search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94356"

    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. #Xiaomi #Redmi6



    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்காலிக விலை குறைப்பு இன்று (பிப்ரவரி 6) துவங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அமலாகி இருக்கிறது. அந்த வகையில் ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.500 முதல் ரூ.2000 வரை குறைக்கப்படுகிறது.

    சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பிற்கான அறிவிப்பினை ரெட்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளதை தொடர்ந்து ரெட்மி இந்தியா தனது ஸ்மார்ட்போன்களுக்கு தற்காலிக விலை குறைப்பினை அறிவித்துள்ளன. சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு எவ்வித சலுகைகளையும் அறிவிக்கவில்லை.  



    ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்Hனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலையும் ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோன்று ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் ரூ.500 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.6,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இறுதியில் ரெட்மி 6 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் கேஷ்பேக் மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1800 மதிப்புடைய உடனடி தள்ளுபடி மற்றும் 20 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகி வருகிறது. #XiaomiMi9 #Smartphone



    சியோமி நிறுவன சாதனங்களுக்கான தலைவர் தனது வெய்போ அக்கவுண்ட்டில் ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பின் அதனை உடனடியாக அழித்துவிட்டார். எனினும், அவர் அதனை தனது அக்கவுண்ட்டில் இருந்து எடுக்கும் முன் சில வாடிக்கையாளர்கள் அந்த புகைப்படத்தினை டவுன்லோடு செய்துவிட்டனர்.

    வெய்போவில் அவர் பிதிவிட்டு பின் அவசர அவசரமாக நீக்கிய புகைப்படம் சியோமியின் ஃபிளக்‌ஷிப் Mi9 ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. வெய்போவில் வெளியான புகைப்படத்தின் படி புதிய சியோமி ஸ்மார்ட்போனில் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில் மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இதனால் புதிய சியோமி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    சமீபத்தில் ரெட்மி பிராண்டு தலைவராக நியமிக்கப்பட்ட லு வெய்பிங் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்றும் அந்நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

    இந்த ஸ்மார்ட்போன் Mi9 மாடலாக இருக்கும் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் எதிர்பார்க்கலாம். சோனி IMX586 சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸருடன் உருவாகும் சியோமியின் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

    இதுதவிர சியோமி நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என்றும் இது Mi மிக்ஸ் 3 மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
    சியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி கோ என அழைக்கப்படுகிறது. #RedmiGo #Smartphone



    சியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி கோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் இயங்கும் என தெரிகிறது. இதுபற்றி ரெட்மி தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்டு இயங்கும் என தெரிகிறது. அந்த வகையில் ரெட்மியின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கும். சியோமி ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஒன் தளத்தில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது.



    ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன்
    - குவால்காம் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 8.1
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை தவிர ரெட்மி கோ பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கும் என சியோமி பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் தெரிகிறது. ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    ஜெர்மனியை சேர்ந்த வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி ரோ ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன் படி ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், வைபை, ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ. வழங்கப்படுகிறது. ஐரோப்பாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத துவக்கத்தில் விற்பனைக்கும் வரும் என்றும் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் இந்தியாவில அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. #RedmiX #smartphone



    ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விளம்பர படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விளம்பர படத்தில் ரெட்மி எக்ஸ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. புதிய ரெட்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் பிளேஃபுல்டிராய்டு மூலம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ரெட்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் அல்லது மிட்-ரேன்ஜ் சந்தையை குறிவைக்கும் என கூறப்படுகிறது.



    ரெட்மி பிராண்டு ஏற்கனவே ரெட்மி 7 மற்றும் ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதால், புதிய ரெட்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் இவற்றை விட மேம்பட்ட சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய ரெட்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் மற்றும் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    வரும் மாதங்களில் சியோமி குழுமம் சார்பில் ரெட்மி 7, ரெட்மி 7 ப்ரோ, ரெட்மி எக்ஸ் மற்றும் சியோமியின் Mi 9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய விளம்பர படத்துடன் வெளியாகியிருக்கும் மற்றொரு டீசரிஸ் Mi 9 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் விளம்பர படங்கள் சியோமி அல்லது ரெட்மி தரப்பில் இருந்து கசிந்ததாக தெரியவில்லை. மேலும் விளம்பர படத்தில் புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை இதுபோன்ற தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #RedmiX #smartphone
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில அறிமுகமாக இருக்கிறது. இதனை ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #RedmiNote7 #ԀW8ᔭ



    சியோமியின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக 48 எம்.பி. கேமரா கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது. 

    இந்நிலையில், ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சியோமி நிறுவன துணை தலைவர் மனு ஜெயின் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜுன் ஆகியோர் ஸ்மார்ட்போனினை கையில் வைத்திருக்கும் புகைப்படம் தலைகீழாக பதிவிடப்பட்டிருக்கிறது.





    ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - க்விக் சார்ஜ் 4

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் லின் பின் மடிக்கக்கூடிய ஸ்மாரட்போனின் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #Xiaomi



    சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை அதிராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவினை சியோமி இணை நிறுவனரும், தலைவருமான லின் பின் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    வீடியோவில் இருக்கும் ஸ்மார்ட்போன் ஏற்கனவே வெளியான விவரங்களுடன் ஒற்றுப் போகும் படி காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இருபுறங்களிலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என சியோமி தெரிவித்துள்ளது.



    இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக உருவாகி இருக்கும் சியோமி ஸ்மார்ட்போன் டேப்லெட் மற்றும் மொபைல் போன் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் பின்புற ஸ்கிரீன் ஆஃப் ஆகாமல் இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் வரை ப்ரோடோடைப் வடிவில் இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை அதிகளவு உற்பத்தி செய்யும் பணிகளை எதிர்காலத்தில் துவங்குவது பற்றி முடிவு செய்ய இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பெயரையும் வாடிக்கையாளர்களிடம் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 23 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிற்கு (MWC 2019) சியோமி 20 வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அழைத்து செல்ல இருக்கிறது. அந்த வகையில் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோவினை கீழே காணலாம்..,

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன் விலையை குறைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதைத் தொட்ர்ந்து ரெட்மி ஸ்மார்ட்போன் பழைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #Redmi6 #smartphone



    சியோமி நிறுவனத்தின் Mi ஏ2, ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சியோமி நிறுவனம் தனது ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

    அந்த வகையில் ரெட்மி 6 3ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை குறைக்கப்பட்டு தற்சமயம் அதன் பழைய விலையான ரூ.7999க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.500 உயர்த்தப்பட்டது. இதேபோன்று 64 ஜி.பி. ரெட்மி 6 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    புதிய விலையில் ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் அமலாகியிருக்கிறது. 



    ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE8320 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
    - 5 எம்பி இரண்டாவது கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #RedmiNote7 #smartphone



    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 48 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ரெட்மி பை சியோமி என்ற புதிய பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 

    புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார் f/1.8, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - க்விக் சார்ஜ் 4

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,390), 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.12,460), 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,540) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #Xiaomi #MiLEDTV4XPRO55



    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. சமீபத்தில் சியோமி நிறுவனம் தனது Mi டி.வி. 4ஏ 32 இன்ச் மற்றும் Mi டி.வி. 4சி 32 ப்ரோ மாடல்களின் விலையை குறைத்தது. 

    இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மற்றும் Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச்:

    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலில் 55-இன்ச் 4K UHD HDR 10-பிட், 4840x2160 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த டி.வி.யில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ARM கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் மற்றும் மாலி 450 GPU வழங்கப்பட்டுள்ளது.

    அழகிய வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த யு.ஐ. கொண்டிருக்கும் Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலில் சிறப்பான அனுபவம் கிடைக்கும். மெட்டாலிக் கிரே வடிவமைப்பு கொண்டிருப்பதால் டி.வி. பார்க்க பிரீமியம் தோற்றத்தில் 11 எம்.எம். அளவில் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.

    ஆடியோ அனுபவத்தை பொருத்தவைர லாஸ்லெஸ் FLAC ஆடியோ ஃபார்மேட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 பட்டன்களை கொண்ட Mi ரிமோட் மற்றும் ப்ளூடுத், பிரத்யேக வாய்ஸ் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதை கொண்டு டி.வி. மற்றும் செட் டாப் பாக்ஸ்களில் சேனல்களை மாற்றிக் கொள்ளலாம்.

    ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த டி.வி. ஓ.எஸ். மற்றும் பேட்ச் வால் ஓ.எஸ். கொண்டு இயங்குகிறது. டைனமிக் பேக்கிரவுண்டு மற்றும் ஸ்கிரீன் ஆஃப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்பில்ட் பிளே ஸ்டோர், க்ரோம்காஸ்ட் மற்றும் யூடியூப் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கிறது.



    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச்:

    இந்த டி.வி.யில் ஃபிளாக்‌ஷிப் குவாட்-கோர் 64 பிட் அம்லாஜிக் சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. 3 HDMI போர்ட்கள், 3 யு.எஸ்.பி. போர்ட், ஏ/வி, வைபை, ஈத்தர்நெட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சக்திவாய்ந்த 20 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் DTS கோடெக் வசதி கொண்டிருக்கிறது. 55 இன்ச் மாடலை போன்று இந்த டி.வி.யிலும் இன்பில்ட் பிளே ஸ்டோர், க்ரோம்காஸ்ட் மற்றும் யூடியூப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

    விலை மற்றும் விற்பனை:

    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலின் விலை இந்தியாவில் ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அறிமுகமான Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடலின் விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ஜனவரி 15 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டது. முன்னதாக சியோமி தனது ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்தது. #Xiaomi #RedmiY2



    சியோமி நிறுவனம் தனது வை2 ஸ்மார்ட்போனின் விலையை நிரந்தரமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. ரேம் வேரியன்ட்களின் விலை ரூ.1,000 குறைத்திருக்கிறது. புதிய விலை அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய விலை குறைப்பின் படி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.8,999, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    விலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு எக்சேஞ்ச் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1800 உடனடி கேஷ்பேக் மற்றும் அதிகபட்சம் 240 ஜி.பி. இலவச டேட்டா, ஹங்காமா மியூசிக் சேவைக்கு ஒரு மாதத்திற்கு இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சியோமி ரெட்மி வை2 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. / 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி, 1.25μm பிக்சல், PDAF, f/2.2
    - 5 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3080 எம்ஏஹெச் பேட்டரி
    சியோமி நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்களை உருவாக்கி வருகிறது. இது பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. #Xiaomi #Wireless



    சியோமி நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்பட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சியோமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏர்டாட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்த வயர்லெஸ் இயர்போன்கள் பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது, எனினும் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்சமயம் சியோமி மற்றொரு புதிய வயர்லெஸ் இயர்பாட்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. சியோமியின் புதிய வயர்லெஸ் இயர்பட்கள் பற்றிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதுவும் பார்க்க ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது.

    இணையத்தில் வெளியாகி இருக்கும் சியோமி ஏர்டாட்ஸ் ரென்டர்களின் படி வயர்லெஸ் பட்களைத் தொடர்ந்து சிறிய ஸ்டெம் ஒன்று காணப்படுகிறது. இது ஆப்பிளின் ஏர்பாட்ஸ் சாதனத்தை விட தடிமனாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் இதில் பேட்டரி மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.


    புகைப்படம் நன்றி: mysmartprice

    புதிய இயர்பட்கள் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இதுபோன்ற சாதனங்கள் பெரும்பாலும் இவ்வாறே உருவாக்கப்படுகிறது. 

    இயர்பட்களின் மவுத் பகுதியில் சிலிகான் கொண்டு மறைக்கப்பட்டிருப்பதும் ரென்டர்களில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் புதிய இயர்பட்கள் பயன்படுத்த சௌகரியமாக இருக்கும். இவற்றுடன் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.

    சார்ஜிங் கேஸ் பார்க்க ஏர்டாட்ஸ் போன்று இல்லையென்றாலும், இதன் வடிவமைப்பு அம்சங்கள் ஆப்பிளின் ஏர்பாட்ஸ்-க்கு வழங்கப்படும் கேஸ் போன்று காட்சியளிக்கிறது. முந்தைய ஏர்டாட்ஸ் போன்றே புதிய வயர்லெஸ் இயர்பட்களிலும் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வயர்லெஸ் இயர்பட்களில் ப்ளூடூத் 5.0 மற்றும் தொடுதிரை வசதி வழங்கப்படுகிறது. இவற்றை கொண்டு பிளே / பாஸ் ஆடியோ, எனேபிள் / டிசேபிள் அசிஸ்டண்ட் மற்றும் அழைப்புகளை ஏற்கும் / நிராகரிக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முந்தைய ஏர்டாட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.2,100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய இயர்பட்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுமார் ஒரு கோடி பேர் வாங்கியிருப்பதை கொண்டாடும் வகையில் அந்நிறுவனம் ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. #RedmiNote5Pro #High5



    சியோமி நிறுவனம் தனது Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக நேற்று அறிவித்த நிலையில், தற்சமயம் அந்நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. 

    இந்தியாவில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதை கொண்டாடும் வகையில் ரெட்மி நோட் 5 ப்ரோ விலை குறைக்கப்படுவதாக சியோமி இந்தியா தெரிவித்துள்ளது. புதிய விலை குறைப்பின் படி 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.12,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ரேம் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    இரு வேரியண்ட்களும் முறையே ரூ.1,000 மற்றும் ரூ.2,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறைப்பு ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சியோமியின் Mi வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் அமலாகி இருக்கிறது. 

    ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி.+ 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிபராகன் 636 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி கேமராவுடன் ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்  
    - 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் 
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
    - கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி
    ×