search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் சேர்த்து சூப்பரான இனிப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    பன்னீர் துருவல் - ஒரு கப்,
    காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
    இனிப்பு சேர்க்காத கோவா - கால் கப்,
    பொடித்த சர்க்கரை - கால் கப்,
    வெனிலா எசன்ஸ் - சில துளிகள்,
    வறுத்துப் பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை:  

    பன்னீர் துருவலுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி, கோவா, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதுவே பூரணம்.

    கோதுமை மாவுடன் பால்விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    மாவை சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்க்கவும்.

    ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணம் வைத்து மற்றொரு பூரியால் மூடி, ஓரங்களைத் தண்ணீர் தொட்டு ஒட்டவும் (மைதா பேஸ்ட் தொட்டும் ஒட்டலாம்).

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தயாரித்த பூரிகளை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டப்ஃடு இனிப்பு பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹாங்காங் ஃப்ரைடு இறாலை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 500 கிராம்
    கார்ன்ஃப்ளார் - 50 கிராம்
    மைதா மாவு - 25 கிராம்
    முட்டை - 1
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    சர்க்கரை - 1 டீஸ்பூன்
    வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 50 கிராம்
    இடித்த காய்ந்த மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
    செலரி இலைகள் - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு - 10 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயத்தாள் - 10 கிராம்
    பச்சை மிளகாய் - 2



    செய்முறை:

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    செலரி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தமாக கழுவி கார்ன்ஃப்ளார், மைதா, முட்டை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், செலரி, காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    இதில் பொரித்த இறால், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவிக் கிளறி இறக்கவும்.

    சூப்பரான ஹாங்காங் ஃப்ரைடு இறால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொளளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளுவில் குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - அரை கப்,
    புழுங்கல் அரிசி - 1 கப்,
    பச்சரிசி - கால் கப்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 2,
    வெள்ளை எள் - சிறிது,
    கொத்தமல்லி - தேவையான அளவு,
    உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெள்ளை எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.

    கொள்ளு, புழுங்கல் அரிசி, பச்சரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

    அனைத்தும் நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு, வறுத்த எள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து புளிக் விடவும்.

    சற்று புளித்தவுடன் அதில் பச்சைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.

    குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்து  பரிமாறவும்..

    சூப்பரான கொள்ளு குழிப்பணியாரம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ், நூடுல்ஸ் சேர்த்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    நூடுல்ஸ் - கால் கப்,
    கோதுமை பிரெட் - 10 துண்டுகள்,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    தக்காளி - ஒன்று,
    வெங்காயம் - ஒன்று,
    இஞ்சி - ஒரு சிறு துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    கேரட் - 1 சிறியது,
    குடைமிளகாய் - பாதி,
    தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
    சீஸ் துருவல் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.
     

     
    செய்முறை :
     
    வெங்காயம், தக்காளி, இஞ்சி, குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.
     
    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.
     
    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
     
    அடுத்து அதில் கேரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
     
    காய்கறி வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்துக் கலக்கவும்.
     
    அடுத்து அதில் தக்காளி சாஸ் விட்டு கலக்கவும்.
     
    ஒரு ஸ்லைஸ் பிரெட் எடுத்து அதன் நடுவில், 2 டேபிள்ஸ்பூன் அளவு நூடுல்ஸ் கலவையை பரவலாக வைத்து, அதன் மேல் சீஸ் தூவி, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    “ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் மீனில் உள்ளது. மீன் பஜ்ஜி மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட்ட அருமையாக இருக்கும். இன்று மீனில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    முள் இல்லாத துண்டு மீன் - முக்கால் கிலோ
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
    சோள மாவு - ஒரு கைப்பிடி அளவு
    கடலை மாவு - இரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை பழச்சாறு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ போல் அனைத்து மீனையும் செய்யவும்.

    இதோ சுவையான மீன் பஜ்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    சோம்பு தூள் - அரை ஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    தனியா தூள் - கால் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    பஜ்ஜி மாவு - 1 கப்
    அரிசி மாவு - 3 ஸ்பூன்.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் இறால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை டீஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும்.

    வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பேபி கார்ன் வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பேபிகார்ன் - 500 கிராம்,
    மிளகாய்த் தூள் - 10 கிராம்,
    மல்லித்தூள் - 10 கிராம்,
    அரிசி மாவு - 10 கிராம்,
    இஞ்சி-பூண்டு விழுது - 10 கிராம்,
    எலுமிச்சைச் சாறு - 1 பழம்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    பேபி கார்னை கை விரல் அளவில் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெட்டப்பட்ட பேபிகார்னுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பகோடா போல, பேபிகார்ன் கலவையை பொரித்தெடுத்தால்… பேபி கார்ன் வறுவல் ரெடி.

    கூடுதல் ஸ்பைசியாக வேண்டும் என்றால், வறுவலின் மீது சாட் மசாலா தூவிக்கொள்ளலாம்!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பன்னீர் வைத்து பீட்சா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மிளகுத் தூள் - தேவையான அளவு
    காய்ந்த மிளகாய் - 4
    தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று
    சீஸ் - 50 கிராம்
    வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பன்னீர் - ஒரு பாக்கெட்
    பீட்சா பேஸ் - ஒன்று



    செய்முறை :

    வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை நன்கு துருவிக் கொள்ளவும். (விரும்பினால் கடைகளில் கிடைக்கும் சீஸ் ஸ்லைஸைப் பயன்படுத்தலாம். இன்னும் நன்றாக இருக்கும்).

    பக்னீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    காய்ந்த மிளகாயிலுள்ள விதைகளை தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும். பீட்சா பேஸில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

    அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.

    வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.

    அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, அரைத்து வைத்துள்ள மிளகாயைத் தூவவும்.

    அதன் மீது சீஸைத் தூவவும். கடைசியாக மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.

    சுடச்சுட பன்னீர் பீட்சா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லெட் குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாக்லெட் குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் பவுடர் - 1/4 கப்,
    வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
    சாக்லெட் சிப்ஸ் - 1 டீஸ்பூன்,
    பொடித்த பிரவுன் சுகர் - 2 டீஸ்பூன்,
    பால் - 1/4 கப், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
    உப்பு - 1 சிட்டிகை.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பிரவுன் சுகர், பால், வெனிலா எசென்ஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் அதில் பாதாம் பவுடர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடைசியாக அதனுடன் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து குக்கீஸ்களாக தட்டி டிரேயில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து பரிமாறவும்.

    குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லெட் குக்கீஸ் ரெடி.

    குறிப்பு...

    பாதாம் பவுடர் செய்ய பாதாமை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவி, ஒரு இரவு முழுவதும் காயவிட்டு மிக்சியில் பவுடராக பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டையில் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த கட்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    உருளைக்கிழங்கு - 500 கிராம்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    கரம்மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
    மிளகுத்தூள்     - 1 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    தேங்காய் பால் - அரை கப்
    மைதா மாவு - 2 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 250 கிராம்
    ரொட்டித்தூள் - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முட்டை, உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.

    முட்டையை தோல் நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும்.

    வெட்டிய முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி வைக்கவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம்மசாலாத்தூள், மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் பாதி முட்டையை வைத்து மூட வேண்டும்.

    இந்த முட்டையை ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த முட்டைகளை போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டை கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 20
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
    அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், சூப்பரான வெண்டைக்காய் சிப்ஸ் ரெடி!

    இந்த வெண்டைக்காய் சிப்ஸை தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் மாலையில் சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? வீட்டில் வாழைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சிப்ஸ் செய்து கொடுக்கலாம்
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் மிளகுத் தூள்/மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறினால், வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×