றும் 3% பங்குகளை பெற்றிருக்கின்றன. இதில் ஹானர் 2017 இரண்டாவது காலாண்டை விட 1% அதிகரித்திருக்கிறது. ஒப்போ 10% புள்ளிகளை தக்கவைத்துக் கொண்ட நிலையில் விவோ நிறுவன பங்குகள் 1% குறைந்திருக்கிறது.

    மொத்தத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 18% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இதில் சாம்சங் நிறுவனம் 29% பிடித்திருக்கிறது. ஸ்மார்ட்போன் போன்றே ஃபீச்சர்போன் சந்தையும் 21% வளர்ச்சியடைந்திருக்கிறது. #Samsung #Xiaomi
    சியோமி நிறுவனத்தின் Mi A2 மற்றும் A2 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #MiA2 #MiA2Lite



    சியோமி நிறுவனத்தின் Mi A2 சீரிஸ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான Mi 6X ஸ்மார்ட்போனின் சர்வதேச மாடலாக அமைந்திருக்கிறது. 

    Mi A2 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 12 எம்பி பிரைமரி கேமரா,  f/1.75 அப்ரேச்சர், சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்பி சோனி IMX376 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஏ.ஐ. பியூடிஃபிகேஷன் வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 4 இல் 1 – 2.0um பிக்சல்கள்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 4 இல் 1 – 2.0um பிக்சல்கள், சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 249 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.20,065), 64 ஜிபி விலை 279 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22,485) என்றும் டாப் என்ட் 6ஜிபி ரேம், 128 ஜிபி வேரியன்ட் விலை 349 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.28,130) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    சியோமி Mi A2 லைட் சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5KE8 சென்சார், f/2.2, 1.12um பிக்சல்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி Mi A2 லைட் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை 179 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.14,435), 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் 229 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.18,460) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சியோமி Mi A2 மற்றும் Mi A2 லைட் ஸ்மார்ட்போன்கள் ஸ்பெயினில் ஆகஸ்டு 10-ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டில் ஜூலை 27-ம் தேதி, இத்தாலியில் ஆகஸ்டு 8-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா உள்பட உலகின் 40 நாடுகளில் விற்பனை துவங்கும் என தெரிகிறது. #Xiaomi #MiA2 #MiA2Lite
    இந்திய சந்தையில் விற்பனையாகும் பத்து ஸ்மார்ட்போன்களில் ஆறு சியோமி அல்லது சாம்சங் நிறுவனங்களுடையது என தெரியவந்துள்ளது. #smartphone



    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் கணிசமான பங்குகளை பெற சிரமப்படுவதாகவும், ஹெச்.டி.சி. நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

    இரண்டாவது காலாண்டு விற்பனை சார்ந்து கனாலிஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 99 லட்சம் ஸ்மார்ட்போன் யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    ஒரே காலாண்டில் இரு நிறுவனங்களும் இந்தளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

    இரண்டாவது காலாண்டில் சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் 30% பங்குகளை பெற்றிருக்கின்றன. எனினும் சியோமியின் விற்பனை முந்தைய ஆண்டை விட 106% அதிகரித்து இருக்கிறது. இதே காலகட்டத்தில் சாம்சங் நிறுவனம் முந்தைய காலாண்டை விட 47% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.



    இந்த காலகட்டத்தில் சியோமியின் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் 33 லட்சம் விற்பனையாகி மிகவும் பிரபலமான மாடலாக இருந்தது, இதை தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 ப்ரோ ஸ்மார்ட்போன் 23 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. 

    சியோமி, சாம்சங் நிறுவனங்களை தொடர்ந்து விவோ நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது காலாண்டில் மொத்தம் 36 லட்சம் ஸ்மார்ட்போன்களை விவோ விற்பனை செய்து சந்தையின் 11% பங்குகளை பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனம் 10% பங்குகளுடன் சந்தையில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

    இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மொத்தமாக 3.26 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 22% அதிகம் ஆகும். #Xiaomi #Samsung #smartphone
    சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MiMax3



    சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்றே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.9 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, 1.3மில்லிமீட்டர் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI, 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் PD ஃபோக்கஸ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்பம், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் கைரேகை சென்சார், 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi மேக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

    - 6.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், டூயல் PD ஃபோக்கஸ், எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 5500 எம்ஏஹெச் பேட்டரி
    - க்விக் சார்ஜ் 3.0

    சியோமி Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மெட்டோரிட் பிளாக், டிரீம் கோல்டு மற்றும் டார்க் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. Mi மேக்ஸ் 3 விலை சீனாவில் 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,320) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,375) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Xiaomi #MiMax3
    சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் வெளியீடு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இதன் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை 19-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் சியோமி இணை நிறுவனர் மற்றும் தலைவர் பின் லின் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். 

    இன்று சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை வெளியிட்டிருக்கிறது. இவை ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் 206 சீன்களை டிடெக்ட் செய்யும் அம்சம், செயற்கை நுண்ணறிவு வாய்ஸ் அசிஸ்டன்ட், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.




    சியோமி Mi மேக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

    - 6.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், டூயல் PD ஃபோக்கஸ், எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபிகேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 5500 எம்ஏஹெச் பேட்டரி
    - க்விக் சார்ஜ் 3.0

    சியோமி Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் விலை சீனாவில் 1_99 யுவான் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் கொண்ட வெர்ஷனும் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து சியோமி எவ்வித தகவலும் வழங்கவில்லை. #Xiaomi
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி அறிமுகமாக இருக்கும் நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #MiA2



    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி சர்வதேச சந்தைகளில் வெளியாக இருக்கிறது. இந்த விழாவில் Mi 6X ஸ்மார்ட்போனின் சர்வதேச பதிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. சியோமி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த Mi A1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இதனை #2isbetterthan1 ஹேஷ்டேக் மூலம் சியோமி டீஸ் செய்திருக்கிறது.



    சியோமி Mi A2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ்+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 4 இன் 1 – 2.0um பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 4 இன் 1 – 2.0um பிக்சல்
    - கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

    புதிய சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் 6X மாடலை போன்று பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என்றும் ஐரோப்பியாவில் தன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை PLN 1,299 இந்திய மதிப்பில் ரூ.23,950 விலையில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    எனினும் ஆசிய சந்தைகளில் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இந்தியாவில் ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #MiA2 #smartphone
    சியோமியின் Mi A2 ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய சியோமி ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Xiaomi



    சியோமியின் Mi A2 ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி மாட்ரிட் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    போலாந்து வலைதளம் (X-Kom) மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் Mi A2 லைட் என அழைக்கப்படலாம் என்றும் இதன் வடிவமைப்பு பார்க்க மற்ற நாட்ச் போன்களை போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    சியோமி Mi A2 லைட் ஸ்மார்ட்போனில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் கார்டெக்ஸ் ஏ53 குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், அட்ரினோ 506 GPU, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் ஆன்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 5.84 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. 2280x1080 பிக்சல் நாட்ச் ரக டிஸ்ப்ளே மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 12 எம்பி மற்றும் 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 64 ஜிபி மெமரி கொண்ட Mi A2 லைட் விலை PLN 999 (இந்திய மதிப்பில் ரூ.18,400) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Xiaomi #smartphone
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி சர்வதேச சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #smartphone



    சியோமி நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூலை 24-ம் தேதி மாட்ரிட் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் புதிய சியோமி சாதனம் சர்வதேத சந்தையில் அறிமுகமாக இருப்பதை அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ஸ்பெயின் விழாவில் சியோமி நிறுவனத்தின் MI A2 ஸ்மார்ட்போனை வெளியிடப்படலாம் என்றும் இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Mi 6X ஸ்மார்ட்போனின் சர்வதேச மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் இணையத்தில் லீக் ஆன வீடியோவில் Mi A2 ஸ்மார்ட்போனில் Mi 6X போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்றும் இதில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் இடம்பெறும் என்றும் தெரியவந்தது. எனினும் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.



    சியோமி Mi A2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட் 
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி LPDDR 4x ரேம், 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி LPDDR 4x ரேம், 128 ஜிபி மெமரி
    - 4 ஜிபி LPDDR 4x ரேம், 64 ஜிபி மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல் சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், இன்ஃப்ரா-ரெட் சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

    சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் 6X போன்றே பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை அறிமுக நிகழ்வில் தெரியவரும். புதிய சியோமி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையை தொடர்ந்து இந்தியாவில் ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டு விழா விற்பனை இன்று துவங்கி நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் வழங்கப்படும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்.



    சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டு விழா விற்பனை இன்று துவங்குகிறது. Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு விற்பனை ஜூலை 12-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சியோமி ஆண்டு விழா சிறப்பு விற்பனை மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் நிலையில், ஜூலை 8-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    கவர்ச்சிகர சலுகைகள் மட்டுமின்றி ரூ.4 விலையில் ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் Mi எல்இடி டிவி 4 (55-இன்ச்), ரெட்மி வை2, ரெட்மி நோட் 5 ப்ரோ, Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை பயனர்கள் ரூ.4 விலையில் வாங்கிட முடியும். இதேபோன்று Mi மிக்ஸ் 2 மற்றும் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ஆண்டு விழா சிறப்பு விற்பனைக்கென சியோமி நிறுவனம் ஸ்டேட் பேங்க், மொபிக்விக் உள்ளிட்டவற்றுடன் இணைந்து உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேகே உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. அந்த வகையில் ரூ.7500 வரை பொருட்களை வாங்கும் ஸ்டேட் பேங் பயனர்கள் ரூ.500 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இதேபோன்று ரூ.8,999 வரை பொருட்களை வாங்குவோர் பேடிஎம் வாலெட் மூலம் பணத்தை செலுத்தும் போது ரூ.500 கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் மொபிக்விக் மூலம் பணத்தை செலுத்தும் போது 25% தள்ளுபடி (அதிகபட்சம் ரூ.3000) வரை சூப்பர்கேஷ் பெற முடியும்.



    ரூ.4 ஃபிளாஷ் விற்பனை:

    இன்று (ஜுலை 10) மாலை 4.00 மணிக்கு ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதே போன்று ஜூலை 11 மற்றும் ஜுலை 12 ஆகிய தேதிதகளிலும் ரூ.4 ஃபிளாஷ் விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ரெட்மி வை1, Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4 55 இன்ச், Mi பாடி கம்போசிஷன் ஸ்கேல், ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை ரூ.4 விலையில் வாங்க முடியும். இதேபோன்று Mi ப்ரோடெக்ட் ரூ.300 வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.
     
    Mi ஆண்டு விழா சிறப்பு தள்ளுபடிகள்:

    சியோமியின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ரூ.27,999 (ரூ.29,999), Mi மேக்ஸ் 2 ரூ.14,999 (ரூ.15,999), பேக்பேக் விலை ரூ.1,899 (ரூ.1,999), Mi இயர்போன்கள் ரூ.649 (ரூ.699), Mi பேன்ட் 2 ரூ.1,599 (ரூ.1,799) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இத்துடன் சியோமி டிராவல் காம்போ சலுகையின் கீழ் Mi டிராவல் பேக்பேக் மற்றும் Mi ஸ்டிக் ட்ரைபாட் இணைந்து வாங்கும் போது ரூ.2,948-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று Mi பேன்ட் HRX எடிஷன் மற்றும் Mi பேன்ட் ஸ்டிராப் புளு விலை ரூ.1,398 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    Mi பிளாக்பஸ்டர் விற்பனை:

    சியோமி சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஜுலை 10-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு விற்பனைக்கு வரயிருக்கிறது. இதேபோன்று Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ (32 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச்) மாடல்களும் ஜுலை 10-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதேபோன்று ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஜூலை 11-ம் தேதி மதியம் 2.00 மணிக்கும், ரெட்மி 5 ஸ்மார்ட்போன் ஜூலை 12-ம் தேதி மதியம் 2.00 மணிக்கு நடைபெறுகிறது.

    குறைந்த கால சலுகை:

    சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஜூலை 10 முதல் 12-ம் தேதி வரை மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. ரெட்மி நோட் 5 மற்றும் Mi வி.ஆர். பிளே 2 காம்போ ரூ.9,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி வை1 மற்றும் Mi ப்ளூடூத் ஹெட்செட் காம்போ ரூ.8,999 விலையில் விற்பனை  செய்யப்படுகிறது. இதேபோன்று Mi இயர்போன் பேசிக் காம்போ ரூ.1,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    ×