search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94409"

    நாண், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் வெங்காய குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெ.வெங்காயம் - 4
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 2
    கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    கடுகு - சிறிதளவு
    சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி, மிளகாய், சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிடவும்.

    நன்கு வெந்ததும் கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

    மீண்டும் கொதிக்க தொடங்கியதும் கொத்தமல்லி தூவி கீழே இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான வெங்காய குருமா ரெடி.

    பொரியை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். இன்று பொரி, காய்கறிகளை சேர்த்து சுவையான சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    அரிசி பொரி - 2 பெரிய கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு - 1 டீஸ்பூன்
    வேர்க்கடலை - 1/4 கப்
    எலுமிச்சம் பழம் - 1
     
    தாளிக்க:
     
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 4
    கறிவேப்பிலை - தேவைக்கு
    கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டாணி - சிறிதளவு
    கொத்துமல்லித் தழை - சிறிது

    செய்முறை :

     
    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
     
    ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
     
    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
     
    வெங்காயம், தக்காளி சற்று வதங்கியவுடன், அதில் உப்பு, மஞ்சள்தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும்.
     
    பின் அதில் ஊறவைத்தப் பொரி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
     
    அடுத்து அதில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி அதன் மேல் கேரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
     
    சுவையான அரிசி பொரி உப்புமா ரெடி.

    நினைவு திறனை அதிகப்படுத்தும் முக்கிய பங்கு வல்லாரை கீரைக்கு உண்டு. இன்று சத்தான வல்லாரை கீரை சம்பல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வல்லாரை கீரை - 1 கப்
    சின்ன வெங்காயம் - 10
    பச்சை மிளகாய் - 1
    எலுமிச்சம் பழம் - 1 / 2 மூடி
    மிளகு தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வல்லாரை கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வல்லாரை கீரையை போட்டு அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும்.

    கடைசியாக அதில் உப்பு, மிளகு தூள் தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.

    சத்தான வல்லாரை கீரை சம்பல் ரெடி.

    குறிப்பு:

    உங்களுக்கு பிடித்தமான கீரை வகைகளையும் இது போல சாலட் ஆக செய்து உண்ணலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவல், காய்கறிகள் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - அரை கப்,
    வெங்காயம் - 1,
    கெட்டி அவல் - 2 கப்,
    தக்காளி - 2,
    தேங்காய் பால் - அரை கப்,
    கரம்மலாசா தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்).

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

    வித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தர்பூசணி கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது. இன்று தர்பூசணியுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து ஜூஸ் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி துண்டுகள் - 2 கப்                               
    ஆரஞ்சு - 2
    உப்பு - 1 சிட்டிகை                    
    தேன் - 2 டீஸ்பூன்
    ஆப்பிள் - பாதி
    ஐஸ்கட்டிகள் - சிறிதளவு

    அலங்கரிக்க :

    ஆப்பிள் துண்டுகள் - 1 டீஸ்பூன்
    புதினா இலைகள் - 3



    செய்முறை :

    ஆரஞ்சு பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

    ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.

    தர்பூசணியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக எடுத்து வைக்கவும்.

    மிக்சியில் தர்பூசணி, ஆரஞ்சு சாறு, உப்பு, தேன், ஆப்பிள், ஐஸ்கட்டிகள் போட்டு நன்றாக அடிக்கவும்.

    அரைத்த ஜூஸை கண்ணாடி கோப்பையில் ஊற்றி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும்.

    சத்தான தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காராமணி சேர்த்து வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - ஒன்றரை கப்,
    காராமணி - அரை கப்,
    வெங்காயம் - 1 ,
    தக்காளி - 1,
    சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும்.

    சாதத்தை உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    அடுத்து வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும். பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிவி பழம் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. இன்று கிவி, ஆப்பிள் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கிவி பழம் - 1    
    பெங்களூர் தக்காளி - 2    
    ஆப்பிள் - 1    
    இஞ்சிச் சாறு - 1/4 டீஸ்பூன்    
    தேன் - 1 டீஸ்பூன்    
    மிளகுத்தூள் - 1 சிட்டிகை.



    செய்முறை

    ஆப்பிளின் விதைகளை நீக்கி நடுப்பகுதியை தனியே எடுத்துக் கொள்ளவும்.

    கிவி பழத்தின் தோலை நீக்கிக் கொள்ளவும்.

    பிளெண்டர் (அ) மிக்ஸியில் நறுக்கிய ஆப்பிள், கிவி பழம், தக்காளியைச் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

    இதனுடன் இஞ்சிச்சாறு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

    தேவையெனில் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துக் கூலாகக் குடிக்கவும்.

    சத்தான கிவி ஆப்பிள் ஜூஸ் ரெடி.

    குறிப்பு: விட்டமின் சி மற்றும் zinc நிறைந்த கிவி பழம் ஆண்களின் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹோட்டலில் சிலோன் பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    மைதா மாவு - ஒரு கப்,
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    ஆப்பசோடா - ஒரு சிட்டிகை,
    உப்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு.

    பூரணத்துக்கு:

    காய்கறி கலவை - கால் கப்,
    பன்னீர் - 200 கிராம்,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 4,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    பூண்டு - 6 பல்,
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
    பட்டை, லவங்கம், ஏலக்காய்தூள் பொடித்தது - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, நெய், ஆப்பசோடா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளுங்கள்.

    வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பன்னீர், கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், மிளகாய்தூள், பொடித்த மசாலாதூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் நிறைய பூரணத்தை நிரப்புங்கள்.

    பின்னர் மாவு தொட்டு முக்கோண வடிவத்தில் திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு  வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சத்தான சிலோன் பரோட்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    உருளைக்கிழங்கு - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பீன்ஸ் - 6
    பச்சை பட்டாணி - 1/4 கப்
    தக்காளி - 1
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு சேமியாவை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பின் இட்டி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பை தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

    காய்கறிகள் வெந்ததும் அதில் வேக வைத்துள்ள கேழ்வரகு சேமியா, கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேழ்வரகு கிச்சடி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் மோர் குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். உடல் சூட்டை குறைக்கும் குளுகுளு மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்
    தண்ணீர் - 1 கப்
    கொத்தமல்லி - சிறிதளவு
    மோர் மிளகாய் - 1
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/4 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...


    பச்சை மிளகாய் - 1/2
    கறிவேப்பிலை - 3 இலை
    இஞ்சி - 1/4 இன்ச்



    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

    அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த விழுதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பேபிகார்னில் சாலட், பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பேபிகார்னை வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபிகார்ன் - 12,
    கடலை மாவு - 1 கப்,
    அரிசிமாவு - 1 டீஸ்பூன்,
    கார்ன்ஃப்ளவர் - 1 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவைக்கு,
    ஆப்ப சோடா - சிட்டிகை

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்.



    செய்முறை:

    பேபிகார்னை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு வைத்து பின்னர் எடுக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு பேபி கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை காலத்தில் கேழ்வரகை அதிகளவு சேர்த்து கொள்வது உடல் சூட்டை தணிக்க உதவும். இன்று கேழ்வரகு, மிளகு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1/2 கப்
    கோதுமை மாவு - 1/4 கப்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு மிளகு தோசை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×