search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    காலையில் ஏதாவது ஒரு சாலட் எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கிவி, வாழைப்பழம் சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பழம் - 1
    கிவி பழம் - 2
    சின்ன வெங்காயம் - 6
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்
    புதினா - சிறிதளவு
    உப்பு - ஒரு சிட்டிகை
    முந்திரி - 6
    மிளகு தூள் - தேவைக்கு



    செய்முறை :

    கிவி, வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெட்டிய கிவி, வாழைப்பழம், சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் நறுக்கிய புதினா, தேன், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக பரிமாறும் போது கொரகொரப்பாக பொடித்த முந்திரியை தூவி பரிமாறவும்.

    சூப்பரான கிவி - வாழைப்பழ சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பேரீச்சம் பழம் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - இரண்டரை கப்,
    வெண்ணெய் - ஒன்றேகால் கப்,
    பால் - ஒன்றரை கப்,
    கண்டன்ஸ்டு பால் - 1 டின் (400 மிலி),
    பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) - அரை கப்,
    ஆப்ப சோடா - 1 டீஸ்பூன் (தலைதட்டி),
    பேக்கிங்சோடா - 2 டீஸ்பூன் (தலை தட்டி),
    வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    பொடித்த சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.

    பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.

    பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வையுங்கள்.

    சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள்.

    பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.

    அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

    கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.

    இப்போது சூப்பரான பேரீச்சம்பழ கேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆந்திரா ஸ்பெஷலான இந்த ரைஸ் பால்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - ஒரு கப்,
    எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,  
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 4,
    பெருங்காயம் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை: 

    இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் சூடான எண்ணெய் நான்கு டீஸ்பூன் விட்டு பிசிறவும்.

    பிறகு, இதனுடன் எள், சீரகம், உப்பு, பெருங்காயம், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, தேவையான அளவு வெந்நீர் சேர்த்து, மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும்.

    பிசைந்த மாவை ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

    பின்னர், சீடை போல உருட்டி, வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சீடைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஆந்திரா ரைஸ் பால்ஸ் ரெடி.

    குறிப்பு: இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுக்கு பதிலாக, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம். அதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மற்றும் பராமரிக்க நினைப்பவர்களுக்கு இந்த சாலட் ஏற்றது. இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபி கார்ன் - 4,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 1,
    வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். இதை, கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்.

    வேக வைத்த பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.

    அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பேபி கார்ன் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், கேழ்வரகு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - ஒரு கப்
    பாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    நாட்டுச் சர்க்கரை - கால் கப்
    ஏலக்காய் - 2
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்த பின்னர் குக்கரில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, பருப்பை தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட சமோசா அருமையாக இருக்கும். இன்று மட்டன் கீமாவை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்
    பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
    மட்டன் கீமா - 250 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
    புதினா  இலை - தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 3 தேக்கரண்டி
    தயிர் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1 பெரியது
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி



    செய்முறை

    வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் கீமாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடரை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1 மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கரம்மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் மட்டன் கீமாவை சேர்த்து வதக்கவும்.

    கீமாவில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றும் வரை வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிடவும்.

    மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும்.

    வட்டங்களை கோன் வடிவமாக செய்து அதில் மட்டன் கீமா கலவையை வைத்து மூடவும். அனைத்து மாவிலும் இவ்வாறு செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் கீமா சமோசா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனில் சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 4
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - கால் டீஸ்பூன்



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் சிக்கன், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். சிக்கனில் உள்ள தண்ணீரில் சிக்கன் வேக வேண்டும். சிக்கனில் தண்ணீர் எல்லாம் வற்றியதும் சிக்கனை மிக்சியில் போட்டு உதிரியாக அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானது சோம்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த சிக்கனை போட்டு வதக்கவும்.

    சிக்கனில் நன்றாக மசாலா சேர்ந்து உதிரியாக வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் கீமா பொடிமாஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு எப்படி குணுக்கு செய்வதென்று பார்க்கலாம். அதைப் படித்து, மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    இட்லி மாவு - 2 பெரிய கப்
    மைதா - 4 டேபிள் ஸ்பூன்
    சமையல் சோடா - 1 சிட்டிகை
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 5
    கறிவேப்பிலை - சிறிது
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)



    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, மைதா சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், குணுக்கு ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 2,
    வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
    சீஸ் - 4 க்யூப்ஸ்,
    கோஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    இந்த மசாலா ஆறியதும் அதனுடன் துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    இந்த மசாலாவை வட்டமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

    சூப்பரான சீஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்று பனங்கிழங்கில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனங்கிழங்கு - 3,
    சின்ன வெங்காயம் - 10,
    பச்சை மிளகாய் - 3,
    பூண்டு - 2 பல்,
    சீரகம் - கால் டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் சீரகம், தேங்காய் துருவலை போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மஞ்சள் விழுதை தோல் சீவிய பனங்கிழங்கில் தடவி வேகவிடவும்.

    வெந்தவுடன் நாரை உரித்துவிட்டு மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து உதிர்த்த கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

    இறக்குவதற்கு முன்… தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்… சுவையான, சத்தான பனங்கிழங்கு புட்டு ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட்டில் பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பீட்ரூட் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ், போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 4
    மிளகாய் - 3
    துவரம் பருப்பு - அரை கப்
    இஞ்சி துருவல் - சிறிதளவு
    சோம்பு - அரை டீஸ்பூன்
    அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    பீட்ரூட், மிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    துவரம் பருப்பை சிறிது நேரம் ஊறவைக்கவும்.

    பின்னர் அதனுடன் இஞ்சி, மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அதேபோல் பீட்ரூட்டையும் அரைத்துக்கொள்ளவும்.

    பின்னர் இந்த கலவையுடன் தேங்காய் துருவல், அரிசி மாவு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து போண்டா பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கைப்பிடி அளவு உருட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான பீட்ரூட் போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட பிரெட் மெதுவடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) - 10
    ரவை - 3 டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - ஒன்று
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டுகளாக்க வெட்டி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பிறகு, அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி, நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பிரெட் மெதுவடை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×