search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94356"

    அமேசான தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில், சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு வழங்கப்படுகிறது. #Amazon



    அமேசான் தளத்தில் சியோமி இந்தியா சிறப்பு விற்பனையை நடத்துகிறது. டிசம்பர் 6ம் தேதி துவங்கும் சிறப்பு விற்பனை டிசம்பர் 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் சியோமி வழங்க இருக்கும் சலுகைகள் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    இரண்டு சலுகைகளை மட்டும் சியோமி அறிவித்து இருக்கும் நிலையில், மூன்றாவது சலுகையை பின்னர் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போனுக்கு அதிகபட்சம் ரூ.3,500 மதிப்பிலான தள்ளுபடியும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போனுக்கு  ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சியோமியின் ஐ லவ் எம்.ஐ. (I love Mi) விற்பனை சியோமி Mi ஏ2 மற்றும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்குகிறது. ரெட்மி வை2 (3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி) விலை ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.8,999 விலையிலும், ரெட்மி வை2 (4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) விலை ரூ.2,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.



    ரெட்மி வை2 போன்றே சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலை டிசம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் குறைக்கப்படுகிறது. அந்த வகையில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட Mi ஏ2 ரூ.14,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. வேரியன்ட் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சியோமி Mi ஏ2 மற்றும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன்களை தவிர சிறப்பு விற்பனையின் போது மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருக்கிறது. அமேசான் இந்தியா தளத்தில் இரு ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு இருப்பதோடு மட்டுமின்றி, எக்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. #Xiaomi #Amazon
    அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் ஆப்பிளை பின்தள்ளி சீன நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது. #Xiaomi



    சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சீன நிறுவனமான சியோமி முதலிடம் பிடித்து இருக்கிறது.

    இந்தியா உள்பட இதர சந்தைகளில் Mi பேன்ட் 3 சாதனம் அதிகளவு விற்பனையை பெற்று வரும் நிலையில், சியோமி நிறுவனம் அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் 21.5 சதவிகித பங்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. சியோமி நிறுவனத்தைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 13.1 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (IDC) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. 2018 ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் விற்பனை 3.2 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு விற்பனையை விட 21.7 சதவிகிதம் அதிகம் ஆகும்.



    சியோமி நிறுவனம் 2018 மூன்றாவது காலாண்டில் மட்டும் சுமார் 69 லட்சம் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இதே காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 42 லட்சம் யூனிட்களையும், மூன்றாவது இடம்பிடித்து இருக்கும் ஃபிட்பிட் சுமார் 35 லட்சம் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்திருக்கிறது.

    ஃபிட்பிட், கார்மின் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் புது சாதனங்கள் அடிப்படையில் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்து இருக்கிறது என சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. 

    இதுதவிர ஆசிய பசிபிக் சந்தைகளில் (ஜப்பான் தவிர) அணியக்கூடிய சாதனங்களுக்கான வளர்ச்சி அதிகரித்து இருப்பதும் சந்தை வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. #Xiaomi
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் மட்டும் சுமார் ஆறு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #RedmiNote6Pro
     


    சியோமி நிறுவனம் நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதன் முதல் ஃபிளாஷ் விற்பனை நேற்று (நவம்பர் 23) மதியம் 12.00 துவங்கியது. வழக்கமான சியோமி ஸ்மார்ட்போன்களை போன்றே ஃபிளாஷ் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. 

    முதல் விற்பனையில் மட்டும் சியோமி நிறுவனம் சுமார் ஆறு லட்சம் யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது. அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி முதல் நாள் விற்பனையை தொடர்ந்து மதியம் 03.00 மணி, மாலை 06.00 மணி மற்றும் இரவு 09.00 மணிக்கு தொடர்ச்சியாக ஃபிளாஷ் விற்பனையை சியோமி நடத்தியது.



    புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் mi.com மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் தள்ளுபடி செய்யப்பட்ட விலையிலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.500 கூடுதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ மாடலில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், நாட்ச், 19:9 ரக டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி மற்றும் டூயல் செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு கேமரா யூனிட்களிலும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சியோமி இந்தியாவின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அமைந்துள்ளது. அதன்படி 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப், புகைப்படங்களை அழகாக்கும் விசேஷ ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. + 2 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா சென்சார், 1.8μm பிக்சல் சென்சார் கொண்டிருக்கிறது.



    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    அட்ரினோ 509 GPU
    4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    64 ஜி.பி. மெமரி
    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    ஹைப்ரிட் டூயல் சிம்
    12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS
    5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0, 1.8μm
    2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக அந்நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்துள்ளார். #mimix3 #5G



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. Mi மிக்ஸ் 3 அறிமுகமானதும், இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக அந்நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்தார்.

    லின் பின் தனது வெய்போ அக்கவுன்ட்டில் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு பை இயங்குதளத்தின் ஸ்டாக் வெர்ஷனை கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் வலது புற மேல்பக்கம் 5ஜி நெட்வொர்க் காணப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: Weibo

    அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் அறிமுகமாகும் போது ஆன்ட்ராய்டு 9 பை மற்றும் சமீபத்திய MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கும். புதிய 5ஜி வேரியன்ட் புதிய சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்குமா அல்லது, பழைய சிறப்பம்சங்களுடன் வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனையும், இந்த ஆண்டு மார்ச் மாதம் மேம்படுத்தப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் அதிக சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்பட்டது.

    அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் Mi மிக்ஸ் 3 போன்ற வடிவமைப்புடன், புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம்.
    சியோமி நிறுவனத்தின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #RedmiNote6Pro #Xiaomi



    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ மாடலில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், நாட்ச், 19:9 ரக டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி மற்றும் டூயல் செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு கேமரா யூனிட்களிலும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சியோமி இந்தியாவின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அமைந்துள்ளது. அதன்படி 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப், புகைப்படங்களை அழகாக்கும் விசேஷ ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. + 2 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா சென்சார், 1.8μm பிக்சல் சென்சார் 
    கொண்டிருக்கிறது.



    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0, 1.8μm
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளம், பிளிப்கார்ட் தளங்களில் நாளை (நவம்பர் 23) மதியம் 12.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. 



    அறிமுக சலுகைகள்:

    புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையில் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.12,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதலாக ரூ.5,00 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு ரூ.2,400 வரை உடனடி தள்ளுபடி மற்றும் அதிகபட்சம் 6000 ஜி.பி. அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 
    சியோமி நிறுவன சாதனங்களுக்கு பண்டிகை காலத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு விலை சில சாதனங்களுக்கு நிரந்தரமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவன சாதனங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகளும், சில சாதனங்களின் விலை குறைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பண்டிகை காலத்தில் அறிவிக்கப்பட்டு இருந்த விலை குறைப்பு சில சாதனங்களில் நிரந்தரமாக நீட்டிக்கப்படுகிறது.

    அந்த வகையில் சியோமி Mi ஏ2, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. இந்தியாவில் தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருப்பதை கொண்டாடும் வகையில் இந்த சலுகை வழங்குவதாக சியோமி அறிவித்துள்ளது.



    நிரந்தர விலைகுறைப்பு பெற்றிருக்கும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

    சியோமி Mi ஏ2 (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி Mi ஏ2 (6ஜி.பி. + 128 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி ரெட்மி வை2 (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (6ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய விலை குறைப்பு ஏற்கனவே அமலாகி விட்டது. மேலும் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    முன்னதாக சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6, ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல்கள், 10,000 எம்.ஏ.ஹெச். Mi பவர்பேங்க் மற்றும் Mi டி.வி. 32 இன்ச் ப்ரோ மற்றும் 49 இன்ச் ப்ரோ மாடல்களின் விலை அதிகரித்தது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Xiaomi #redminote6pro



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 22ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் முதல் விற்பனை நவம்பர் 23ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.

    ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா சென்சார், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் கொண்டிருக்கிறது. முன்னதாக புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனின் அழைப்பிதழ்களை சியோமி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல்,
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0
    - 2 எ.ம்பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் துவக்க விலை ரூ.14,999 நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் ஒரே மாதத்தில் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்திருக்கிறது. #XiaomiSuperSalesDay



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற பண்டிகை கால விற்பனையில் மட்டும் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    இவற்றில் சுமார் 60,00,000க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள், சுமார் 4,00,000க்கும் அதிகமான எம்.ஐ. டி.வி. மாடல்கள் மற்றும் சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான இதர சாதனங்கள் அடங்கும்.

    அக்டோபர் 9ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதி வரை Mi.com, அமேசான், பிளிப்கார்ட், எம்.ஐ. ஹோம் ஸ்டோர் மற்றும் இந்தியா முழுக்க நடைபெற்ற ஆஃப்லைன் வர்த்தகத்தில் இத்தகைய விற்பனையை சியோமி பதிவு செய்திருக்கிறது.

    அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன், டி.வி. அணியக்கூடிய சாதனங்கள், பவர் பேங்க், ஹோம் செக்யூரிட்டி, ஏர் பியூரிஃபையர் மற்றும் பல்வேறு இதர பிரிவுகளில் சியோமி முதலிடம் பிடித்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    விற்பனை விவரம்:

    – பிளிப்கார்ட் பண்டிகை கால விற்பனையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 5 ப்ரோ இருக்கிறது.

    – அமேசான் தளத்தில் 30 நாட்கள் பண்டிகை கால விற்பனையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ரெட்மி 6ஏ இருக்கிறது.

    - ஸ்மார்ட்போன் பிரிவில் முதலிடம்.

    – அதிகம் விற்பனையான டி.வி. பிரிவில் எம்.ஐ. எல்.இ.டி. டி.வி. மாடல்கள் முதலிடம்.

    – அணியக்கூடிய சாதனங்களில் அதிகம் விற்பனையான மாடலாக எம்.ஐ. பேன்ட் 3 முதலிடம் பிடித்திருக்கிறது.

    – பவர்பேங்க் பிரிவில் எம்.ஐ. பவர் பேங்க் முதலிடம்.

    – அமேசான் வலைதளத்தில் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் சியோமி மாடல்கள்.

    – கடந்த ஆண்டு அனைத்து தளங்களில் நடைபெற்ற விற்பனையை விட எம்.ஐ. ஏர் பியூரிஃபையர் 2எஸ் 4.5 மடங்கு அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற பண்டிகை கால விற்பனையில் சியோமி நிறுவனம் சுமார் 40,00,000க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டு சிறப்பு விற்பனையில் சுமார் 60,00,000க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. 

    மேலும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் சியோமி பிடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. சியோமிக்கு அடுத்து இரண்டாவது இடத்திற்கு சாம்சங் தள்ளப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டி.வி. மற்றும் பவர் பேங்க் சாதனங்களின் விலை மாற்றப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது பொருட்களின் விலையை மாற்றியமைக்கிறது. புதிய விலை மாற்றத்திற்கான அறிவிப்பை அந்நிறுவன இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

    புதிய மாற்றத்தின் படி ரெட்மி நோட் 5 ப்ரோ, Mi டி.வி.4 55-இன்ச் 4K டி.வி., ரெட்மி 6, ரெட்மி 6ஏ, 10000 எம்.ஏ.ஹெச். Mi பவர்பேங்க் 2i, Mi டி.வி. 32 இன்ச் ப்ரோ மற்றும் 49 இன்ச் ப்ரோ மாடல்களின் விலை அதிகரிக்கப்படுகிறது. 

    இந்திய ரூபாய் மதிப்பு சரிவு தான் சியோமி சாதனங்களின் விலை ஏற்றப்படுவதற்கான காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் மற்றும் Mi எல்.இ.டி. டி.வி. 4 ப்ரோ சீரிஸ் விலை இரண்டு மாதங்களுக்கு பின் அதிகரிக்கப்படலாம் என சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.



    புதிய விலை பட்டியல்:

    சியோமி ரெட்மி 6ஏ (2 ஜி.பி. + 16 ஜி.பி.) – ரூ. 6599 (ரூ. 600 அதிகம்)
    சியோமி ரெட்மி 6ஏ (2 ஜி.பி. + 16 32GB) – ரூ. 7499 (ரூ. 500 அதிகம்)
    சியோமி ரெட்மி 6 (3 ஜி.பி. + 32 ஜி.பி.) – ரூ. 8499 (ரூ. 500 அதிகம்)
    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4சி ப்ரோ 32 இன்ச் – ரூ. 15999 (ரூ. 1000 அதிகம்)
    சியோமி Mi எல்.இ.டி. டி.வி 4ஏ ப்ரோ 49 இன்ச் – ரூ. 31999 (ரூ. 2000 அதிகம்)
    சியோமி 10000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i பிளாக் – ரூ. 899 (ரூ. 100 அதிகம்)
    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. #Xiaomi



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல்கள் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களும் இனி ஓபன் சேல் முறையில் கிடைக்கும் என சியோமி இந்தியா அறிவித்துள்ளது.

    ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE GPU
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.



    ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE8320 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
    - 5 எம்பி இரண்டாவது கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி 6ஏ 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் அமேசான் தளத்தில் ரூ.6,999 விலையில் ஓபன் சேல் முறையில் கிடைக்கிறது. எனினும் இதன் 16 ஜி.பி. ரேம் ரூ.5,999 விலையில் நவம்பர் 14ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று ரெட்மி 6 3ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,499 விலையில் கிடைக்கிறது. இதன் 32 ஜி.பி. வெர்ஷன் ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவை சியோமியின் அதிகாரப்பூர்வ mi.com வலைதளத்திலும் கிடைக்கிறது. #Xiaomi #smartphone
    சியோமி நிறுவனத்தின் Mi எல்.இ.டி. டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகமான ஒன்பது மாதங்களில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியிருக்கிறது. #Xiaomi #MiTV



    இந்தியாவில் சியோமி நிறுவனம் ஒன்பது மாதத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக Mi எல்.இ.டி. டி.வி. மாடல்கள் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. பத்து லட்சம் விற்பனையில் நான்கு Mi டி.வி. வேரியன்ட்களும் அடங்கும். இத்தகைய மைல்கல் விற்பனை சந்தையில் முதல்முறை என்பதோடு, சியோமி இந்தியாவிற்கு முக்கிய மைல்கல் ஆக இருக்கிறது.

    2018 இரண்டாவது காலாண்டில் சியோமி நிறுவனம் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. பிரான்டாக உருவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஐ.டி.சி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவல் கிடைத்திருக்கிறது. ஆன்லைன் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களின் மூலம் சியோமி நிறுவனம் கடந்த ஆறு மாதங்களில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்திருக்கிறது.

    இதைத் தொடர்ந்து அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெற்ற தீபாவளி விற்பனையில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களை விற்பனை செய்திருக்கிறது. அந்த வகையில் ஒரே மாதத்திற்குள் சியோமி நிறுவனம் நான்கு லட்சத்திற்கும் அதிகமான டி.வி.க்களை விற்பனை செய்துள்ளது.

    இந்தியாவில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்திய சந்தையில் ஆன்லைனில் அதிகம் விரும்பப்பப்பட்ட டி.வி. மாடலாக இருக்கிறது. Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ 32 இன்ச்  மாடல் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக விருப்பங்களை பெற்ற ஆன்லைனில் பிரபல டி.வி. மாடலாக இருக்கிறது.
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் மூன்றாவது காலாண்டில் மட்டும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சுமார் 1.21 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. #Xiaomi



    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 2018 மூன்றாவது காலாண்டில் சியோமி நிறுவனம் மட்டும் சுமார் 29.8 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்த காலாண்டில் மட்டும் சுமார் 1.21 கோடி ஸ்மார்ட்போன் யூனிட்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது.

    கடந்த ஆண்டு இதே காலாண்டில் சாம்சங் நிறுவனம் முன்னணி இடம் பிடித்திருந்த நிலையில், இம்முறை சியோமி முதலிடம் பிடித்திருக்கிறது. கனாலிஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் ஸ்மார்ட்போன் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

    கனாலிஸ் அறிக்கையில் ஸ்மார்ட்போன் விற்பனையை பொருத்த வரை இதே காலாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது சரிவு ஏற்பட்டிருக்கிறது. 2017 மூன்றாவது காலாண்டில் மொத்தம் 4.08 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்தம் 4.04 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கிறது.



    சியோமி மற்றும் விவோ நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றிருக்கும் நிலையில், முதல் ஐந்து இடங்களில் அல்லாத நிறுவனங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் அம்சங்கள் தொடர்ந்து சிறப்பாகி வரும் நிலையில், பலர் பிரீமியம் போன் மாடல்களை வாங்கவே விரும்புகின்றனர். 

    இதனால் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஒன்பிளஸ், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து இருக்கின்றன. எனினும் ரியல்மி போன்ற பிரான்டுகளின் வரவு காரணமாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களும் கணிசமான வளர்ச்சியை பெற்று இருக்கின்றன.

    மொபைல் டேட்டா கட்டணம் குறைந்து வரும் நிலையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு எளிமையாகி இருக்கிறது. எனினும், ஃபீச்சர் போன் பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் துவக்க விலை ரூ.1500 முதல் கிடைக்கும் நிலையில், பலர் இதனை வாங்குகின்றனர். இத்துடன் ஜியோபோன் வாங்குவோருக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
    ×