search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94423"

    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பரிகாரங்களை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.

    அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.
    அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு சிறந்தது என்றாலும், தேய்பிறை அஷ்டமி நாளே, பைரவரை வழிபட மிகவும் உகந்தது. இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    கால பைரவாஷ்டகம் என்ற சுலோகம், ஸ்ரீஆதிசங்கரர் அருளியது. மிகவும் சக்தி வாந்த இந்த அஷ்டகத்தை சனிக்கிழமைகளில் அல்லது அஷ்டமி நாளில் பாராயணம் செய்ய, பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும். குறிப்பாக, துரத்தும் கடன்கள் விரைவில் அடையும்.

    ஸ்ரீகாலபைரவாஷ்டகம் :

    தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
    வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
    நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
    காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥
    பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்
    நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்
    கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்
    ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்
    பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
    பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
    நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
    கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
    ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க
    நிர்மலம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்
    நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
    ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
    த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்
    அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
    காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்
    நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
    ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்
    ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப
    நாஸனம்
    தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்
    த்ருவம்॥
    பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
    சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில், சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்ம தேவனின் தலையைக் கொய்தவர். முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர்.

    மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பைரவமூர்த்தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள்.

    பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். பஞ்ச தீபம் என்பது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது. ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்ற வேண்டும். இப்படி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    பைரவர் என்ற பெயருக்கு ‘பயத்தை அளிப்பவர்’ என்று பொருள். அதாவது தன்னை அண்டியவர்களின் குறைகளைக் களைய அவர்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவர். ‘பாவத்தை நீக்குபவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை போக்குபவர்’ என்றும் பொருள் உண்டு.

    பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். சிவபெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘கால பைரவர்’.

    காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவரது மூச்சுக் காற்றில் இருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம்.

    கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்களை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண கால பைரவரின் அருள் மிகவும் அவசியம் ஆகும்.

    உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்றதோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

    வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

    சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஆலயங்கள் அபூர்வம். அப்படி அமைந்த அபூர்வ ஆலயங்களில் ஒன்று திருச்சியில் உள்ளது. ஆலயத்தின் பெயர் பைரவ நாத சுவாமி ஆலயம்.
    பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறையில் அமையும் அஷ்டமி சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாள். ஒவ்வொரு மாதத்திலும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

    சித்திரை மாதத்தில் ஸ்நாதனாஷ்டமி, வைகாசி மாதத்தில் சதாசிவாஷ்டமி ஆனி மாதத்தில் பசுபதாஷ்டமி, ஆடி மாதத்தில் நீலகண்டாஷ்டமி, ஆவணி மாதத்தில் ஸ்தானுவாஷ்டமி, புரட்டாசி மாதத்தில் சம்புகாஷ்டமி, ஐப்பசி மாதத்தில் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகை மாதத்தில் ருத்ராஷ்டமி, மார்கழி மாதத்தில் சங்கராஷ்டமி, தை மாதத்தில் தேவ தேவாஷ்டமி, மாசி மாதத்தில் மகேச்வராஷ்டமி, பங்குனி மாதத்தில் திரியம்பகாஷ்டமி என்ற பெயர்களில் இந்த அஷ்டமி அழைக்கப்படுகின்றது.

    சிவபெருமானுடைய குமாரர்களாக ஐந்து பேரைச் சொல்வதுண்டு. அவர்கள் ‘பஞ்ச குமாரர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர் என்பவர்களே அந்த ஐந்து குமாரர்கள். பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமியே சிறந்த நாள்.

    அசுர கணங்கள் பூலேகத்துக்கும், தேவலோகத்துக்கும் தொல்லைகள் தந்த போதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாகப் பைரவரை தோன்றுவித்து அசுரர்களை அழித்து மக்களை மகிழச் செய்தார் எனச் சொல்வதுண்டு.

    பைரவர் வழிபாடு என்பது சிவாலயங்களில் ஒரு சிறப்பு அம்சம். எல்லா சிவாலயங்களிலும் நடராஜர், பிரதோஷ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி என சிவபெருமானின் மூர்த்தி பிம்பங்கள் அமைந்திருப்பது இயல்பு. இருப்பினும் பைரவருக்கு அனைத்து ஆலயங்களிலும் தனிச் சிறப்பு உண்டு. பைரவரில் பல வடிவங்கள் இருந்தாலும் பிரதானமாகக் கூறப்படுவது 64 பைரவர்கள் ஆகும். ஒரு பைரவரிடம் இருந்து எட்டு பைரவர்கள் தோன்றுவார்கள். எட்டு பைரவர்கள் 64 பைரவர்களாக அதாவது அஷ்டாஷ்ட பைரவர்களாக மாறுகின்றனர்.

    சனீஸ்வரனின் குருநாதர் பைரவர். சாயாதேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் சனீஸ்வரன். பிறவியிலேயே முடமான சனீஸ்வரனை, அவரது அண்ணன் எம தர்மன் பலமுறை கிண்டல் செய்தார். இதனால் மனம் நொந்து வேதனைப்பட்டார் சனி பகவான். தனது வேதனையை தனது அன்னை சாயாதேவியிடம் தெரிவித்தார் சனிபகவான்.

    உடனே தேவி ‘மகனே! சஞ்சலப்படாதே! காலபைரவரை நோக்கி தவமிரு. அவரது அருளால் உனக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்’ என்றாள்.

    அன்னை சொன்னபடியே சனி பகவான், காலபைரவரை நோக்கி தவமிருக்கத் தொடங்கினார். அவர் முன் தோன்றிய பைரவர், சனி பகவானுக்கு அருளாசி வழங்கினார். அவரது அருளால் சனி பகவான் நவக்கிரகங்களில் ஒருவராக ஆனார். சனி பகவான் ஈஸ்வர் பட்டம் பெற்றதும் பைரவரால் தான்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஆலயங்கள் அபூர்வம். அப்படி அமைந்த அபூர்வ ஆலயங்களில் ஒன்று திருச்சியில் உள்ளது. ஆலயத்தின் பெயர் பைரவ நாத சுவாமி ஆலயம். இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    அர்த்த மண்டப நுழைவு வாசலில் 6 அடி உயர துவார பாலகர்கள் இருக்க வடதிசையில் விசுவநாதர்- காமாட்சி அருள்புரிகின்றனர். கருவறையில் பைரவர் எங்கும் காணாத அமைப்பாக சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலயத்தின் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் அனைத்தும் கருங்கற்களால் அமையப்பட்டுள்ளது. இங்கு மூலவராக அருள் பாலிக்கும் பைரவர் மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குகிறார். இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர்.

    திருச்சுற்றில் அன்பு கணபதி, வள்ளி- தெய்வானை சமேத சண்முகர், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி. நந்திகேஸ்வரர், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தங்கள் தம்பதிகளுடன் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தின் விமானம் இரண்டு அடுக்குடன் அமைந்துள்ளது.

    கருவறை முன் ஒளிவிட்டு சுடர் விடும் தீபம் ‘பைரவ தீபம்’ என அழைக்கப்படுகிறது. பகல், இரவு என நாள் பூராவும் இந்த தீபம் எரிந்து கொண்டேயிருக்கிறது.

    பைரவரின் வாகனம் சுவானம் (நாய்). கருவறையின் முன் உள்ளது இந்த வாகனம். நாய்க்கு துன்பம் விளைவித்தவர்கள் அதனால் தோஷம் ஏற்படாமல் இருக்க, இங்குள்ள சுவானத்திற்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி அக வாழ்வு பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

    தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு ராசி மற்றும் நட்சத்திர பரிகார ஹோமமும், அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும், மகா தீப ஆராதனையும் நடைபெறும். தேனில் உப்பு போடாமல் செய்த உளுத்தம் வடை, பழங்கள், நெய், சித்ரா அன்னங்கள், கொப்பரைத் தேங்காய் நவதானியம், அஷ்ட திரவியம் முதலியவற்றை ஹோமத்தில் இடுவர். அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பயன் பெறுவர்.

    அத்துடன் அன்று ருத்ரநாம, திரு சதி அர்ச்சனையும், வேதபாராயணமும், மூலமந்திர ஜபமும் நடைபெறும். அன்று பைரவர் வீதி உலா வருவதுண்டு.

    மாதந்தோறும் வரும் வளர்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பள்ளய பூஜை எனும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று பைரவரை பூக்களாலேயே அலங்காரம் செய்வர்.

    கார்த்திகை மாதத்தில் வரும் ஜென்மாஷ்டமி, பைரவர் அவதாரம் எடுத்த நாள். அன்று ஆலயம் பக்தர்களால் நிரம்பி வழியும். அன்று சுவாமிக்கு 10,000 வடையினால் ஆராதனையுடன் அன்று திருவீதி உலாவும் நடைபெறும்.

    பங்குனி உத்திரம் ஆலய குடமுழுக்குத் திருநாள். அன்று பைரவருக்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும், மாலை தீபாராதனையும் நடைபெறுவதுடன் திருவீதி உலாவும் நடைபெறும்.

    இங்கு மூலவரை வழிபடுவதாலும் ஹோமத்தில் கலந்து கொள்வதாலும் பக்தர்கள் இழந்த பொருளை மீண்டும் பெறுவதுடன், கடன் தொல்லை, பில்லி, சூனியம், பகைகளில் இருந்து மீண்டு வரவும் இயலும் என்கின்றனர் பக்தர்கள்.

    தங்கள் பிரார்த்தனை பலிக்க பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை பழ மாலை சாற்றி, மிளகு, பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். மிளகு தீபம் ஏற்றி வழிபடுவதால் மன மகிழ்ச்சி, பய நிவர்த்தி, காரிய வெற்றி, பணி இடையூறு நிவர்த்தி, கலை அபிவிருத்தி, கடன் தொல்லை நிவர்த்தி இவைகளை பெறலாம்.

    பிரதோஷ நாட்களில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, நந்திகேஸ்வரர் முதலிய தெய்வங்களுக்கு பிரதோஷ பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 4 மணி வரை திறந்திருக்கும். பிறகு மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

    அமைவிடம் :


    திருச்சி நகரத்தின் மையப்பகுதியான பெரிய கடை வீதியில் உள்ளது இந்த ஆலயம்.
    பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
    சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

    உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்றதோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

    வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம். 
    பிரான்மலையில் பிரசித்தி பெற்ற பைரவர் திருக்கோவில் உருவாக்கம் கொண்டுள்ளது. இன்று இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வரலாற்றுப் புகழ் கொண்ட பறம்பு மலை, சங்க காலத்தில் வள்ளல் பாரி ஆட்சி செய்த பறம்பு நாட்டின் தலைமைப் பதியாக விளங்கியது. புலவர் பெருமான் கபிலர், வள்ளல் பாரியின் உள்ளம் கவர்ந்த உயர் பண்பாளர். அவர் பறம்பு மலையில் பாரியோடு உடனிருந்து பல காலம் வாழ்ந்ததால், பறம்புமலை தமிழ்ப்பதியாகவும் சிறந்தது. அன்பால் தன்னை அர்ச்சிக்கும் எருக்க மலரையும், அரியதாக.. தனக்கு உரியதாக ஏற்றுக்கொண்ட பெருங்கருணைப் பேரருளாளன் எழுந்தருளியிருக்கும் மலை என்பதால், சிவமணம் கமழும் தெய்வ திருப்பதியாகவும் திகழ்ந்தது.

    இப்படி தலைமைப் பதியாகவும், தமிழ்ப் பதியாகவும், தெய்வத்திருப்பதியாகவும் பெருமை பெற்ற பறம்பு மலை, 7-ம் நூற்றாண்டில் ‘திருக்கொடுங்குன்றம்’ என்று அழைக்கப்பட்டிருப்பதை திருஞானசம்பந்தர் சுவாமிகளின் திருவாக்கால் அறிய முடிகிறது.

    திருஞானசம்பந்தப் பெருமான் சோழ நாட்டில் இருந்து பாண்டிய நாட்டின் தலைமை இடமான மதுரை மாநகருக்குப் புறப்பட்டார். அப்போது அந்த நாட்டிற்குள் நுழைந்ததும் முதன் முதலாகக் திருக்கொடுங்குன்றத்தை பார்த்தார். அங்கே அருட்கருணைத் திருவாளை வழிபட்டு, பண்சுமந்த திருப்பதிகம் ஒன்றை திருஞானசம்பந்தர் அருளியுள்ளார். திருத்தலங்களில் மூவர் பாடிய தேவாரம் பெற்ற சிவதலங்கள் பெருமையும், அருமையும் கொண்ட பெருஞ்சிறப்புடையன.

    திருநாவுக்கரசு சுவாமிகள், ‘கொடுங்குன்றன் காண், கொல்லை ஏற்றினான் காண்’ எனத் திருவாரூர்த் திருத்தாண்டத்தில், இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானைச் சிந்தித்து வந்தனை செய்துள்ளார். சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘கொடுக்கிலாதானைப் பாரியே கூறினும் கொடுப்பாரிலை’ என வள்ளல் பாரியைப் புகழ்வதன் மூலம் இத்திருத்தலத்தை நினைந்துள்ளார். மாணிக்கவாசக சுவாமிகளோ, ‘கொடுங்குன்றின் நீள்குடுமிமேல் தேன் விரும்பும் முடவனைப்போல..’ எனப்பாடுவதன் மூலம் இத்தலத்தை எண்ணியுள்ளார். நால்வர் பெருமக்கள் திருவுள்ளங்களும் நினைந்து நெகிழ்ந்து, மகிழ்ந்து போற்றிய திருத்தலம் திருக்கொடுங்குன்றம் ஆகும்.

    இத்திருத்தலத்திற்குப் பதினைந்தாம் நூற்றாண்டில் வழிபட வருகை புரிந்த அருணகிரிநாதருக்கு இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் திருநடனம் செய்து காட்சி தந்தருளியதாக அருணகிரியாரின் திருவாக்கால் அறிய முடிகிறது.

    தமிழ் உலகில் வள்ளல் பாரியை நினைவில் கொண்டு ‘பறம்புமலை’ என்றும், சமய உலகில் எழுந்தருளியுள்ள பரம்பொருளை மனதில் கொண்டு ‘திருக்கொடுங்குன்றம்’ என்றும் பேசப்பட்ட திருத்தலம், இன்று ‘பிரான்மலை’ என அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை, ‘திருக்கொடுங்குன்றநாதர்’ என்றே மக்கள் அழைத்து மகிழ்கின்றனர். இரண்டாயிரத்து ஐந்நூறு அடி உயரமுள்ள இந்த மலையைச் சங்க காலத்திலேயே, ‘ஈண்டு நின்றோர் க்கும் தோன்றும்.. சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்..’ எனப்புகழ்ந்தார் புலவர் பெருமான் கபிலர்.

    பாதாளம், பூமி, கயிலாயம் ஆகிய முப்பெரும் பகுதிகளாக சிந்தரித்து அமைக்கப்பெற்றுள்ளது இந்தத் திருக்கோவில். மலையின் அடிவாரத்தைப் பாதாளமாகவும், அதற்கு மேல் உயரப் பகுதியை பூமியாகவும், அதன் மேல் உச்சிப் பகுதியைக் கயிலாயமாகவும் கொண்டுள்ள ஆலய அமைப்பு வித்தியாசமானது ஆகும். இம்மூன்று பகுதித் திருக்கோவில்களையும் உள்ளடக்கிக் கொண்டு, மிகப்பெரிய திருச்சுற்று மதில் எழுப்பப்பட்டுள்ளது. அது ‘சுந்தரபாண்டியன் திருமதில்’ என அழைக்கப்படுகின்றது.


                                                 பைரவர், மங்கைப்பாகர்


    மலையின் மூன்று பகுதிகளில் உள்ள கோவில்களிலும், மண்டபங்களிலும் உள்ள மூன்று கல்வெட்டுகளில் ‘பாரீசுவரம்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பாரீசுவரம்’ என்ற பெயர் 12 மற்றும் 13-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களில் தான் இடம்பெற்றுள்ளது.

    மலையின் அடிவாரத்தில் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கித் தொடங்கும் பாதை தென்படும். ஆலயத்திற்குச் செல்லும் இந்த வழியில் மேற்கு முகமாகக் கட்டப்பட்டுள்ள துரைராஜா மண்டபத்தை அடைந்ததும், வடக்குபகுதி மதிலுக்கிடையே திருக்கோவிலின் பிரமாண்டமான பிரதானத் திருவாசல் உள்ளது. திருவாசலைக் கடந்ததும் திருக்கோவிலின் தெற்கு மதிலுக்கும், வடக்குப் பகுதி மலையின் அடிவாரப் பாறைக்கும் இடையே கல்தளம் கொண்ட பாதையின் கிழக்குக்கோடியில் மதுபுஷ்கரணி தீர்த்தம் உள்ளது. இது ‘தேனாடி தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தீர்த்தமாடி கொடுங்குன்றநாதரைத் தரிசித்தால், வாய்க்காத மகப்பேறு வாய்க்கும் என்பதும், தீராத நோய்கள் உடனடியாக அகலும் என்பதும், செல்வமும், செல்வாக்கும் சேர்ந்து வரும் என்பதும் ஐதீகம்.

    முகமண்டபத்தில் நந்தி கம்பீரமாகக் காட்சி தருகிறது. மகா மண்டபத்துள் சன்னிதிக்கு நேராக மேற்கே நந்தி, பலிபீடம், சூரிய பிரபை ஆகியவை உள்ளன. திருக்கொடுங் குன்ற நாதரின் பிம்பம் சூரிய பிரபையில் தெரியு மாறு அமைக்கப் பெற்றுள்ளது. புகழார்ந்த பாரிவேள், முல்லைக் கொடிக்குத் தேரளித்த காட்சியைத் திருக்கோவிலின் பூமிப் பகுதியில் சுதைச் சிற்பமாகத் திகழ வைத்திருப்பது பொருத்தமாகவும், பொலிவூட்டுவதாகவும் இருக்கிறது.

    அதற்கு மேற்கே பிரான்மலையில் பிரசித்தி பெற்ற பைரவர் திருக்கோவில் உருவாக்கம் கொண்டுள்ளது. தெற்கு முகமாக உள்ள பைரவர் சன்னிதியின் முன் மண்டபத்தில், மேற்கு தூணில் கிழக்கு முகமாகக் கருப்பர் சுவாமியும், கிழக்குத் தூணில் மேற்கு முகமாகச் சன்னாசிக் கருப்பர் சுவாமியும் பைரவ மூர்த்திக்கு முன்னோடிகள் போல் அமர்ந்துள்ளனர். கேட்டதை கிடைக்கச் செய்யும், நினைத்ததை நிறைவேற்றி வைக்கும் பைரவராக திகழ்வதால், இந்த பைரவர் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். பைரவருக்கு பக்தர்களால், வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் விமரிசையாக செலுத்தப்படுகின்றன.

    நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள பைரவர், வலது திருக்கரங்களில் சூலமும், உடுக்கையும், இடது திருக்கரங்களில் நாக பாசமும், கபாலமும் ஏந்தியிருக்கிறார். பைரவர் திருக்கோவிலுடன் இணைந்து, மேற்கே தனி விமானச் சிறப்புடன் விளங்குகிறது விஸ்வநாதர் திருக்கோவில். கிழக்கு நோக்கியுள்ள விஸ்வநாதப் பெருமானும், அந்த சன்னிதிக்கு தெற்கே விசாலாட்சி அம்மையாரும் உள்ளனர்.

    பூமித்தளத்தில் இருந்து மேல்நோக்கி அமைக்கப் பெற்ற படிக்கட்டுகளில் வடக்கு முகமாக ஏறியவுடன், மேற்கே லட்சுமி மண்டபமும், கிழக்கே மங்கைபாகர் ஆறுகால் மண்டபமும் உள்ளன. மங்கைபாகர் சுவாமியின் மங்கலத் திருமணக்கோலத்தை கண்டு மகிழ வருகை தந்த தேவர்கள், கூடி அமர்ந்திருந்த இடமாக ‘தேவசபா மண்டபம்’ கருதப்படுகிறது. முகமண்டபத்திற்கு மேற்கே குடவரைக் கருவறை இருக்கிறது.

    பாறையைக் குடைந்து நீண்ட சதுர வடிவில் தூண்களே இல்லாது அமைக்கப்பட்டுள்ளது, இந்தக் கருவறை. குடவரையைச் செதுக்கும்போது, பாறையிலேயே செதுக்கி உருவாக்கிய திரு மேனிகளாக அம்மையும், அப்பனும் திருமணத் திருக் கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். இதற்கு கற்பூர ஆரத்தி கிடையாது. திருக்கயிலாயத்தில் அம்மையப்பர் வீற்றிருந்து அருள்பாலிப்பது போலவே, திருக் கொடுங்குன்றத்திலும் மங்கைப்பாகராகத் திருமணக் கோலத்துடன் எழுந்தருளி திருவருள் வழங்கி வருவதால் இத்திருத்தலம் ‘தென் கயிலாயம்’ எனப் பெயர்ப்பெற்று விளங்குகிறது.

    காய்ச்சல் போக்கும் இறைவன் :

    மகாமண்டபத்தின் மேற்கே, கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ள ஓர் அபூர்வ மூர்த்தியின் தோற்றம் எல்லோரையும் ஈர்க்கிறது. மூன்று திருமுகங்களும், நான்கு திருக்கரங்களும், மூன்று திருப்பாதங்களும் கொண்ட சிறப்புமிக்க அந்த சிலா ரூபத்தை ‘ஜ்வர பக்ந மூர்த்தி’ என்று கூறுகிறார்கள். இந்த மூர்த்தி குறிப்பிட்ட திருத்தலங்களில் மட்டுமே உள்ளதாம். கொடுமையான தீராத காய்ச்சல் உள்ளவர்கள், இம்மூர்த்தியை ஒரே ஒரு முறை வழிபட்டாலே போதுமாம். எத்தகைய காய்ச்சலும் சுகமடைவது உறுதி என்று சொல்லப்படுகிறது.

    ஒரு காலத்தில் வாணாசுரன் என்ற சிவபக்தன் இருந்தான். அவன் மாவலிச் சக்கரவர்த்தியின் மைந்தன் ஆவான். ஒரு முறை தன்னுடைய பக்தனாக வாணாசுரனுக்காக, மகாவிஷ்ணுவோடு போர் செய்ய வேண்டிய சூழல் ஈசனுக்கு ஏற்பட்டது. அந்த போரின் போது மகாவிஷ்ணு, சீதள சுரத்தை சிவபெருமான் மீது ஏவினார். அந்த சீதள சுரத்தை அழிக்க, சிவபெருமான் அனுப்பிய வெப்பசுரம், மூன்று சிரம், நான்கு கரம், ஒன்பது விழி, மூன்று கால்களுடன் அபூர்வத் தோற்றம் பெற்றுச் சென்றதாம். சீதள சுரமும் கணத்தில் அழிக்கப்பட்டதாம். இதனால் அபூர்வத்தோற்றம் பெற்ற அம்மூர்த்தி ‘ஜ்வர பக்ந மூர்த்தி’ எனப்பெயர் கொண்டதாம்.

    அமைவிடம் :

    மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து நேரடியாக பிரான்மலைக்கு பேருந்து உண்டு. பிரான்மலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதுமே கோவில் இருக்கிறது.
    சுகந்தவனேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பைரவர் சிலை பழனியில் இருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் போலவே, நவபாஷாணத்தால் செய்ததாக கூறப்படுகிறது.
    சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ளது சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் இருக்கும் பைரவர் சிறப்பு வாய்ந்தவராக போற்றப்படுகிறார். காசியில் இருந்து வந்த போகர் என்னும் சித்தர், இந்த பைரவர் சிலையை வடிவமைத்ததாக கூறப்படுகிறது. பழனியில் இருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் போலவே, இந்த பைரவர் சிலையையும் நவபாஷாணத்தால் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த பைரவர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாத்தப்படும் வடை மாலை போன்றவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதில்லை. அவற்றை கோவிலின் மேல் பகுதியில் போட்டு விடுகிறார்கள். அவற்றை பறவைகள் கூட உண்பதில்லை. ஏனெனில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட அந்த சிலையின் வீரியம் அதிகம் என்கிறார்கள். பழனி முருகனின் சிலையைச் செய்வதற்கு முன்பாகவே இந்தச் சிலையை போகர் செய்ததாக செவி வழி செய்தி கூறப்படுகிறது.

    இந்த பைரவரை வழிபாடு செய்வதற்கு பூர்வ புண்ணிய பலன் அவசியம் என்கிறார்கள். இவரை வழிபட்டால் சனி தோஷம், பித்ரு சாபம், ஸ்திரி தோஷம், சகல பாவங்கள், நீண்டகால நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
    சேலம் வசிஷ்ட நதிக்கரை சிவாலயத்தில் உள்ள அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
    சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகழூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் வசிஷ்ட முனிவரால் உருவாக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தை எட்டுதிக்கிலும் அஷ்டபைரவர்கள் காவல் காத்து வருகின்றனர். இந்த அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    ஒருமுறை மன்மதன் தனது மனைவி ரதியுடன் சேர்ந்து தம்பதி சமேதரனாய் சிவபெருமானை வழிபட விரும்பினான். வசிஷ்ட நதிக்கரையில் பசுமையான சோலையில் நடுவில் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த லிங்கத்திருமேனியை கண்டான். தனது சிவவழிபாட்டிற்கு எவ்வித தடையும் ஏற்படாமல் இருக்க காலபைரவரிடம் வேண்டினான். காலபைரவர் எட்டுத்திக்கிலும் எழுந்தருளி இடையூறு வந்து விடாமல் காத்தருளினார்.

    நவகிரகங்கங்கள் கால பைரவருக்கு கட்டுபட்டவர்கள் என்பதால் அஷ்டபைரவர்களையும் ஒருசேர வணங்கினால் கஷ்டங்கள் நீங்குவதோடு, நவக்கிரக தோஷங்கள் நீங்கி நலம் பெருகும். காலபைரவர் சனீஸ்வரனுக்கு குரு என்பதால் ஏழரைச்சனி பாதிப்பு உள்ளவர்கள் வழிபட தோஷங்கள் முற்றிலும் நீங்கப்பெறுவர்.

    கேது பகவான் பிராண தேவதை பீஷண பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதில் மடங்குகளில் பாராணயம் செய்து வந்தால் துன்பங்கள் அனைத்து விலகி ஓடும்.
    நவக்கிரகங்களில் மற்றொரு நிழல் கிரகமாக இருப்பவர் கேது பகவான். இவரது பிராண தேவதை பீஷண பைரவர்.

    ‘ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
    ஸர்வானுக்ராய தீமஹி
    தந்நோஹ்: பீஷணபைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதில் மடங்குகளில் பாராணயம் செய்து வந்தால் துன்பங்கள் அனைத்து விலகி ஓடும். யோகங்கள் வந்து சேரும். 
    ராகு பிராண தேவதை சம்ஹார பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இன்னல்கள் அகலும்.
    நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்குவது ராகு. இதன் பிராண தேவதை சம்ஹார பைரவர் ஆகும்.

    ‘ஓம் மங்களேஷாய வித்மஹே
    சண்டிகாப்ரியாய தீமஹி
    தந்நோஹ்: ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இன்னல்கள் அகலும்.
    சனி பகவானின் பிராண தேவதையாக விளங்குபவர் குரோதன பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான வாழ்வமையும்.
    சனி பகவானின் பிராண தேவதையாக விளங்குபவர் குரோதன பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான வாழ்வமையும். துன்பங்கள் விலகி ஓடும்.

    ‘ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
    லட்சுமி தராய தீமஹி
    தந்நோஹ்: குரோதன பைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான வாழ்வமையும். துன்பங்கள் விலகி ஓடும்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. துர்வாசபுரம், திருமா, துருமா என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. ‘துருமா’ என்பது துர்வாச முனிவரை குறிப்பது என்று சொல்லப்படுகிறது. அவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து தவம் புரிந்ததாகவும், இத்தல இறைவனை இங்கேயே தங்கியிருந்து இன்றளவும் வணங்கி வருவதாக கூறப்படுகிறது. துர்வாச முனிவர் தவ நிலையில் இருப்பதால் இந்த ஊரில் பேரொலி எழுப்பும் வெடிகளை யாரும் வெடிப்பதில்லை என்கிறார்கள்.

    திருப்பாதாளேஸ்வரர் ஆலயம் உருவானதற்கு, ஒரு கதை கூறப்படுகிறது. அதாவது, துர்வாசபுரத்தில் இருந்து நாள்தோறும் ஒருவன் ராசசிங்கமங்கலத்துக்குப் (ராங்கியம்) பால் கொண்டு சென்றான். அவன் பால் கொண்டு செல்லும் போது, குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், கால் தடுமாறியோ பிறவாறோ கலயத்திலிருந்து பால் கொட்டிப் போவது வாடிக்கையானது. கலயமும் உடைந்து போய்விடுமாம். வழக்கமாகிப் போன இந்த நிகழ்வுக்கு, அந்த பகுதி தூய்மையில்லாமல், கரடும் முரடுமாக இருப்பது தான் காரணம் என்று நினைத்த அவன், மண்வெட்டி, கோடரியுடன் அந்தப் பகுதிக்கு வந்தான்.

    பின்னர் அந்த இடத்தைச் செம்மைப்படுத்தும் பணியில் இறங்கினான். அங்கிருந்த ஒரு மேட்டுப் பகுதியை சீர்செய்தபோது, ஒரு கல்லைக் கண்டான். அந்தக் கல்லே தான் கொண்டு செல்லும் பாலைக் கவிழ்த்துவிட காரணம் என்பதை உணர்ந்த அவன், அந்தக் கல்லை அடியோடு தோண்டி எடுக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவன் தோண்டத் தோண்ட பள்ளம்தான் பெரிதாகிக் கொண்டே போனதே தவிர, கல்லின் அடிப் பாகத்தை காண முடியவில்லை.

    பிறகு தான் அது ஒரு சிவலிங்கம் என்பதைக் கண்டான். ஈசன் தான் திருவிளையாடல் மூலமாக தினமும் தான் கொண்டு வரும் பாலை தடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தான். அன்று முதல் தினமும் இந்தப் பகுதி வழியாக செல்லும் போது, சிவலிங்கத்தின் மீது தான் கொண்டு வரும் பாலில் ஒரு பகுதியை அபிஷேகித்துவிட்டுச் செல்வான். இந்த தினசரி வழிபாடு காரணமாக, அந்த பால் வியாபாரி செல்வச் செழிப்பு மிகுந்தவனாக மாறினான். அவனிடம் இருந்து ஆடு மாடுகள் பெருகின. நிலத்தில் விளைச்சல் அதிகரித்தது. அவன் கோடீஸ்வரனாக மாறிப்போனான். இதையடுத்து அந்தப் பகுதியில் சுயம்புலிங்கத்திற்கு ஆலயம் எழுப்பப்பட்டது என்று தல புராணக் கதை சொல்லப்படுகிறது.

    துர்வாசபுரத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பாதாளேஸ்வரர், தானே தோன்றி உருவான சுயம்புலிங்க மூர்த்தியாவார். இந்த சுயம்பு லிங்கத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகிறது. இங்கே கருவறை கட்டப்பட்டபோது விநாயகர், சகஜரிநாயகி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியவைகள் நிறுவப் பெற்றிருக்க வேண்டும். திருக்கோவிலின் இரண்டாவது கால கட்ட வளர்ச்சியில் பைரவர் சன்னிதி, அம்மன் சன்னிதி, கோவில் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டிருக்கலாம் என்பது கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. அதன்பிறகு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி, பெரிய மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் அர்த்த மண்டபத்தில் உள்ள மேல் விதானத்தில் உள்ள கற்கள் ஒவ்வொன்றிலும் இரட்டை மீன் சின்னங்கள்
    செதுக்கப்பட்டுள்ளன.


    பைரவர் கோவில், கோவில், பைரவர், திருப்பாதாளேஸ்வரர் கோவில்,

    முன்காலத்தில் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் திருப்பாதாளேஸ்வரரின் நேரடிப் பார்வை பட்டு, எதிரே இருந்த வயல்வெளிகள் கருகிப்போயினவாம். சிவபெருமான் சீற்றமாக இருப்பதை அறிந்த மக்கள், அவரது கோபத்தைத் தணிக்க அவரது மூத்த மைந்தனான விநாயகப்பெருமானை அவருக்கு முன்பாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள்.

    பொது மக்களால் இக்கோவில், ‘பாதாளேஸ்வரர் கோவில்’ என வழங்கப்பெற்றாலும், ஆலயத்திற்குள் ‘சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள் என்பதாகும். முற்காலத்தில் இந்த அம்மனை ‘சகஜரி நாயகி’ என்று அழைத் திருக்கிறார்கள். திருமணத்தடையால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவியை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். அப்படி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பெண்கள், தம்பதி சமேதராக இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர்.

    சங்கடம் தீர்க்கும் பைரவர் :

    இத்தல பைரவர் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரிடம் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலுனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். இத்தல பைரவர் மிகவும் உக்கிரமானவர் என்பதால், பைரவருக்கு ஆராதனை செய்த கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு தருவதில்லை. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை சஷ்டி விழாவாக கொண்டாடுவது போல், இத்தல பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வு ‘சம்பா சஷ்டி விழா’ என்ற பெயரில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது.

    பைரவர் சன்னிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கி, அகல் போல் ஆக்கி, அதனுள் நல்லெண்ணையை நிரப்பி, நூல் திரிகளை வைத்து விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் ஏற்படும் பில்லி- சூனியங்கள், மாந்திரீகள் எல்லாம் நீங்கிவிடுமாம். அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கே வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறப்பாகும். 
    ×