search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94389"

    • வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.முகனியரசி முன்னிலையில் நடைபெற்றது.
    • வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.முகனியரசி முன்னிலையில் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் உப்புபாளையம் ரோட்டில் உள்ள ராசி மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு விழா வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி தலைமையில், வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.முகனியரசி முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட திட்ட அலுவலர் கு.மரகதம் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் 5 வகையான உணவு, ரொக்கம் ரூ. ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலம் முன் பின் பராமரிப்பு ,குழந்தைக்கு உணவு ஊட்டும் முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள் போன்ற பல தகவல்களை குறித்து எடுத்துக்கூறினார்.

    இதில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஏ.லட்சுமணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துராமலட்சுமி, வெள்ளகோவில் தி.மு.க.நகர செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், முத்தூர் பேரூர் கழக செயலாளர் செண்பகம் பாலு, முன்னாள் நகர செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர்கள் ஜெயக்குமார், எத்திராஜ், வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன் குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் நளினி கார்த்திகேயன், ஏ.என்.சேகர், செல்வராஜ் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி பிரமுகர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 1லட்சத்து 56ஆயிரத்து 626கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.65.66-க்கும், குறைந்தபட்சம் ரூ.53.16க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்–தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    அதன்படி நேற்று 199 விவசாயிகள் 1லட்சத்து 56ஆயிரத்து 626கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.65.66-க்கும், குறைந்தபட்சம் ரூ.53.16-க்கும் கொள்முதல் செய்தனர்.

    மொத்தம் ரூ.95 லட்சத்து 63ஆயிரத்து 579-க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • 80 விவசாயிகள் 15 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.13 முதல் ரூ.16 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 80 விவசாயிகள் 15 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.13 முதல் 14 வரைக்கும், மரம் முருங்கை ரூ.12முதல் 13வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.15 முதல் 16 வரைக்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 1 லட்சத்து 68ஆயிரத்து 294கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • 219 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று வியாழக்கிழமை 219 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 68ஆயிரத்து 294கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.67.10க்கும், குறைந்தபட்சம் ரூ.55.53க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ. 1கோடியே 4லட்சத்து 54ஆயிரத்து 874-க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கோவையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர்.
    • ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). இவர் ஓட்டல் நடத்தி வருகின்றார்.இவரது மகள் சந்தியா (21). இவருக்கும் கோவை கணபதி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (27) என்பவருக்கும் திருமண தகவல் மையம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    அதன் பிறகு சந்தியா, வினோத்குமார் ஆகிய இருவரும் கோவையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் சந்தியாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 8-ந் தேதி கோவையில் இருந்து கரூர் அழைத்து சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சந்தியா சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவர் வெள்ளகோவிலில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்தார்‌.

    இந்த நிலையில் நேற்று காலை சந்தியாவின் பெற்றோர் ஓட்டலுக்குசென்று விட்டனர். இதனால் சந்தியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு மதியம் பெற்றோர் வந்து பார்க்கும் போது ஜன்னல் கம்பியில் சேலையால் சந்தியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சந்தியாவை மீட்டு உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தியாவுக்கு திருமணமாகி 5 மாதம் மட்டுமே ஆவதால் தாராபுரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

    • பழைய வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அசோக்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25), டிரைவர் . இவர் தீத்தாம்பாளையம் பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார் .நேற்று கிரகப்பிரவேசம் முடிந்த நிலையில் மதியம் அவர் குடியிருந்த பழைய வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அசோக்குமாரின் தம்பி சிரஞ்சீவி பழைய வீட்டிற்கு சென்ற போது அசோக்குமார் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அசோக்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அசோக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்துபோன அசோக்குமாருக்கு சுவாதி என்ற மனைவியும் 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 80 விவசாயிகள் 20 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ரூ.13 முதல் 17 வரைக்கும் முருங்கைகாய் கொள்முதல் செய்தனர்

     வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 80 விவசாயிகள் 20 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.13 முதல் 14 வரைக்கும், மரம் முருங்கை ரூ.10முதல் 11வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.16 முதல் 17 வரைக்கும் கொள்முதல் செய்தனர், நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, இந்த முகாமை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    முகாமில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், லக்கமாநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பி. பழனிச்சாமி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் தி.மு.க. நிர்வாகிகள், மருத்துவத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர்.

    • 90 விவசாயிகள் 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.15 முதல் ரூ.25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிற்றுக்கிழமைதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    அந்தவகையில் இந்த வாரம் 90 விவசாயிகள் 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.15 முதல் ரூ.17 வரைக்கும், மரம் முருங்கை ரூ.12 முதல் ரூ.15 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.18 முதல் ரூ.25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஊதியூா், மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலைங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    ஊதியூா் துணை மின் நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம். மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம். ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: ராசாத்தா வலசு, வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

    வெள்ளக்கோவில் துணை மின் நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம். தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்: தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.

    • கணவன, மனைவி இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கணவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வி.பி.எம்.எஸ். நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார பாலசுதர்சன் ( வயது 45) . இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (34) . குமார பாலசுதர்சன் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் நூல் மில்லில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று வழக்கு போல் குமார பாலசுதர்சன் வேலைக்கு சென்று விட்டார்,இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று சாமுண்டீஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோதுவிட்டத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்த கணவர் சாமுண்டீஸ்வரி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடமலை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாரியம்மன் கோவில்களில் கடைசி ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன், செல்லாண்டியம்மன், கண்ணபுரம் மாரியம்மன், எல்.கே.சி நகர். புற்றுக்கண் நாகாத்தாள், மயில்ரங்கம் திருமலை அம்மன், மாரியம்மன், உத்தமபாளையம் மாரியம்மன் கோவில்களில் நேற்று கடைசி ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன, ஆடிவெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    வெள்ளகோவில் தர்மசாஸ்தா ஐயப்ப சாமி கோவிலில் கடைசி ஆடி வெள்ளியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    ×