search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94368"

    ஜப்பானை தாக்கிய ஜாங்டரி புயலால் ரெயில் சேவையும் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. #JongdariCyclone
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் ‘ஜாங்டரி’ புயல் நேற்று தாக்கியது. இதனால் தலைநகர் டோக்கியோ மற்றும் நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மணிக்கு 90 கி.மீ. முதல் 126 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.



    நேற்று இரண்டாவது நாளாக ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் சேவையும் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. ஒகயாமா, ஹிரோஷிமா மாகாணங்களில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. புயல், மழை தொடர்பான சம்பவங்களில் 16 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    கனகவா மாகாணத்தில் ஒருவர் காணாமல் போய்விட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஷோபரா நகரில் 36 ஆயிரம் மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேற்கு ஜப்பானில் குரே உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டனர். புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.  #JongdariCyclone 
    ஜப்பான் நாட்டை நெருங்கும் ஜாங்டரி புயலால் டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. #Japan #JongdariCyclone
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டை ‘ஜாங்டரி’ (வானம்பாடி) என்று பெயரிடப்பட்டு உள்ள புயல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேரத்தில் இது தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இந்த புயல் காரணமாக டோக்கியோவிலும், ஹோன்சு தீவு பகுதியிலும் மிகப் பலத்த மழை பெய்யும். 15 அங்குல அளவுக்கு இந்த மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் கூறுகிறது.

    நேற்று இரவு டோக்கியோவில் நடைபெறவிருந்த வாணவேடிக்கை திருவிழா புயல், மழையினால் ஒத்தி போடப்பட்டு உள்ளது.

    ஜப்பானுக்கு ஜூலை மாதம், இயற்கை பேரிடர் மாதமாக மாறி விட்டது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக கடுமையான அனல் காற்று வீசி அங்கு 80-க்கும் மேற்பட்டோர் பலியானதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

    இப்போது இந்த புயல், மழையினால் என்ன சேதம் ஏற்படப்போகிறதோ என ஜப்பான் மக்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.  #JongdariCyclone  #Japan #Tamilnews 
    ஜப்பானில் நிகழும் கடும் வறுத்தெடுக்கும் வெயிலால் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. #Japan #NaturalDisaster #65Dead
    டோக்கியோ:

    ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அனல் காற்று வீசுகிறது. அங்கு அதிகபட்சமாக குமகாயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) 106 டிகிரி (பாரன்ஹீட்) வெயில் பதிவாகி உள்ளது. ஜப்பான் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என தகவல்கள் வெளியாகி உள்ளன.



    ஆகஸ்டு மாத தொடக்கம் வரையில் அங்கு அதிகபட்சமாக 95 டிகிரி வெப்ப நிலை தொடரும் என அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி அமைப்பு கூறி உள்ளது. வறுத்தெடுக்கும் வெயிலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடும் வெயிலில் மயங்கி விழுந்து 22 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 1 வாரத்தில் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர்.

    இதையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. பொதுமக்கள் நிறைய தண்ணீர் பருகுமாறும், குளுகுளு வசதியை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.#Japan #NaturalDisaster #Tamilnews 
    14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் ‘டி’ பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது ஜப்பான். #WomenWorldCupHockey #Japan #NewZealand
    லண்டன்:

    16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. ஜப்பான் அணியில் ஒகவா, ஷிமிசூ தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா-பெல்ஜியம் இடையிலான மற்றொரு ஆட்டம் கோல் இன்றி ‘டிரா’ ஆனது.

    இன்றைய ஆட்டங்களில் ஜெர்மனி-அர்ஜென்டினா, அமெரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக்கில் அயர்லாந்தை நாளை சந்திக்கிறது.  #WomenWorldCupHockey #Japan #NewZealand
    ஜப்பான் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலியாகினர். #JappanHeatWave
    டோக்கியோ:

    உலக நாடுகளுடன் தனது வணிக ரீதியிலான போட்டியில் முதன்மையாக விளங்கும் ஜப்பான் நாட்டில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மேலும், பலர் தங்கள் வீடு, உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஜப்பான் ராணுவத்துடன் மக்களும் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், தற்போது ஜப்பானின் பல்வேறு நகரங்களில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. #JappanHeatWave
    பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். #PVSindhu
    பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று  நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை வீழ்த்தி பி.வி சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹாராவை எதிர்க்கொண்டார். மிகவும் கடுமையாக போராடிய பி.வி சிந்து 15-21, 18-21 என்ற செட் கணக்கில் தனது வெற்றி வாய்ப்பை ஜப்பான் வீரரிடம் பறிகொடுத்தார். #PVSindhu
    ஜப்பான் நாட்டில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. #Japanfloods
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

    மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன.

    தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Japanfloods 
    ஜப்பானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #rainhitsJapan
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். வீடுகள் மூழ்கியதால் மக்கள் கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் ராணுவ படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படு மேடான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.



    இதேபோல் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர் மழை காரணமாக பலவேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு பொதுமக்களை பலி வாங்கி வருகிறது.



    இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #rainhitsJapan
    வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்த பிறகே அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இன்று தெரிவித்தார். #denuclearisation
    டோக்கியோ :

    வடகொரியா, ஜப்பான், வியட்னாம், ஐக்கிய அரபு அமீரகம், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாடாக அவர், வடகொரியா தலைநகர் பியோங்யாங்கிற்கு கடந்த 5-ம் தேதி சென்றிருந்தார்.

    சமீபத்தில், அணு ஆயுதங்களை மிக வேகமாக அழிக்க வடகொரியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அவசரம் காட்டி அழுத்தம் கொடுத்தது. ஆனால், அவ்வளவு வேகமாக அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தது.

    இதனால், வடகொரிய பயணத்தின் போது கிம் ஜாங் அன்னை சந்திக்காத பாம்பியோ, வடகொரிய உயர் அதிகாரிகளை சந்தித்தார், அவர்களிடம் சமீபத்தில் இருநாடுகளுக்கு இடையே போடப்பட்ட சிங்கப்பூர் ஒப்பந்தம் குறித்தும், அணு சோதனை மையங்களை அழிப்பது தொடர்பாகவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.



    வடகொரியா பயணத்தை முடித்துகொண்டு, பாம்பியோ நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். அங்கு தென்கொரியா மற்றும் ஜப்பான் நாட்டின் வெளியுறவு மந்திரிகள் உடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்த பிறகே அந்நாட்டின் மீது விதிக்கப்படுள்ள பொருளாதார தடைகள் விலக்கிக்கொள்ளப்படும்.

    மேலும், சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, அணு ஆயுதங்கள் வடகொரியாவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதா? என ஆய்வு குழுவினர் ஆய்வு செய்து சரிபார்த்த பின்னரே பொருளாதார தடைகள் விலக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என பாம்பியோ தெரிவித்தார்.
    ஜப்பான் நாட்டில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. #JapanRains
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

    மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன.

    தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 20க்கு மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #rainhitsJapan
    கடந்த சில தினங்களாக ஜப்பானில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் 15 பேர் பலியாகியுள்ளனர் .
    டோக்கியோ :

    ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒகயாமா, ஹிரோசிமா மற்றும் யமாகுச்சி போன்ற அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இதனால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காணாமல்போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் பரவாலாக அந்நாடு பாதிப்புகள் மற்றும் சேதங்களை சந்திப்பது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஜப்பான் நாட்டில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயு தாக்குதல் நடத்தி, 13 பேரை கொன்று குவித்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில், 1995-ம் ஆண்டு, மார்ச் மாதம் 20-ந் தேதி சரின் என்ற நச்சு வாயு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த நச்சு வாயு, இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியில் நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ஆர்கனோ பாஸ்பரஸ் வகை நரம்பு வாயு ஆகும்.

    இந்த வாயு தாக்குதலுக்கு ஆளான அப்பாவி மக்கள் சில விநாடிகளில் வாந்தி எடுத்தனர், சிலருடைய கண்களில் பார்வை பறிபோனது, சிலர் பக்கவாதத்துக்கு ஆளாகினர். 13 பேர் உயிரிழந்தனர்.

    பெரும்பாலும் குற்றச்சம்பவங்களே நடைபெறாத ஜப்பானில் இந்த நச்சு வாயு தாக்குதல் சம்பவம், ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்து விட்டது.

    இந்த தாக்குதலை தொடர்ந்து பல இடங்களில் ஹைட்ரஜன் சயனைடு தாக்குதலுக்கு முயற்சிகள் நடந்து, அவை முறியடிக்கப்பட்டன.

    இந்த சம்பவங்களில், அம் ஷின்ரிக்யோ என்ற மத வழிபாட்டுக்குழுவின் தலைவரான ஷோகோ அசஹாரா (வயது 63) என்ற சாமியாருக்கும், அவரது குழுவை சேர்ந்த 6 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். டோக்கியோ சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வழக்கு விசாரணையின்போது, ஷோகோ அசஹாராவும், அவரது குழுவை சேர்ந்த டொமோமசா நககவா (55), கியோஹைட் ஹயகவா (68), யோஷிஹிரோ இனாவ் (48), மசாமி சுசியா (53), செய்ச்சி என்டு (58) டொமோமிட்சு நீமி (54) ஆகிய 6 பேரும் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

    ஆனாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு டோக்கியோ மாவட்ட கோர்ட்டு 2004-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உறுதி செய்தது. ஆனாலும் அனைவரும் மரண தண்டனையில் இருந்து தப்புவதற்கு பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தினர். இவை அனைத்தும் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தன. அவற்றின் முடிவுகள், சாமியாருக்கும், அவரது குழுவை சேர்ந்தவர்களுக்கும் எதிராகவே அமைந்தன.

    இந்த நிலையில், ஷோகாவும், மற்ற 6 பேரும் டோக்கியோ சிறையில் வைத்து நேற்று ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜப்பானில் வெகு அபூர்வமாகத்தான் மரண தண்டனை விதிக்கவும், நிறைவேற்றவும் படுகிறது.

    மேலும், மரண தண்டனை நிறைவேற்றுவது பற்றி முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படுவதும் இல்லை. தூக்கில் போடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கே தகவல் தெரிவிக்கிற நடைமுறை பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

    தூக்கில் போடப்பட்ட சாமியார் ஷோகோ, இந்து மற்றும் புத்த மத நம்பிக்கைகளை இணைத்து அம் ஷின்ரிக்யோ மத வழிபாட்டு குழுவை தொடங்கினார். பின்னர் இவர் தன்னைத்தானே ஏசு கிறிஸ்து என்று அறிவித்துக்கொண்டார். அதுமட்டுமின்றி புத்தருக்கு பிறகு தான் ஞான ஒளி பெற்றவர் என்றும் அறிவித்துக்கொண்டார்.

    1989-ம் ஆண்டுதான் ஷோகோவின் குழு, மத அமைப்பு என்ற அங்கீகாரத்தை பெற்றது. அதே நேரத்தில் இந்த அமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மத ரீதியிலான பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×