search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94372"

    • கைதான வினோத் ஏற்கனவே தாம்பரம் ரெயில் நிலையத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்று வெளியே வந்தவர்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகிலன் (வயது57). தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரும் அதே பகுதிைய சேர்ந்த வினோத்தும் (32) நண்பர்களாக பழகி வந்தனர்.

    நேற்று இரவு வினோத்தும், பழவியாபாரி கோகிலனும் காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் ஒன்றாக மது குடித்தனர். பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வினோத் அருகில் உள்ள கடைக்கு சென்று காய் வெட்டும் கத்தியை வாங்கி வந்து நண்பர் கோகிலனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கோகிலன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,

    இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற வினோத்தை மடக்கி பிடித்து வைத்து சேலையூர் போலீஸ் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.

    உதவி ஆணையர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட கோகிலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கைதான வினோத் ஏற்கனவே தாம்பரம் ரயில் நிலையத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்று வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெற்குன்றம் முனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்.
    • கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரஜிஸ்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    நெற்குன்றம் முனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் தனுஷ் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் இரவு கோயம்பேடு மார்க்கெட் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் தனுசை வழி மறித்து கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டதால் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தலையில் வெட்டுபட்டு படுகாய மடைந்த தனுஷ் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரஜிஸ்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அதே பகுதியை சேர்ந்த துரை முருகன் (25) என்பவரை கைது செய்தனர். அவனிடம் இருந்து பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது தப்பி ஓடிய அவனது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

    • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரபல தனியார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • கைதான 2 பேரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரபல தனியார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து திடீரென ரூ.1.10 கோடி மாயமானது.

    மர்ம நபர் ஆன்-லைன் மூலம் நூதன முறையில் பணத்தை திருடி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் ஆன்-லைன் மூலம் நூதன முறையில் தனியார் நிறுவனத்தின் பணத்தை திருடியது கொல்கத்தாவைச் சேர்ந்த சபீர் அலி, கிருஷ்ணகுமார் பிரதாப் என்பது தெரிந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கொல்கத்தா விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வந்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதான 2 பேரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நூதன திருட்டுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.

    • திருப்பூரில் தங்கியிருந்த கொள்ளையர்கள் சங்கமேஸ்வரன் வீட்டை ஒரு வாரமாக நோட்டமிட்டுள்ளனர்.
    • நகை மற்றும் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூா் ஓடக்காடு ராயபண்டாரம் வீதியைச் சோ்ந்தவா் சங்கமேஸ்வரன் (வயது 63). சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வரும் இவா் தனக்கு சொந்தமான வீட்டில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். கடந்த 12-ந்தேதி சங்கமேஸ்வரன் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் இருந்தார்.

    அப்போது அங்கு முகக்கவசம் அணிந்து வீட்டுக்கு வந்த மா்ம நபா்கள் 4 போ் கதவை உள்புறமாக பூட்டினர்.பின்னா் சங்கமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோரை கட்டிப்போட்டனா். மேலும், அவரது மகள் ஷிவானியை மற்றொரு அறையில் போட்டு பூட்டினா். பின்னா் வீட்டில் இருந்த ரூ.30 லட்சம், 40 பவுன் நகை ஆகியவற்றைக கொள்ளையடித்து விட்டுத் தப்பிச்சென்றனா்.அவற்றின் மதிப்பு ரூ.50லட்சம் இருக்கும்.

    இதுகுறித்து ஷிவானி தனது மடிக்கணினி மூலமாக அமெரிக்காவில் உள்ள தனது சகோதரியை தொடா்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளாா். இதன் பின்னா் ஷிவானியின் சகோதரி திருப்பூரில் உள்ள நண்பருக்கு தகவல் கொடுத்ததன்பேரில் திருப்பூா் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து 3 பேரையும் மீட்டனா்.

    இந்த சம்பவம் தொடா்பாக திருப்பூா் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படையும் அமைக்கப்பட்டது.தனிப்படையினர் நெல்லை, மும்பையில் முகாமிட்டு கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் சங்கமேஸ்வரனுக்கும், திருப்பூா் வேலம்பாளையம் சொா்ணபுரி லேஅவுட் பகுதியை சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (34) என்பவருக்கும் ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கோகுலகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சங்கமேஸ்வரன் வீட்டில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கார் வியாபாரம் செய்து வந்த கோகுலகிருஷ்ணனுக்கும், சங்கமேஸ்வரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில் அவர்களுக்குள் பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஒரு மோசடி வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோகுலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேனியை சேர்ந்த வள்ளிநாயகம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிறையில் இருந்து வெளியே வந்த கோகுலகிருஷ்ணனுக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது. சங்கமேஸ்வரனிடம் அதிகம் பணம் இருப்பதை அறிந்த கோகுலகிருஷ்ணன் அவர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

    இது பற்றி அவர் வள்ளிநாயகத்திடம் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்திருந்த அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி வள்ளிநாயகம் தனது நண்பர்கள் 3பேரை அழைத்துக்கொண்டு திருப்பூர் வந்துள்ளார். திருப்பூர் வந்த அவர்களுக்கு கோகுலகிருஷ்ணன் தங்குவதற்கு இடம் மற்றும் செலவுக்கு பணம் கொடுத்துள்ளார்.

    திருப்பூரில் தங்கியிருந்த கொள்ளையர்கள் சங்கமேஸ்வரன் வீட்டை ஒரு வாரமாக நோட்டமிட்டுள்ளனர். யார்-யார் வீட்டிற்கு வருகிறார்கள், வீட்டில் எப்போது ஆட்கள் இல்லாமல் உள்ளனர் என்பதை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கமேஸ்வரன் வீட்டு அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்து வீட்டிற்குள் சென்று அவர்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொள்ளையடித்ததும் கோகுலகிருஷ்ணனுக்கு ரூ.1.50லட்சம் பணத்தை கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை பின்னர் தருவதாக கூறி விட்டு 3 பேரும் தப்பி சென்றுள்ளனர். தலைமறைவான வள்ளிநாயகம் மற்றும் 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்து நகை-பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம் கருப்பூர் டோல்கேட்டில் 300 கிலோ எடை கொண்ட 25 மூட்டை குட்காவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் குட்கா, பான்பராக் உள்பட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தமிழகத்திற்கு ஓசூர் வழியாக கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தின் எல்லை பகுதியான ஓசூர் முதல் சேலம் வரை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதுடன் வாகன சோதனையையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் சேலம் கருப்பூர் டோல்கேட்டில் இன்று அதிகாலை 1 மணியளவில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 25 மூட்டைகளில் 300 கிலோ எடை கொண்ட குட்கா உள்பட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து காரை ஓட்டி வந்த மைசூர் ராகவேந்திரா நகரை சேர்ந்த அருண் (25) மற்றும் காரில் இருந்த மைசூர் விஜயாநகரை சேர்ந்த பிரசாந்த் (28) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மைசூரில் இருந்து இந்த குட்கா பொருட்களை சேலம் சீலநாயக்கன்பட்டிக்கு எடுத்து செல்வதாகவும், அங்கிருந்து வேறு எங்கு எடுத்து செல்வது என்று பின்னர் தெரிவிப்பதாகவும், தங்களை அனுப்பியவர்கள் கூறியதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் வாகனம் மற்றும் 300 கிலோ எடை கொண்ட அந்த 25 மூட்டை குட்காவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த குட்கா மூட்டையை அனுப்பியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சையில் பல்வேறு இடங்களில் திருடிய 12 பவுன் நகை-மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே விளார் சாலையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போலீஸ்காரர்கள் முருகேசன், சிற்றரசு ஆகியோர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2பேரை சந்தேகத்தின் பேரில் மறித்தனர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்ததில் அதில் நகைகள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தஞ்சை அருகே உள்ள காசாநாடு புதூரை சேர்ந்த பாலகுமார்(வயது 27) , பாரதி தாசன் நகரை சேர்ந்த கோகிலன்(24) ஆகியோர் என்பதும், அவர்களிடம் இருந்த நகைகள் தஞ்சை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்ளையடித்தது என்பதும் தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் எங்கு கொள்ளையடித்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தம்பாளையம் அருகே மொபட் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தம்பாளையம்:

    கந்தம்பாளையம் அருகே உள்ள கவுண்டிபாளையத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 25). மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று பார்த்தபோது மொபட்டை காணவில்லை. இதுகுறித்து அவர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்தநிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் ஆவாரங்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மொபட்டில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் நாமக்கல் செல்லப்பா காலனியை சேர்ந்த சுப்பிரமணி மகன் முத்துபாண்டி (20) என்பதும், ராகுலின் மொபட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து முத்துபாண்டியை போலீசார் கைது செய்தனர்.
    அருப்புக்கோட்டை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்த போலீசார் ஏட்டு இளங்குமரனை தேடி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்படி, துணை சூப்பிரண்டு சகாயஜோஸ் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து, போலீஸ்காரர்கள் செல்வக்குமார், பரமசிவம், சிவக்குமார், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படையும், காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீசார்கள் சிவபாலன், கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படையும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் காந்திநகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரை சோதனை செய்தபோது அதில் 6 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனைத் தொடர்ந்து 6 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அவர்கள் கடந்த மாதம் 26-ந் தேதி அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசனை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் என தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் கஞ்சநாயக்கன்பட்டி கோபிகண்ணன் (வயது 30), ராஜபாளையம் சம்பத் குமார் (51), திருமங்கலம் மகேஸ்வர்மா (27), அஜய்சரவணன் (29), மதுரையைச் சேர்ந்த அலெக்ஸ்குமார் (36), மூர்த்தி (34) என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த கார் தான் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த ரூ.88 ஆயிரம், 2 பவுன் தங்க நகை, கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஏட்டு இளங்குமரன் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது.

    அவர் கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தான் கணேசன் வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்து விட்டதால் கணேசன் தனியாக வசிப்பதை அறிந்த இளங்குமரன், தனது சகோதரர் சம்பத்குமாரிடம் தெரிவித்து கும்பலாக வந்தால் நகை, பணம் கொள்ளையடிக்கலாம் என திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.

    அதன் பேரில் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான சம்பத்குமார் உள்பட 6 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் ஏட்டு இளங்குமரனை தேடி வருகின்றனர்.

    கைதான அலெக்ஸ் குமார், மூர்த்தி ஆகியோர் மீது கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தது.



    சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது கொசப்பாடி முள்ளுகாடு பகுதியில் சாராயம் விற்றதாக அதே ஊரை சேர்ந்த கண்ணன்(வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஓட்டலில் தவறவிட்ட செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் பெரமசாமிபிள்ளை தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 41). வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக்கில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நாகை மாவட்டம் பொறையாருக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் கோட்டுச்சேரி பூவம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டார்.

    அப்போது அவர் தனது செல்போனை ஓட்டலில் மறந்து வைத்துவிட்டு பொறையார் புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற நிலையில், செல்போன் இல்லாததை அறிந்து, அவர் மீண்டும் ஓட்டலுக்கு வந்து பார்த்தபோது அங்கு செல்போன் இல்லை.

    இது குறித்த சிவகுருநாதன் அளித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசாரின் இரவு ரோந்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர், பூவம் ஓட்டலில் சிவகுருநாதன் தவறவிட்ட செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.
    கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    பள்ளத்தூர் போலீஸ் சரகம் வட குடியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 65).இவர் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு கல்லுக்கால்களை ஊன்றியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகன் ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்தியபோது கருப்பையா தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளத்தூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.
    தக்கலையில் சந்தன மரம் வெட்டி கடத்தியவர்களை கைது செய்த போலீசார், இருவரையும் இன்று பத்மனாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    தக்கலை:

    தக்கலை பகுதியில் சந்தனமரங்கள் வெட்டி கடத்திய சம்பவம் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் தக்கலை முத்தளக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசை கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஒடினர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்டம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமேஷ் (வயது31), ராஜா (52) எனவும் முத்தளக்குறிச்சி பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக ஏற்கனவே முத்தளக்குறிச்சி பூதகுளம் அருகில் உள்ள சுடுகாட்டில் சந்தன மரங்கள் வெட்டி திருடப்பட்டதாக ஊர் தலைவர் ரமேஷ் குமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான இருவரையும் இன்று பத்மனாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    ×