search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94408"

    கேரளாவில் இந்த வாழை இலை மீன் மசாலா மிகவும் பிரபலம். இன்று இந்த வாழை இலை மீன் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    மீன் துண்டுகள் - 6,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 3,
    தக்காளி - 1,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
    மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.
    நல்லெண்ணெய் - 100 மிலி,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    வாழை இலை - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மீனில் சிறிது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறிய மீனை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழை இலையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு போட்டுக் கிளறவும்.

    நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும்.

    வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான வாழை இலை மீன் மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கோதுமை மாவில் ஸ்வீட் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்
    வெல்லம் - 1/2 கப்
    வாழைப்பழம் - 1
    ஏலக்காய் - 2
    ரவை - ஒரு கைப்பிடி
    பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
    உப்பு - 1 சிட்டிகை
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வாழைப்பழம் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அதனுடன் வெல்லம், ஏலக்காய் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த வாழைப்பழ விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கோதுமை மாவு, ரவை, பேக்கிங் சோடா, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    மாவு கையில் எடுக்கும் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை எடுத்து போண்டா போல் போடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான கோதுமை ஸ்வீட் போண்டா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் அதை வைத்து சுவையான போண்டா செய்யலாம். இன்று இட்லியை வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    இட்லி - 5
    கடலைமாவு - 4 மேஜைக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - சிறிதளவு
    தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
    பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    இட்லிகளை உதிர்த்து கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு செய்து வைத்த உருண்டைகளை போடவும்.

    ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சுவையான இட்லி போண்டா ரெடி.

    குறிப்பு  :

    மீந்து போன இட்லியிலும் இந்த முறையில் போண்டா செய்யலாம். ஐந்து இட்லிக்கு 20 போண்டாக்கள் வரை வரும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனில் 65 செய்வது போல் முட்டையிலும் 65 செய்யலாம். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 3
    சோளமாவு - 2 மேஜைக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    புட் கலர் - 1/4 தேக்கரண்டி
    தயிர் - 1 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு  



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு நான்காக வெட்டி வைக்கவும்.
       
    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி, புட்கலர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    அதோடு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மஞ்சள் கரு கீழே விழாமல் மெதுவாக கலவை எல்லா இடங்களிலும் படும் படி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
      
    ஊறிய பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த முட்டை துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போடவும்.

    இருபுறமும் வெந்ததும் எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். எண்ணெய் வடிந்த பின்னர் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

    சுவையான முட்டை 65 ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான பக்கோடா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    கடலை மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 6,
    இஞ்சி - சிறு துண்டு,
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி, துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு போட்டு நன்றாக கலந்த அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கோதுமை கோதுமை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஹோட்டலில் செய்வதைப்போல் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - 1/2 கிலோ,
    சோளமாவு, மைதா - தலா 25 கிராம்,
    முட்டை - 1,
    கொத்தமல்லி - சிறிது,
    எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    வெங்காயம் - 2,
    பூண்டு - 6 பல்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சைமிளகாய் - 5,
    சோயா சாஸ், தக்காளி சாஸ், வெங்காயத்தாள் - தேவைக்கு.



    செய்முறை :


    கொத்தமல்லி, வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    ஊற வைத்த மீனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன்  சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

    கடைசியாக அதில் கொத்தமல்லி, வெங்காயத்தாள் போட்டு சூடாக பரிமாறவும்.

    சூப்பரான மீன் மஞ்சூரியன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பட்டாணி கபாப் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - அரை கப்
    கடலைப்பருப்பு - அரை கப்
    புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - தேவைக்கு
    மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    ரொட்டித்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, பச்சைப் பட்டாணி இரண்டையும் தனியாக வேக வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இஞ்சி, புதினா, கொத்தமல்லி தழை, பூண்டு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பட்டாணி, கடலைப் பருப்பு விழுது, மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி தூளில் பிரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் சேர்த்து சூப்பரான பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மக்ரோனி பாஸ்தா - 1 கப்
    சீஸ் - 1/2 கப்
    உருளைக்கிழங்கு - 1
    குடை மிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
    தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூ
    சில்லி ஃப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    பிரெட் க்ரெம்ப்ஸ் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மக்ரோனி பாஸ்தாவை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேவையான உப்பு சேர்த்து வேக வைத்து, வடிகட்டி கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிய வேண்டும். வெந்த பாஸ்தாவை கைகளால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில், சீஸ், தக்காளி சாஸ், மிளகாய் தூள் / சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, நறுக்கிய குடை மிளகாய், ஒரிகானோ, மைதா மாவு மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக அதனுடன் மசித்த பாஸ்தாவை போட்டு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கைகளால் பிசையவும்.

    இதை சிறு உருண்டைகளாக உருட்டி பிரெட் க்ரெம்ப்ஸில் புரட்டி எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை பொன் நிறம் ஆகும் வரை வேக விட்டு பொரித்து எடுக்கவும். தீயை குறைத்து வைத்து பொரிக்கவும்.

    சுவையான பாஸ்தா சீஸ் பால்ஸ் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாலையோர கையேந்தி பவன்களில் கிடைக்கும் புளிப்பும் காரமும் சேர்ந்த வடை, போண்டாவை பிரியப்பட்டு சுவைப்போர் ஏராளம்..இவைகளை நீங்கள் வீட்டிலேயே சுவையாக தயாரித்து உண்ணலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - கால் கப்
    துவரம்பருப்பு - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கால் கப்
    பச்சரிசி - 1 கைப்பிடி
    காய்ந்த மிளகாய் - 3
    புளி - சிறிதளவு
    பெருங்காயம் சிறிதளவு
    தேங்காய் துருவல் - கால் கப்
    உப்பு - ருசிக்கேற்ப
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - பொரித்தெடுக்க



    செய்முறை:


    பருப்பு, அரிசி வகைகளை நன்றாக கழுவி ஒன்றாக ஊறப் போடுங்கள்.

    அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள்.

    2 மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் கொட்டி கலந்து கொள்ளுங்கள்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொரித்து எடுக்கவும்

    புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த போண்டா.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று எள்ளுத்தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - கால்கிலோ
    உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    வெல்லம் - 150 கிராம் (தூளாக்கவும்)
    வெள்ளை எள் - 100 கிராம்
    நல்லெண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    பச்சரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, மாவு தயாரித்துக்கொள்ளவும்.

    உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்.

    அவற்றுடன் எள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சூடானதும் வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    பின்னர் பாகுவை அரிசி மாவு கலவையில் ஊற்றி கிளறவும்.

    இந்த மாவை தட்டைகளாக தட்டி உலற வைக்கவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கலாம்.

    சூப்பரான எள்ளுத்தட்டை ரெடி.

    இந்த தட்டையை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சத்து நிறைந்த ப்ரோக்கோலியை பலருக்கு எப்படி சமைத்து சாப்பிட வேண்டுமென்று தெரியாது. இன்று ப்ராக்கோலி பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    ப்ரோக்கோலி - 1
    உப்பு - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    ப்ரை செய்வதற்கு...


    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பூண்டு - 5 பற்கள்
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சை மிளகாய் - 2
    வெங்காயம் - 1
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    ப்ரோக்கோலியை நன்றா சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் ப்ரோக்கோலி சேர்த்து 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, வேக வைத்துள்ள ப்ரோக்கோலியை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி, பின் மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கினால்,

    ப்ரோக்கோலி பெப்பர் பிரை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகள் மாலையில் சாப்பிட நூடுல்ஸ், காய்கறிகள் சேர்த்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கேரட் -1
    பீன்ஸ் - 5
    பச்சை பட்டாணி - கொஞ்சம்
    உருளைக்கிழங்கு - கொஞ்சம்
    எண்ணெய் - தேவையான அளவு
    மேகி நூடுல்ஸ் - சின்ன பாக்கெட்
    கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.

    வேகவைத்த மேகி நூடுல்ஸ்சுடன், வதங்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறிது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.

    கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்சில் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நுடுல்ஸ் உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் வெஜிடபிள் போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×