search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94356"

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்டிருக்கும். #Xiaomi



    சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் குவால்காம் இந்தியா தலைவர் ராஜன் வகேடியாவை தான் சந்தித்து பேசியதாக தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். இச்சந்திப்பில் சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர் வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    அந்த வகையில் குவால்காம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை.



    எனினும், கடந்த வாரம் வெளியான விவரங்களில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் பாப்-அப் கேமரா மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் புதிய மாடலில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம்.

    புதிய சியோமி ஸ்மார்ட்போன் Mi 9எஸ்.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் சீனாவில் இது Mi 9X என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமியின் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. #Redmi7



    சியோமி நிறுவனம் தனது ரெட்மி 7 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10, 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டிருக்கும் ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் டூயல் கலர் ஃபினிஷ் மற்றும் அரோரா ஸ்மோக் வடிவமைப்பு, P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி 7 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.25um பிக்சல், f/2.2, PDAF
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட் (P2i நானோ கோட்டிங்)
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் காமெட் புளு, லூனார் ரெட் மற்றும் எக்லிப்ஸ் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.7,999 என்றும், 3 ஜி.பி. ரேம் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் அமேசான், Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலில் புகைப்படம் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா, 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலின் பின்புறம் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் P2i நானோ கோட்டிங் கொண்ட வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி வை3 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.12um பிக்சல், f/2.2, PDAF
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/2.8″
    - கைரேகை சென்சார், இன்ஃபாரரெட் சென்சார்
    - ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் எலிகன்ட் புளு, போல்டு ரெட் மற்றும் பிரைம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது.
    சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், ரெட்மி 7 வெளியீடு பற்றிய விவரம் வெளியாகியிருக்கிறது. #Xiaomi



    சியோமி நிறுவனம் தனது ரெட்மி வை3 ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இதே நிகழ்வில் சியோமி மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    சியோமியின் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் பதிவிட்ட தகவல்களில் 7 ஆம் எண்ணை குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் புதிய ரெட்மி வை சீரிஸ் மாடலுடன் ரெட்மி 7 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



    இந்தியாவில் ரெட்மி வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 70 லட்சம் யூனிட்கள் விற்பனையானதை சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பில் 7 என்ற எண் பெரிதாக குறிப்பிட்டு வை-க்கு பின் என்ன என்ற கேள்வியை கேட்டிருந்தார்.

    ஏற்கனவே ரெட்மி 7 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்சமயம் மனு குமார் ஜெயின் ட்விட்டர் பதிவின் மூலம் ரெட்மி 7 வெளியீடு அதிகம் எதிர்பார்ர்க்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படம் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதுதவிர P2i சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் 32 எம்.பி. கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய ரெட்மி வை3 ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.



    அறிமுக தேதியுடன் ஸ்மார்ட்போனின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் டாட் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்னதாக சியோமி அறிமுகம் செய்த ரெட்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதே போன்ற டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்தது.



    இந்தியாவில் ரெட்மி  வை3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்படுகிறது. 



    இதுதவிர புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் P2i நானோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், இரண்டு நாட்கள் பேக்கப் வழங்கும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.
    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதத்தில் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. #RedmiNote7



    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் முதல் முறையாக நேற்று விற்பனை செய்யப்பட்டது. 

    இரு ஸ்மார்ட்போன்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்ததால், பல வாரங்களாக இவை ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பத்து லட்சம் பேர் வாங்கியிருப்பதாக சியோமி இந்தியா தெரிவித்துள்ளது.



    இத்தனை யூனிட்கள் விற்பனையை சியோமி ஒரே மாதத்தில் பெற்றிருக்கிறது. பத்து லட்சம் யூனிட்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையை சேர்த்ததாகும். ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 12 எம்.பி. + 2 எம்.பி. பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 + 5 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 



    தோற்றத்தில் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ 4 ஜி.பி. வேரியண்ட் ரூ.13,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ.16,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக், நெபுளா ரெட் மற்றும் நெப்டியூன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ.9,999 விலையிலும் 4 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், சஃபையர் புளு மற்றும் ரூபி ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Redmi



    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி சீனா வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுவதும், சிவப்பு நிறம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரெட்மி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்குவதை சியோமி உறுதி செய்திருந்தது. எனினும் இதன் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

    ரெட்மி தலைவர் லு வெய்பிங் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாகவும், இதில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போது அதில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.



    இவை தவிர ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மெட்டாலிக் பில்டு கொண்டிருக்கும் என்றும் இது சிவப்பு நிறத்தை தழுவி இருக்கும் என தெரிகிறது. முன்புறம் பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் ஆன்டெனா பேண்ட்களும் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் மூன்று பிரைமரி கேமராக்களும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    முன்னதாக ரெட்மி 2 ப்ரோ என்ற பெயரில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி இருந்தது. இதில் பாப்-அப் செல்ஃபி கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது. இரு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பை பார்க்கும் போது இவற்றின் பாப்-அப் செல்ஃபி கேமரா வித்தியாசமாக பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது. 

    இதனால் எந்த ஸ்மார்ட்போனினை ரெட்மி உருவாக்கி வருகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    புகைப்படம் நன்றி: Weibo- Alvin
    சியோமி ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு செயலியில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு செயலியில் பிழை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிழை பாதுகாப்பு செயலியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் மால்வேர் நிறுவுதல் மற்றும் பயனர் விவரங்களை சேகரிக்க வழி செய்ததாக கூறப்படுகிறது.

    பிழைக்கான காரணம் `கார்டு' செயலியின் அடிப்படை வடிவமைப்பு தான் என தெரிகிறது. இந்த செயலியின் பாதுகாப்பு பிழையை செக்பாயின்ட் எனும் பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்த தெரிவித்துள்ளது. பிழை மட்டுமின்றி இதன் மூலம் ஏற்படும் பாதிப்பையும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    அவாஸ்ட், ஏ.வி.எல். மற்றும் டென்சென்ட் உள்ளிட்ட ஆண்டிவைரஸ் பிராண்டுகள் ஒற்றை செயலியில் இடம்பெற்றிருந்தது தான் பிழைக்கான காரணம் என கூறப்படுகிறது. பல்வேறு ஆண்டிவைரஸ் செயலிகள் இருப்பது மட்டும் இந்த பிரச்சனைக்கு காரணமாக கருத முடியாது. 



    இரண்டு ஆண்டிவைரஸ் செயலிகளின் மென்பொருள் வளர்ச்சி அமைப்பு (SDK) ஒன்றுடன் தகவல் பரிமாற்றம் செய்ததால் சியோமி சாதனங்களில் குறியீடை செயல்படுத்த வழி செய்துள்ளன. சியோமி பாதுகாப்பு செயலியில் வழங்கப்படும் இண்டர்நெட் என்க்ரிப்ட் செய்யப்படாததால் ஹேக்கர்கள் இரண்டடுக்கு தாக்குதல்களின் மூலம் தீங்கிழைக்கும் தகவல்களை சாதனத்தில் புகுத்த முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுபோன்ற தாக்குதல்களில் ஹேக்கர் பயனரின் ரவுட்டர் அல்லது இணைய மேடெம்களை வைரஸ் மூலம் பாதிப்பில் ஆழ்த்துவர் என்றும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் செயலியின் இறுதி வடிவத்தை எட்ட பல்வேறு எஸ்.டி.கே. பயன்படுத்துவதால் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட காரணமாக அமைகிறது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் எஸ்.டி.கே.களில் பாதுகாப்பு பிழை இருக்கிறது என கருதமுடியாது. இதுபற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    சியோமியின் Mi பேண்ட் 3 சாதனம் இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #MiBand3



    சியோமியின் Mi பேண்ட் சந்தையில் தற்சமயம் கிடைப்பதில் விலை குறைந்த ஃபிட்னஸ் சாதனமாக இருக்கிறது. இதுதவிர Mi பேண்ட் 3 இந்திய விற்பனையில் புதிய மைல்கல் சாதனை படைத்திருக்கிறது. 

    இந்தியாவில் Mi பேண்ட் 3 சாதனத்தை சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. அன்று முதல் இதுவரை Mi பேண்ட் 3 சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மேலும் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் இந்தியாவின் முன்னணி பிராண்டாகி இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.



    சியோமி நிறுவனம் Mi பேண்ட் 3 விற்பனை மைல்கல் அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் Mi பேண்ட் 3 விற்பனை செய்யப்படுகிறது. இதில் 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்வைப் ஜெஸ்ட்யூர் வசதி, 110 எம்.ஏ.ஹெச். லி-அயன் பேட்டரி வழங்கப்படுகிறது.

    ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் Mi பேண்ட் 3 மாடலில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. Mi பேண்ட் 3 சாதனம் கொண்டு ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐ.ஓ.எஸ். 9.0 இயங்குதளம் அல்லது அதன் பின் வெளியான இயங்குதளங்களில் பயன்படுத்தலாம்.

    கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வரையிலான காலக்கட்டத்தில் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் உலகளவில் இரண்டாவது பெரிய நிறுவனமாக இருக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் வெர்ஷன் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை மட்டும் புதிய வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சியோமி இதே ஸ்மார்ட்போனின் சிறிய வீடியோவினை வெளியிட்டது. இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக இந்த ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.



    சியோமியின் அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கில் வெளியாகி இருக்கும் வீடியோவில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் போர்டிரெயிட் மோட் மற்றும் மடிக்கப்படாத நிலையில் ஒருவர் பயன்படுத்துவதும், ஸ்மார்ட்போனினை இருபுறங்களிலும் மடித்து அதனை நூடுல்ஸ் பெட்டியின் மேல் வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 

    இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் மென்பொருள் சீராக இயங்கவில்லை. ஸ்மார்ட்போன் மடிக்கப்படும் போது யு.ஐ. புதிய திரையின் அளவிற்கு மாற சிறிது நேரம் எடுத்துக் கொள்வது தெளிவாக தெரிகிறது. சந்தையில் அறிமுகமாகும் போது இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    சியோமி தவிர சாம்சங், ஹூவாய் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன.

    சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலின் புதிய வீடியோவை கீழே காணலாம்..,


    சியோமி நிறுவனம் தனது Mi நோட்புக் ஏர் லேப்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. Mi நோட்புக் ஏர் 2019 மாடலில் புதிய தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. #MiNotebookAir



    சியோமி நிறுவனம் தனது Mi நோட்புக் ஏர் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய லேப்டாப்பில் சியோமி 8-ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 அல்லது கோர் எம்3 பிராசஸர்களை வழங்கியிருக்கிறது. இத்துடன் 4 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி., மற்றும் ஃபுல் ஹெச்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

    முழுமையான மெட்டல் சேசிஸ் கொண்டிருக்கும் Mi நோட்புக் ஏர் எடை 1.07 கிலோ ஆகும். புதிய லேப்டாப்பில் சியோமி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கியுள்ளது. முன்னதாக சியோமி தனது லேப்டாப்களில் ஏழாம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 வெர்ஷனை அறிமுகம் செய்தது. 

    இந்நிலையில், தற்சமயம் 12.5 இன்ச் Mi நோட்புக் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mi நோட்புக் ஏர் 13.3 இன்ச் மாடலில் ஏற்கனவே 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் சி.பி.யு.க்கள் வழங்கப்படுகின்றன. 



    Mi நோட்புக் ஏர் 12.5 இன்ச் (2019) சிறப்பம்சங்கள்:

    - 12.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1080x1920 பிக்சல் ஸ்கிரீன்
    - 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 / கோர் எம்3 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - டி.டி.எஸ். சரவுண்ட் சவுண்ட்
    - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
    - ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்
    - யு.எஸ்.பி. 3.0 போர்ட்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - பேக்லிட் கீபோர்டு
    - விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்

    சீனாவில் Mi நோட்புக் ஏர் 12.5 இன்ச் (2019) மாடல் விலை CNY 3,599 (இந்திய மதிப்பில் ரூ.38,400) முதல் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை CNY 4,299 (இந்திய மதிப்பில் ரூ.45,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ள Mi நோட்புக் ஏர் மற்ற சந்தைகளில் வெளியிடுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. #MiMix4



    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சியோமி தனது Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், சியோமி தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனிற்கான டீசரை தனது வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ளது. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் Mi மிக்ஸ் 4 என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் ஸ்மார்ட்போனின் மாடல் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

    முன்னதாக சியோமி Mi மிக்ஸ் ஸ்மார்ட்போன் 2016 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக கான்செப்ட் வடிவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனில் டிரை-பெசல் லெஸ் டிஸ்ப்ளே மற்றும் செராமிக் பேனல் வழங்கப்பட்டிருந்தது. பின் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் நவம்பர் 2017 இல் அறிமுகம் செய்யப்பட்டது. 



    இதைத் தொடர்ந்து Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் சில மாற்றங்களுடன் 2018 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், Mi மிக்ஸ் 3எஸ் மற்றும் Mi 4 பற்றி எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது.

    முந்தைய வழக்கப்படி சியோமி தனது Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வெய்போவில் வெளியாகி இருக்கும் டீசரை பார்க்கும் போது புதிய சியோமி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தெரிகிறது.

    புதிய Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அதிகளவு மாற்றங்களுடன் ஸ்கிரீன் அளவு முந்தைய Mi மிக்ஸ் 3 மாடலை விட பெரியதாக இருக்கும் என்றும் பின்புறம் பெரிஸ்கோப் லென்ஸ் உடன் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×