search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94389"

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    வெள்ளகோவில் :

    பொது சுகாதாரத்துறை ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100வது ஆண்டு நடைபெறுவதால், சுகாதாரத் துறை சார்பில் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரத்தில் தினசரி ஒரு நிகழ்வாக மருத்துவர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு கபடி போட்டி, இசை நாற்காலி, பேச்சு போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, ஆரோக்கியமான குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி மற்றும் மருத்துவர் கார்த்திகா, சுகாதார மேற்பார்வை யாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், வேல்முருகன் உட்பட வெள்ளகோவில், கம்பளியம்பட்டி, முத்தூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • குறுக்குபாளையம் என்ற இடத்தில் குளம் உள்ளது.
    • விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் குழாய் நீர் நிலை உயரும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள குறுக்குபாளையம் என்ற இடத்தில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மழைக்காலங்களில் வெள்ளகோவிலில் இருந்து வரும் மழை நீர் மூலனூர் ரோடு, சின்னக்கரை வழியாக குறுக்குபாளையத்தில் உள்ள குளத்திற்கு வந்து சேரும்.இந்த குளத்தில் தண்ணீர் நிற்பதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் குழாய் நீர் நிலை உயரும். தற்போது குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

    இந்தநிலையில் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீன்கள் இறந்தது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளுடன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே கிடந்துள்ளார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தநாயக்கன் வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62) . இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கரட்டுப்பாளையம்- மயில்ரங்கம் ரோட்டில் மோட்டார் சைக்கிளுடன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே கிடந்துள்ளார்.

    இதை கண்ட அந்த வழியாக சென்ற நபர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தாரா? அல்லது ஏதேனும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டிலிருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.
    • தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் மு.பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் திருமுருக வீரக்குமார் (வயது 43) .இவர் கோயம்புத்தூர் அருகே உள்ள சரவணம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

    இவர் இந்த மாதம் கடந்த 9 ந்தேதி அன்று வெள்ளகோவில் வீட்டிற்கு வந்து விட்டு கோயம்புத்தூர் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் 22 ந்தேதி அன்று மாலை இவரது வீட்டிலிருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது, உடனே அருகில் இருந்தவர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து சென்றனர். கோவையில் இருந்த திருமுருக வீரக்குமாருக்கும் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். உடனே புறப்பட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 70 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து பேராசிரியர் திருமுருக வீரக்குமார் வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 60 விவசாயிகள் 40 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.20 முதல் 35வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

     வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று 60 விவசாயிகள் 40 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.20 முதல் 25 வரைக்கும், மரம் முருங்கை ரூ.15முதல் 20 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ. 30முதல் 35வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    தற்போது தென் மாவட்டங்களில் இருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்க்கு அதிக வரத்து இருப்பதால் விலை குறைந்துள்ளது. நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு ஆய்வு பணி மேற்கொண்டார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சுற்றுப்பயணத்தின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டம் வெள்ளகோவிலில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது. தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு ஆய்வு பணி மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி வாணி, வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி, நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன் வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் வாரிசு அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன உத்தரவை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். நகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் நெகிழி பைகளை ஒழிக்கும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மஞ்ச பைகளை வழங்கினார்.

    • ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பால் கொள்முதல் நிலையம்.
    • துவக்கப்பள்ளியின் பவள விழா மற்றும் காலை உணவு திட்டம் உள்ளரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பால் கொள்முதல் நிலைய கட்டிட பணி துவக்க விழா நடைபெற்றது.

    புதிய பால் கொள்முதல் நிலைய கட்டிட பணியை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். பிறகு சிலம்பகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பவள விழா மற்றும் காலை உணவு திட்டம் உள்ளரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி, நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவி கவிதா.திமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் திமுக ஒன்றிய செயலாளர் மோளக்கவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன். முன்னாள் நகரச் செயலாளர் கே.ஆர். முத்துகுமார், இளைஞர் அணி ஆதவன் ஜெகதீஷ் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள், பாசன சபை தலைவர்கள் கலந்து கொண்டனர்.சிலம்பகவுண்டன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த பள்ளி பவள விழா நிகழ்ச்சியில் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேசசுதர்சன். பச்சாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.வரதராஜன் ,ஆணையாளர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • 2 லட்சத்து 3ஆயிரத்து 996கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.55.69க்கும், குறைந்தபட்சம் ரூ.45.45க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை.

    திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று வியாழக்கிழமை 236 விவசாயிகள் கலந்து கொண்டு 2 லட்சத்து 3ஆயிரத்து 996கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.55.69க்கும், குறைந்தபட்சம் ரூ.45.45க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.1 கோடியே 5லட்சத்து 77ஆயிரத்து 673-க்கு வணிகம் நடைபெற்றது.விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த நூல் மில்லில் ஊழியர்கள் நேற்று பகலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனால் ஊழியர்கள் காயமின்றி தப்பினர். சேதம் குறித்து கணக்கிட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    • வீட்டின் முன் வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • வெள்ளகோவில் பகுதியில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது.

    வெள்ளகோவில் :

    முத்தூர் அருகே உள்ள முத்து மங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் முத்தூரில் சலூன் கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று காலை இவரும் இவரது மனைவியும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் முன் வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த செயின், மோதிரம், தோடு, ஆரம் உட்பட மொத்தம் 11.3/4 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.

    இது குறித்து செந்தில்குமார் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கே.ராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்,. வெள்ளகோவில் பகுதியில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

    • சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்.திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமார வலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 32 ஆயிரத்து 986 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.95க்கும், குறைந்தபட்சம் ரூ.63.15க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 76விவசாயிகள் கலந்து கொண்டு 32 ஆயிரத்து 986 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.95க்கும், குறைந்தபட்சம் ரூ.63.15க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.23லட்சத்து 48ஆயிரத்து 82க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    ×