search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94372"

    செந்துறை அருகே பார்களில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு உள்ள பார்களில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அமைத்திருந்த தனிப்படை போலீசார், அந்த பார்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செந்துறை ஆலமரம் அருகே உள்ள பாரில் மது விற்ற முரளி கிருஷ்ணன், பெரிய ஏரிக்கரையில் உள்ள பாரில் மது விற்ற பாலாஜி(வயது 34), ரெயில் நிலையம் அருகே உள்ள பாரில் மது விற்ற ராஜேந்திரன்(59) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 126 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வெள்ளையம்மாள் மற்றும் முருகன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பாளையில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    நெல்லை:

    பாளை போலீசார் நீதிமன்றம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாளையை சேர்ந்த எபிநேசர் என்பதும், கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் பாளை பகுதியில் கஞ்சா விற்ற பாலஅஜிதேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் துவாரகாபுரி முருகன் கோவில் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சாவுடன் நின்ற சின்னமுத்தூர் தியாகராஜன் (வயது 30), துவாரகாபுரி சரவணன் (23), செந்தமிழ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,500 மதிப்புள்ள 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    மாட்லாம்பட்டியில் பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலன். இவருடைய மனைவி அமுதா (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் திடீரென அமுதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நகை பறித்து கொண்டு தப்பியோட முயன்ற நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் காரிமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் நகை பறிக்க முயன்றவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (42) என்பது தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் சண்முகத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
    இருமத்தூர் பகுதியில் மது பதுக்கி விற்ற டாஸ்மாக் விற்பனையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர் பகுதியில் கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓட்டல் பின்புறம் மூட்டையுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் இருமத்தூரை சேர்ந்த சுரேஷ் (வயது 42), என்பதும் இவர் போச்சம்பள்ளி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிவதும் தெரியவந்தது. மேலும் அவர் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து சுரேசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி போலீசார் ஜாகீர்நாட்றம்பள்ளி கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக பெத்ததாளப்பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா, பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஆரணியில் காசாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த திருமணி புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 31). இவர், ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல், காசாளர் கலீம்வரிப் என்பவரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து கலீம்வரிப் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தார்.
    நாமக்கல்லில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று மேட்டுத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் நாமக்கல் நடராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்த பிரபு (வயது 35) என்பதும், கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் போலீசார் கோடியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அதே ஊரை சேர்ந்த நாகராஜ் (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோன்று கல்லாவி போலீசார் வைரம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற அதே ஊரைச் சேர்ந்த மாதேஷ் (66) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோட்டில் கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (28). லேத் பட்டறை தொழிலாளி. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு 17 வயது கல்லூரி மாணவியிடம் பழகி வந்தார்.

    இந்நிலையில் பிரகாஷ் அந்த மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி கடந்த 31-ந் தேதி கடத்திச் சென்றார். பின்னர் அவர் மாணவியை திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்நிலையில் ஈரோட்டில் ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மாணவியையும் போலீசார் மீட்டனர். மாணவியை கடத்தி திருமணம் செய்ததற்காக பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    லக்னோ சென்றுகொண்டிருந்த லாரியில் இருந்து 21 மாடுகள் மீட்கப்பட்டு கன்ஹா உப்வான் என்கிற விலங்குகள் நல அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    பரேலி:

    பஞ்சாப்பில் இருந்து பீகாருக்கு, உத்தர பிரதேச மாநிலம் வழியாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சிபி கேங் காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி கோவிந்த் சிங் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது, உ.பி., ராம்பூர் மாவட்டம் வழியே லக்னோ நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்றை பர்தௌலி கிராமம் அருகே வழிமறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அதில் லாரியில் சந்தேகத்திற்கு இடமாக 21 பசு மாடுகள் இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த மாடுகள் இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், லாரியில் இருந்து 21 மாடுகள் மீட்கப்பட்டு கன்ஹா உப்வான் என்கிற விலங்குகள் நல அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படியுங்கள்... தனியார் இயக்கும் ‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரெயில்: 190 ரெயில்கள் ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் தகவல்
    காரைக்குடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் தெற்கு போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு வந்த சத்யா நகரைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 21) என்பவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவன் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் விற்றுக்கொண்டிருந்த சேகர் (வயது 64) என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
    ×