search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94356"

    சியோமி நிறுவனத்தின் Mi ஏ2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் இந்தியாவில் வெளியானது. #Xiaomi #MiA2



    சியோமி நிறுவனத்தின் Mi ஏ2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட Mi ஏ2 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விரைவில் வெளியிடப்படும் என சியோமி அறிவித்தது.

    அந்த வகையில் Mi ஏ2 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் மெமரி தவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    சியோமி Mi ஏ2 சிறப்பம்சங்கள்:

    – 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    – அட்ரினோ 512 GPU
    – 6 ஜிபி ரேம்
    – 128 ஜிபி மெமரி
    – ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
    – டூயல் சிம் ஸ்லாட்
    – 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
    – 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
    – 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    – கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    – 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – குவால்காம் க்விக் சார்ஜ் 4+

    சியோமி Mi ஏ2 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. சியோமி Mi ஏ2 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் புதிய விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. #MiMIX3



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய Mi  மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், கூகுள் ஏ.ஆர். கோர் வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டன்ட், பிரத்யேக ஏ.ஐ. பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    பிரத்யேக ஸ்லைடர் டிசைன் மற்றும் நியோடிமியம் நிரந்தர காந்தகங்கள் வழங்கப்பட்டிருப்பதால் ஸ்லைடர் மிகச்சிறப்பாக இயங்கும். ஸ்லைடர் திறந்த நிலையில், அழைப்புகளை ஏற்கவோ, செல்ஃபி எடுப்பது, ஷார்ட்கட் இயக்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இத்துடன் ஸ்லைடர் ஆப்ஷனிற்கு என பிரத்யேக ஆடியோக்களை செட் செய்து கொள்ளலாம்.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், OIS, டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ், இரண்டாவது 12 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், சாம்சங் S5K3M3+ சென்சார், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 2 எம்.பி. DOF சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi மிக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:5:9 டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் 
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. 26 எம்.எம். வைடு-ஆங்கிள் லென்ஸ், 1/2.6″ சோனி IMX363, f/1.8, 1.4µm பிக்சல், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3+, 1.0 µm பிக்சல், f/2.4
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சூப்பர் பிக்சல், சோனி IMX576, 
    - 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, OV02A10 சென்சார்
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி
    - 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4.0, ஃபாஸ்ட் சார்ஜிங்
    - 10W Qi வயர்லெஸ் சார்ஜிங்

    சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஒனிக்ஸ் பிளாக், ஜேட் கிரீன் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,800) என்றும், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.39,965) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.42.185), 10 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,770) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி இந்தியா தீபாவளி விற்பனையின் இரண்டாவது நாளில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போனினை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. #DiwaliWithMi



    சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையில் மொபைல் போன்கள், தொலைகாட்சி, உபகரணங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது நாளான இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi ஏ2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    முதல் நாள் விற்பனையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஒரு ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ கோல்டு நிற வேரியன்ட் ஒரு ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.14,999 எனும் துவக்க விலையில் கிடைக்கிறது. 

    ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை மட்டுமின்றி பண்டிகை கால சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை சியோமியின் Mi.com வலைதளத்தில் இன்று (அக்டோபர் 24) மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.



    இன்று மாலை நடைபெறும் ஃபிளாஷ் விற்பனையில் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 5 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை ஒரு ரூபாய் விலையில் வாங்கிட முடியும். விற்பனை துவங்கும் முன் பயனர்கள் தங்களது Mi அக்கவுன்ட்டில் லாக் இன் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் பயனர்கள் தங்களது கார்டு விவரங்கள் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை ஃபிளாஷ் விற்பனை துவங்கும் முன் பதிவு செய்து கொள்ளலலாம். இதனால் விரைவில் பரிமாற்றத்தை நிறைவு செய்து சலுகையை பெறும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம். 

    தீபாவளி விற்பனை காலத்தில் வாடிக்கையாளர்கள் Mi பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும். அந்த வகையில் Mi ஏ2 ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ 43-இன்ச் மாடல் ரூ.1,000 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #Xiaomi #DiwaliWithMi
    சியோமியின் பிளாக் ஷார்க் தனது புதிய கேமிங் போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. வரை ரேம் வழங்கப்பட்டுள்ளது. #BlackSharkHelo #gaming



    சியோமியின் பிளாக் ஷார்க் ஹீலோ கேமிங் போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.01 இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், இரண்டு லிக்விட் கூலிங் பைப்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இது ஸ்மார்ட்போனின் சி.பி.யு. கோர் வெப்பத்தை 12-டிகிரி வரை சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் என பிளாக் ஷார்க் தெரிவித்துள்ளது. இதன் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் RGB லோகோ ஏ.ஐ. கேமிங் லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பிரத்யேக டூ-ஸ்டேஜ் ஷார்க் கீ தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. கூடுதலாக கழற்றக்கூடிய கேம்பேட் இடதுபுறம் வழங்கப்பட்டுள்ளது. 



    சியோமி பிளாக் ஷார்க் ஹீலோ சிறப்பம்சங்கள்

    - 6.01 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி 
    - 10 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஜாய் UI
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.75, 1.25µm பிக்சல், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.0µm பிக்சல், f/1.75
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.0µm,  f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் ஸ்மார்ட் PA, ஹைபை ஆடியோ, டூயல் முன்பக்க ஸ்பீக்கர்கள்
    - உயர் ரக கேமிங் மோடிற்கென இரு-ஸ்டேக் ஷார்க் கீ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவிக் சார்ஜ் 3.0

    சியோமி பிளாக் ஷார்க் ஹீலோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.33,920) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,100) என்றும் 10 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இதன் விற்பனை அக்டோபர் 30ம் தேதி முதல் துவங்குகிறது.
    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பது புதிய டீசரில் தெரியவந்துள்ளது. #MiMIX3



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் 25ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகியுள்ளது.

    அந்த வகையில் சமீபத்தில் வெளியான டீசரில் புதிய Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 24 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் செல்ஃபி-லைட், மேனுவல் கேமரா ஸ்லைடர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் Mi மிக்ஸ் 3 மாடலில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.

    புதிய தகவல்கள் சியோமி அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுன்ட்டில் தெரியவந்தது, பின் இதே தகவல் அந்நிறுவன ட்விட்டர் பக்கத்திலும் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மற்றொரு டீசரில் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் 5ஜி கனெக்டிவிட்டி, 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.

    அந்த வகையில் அதிகளவு ரேம் வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மாப்ட்போன் என்ற பெருமையை பெற முடியும். மற்றொரு வெய்போ பதிவில் சியோமி Mi மிக்ஸ் 3 லைவ் புகைப்படம் வெளியிடப்பட்டது. இது சியோமி வெளியிட்ட டீசரில் உள்ள ஸ்மார்ட்போனுடன் ஒற்றுப் போகிறது. 



    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 3D ஃபேஸ் அன்லாக் வசதி, பெரிய FHD + AMOLED டிஸ்ப்ளே, 90% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஏ.ஐ. டூயல் பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    மேலும் புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொண்ட மாடல் ஸ்பெஷல் எடிஷன் வடிவில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட Mi 8 ஸ்மார்ட்போன் எக்ஸ்புளோரர் எடிஷன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மேலும் புதிய ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி இடம்பெற்றிருக்கும் என சியோமி முன்னதாக வெளியிட்ட புகைப்படத்தில் தெரியவந்தது. தற்சமயம் சியோமி நிறுவனம் 5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் வரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #mimix3



    சியோமி நிறுவனம் தனது Mi மிக்ஸ் 3 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் 25-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. 

    புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக விழா சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற இருக்கிறது. அறிமுக தேதியை உறுதிப்படுத்தும் படத்தில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் ஸ்லைடு-அவுட் வடிவமைப்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 3D ஃபேஸ் அன்லாக் வசதி, பெரிய FHD + AMOLED டிஸ்ப்ளே, 90% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஏ.ஐ. டூயல் பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 



    எனினும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொண்ட மாடல் ஸ்பெஷல் எடிஷன் வடிவில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட Mi 8 ஸ்மார்ட்போன் எக்ஸ்புளோரர் எடிஷன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மேலும் புதிய ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி இடம்பெற்றிருக்கும் என சியோமி முன்னதாக வெளியிட்ட புகைப்படத்தில் தெரியவந்தது. தற்சமயம் சியோமி நிறுவனம் 5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் வரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #redminote6pro



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமாக சியோமி ஸ்மார்ட்போன்கள் 10 முதல் 12 மாதங்கள் இடைவெளியில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

    எனினும் ரெட்மி 5 சீரிஸ் போன்கள் வெளியான ஆறு மாதங்களிலேயே ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் தாய்லாந்தில் அறிமுகம் செய்த நிலையில், விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இஷான் அகர்வால் கூறும் போது, சியோமி நிறுவனம் புதிய சாதனத்தை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த சாதனம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும், இது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகமாகலாம் என தெரிகிறது.

    ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச், முன்பக்கம் டூயல் பிரைமரி கேமரா யூனிட், யு.எஸ்.பி. போர்ட் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் கொண்டிருக்கிறது.



    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் PD ஃபோக்கஸ், EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 5 சீரிஸ் போன்றே புதிய நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.14,999 முதல் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டது.
    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட முதல் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #mimix3



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் 15-ம் தேதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் சியோமி நிறுவனம் பாப்-அப் கேமரா, அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் பல்வேறு உயர் ரக அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.

    சீனாவின் பிரபல சமூக வலைதளத்தில் லீக் ஆகியுள்ள விவரங்களின் படி சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வுக்கான கவுன்ட்-டவுன் துவங்கி இருக்கிறது. இதனுடன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

    சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயங்கும் என தெரியவந்துள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனாக Mi மிக்ஸ் 3 இருக்கும்.



    Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, முந்தைய Mi மிக்ஸ் 2எஸ் மாடலில் இருந்ததை விட பெரிய ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் பிரத்யேக 5ஜி மோடெம் வழங்கப்படும் என்றும் 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்க மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் வழங்கப்படுகிறது. சியோமி முன்னதாக அறிமுகம் செய்த Mi மிக்ஸ் 2 மற்றும் Mi மிக்ஸ் 2எஸ் மாடலில் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை.

    சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. + 20 எம்.பி. + 13 எம்.பி. மூன்று கேமரா யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 3850 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    சியோமி இந்தியா நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்து இருக்கிறது. #Xiaomi



    சியோமி நிறுவனம் இந்தியாவில் ஒரு கோடி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி 9 மாதங்களில் இந்த மைல்கல் சாதனையை சியோமி படைத்திருக்கிறது. 

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் விற்பனை டிசம்பர் மாதத்தில் துவங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் 50 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. 



    விற்பனை துவங்கிய குறுகிய காலக்கட்டத்தில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ஸ்மார்ட்போன் ரெட்மி 5ஏ தான் என சியோமி அறிவித்துள்ளது.

    மேலும் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ஒரே ஸ்மார்ட்போனாக ரெட்மி 5ஏ இருப்பதாகவும், தொடர்ந்து 9 மாதங்களாக இந்த நிலையை சியோமி தக்கவைத்துக் கொண்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    ரெட்மி 5ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் ஹெச்.டி. 1280x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் சிப்செட்
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்
    - ஆன்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9

    சியோமி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை உற்பத்தி செய்யும் பணியை சியோமியிடம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Xiaomi



    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களை வடிவமைத்து வழங்கும் வின்டெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும் வின்டெக் உற்பத்தி செய்யும் முதல் சாம்சங் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ6எஸ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வின்டெக் உற்பத்தி செய்யும் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஏ6எஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆகிவருகிறது. இதேபோன்று ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரங்கள் வெளியானது. இதேபோன்று கேலக்ஸி P30 ஸ்மார்ட்போனின் விவரங்களும் இணையத்தில் லீக் ஆனது, பின் இந்த ஸ்மார்ட்போன் தான் கேலக்ஸி ஏ6எஸ் என கூறப்பட்டது.



    புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள் மற்றும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் வின்டெக் உற்பத்தி செய்யும் மாடல் அதன் லோகோவுடன் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய திட்டத்தின் மூவம் சாம்சங் நிறுவனம் உற்பத்தி கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும் என கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், இருநிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.




    சமீபத்தில் சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா செட்டப் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 24 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் லென்ஸ், 8 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் கண்களை கொண்டு பார்க்கும் காட்சியை அப்படியே படம்பிடிக்க முடியும்.

    முன்பக்கம் 12 எம்.பி. கேமரா சென்சார் மற்றும் பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு குறைவான வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும். இத்துடன் ஏ.ஆர். எமோஜி அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. #RedmiNote6Pro



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆன நோட் 6 ப்ரோ ஒருவழியாக தாய்லாந்தில் அறிமுகமானது. 

    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக புதிய நோட் 6 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ மாடலில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், நாட்ச், 19:9 ரக டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி மற்றும் டூயல் செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு கேமரா யூனிட்களிலும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 6,990 தாய் பட் (இந்திய மதிப்பில் ரூ.15,660) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனம் இந்தியாவில் மூன்று ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #MiTV4APro #MiTV4Pro



    சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi டி.வி. 4சி ப்ரோ, Mi டி.வி. 4ஏ ப்ரோ மற்றும் Mi டி.வி. 4 ப்ரோ ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    மூன்று புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களிலும் பேட்ச்வால் டி.வி. அனுபவம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு டி.வி. மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால் புதிய டி.வி.க்களில் கேம் மற்றும் செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியும். 

    இத்துடன் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், மொபைலில் உள்ள தரவுகளை Mi டி.வி.யில் கண்டுகளிக்க முடியும். ப்ளூடூத் Mi ரிமோட் மற்றும் வாய்ஸ் சர்ச் வசதி இருப்பதால் ஆன்லைன் செயலிகளில் விருப்பமான தரவுகளை மிக எளிமையாக தேடி பார்க்கலாம்.

    இம்முறை பேட்ச்வால் அம்சத்தில் ஜியோசினிமா, இரோஸ் நௌ, ஹூக் மற்றும் எபிக் விரைவில் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்டவை வழங்கப்படுகறது. புதிய பேட்ச்வால் அனைத்து Mi டி.வி. மாடல்களிலும் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi டி.வி. 4சி ப்ரோ (32) சிறப்பம்சங்கள்:

    - 32 இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் அம்லாஜிக் பிராசஸர்
    - மாலி-450 GPU
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த பேட்ச்வால் இன்டர்ஃபேஸ்
    - வைபை, ப்ளூடூத் 4.2, 3 x ஹெச்.டி.எம்.ஐ., ஏ.வி,  யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக்
    - MPEG1/2/4, REAL, H.265, H.264 வசதி
    - 2 x 10 வாட் ஸ்பீக்கர்கள்
    - ஸ்டீரியோ, டி.டி.எஸ்.



    சியோமி Mi டி.வி. 4ஏ ப்ரோ (49) சிறப்பம்சங்கள்:

    - 49 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் அம்லாஜிக் பிராசஸர்
    - மாலி-450 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த பேட்ச்வால் இன்டர்ஃபேஸ்
    - வைபை, ப்ளூடூத் 4.2, 3 x ஹெச்.டி.எம்.ஐ., ஏ.வி,  யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக்
    - MPEG1/2/4, REAL, H.265, H.264 வசதி
    - 2 x 10 வாட் ஸ்பீக்கர்கள்
    - ஸ்டீரியோ, டி.டி.எஸ்.



    சியோமி Mi டி.வி.4 ப்ரோ (55) சிறப்பம்சங்கள்:

    - 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் அம்லாஜிக் பிராசஸர்
    - மாலி-டி830 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த பேட்ச்வால் இன்டர்ஃபேஸ்
    - வைபை, ப்ளூடூத் 4.2, 3 x ஹெச்.டி.எம்.ஐ., ஏ.வி, யு.எஸ்.பி. 3.0 x 2, யு.எஸ்.பி. 2.0 x1, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக்
    - டால்பி பிளஸ் டி.டி.எஸ். சினிமா ஆடியோ

    சியோமி Mi டி.வி. 4சி ப்ரோ (32) மற்றும் Mi டி.வி. 4ஏ ப்ரோ (49) விலை முறையே ரூ.14,999 மற்றும் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi வலைத்தளங்களில் அக்டோபர் 9-ம் தேதி துவங்குகிறது. Mi டி.வி. 4 ப்ரோ (55) மாடல் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 10-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் Mi வலைத்தளஙங்களில் நடைபெற இருக்கிறது. 
    ×