search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    மில்க் அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் மில்க் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்,
    சர்க்கரை - 200 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்,
    பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
    குங்குமப்பூ - 1 சிட்டிகை,
    மைதா மாவு - 30 கிராம்,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்.


     
    செய்முறை :

    பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    பாலை நன்கு கொதித்த வைத்து இறக்கவும்.

    அதிலிருந்து 750 மி.லி. பாலைத் தனியே எடுத்து எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து பாலைத் திரிய வைத்து, ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் திரிந்த பாலை ஊற்றி நன்றாக வடிக்கவும். தண்ணீர் முற்றிலும் வடிந்த பின்பு, லேசாகத் தண்ணீர் சேர்த்து பன்னீரை வீணாக்காமல் துணியிலே எலுமிச்சை வாடை போகும் வரை அலசவும். பின்பு இறுக்கப் பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் மீதியுள்ள பால், மைதா சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.

    இத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும் அதில் நெய், பன்னீரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

    கலவைத் திரண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தாவை சேர்த்து கலந்து இறக்கவும்.

    அகலமானத் தட்டில் நெய்யைத் தடவி, கிளறிய கலவையை கொட்டி பரப்பி விட்டு, சூடு ஆறியதும் விருப்பமான வடிவில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான மில்க் அல்வா ரெடி.

    குறிப்பு: 1 டேபிள்ஸ்பூன் சூடானப் பாலில் குங்குமப்பூவைச் சேர்த்து கரைத்து பயன்படுத்தலாம்.

     இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் சீஸ் மிளகாய் பஜ்ஜி. இன்று இந்த பஜ்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பஜ்ஜி மிளகாய் - 10,
    கடலைமாவு - 150 கிராம்,
    அரிசி மாவு - 50 கிராம்,
    ஓமம் - கால் சிட்டிகை,
    உப்பு - தேவையான அளவு,
    மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி ,
    சீஸ் ஸ்லைஸ் - 4 ,
    பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்ஸ் - 50 கிராம்,
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை

    ஒரு பாத்திரத்தல் கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

    பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி, விதையை நீக்கிவிட்டு, சீஸை உள்ளே வைத்து மூடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவில் பஜ்ஜி போல தோய்த்து பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்சில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    சூப்பரான சீஸ் மிளகாய் பஜ்ஜி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கேழ்வரகு மாவில் கூழ், அடை, புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேழ்வரகு மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    வேர்க்கடலை - 1/4 கப்,
    மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
    முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா 1 கைப்பிடி,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :


    முருங்கைக்கீரை, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் மாவை எடுத்து பக்கோடாவாக கிள்ளி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்துதர விரும்பினால் வெஜிடபிள் லாலிபாப் செய்து கொடுக்கலாம். இன்று இந்த லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2,
    கேரட் - 1,
    பீட்ரூட் - 1,
    முட்டைக்கோஸ் - 100 கிராம்,
    பச்சைப்பட்டாணி - கால் கப்
    பன்னீர் - 4 சிறிய துண்டுகள்,
    கரம் மசாலா, மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.



    செய்முறை

    அனைத்து காய்கறிகளையும் நன்றாக வேக வைத்து சற்று ஆறியதும் மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த காய்கறிகயை போட்டு அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள்.

    இந்த மசாலாவை சிறிய வட்டமாகத் தட்டி அதன் உள்ளே ஒரு பன்னீர் துண்டு வைத்து பந்தைப்போல் உருட்டி, அதில் லாலிபாப் ஸ்டிக் சொருகி வைக்கவும். இவ்வாறு மசாலா அனைத்திலும் செய்யவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் லாலிபாப் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு ஆரோக்கியமானது. இந்த சத்து மாவு உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சத்து மாவு - 1 கப்
    வெல்லம்/கருப்பட்டி - 1/3 கப்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை



    செய்முறை:

    சத்து மாவை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 8-10 நிமிடம் நன்கு மணம் வெளிவரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெல்லம்/கருப்பட்டியை தட்டி/துருவிக் கொண்டு, ஒரு வாணலியில் போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, வெல்லம் நன்கு கரைந்து, சற்று கெட்டியாக தேன் போன்ற பதத்திற்கு வரும் போது அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    பாகை வறுத்து வைத்துள்ள சத்து மாவில் சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பிறகு நெய்யை சூடேற்றி, அதனையும் சத்து மாவுடன் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடித்தால், சத்து மாவு உருண்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு வித்தியாசமான, சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் எக் ஃபிங்கர்ஸ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3
    சோள மாவு - கால் கப்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    தயிர் - 3 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடி சமமான பாத்திரத்தில் இந்த முட்டை கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.

    வெந்ததும் அதை நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோள மாவு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மசாலா திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள மசாலாவில் வெட்டி வைத்துள் முட்டை துண்டுகளை மசாலாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான எக் ஃபிங்கர்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று கோஸ் சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுத்தம்பருப்பு - 1 கப்,
    பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிது,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை:

    உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

    ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து கொள்ளவும்.

    அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது மாவை எடுத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கோஸ் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் குல்ஃபியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 2 கப்
    பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    சாக்லேட் - 1 கப் (துருவியது)
    சர்க்கரை - அரை கப்
    பிஸ்தா, பாதாம் - நறுக்கியது சிறிதளவு



    செய்முறை :

    முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும், அத்துடன், பால் பவுடர் சேர்த்து கரண்டியில் கலந்து கொண்டே இருக்கவும்.

    பிறகு, ஒரு அடிகனமான வாய் அகண்ட வாணலியை அடுப்பில் வைத்து, பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

    பால் அடிப்பிடிக்காத வகையில் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    பால் சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்..

    சர்க்கரை நன்றாக கரைந்ததும், அதில் பாதாம், பிஸ்தா சேர்க்கவும்.

    அத்துடன், சாக்லேட் சேர்த்து அது நன்றாக கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

    இதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் பிரிட்ஜில வைக்கவும்.

    பின்னர், இதனை எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து இந்த கூழை குல்பி மோல்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, மீண்டும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து சுமார் 5 மணி நேரம் கழித்து எடுக்கவும்.

    அவ்ளோதாங்க.. சுவையான சாக்லேட் குல்ஃபி சுவைக்க ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹாட் சாக்லேட்டை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 கப்
    கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்
    இலவங்கப்பட்டை பவுடர் - 1/4 டீஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கேற்ப
    உருகிய சாக்லேட்  - 2 டீஸ்பூன்
    துருவிய சாக்லேட் - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து குறைவான தீயில் பால் ஊற்றி சர்க்கரை போட்டு கரையும் வரை கிளறி விடவும்.

    ஒரு கிளாஸில் கோகோ, உருகிய சாக்லேட் சேர்த்து நன்கு கலக்கவும்.

    1 டீஸ்பூன் சூடான பாலை சாக்லேட்டில் கலந்து நன்கு ஸ்மூத்தாக கலந்து விடவும். அதன் மேலாக நுரை வர பாலை காய்ச்சி அதில் ஊற்ற வேண்டும்.

    இறுதியாக, இலவங்கப்பட்டை பவுடர், துருவிய சாக்லேட் போட்டு சூடான ஹாட் சாக்லேட்டை பரிமாறவும்..

    சூடான ஹாட் சாக்லேட் ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று உப்பிசத்துக்கும், நெஞ்சு எரிச்சலுக்கும் இஞ்சி மிட்டாய் நல்லது. இந்த இஞ்சி மிட்டாயை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இளசான இஞ்சி - 200 கிராம்
    சுத்தமான பாகு வெல்லம் - 300 கிராம்
    கோதுமை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை

    இஞ்சியைத் தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள்.

    வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றிக் காய்ச்சுங்கள்.

    இளம் பாகு பதம் வந்ததும் இஞ்சி விழுது சேர்த்து, சிறிது நேரம் கிளறுங்கள்.

    கோதுமை மாவில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து ஊற்றிக் கிளறுங்கள்.

    நெய், ஏலக்காய் தூள் இரண்டையும் சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடுங்கள்.

    இப்போது சூப்பரான இஞ்சி மிட்டாய் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட காலிஃபிளவர் வடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காலிஃபிளவர் - ஒரு கப்
    கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்
    கசகசா - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைகேற்ப
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - ஒன்று



    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து பூக்களாக வெட்டி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    இன்னொரு கிண்ணத்தில் வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான காலிஃபிளவர் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியோர் அனைவருக்கும் சத்தானது இந்த டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் பர்ஃபி. இன்று இந்த பர்ஃபியை எளிய முறையில் செய்வது எப்படி என்ற பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - 100 கிராம்,
    அத்திப்பழம் - 1,
    கிஸ்மிஸ் - ஒரு கைப்பிடி,
    பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் - தலா ஒரு கைப்பிடி,
    நெய் - 1 டீஸ்பூன்,
    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை.



    செய்முறை :

    மிக்ஸியில் பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட்டை கொரகொரப்பாகப் பொடித்து ஒரு பௌலில் போடவும்.

    இதில் அத்திப்பழம் பேரீச்சை, கிஸ்மிஸ் ஆகியவற்றை சுத்தம் செய்து மிக்ஸியில் மசித்துப் போடவும்.

    ஏலக்காய் தூளும் நெய்யும் கலந்து நன்கு உருட்டி பர்ஃபிகளாகத் தட்டிப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் பர்ஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×