search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94368"

    ஜப்பானில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரெயில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #Tokyo #MetroTrain #FreeFood #Crowding
    டோக்கியோ:

    ஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தலைநகர் டோக்கியோவில் உள்ள டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காலை வேளையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருவதால் அந்த ரெயில் நிலையம் திக்குமுக்காடி போகிறது.

    இதற்கு தீர்வு காண ஜப்பான் மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய உத்தியை கையாள முடிவு செய்திருக்கிறது. ஆதாவது டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் தொடங்குவதற்கு முன்பாக வரக்கூடிய பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2000 முதல் 3000 பயணிகளுக்கு இலவச உணவு வழங்க வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. #Tokyo #MetroTrain #FreeFood #Crowding 
    ஜப்பானில் வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டை மீண்டும் வரும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #JapanWhaleHunting
    டோக்கியோ:

    ஜப்பானில் திமிங்கல இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக திமிங்கல இறைச்சியை விரும்பி சாப்பிட்டாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே அதன் நுகர்வு அதிகரித்தது. தற்போது திமிங்கல இறைச்சி சாப்பிடுவது குறைந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இறைச்சிக்காக திமிங்கலங்கள் வேட்டையாடப்படுகின்றன.

    அதேசமயம் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஜப்பான் அரசு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு திமிங்கலங்களை வேட்டையாடியது. பின்னர் அதன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமிங்கல வேட்டையில் ஈடுபடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அந்த ஒரு வருடம் மட்டும் வேட்டையை நிறுத்திய ஜப்பான், அடுத்த ஆண்டில் இருந்து வேட்டையை மீண்டும் தொடங்கியது.



    இந்நிலையில், வரும் ஜூலை மாதத்தில் இருந்து வர்த்தக அடிப்படையில் திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்க உள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

    வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டைக்கு சர்வதேச திமிங்கல வேட்டை தடுப்பு ஆணையம் (ஐடபுள்யூசி) தடை விதித்துள்ளது. எனவே, அந்த ஆணையத்தில் இருந்து விலகி விட்டு, திமிங்கல வேட்டையைத் தொடங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. திமிங்கல இறைச்சி சாப்பிடுவது தங்கள் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ஜப்பானின் இந்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால் ஜப்பான் அரசின் இந்த நடவடிக்கை கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று  என்று ஐடபுள்யூசி எச்சரித்துள்ளது. அதாவது, ஐடபுள்யூசியால் பாதுகாக்கப்படும் மின்கே போன்ற அழிந்துவரும் திமிங்கல இனங்களை ஜப்பான் இனி தாராளமாக வேட்டையாடும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஜப்பான் பிராந்திய நீர்ப்பரப்பு மற்றும் பொருளாதார மண்டலங்களில் வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டை கட்டுப்படுத்தப்படும் என்று அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். எனவே, அண்டார்டிக் கடல் மற்றும் தென்துருவத்தில் திமிங்கல வேட்டையை ஜப்பான் நிறுத்தும். எனினும் ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #JapanWhaleHunting
    ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். #JapanBlast #Sapporo
    சப்போரோ:

    ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வெடிப்பைத் தொடர்ந்து எரிவாயு கசிந்த வாசனையும் உணரப்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

    விபத்து குறித்த தகவலறிந்து, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



    இந்தத் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரண்டுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் சப்போரோ நகர தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து சப்போரோ நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JapanBlast #Sapporo


    ஜப்பான் நாட்டின் ராணியாக பதவியேற்க இருப்பதை தான் பாதுகாப்பற்றதாக உணர்வதாக பட்டத்து இளவரசி மசாகோ கூறியுள்ளார். #JapanPrincess #Masako
    டோக்கியோ:

    ஜப்பானில் தற்போது மன்னராக இருப்பவர் அகிடோ. இவருக்கு வயது 84. இவருடைய மூத்த மகன் நருகிடோ பட்டத்து இளவரசராகவும், அரவது மனைவி மசாகோ பட்டத்து இளவரசியாகவும் உள்ளனர். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நிலையின் காரணமாக அகிடோ பதவி விலக முடிவெடுத்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி அவர் பதவி விலகுகிறார்.அதற்கு அடுத்தநாள் மே 1-ந் தேதி, பட்டத்து இளவரசரான நருகிடோ மன்னராகவும், அவரது மனைவியும் பட்டத்து இளவரசியுமான மசாகோ ராணியாகாவும் அரியணை ஏற இருக்கிறார்கள்.

    இந்த நிலையில், பட்டத்து இளவரசி மசாகோ தான் அடுத்த ஆண்டு நாட்டின் ராணியாக பதவியேற்க இருப்பதை பாதுகாப்பற்றதாக உணர்வதாக தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் ஜப்பான் மக்களுக்கு தன்னால் முடிந்த வரையில் சிறந்த சேவையை அளிப்பதற்கு தான் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.மன அழுத்தம் தொடர்பான பிரச்சினையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த மசாகோ அதில் இருந்து தான் மெல்ல மெல்ல மீண்டு வருவதாக கூறி இருக்கிறார்.

    எனவே இனி தான் அதிக அளவிலான அரசு பணிகளை மேற்கொள்ளப்போவதாக அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார். #JapanPrincess #Masako
    ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டபோது அமெரிக்க போர் விமானங்கள் நடுவானில் மோதி கடலில் விழுந்தது. இதில் மாயமான 5 வீரர்களை அமெரிக்க மற்றும் ஜப்பான் படையினர் தேடிவருகிறார்கள். #Aircraftscollide
    டோக்கியோ:

    அமெரிக்க ராணுவம் உலகின் பல்வேறு நாடுகளிலும் ராணுவ முகாம்களை அமைத்துள்ளது. அதன்படி ஜப்பானிலும் இவற்றின் ராணுவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

    அங்குள்ள யுவாகுனி என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் இருக்கிறது. நேற்று இரவு கடற்படை வீரர்கள் விமானத்தில் பறந்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது குண்டுவீச்சு விமானத்திற்கு மற்றொரு விமானத்தில் இருந்து இரவு நேரத்தில் பெட்ரோல் நிரப்புவது தொடர்பான பயிற்சி கடற்பகுதிக்கு மேலே நடந்தது. எப்.ஏ.18 ரக போர் விமானத்துக்கு சி-130 என்ற பெட்ரோல் டேங்கர் விமானம் மூலம் எரிபொருள் நிரப்ப பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென 2 விமானங்களும் மோதிக் கொண்டன. இதில் அவை நொறுங்கி கடலில் விழுந்தது. எப்.ஏ.18 விமானத்தில் 2 வீரர்களும், சி-130 விமானத்தில் 5 வீரர்களும் இருந்தனர்.

    உடனடியாக அங்கு மீட்பு பணி நடந்தது. ஜப்பான் கடற்படையை சேர்ந்த 9 விமானங்களும், 3 கப்பல்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டன. அப்போது கடலில் மிதந்து கொண்டிருந்த 2 வீரர்களை மீட்டனர்.

    அதில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் இருக்கிறார். மற்ற 5 வீரர்களை காணவில்லை. தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஜப்பான் படையினர் தேடிவருகிறார்கள்.

    இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, இரவு நேரத்தில் நடுவானில் விமானங்களில் எரிபொருள் நிரப்புவது கடினமாக வி‌ஷயமாகும். இந்த பயிற்சியில் ஈடுபட்டதால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.

    நேற்று ஜப்பான் பகுதியில் கடுமையான மேகக்கூட்டம் இருந்தது. எனவே, வானிலை காரணமாக இரு விமானங்களும் மோதி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. #Aircraftscollide

    ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்த ஹிஜிகி இக்குயாமா என்ற ஸ்கிப்பிங் வீரர், மாம்பா ரோப் ஸ்டைலில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். #JapaneseSkippingStar
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்தவர் ஹிஜிகி இக்குயாமா. ஸ்கிப்பிங் வீரரான இவர், உலக சாதனை தினத்தையொட்டி நேற்று 30 விநாடிகளில் 24 ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்தார்.  அத்துடன் அவர்  முந்தைய சாதனையை (22 ஸ்கிப்பிங்) முறியடித்தார்.

    இவரின் இந்த சாதனை பள்ளி மாணவ- மாணவிகள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது. #JapaneseSkippingStar 
    ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே அவரது இல்லத்தில் குச்சிகளை பயன்படுத்தி எப்படி சாப்பிடுவது என்பதை கற்றுத் தந்ததாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். #JapanesePMAbe #NarendraModi
    டோக்கியோ :

    ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று யமனாஷி நகரில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவருக்கு இரவு நேர உணவு வழங்கி உபசரித்தார்.

    வழக்கமாக ஜப்பானியர்கள் ‘சாப்ஸ்டிக்ஸ்’ என்னும் 2 குச்சிகளை பயன்படுத்தி அதன் மூலம் உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவது வழக்கம். பிரதமர் மோடிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளுடன் இதேபோல் குச்சிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதைக்கொண்டு எவ்வாறு சாப்பிடுவது என்பது தெரியாமல் மோடி சற்று தயங்கினார்.

    அப்போது ஜப்பானிய முறைப்படி குச்சிகளை பயன்படுத்தி எவ்வாறு சாப்பிடுவது என்று ஷின்ஜோ அபே மோடிக்கு விளக்கமாக கற்றுக் கொடுத்தார். அதை ஆர்வத்துடன் அறிந்து கொண்ட மோடியும் அதேபோல் உணவை ருசி பார்த்தார்.

    இந்த தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார். #JapanesePMAbe #NarendraModi
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் ஓமனை வீழ்த்திய ஜப்பான் அணி, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்கிறது. #AsianChampionsTrophy2018
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான் அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஓமனை எதிர்கொண்டது. இதில் ஜப்பான் 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இந்த சுற்று முடிவடைவதற்கு முன்னதாகவே புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்பின்னர் லீக் சுற்று முடிந்ததும் அரையிறுதியில் விளையாடும் அணிகள் முடிவு செய்யப்பட்டன.



    அதன்படி நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. #AsianChampionsTrophy2018 #HockeyIndia #IndianHockey
    இரவில் 6 மணி நேரம் நன்கு தூங்கும் ஊழியர்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கி உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம் அனைவரையும் ஆசசரிய்த்தில் ஆழ்த்தியுள்ளது. #Japan #Employees #Sleeping
    டோக்கியோ:

    சமீப காலமாக பொதுமக்கள் இரவில் தூங்கும் நேரம் குறைந்து வருகிறது. அவர்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களால் மறுநாள் காலை கவனத்துடன் வேலையில் ஈடுபட முடியவில்லை, இதனால் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உற்பத்தியும், வேலையும் பாதிப்பு அடைகிறது.

    இதைத் தடுக்கும் வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கிரேசி இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் புதுவிதமான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறுகையில், ஊழியர்களின் செல்போனில் ஒரு ஆப்ஸ் பதிவேற்றம் செய்யப்படும். ஊழியர்கள் ஆன் செய்து வைத்துத் தூங்கும்போது, அந்த ஆப்ஸ் தூங்கும் ஊழியர்களைக் கண்காணிக்கும். நாள் ஒன்றுக்கு இரவில் 6 மணிநேரம் அயர்ந்து தூங்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.


     
    இதன்மூலம், ஊழியர்களின் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது. ஊழியர்கள் தூங்குவதற்கு பரிசளிப்பதுடன் நாங்கள் நின்று விடுவதில்லை.

    சிறந்த சத்துள்ள உணவு, உடற்பயிற்சிகள் செய்யவும் அறிவுறுத்துகிறோம், அலுவலகத்தில் எப்போதும் அன்பான, மகிழ்ச்சியான சூழல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். விடுமுறை நாளில் அவர்களைச் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறோம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Japan #Employees #Sleeping
    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்றது. #AsianHockey #India #Japan
    5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

    இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 11-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.

    நேற்று ஜப்பானுடன் இந்தியா மோதியது. இதில் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. மன்தீப்சிங், ஹர்மன்பிரீத் சிங், லலித் உபத்யாவ் தலா 2 கோலும், குருஜந்த் சிங், கோஜத்சிங், அக்‌ஷய் தீப் தலா 1 கோல் அடித்தனர்.

    அடுத்து இந்திய அணி நடப்பு சாம்பியனான மலேசியாவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. #AsianHockey #India #Japan
    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 83 ஆண்டுகளாக இயங்கிவந்த உலகின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ட்ஸுக்குஜி என்ற மீன் மார்க்கெட் கடந்த 83 ஆண்டுகளாக இயங்கி வந்தது. வகைவகையான புத்தம்புது மீன்கள் மற்றும் பழங்கள் கிடைக்கும் இந்த மார்க்கெட் உலகிலேயே மிகப்பெரிய மீன் மார்க்கெட் என்ற சிறப்பிடத்தை பிடித்திருந்தது.

    2020-ம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் நடத்த தீர்மானித்துள்ளது. இதற்காக தலைநகர் டோக்கியோவின் மத்திய பகுதியில் உள்ள இந்த மீன் மார்க்கெட்டை அகற்றிவிட்டு, வேறிடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.


    இதையடுத்து, நேற்று இந்த மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது. கடைசி வியாபாரமாக 162 கிலோ எடையுள்ள சூரை மீன் நல்ல விலை போனதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மீன் மார்க்கெட் இருந்த இடத்தில் பல அடுக்குகளை கொண்ட வாகன நிறுத்துமிடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Tsukijifishmarket #fishmarketshutsdowns
    ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘டிராமி’ என்கிற புயல் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள். #Japan #TramiCyclone
    டோக்கியோ:

    ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘டிராமி’ என்கிற புயல் கடுமையாக தாக்கியது.

    அங்கு மணிக்கு 216 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் ஒசாகா மாகாணத்தின் பல நகரங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.



    புயல் மற்றும் மழையை தொடர்ந்து அங்கு விமான சேவை தடைபட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் புல்லட் ரெயில் உள்பட அனைத்து ரெயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.

    ‘டிராமி’ புயலுக்கு இதுவரை 2 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் நடந்து வருகின்றன.

    கடந்த மாதம் ஜப்பானை ஜெபி என்கிற பயங்கர புயல் தாக்கியதும், அது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதோடு, 7 பேரை பலிகொண்டதும் நினைவுகூரத்தக்கது.  #Japan #TramiCyclone
    ×