search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94389"

    ஒரு கிலோ தேங்காய் பருப்பை அதிகபட்சமாக ரூ.103.45க்கும், குறைந்தபட்சம் ரூ.76.40க்கும் கொள்முதல் செய்தனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் தேங்காய் பருப்பு, சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 

    இதில் 99 விவசாயிகள் கலந்து கொண்டு 40ஆயிரத்து 174 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

    இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியை சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பை அதிகபட்சமாக ரூ.103.45க்கும், குறைந்தபட்சம் ரூ.76.40க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.34 லட்சத்து 22 ஆயிரத்து 847க்கு வணிகம் நடைபெற்றது.
    தெரு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொண்டு இரு சக்கர வாகனத்தின் உள்ளே வந்து விழுகின்றன.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பஸ் நிலையம் முன்பு தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பள்ளி மாணவ மாணவிகள், முதியோர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளது. 

    தெரு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொண்டு இருசக்கர வாகனத்தின் உள்ளே வந்து விழுகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நாய்களை பிடிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×