search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94423"

    திருப்பாதாளேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. பொது மக்களால் இக்கோவில், ‘பாதாளேஸ்வரர் கோவில்’ என வழங்கப்பெற்றாலும், ஆலயத்திற்குள் ‘சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள் என்பதாகும்.

    முற்காலத்தில் இந்த அம்மனை ‘சகஜரி நாயகி’ என்று அழைத் திருக்கிறார்கள். திருமணத்தடையால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவியை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். அப்படி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பெண்கள், தம்பதி சமேதராக இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர்.

    இத்தல பைரவர் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரிடம் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலுனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். இத்தல பைரவர் மிகவும் உக்கிரமானவர் என்பதால், பைரவருக்கு ஆராதனை செய்த கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு தருவதில்லை. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை சஷ்டி விழாவாக கொண்டாடுவது போல், இத்தல பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வு ‘சம்பா சஷ்டி விழா’ என்ற பெயரில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது.

    பைரவர் சன்னிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கி, அகல் போல் ஆக்கி, அதனுள் நல்லெண்ணையை நிரப்பி, நூல் திரிகளை வைத்து விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் ஏற்படும் பில்லி- சூனியங்கள், மாந்திரீகள் எல்லாம் நீங்கிவிடுமாம். அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கே வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறப்பாகும். 
    தினமும் சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவரின் காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.
    நவக்கிரகங்களில் மற்றொரு சுப கிரகமாக திகழ்பவர் சுக்ரன். இவரது பிராண தேவதை, ருரு பைரவர்.

    ‘ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
    டங்கேஷாய தீமஹி
    தந்நோஹ்: ருருபைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.
    நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவரி காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்து வந்தால், யோகங்கள் அதிகரித்து, துன்பங்கள் விலகும்.
    நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்.

    ‘ஓம் ஞான தேவாய வித்மஹே
    வித்யா ராஜாய தீமஹி
    தந்நோஹ்: அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்’

    என்ற இந்த காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்து வந்தால், யோகங்கள் அதிகரித்து, துன்பங்கள் விலகும்.
    புதன் கிரகத்தின் பிராண தேவதை உன்மத்த பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.
    நவக்கிரகங்களின் வழிபாடு அவசியமானது. நவக்கிரகங்களின் தோஷங்களைப் போக்கும் ஆற்றல் பைரவருக்கும் உண்டு. நவக்கிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பைரவர் பிராண தேவதையாக இருக்கிறார். புதன் கிரகத்தின் பிராண தேவதை உன்மத்த பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.

    ‘ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
    வராஹி மனோகராய தீமஹி
    தந்நோஹ்: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்க, யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.
    செவ்வாய் மகா திசை நடைபெறுபவர்கள், தினமும் பைரவர் சன்னிதியின் முன்பாக நின்று, செவ்வாயின் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
    செவ்வாய் மகா திசை நடைபெறுபவர்கள், தினமும் பைரவர் சன்னிதியின் முன்பாக நின்று, செவ்வாயின் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

    ‘ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
    மஹாவீராய தீமஹி
    தந்நோஹ்: சண்ட பைரவ ப்ரசோதயாத்’

    இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9-ன் மடங்குகளில் ஜெபித்து வர வேண்டும். இதனால், செவ்வாயின் திசை யோக திசையாக இருந்தால் கூடுதல் யோகம் வாய்க்கும். செவ்வாயின் திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.
    யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும்.
    ‘ஓம் கால தண்டாய வித்மஹே
    வஜ்ர வீராய தீமஹி
    தந்நோஹ்: கபால பைரவ ப்ரசோதயாத்’

    யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும். இதன் மூலம் சந்திர திசை யோக திசையாக இருந்தால், மேலும் யோகங்கள் அதிகரிக்கும். சந்திர திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.
    சூரிய திசை யாருக்கெல்லாம் நடக்கிறதோ, அவர்கள் பைரவரின் சன்னிதியில் நின்று சூரியனின் பிராண தேவதையான சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை 9 முறை உச்சரிப்பது நன்மை தரும்.
    நவக்கிரகங்களின் வழிபாடு அவசியமானது. நவக்கிரகங்களின் தோஷங்களைப் போக்கும் ஆற்றல் பைரவருக்கும் உண்டு. நவக்கிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பைரவர் பிராண தேவதையாக இருக்கிறார்.

    சூரியனின் பிராண தேவதை சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர், செவ்வாய் கிரகத்தின் பிராண தேவதை சண்ட பைரவர், புதனின் பிராண தேவதை உன்மத்த பைரவர், குரு பகவானுக்கு அசிதாங்க பைரவரும், சுக்ரனுக்கு ருரு பைரவரும், சனி பகவானுக்கு குரோதன பைரவரும், ராகுவுக்கு சம்ஹார பைரவரும், கேதுவுக்கு பீஷண பைரவரும் பிராண தேவதைகளாக இருக்கிறார்கள்.

    சூரிய திசை யாருக்கெல்லாம் நடக்கிறதோ, அவர்கள் பைரவரின் சன்னிதியில் நின்று சூரியனின் பிராண தேவதையான சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை 9 முறை உச்சரிப்பது நன்மை தரும்

    ‘ஓம் பைரவாய வித்மஹே
    ஆகர்ஷணாய தீமஹி
    தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்’

    என்ற இந்த மந்திரத்தை சூரிய திசை முடியும் வரை கூறி வந்தால் நடப்பவையாவும் நன்மையாக முடியும்.
    வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை. இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள்.
    எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.

    இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு.  இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது. ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் - திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.

    நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

    குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் விரதம் இருந்து சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

    வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில்  மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

    சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் விரதம் இருந்து சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

    தினந்தோறும் காலையில் " ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ " என்று ஜெபிப்பது நல்லது.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் அல்லது அஷ்ட நாட்களில் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.

    தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
    தளர்வுகள் தீர்ந்து விடும்
    மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
    மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
    சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)

    வாழ்வினில் வளந்தர வையகம்
    நடந்தான் வாரியே வழங்கிடுவான்
    தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
    தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
    கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)

    முழுநில வதனில் முறையொடு
    பூஜைகள் முடித்திட அருளிடுவான்
    உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
    உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
    தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
    தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)

    நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
    நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்
    சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
    நிறைத்திடுவான் வான்மழை எனவே
    வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)

    பூதங்கள் யாவும் தனக்குள்ளே
    வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
    ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
    பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
    மாயம் யாவையும் போக்கிடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)

    பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
    பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
    தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
    நிழல்தரும் கற்பகம் நினைத்திட
    பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)

    சதுர்முகன் ஆணவத் தலையினைக்
    கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
    பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
    செய்யென்றான் பதரினைக் குவித்து
    செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)

    ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்
    செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்
    ஜெயங்களைத் தந்திடுவாய்
    ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
    செல்வங்கள் தந்திடுவாய்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8)
    சிவன் அம்சமான மகா கால பைரவரை வழிபட்டால் கால சர்ப்பதோஷம், நவகிரக தோஷம் நீங்கி அஷ்டலட்சுமி கடாட்சமும் பெறலாம்.
    பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், வான் மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் காலச் சக்கரத்தின் ஆட்சிக்கு உட்பட்டவை. இந்தக் காலச் சக்கரத்தை இயக்குபவர் கால பைரவர்.

    பிரம்மதேவனின் அகந்தையை அடக்க, சிவபெருமான் ஆணைப்படி ருத்திரர், கால பைரவர் உருக்கொண்டு, பிரம்மனின் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். நவகிரகங்கள் அனைத்தும் கால பைரவருக்குள் அடக்கம். நவகிரகங்களால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் முதலானவை நீங்க கால பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பு. பொதுவாக மக்களால் ஒதுக்கப்படும் அஷ்டமி திதியில் அஷ்ட லட்சுமிகளும், கால பைரவரால் வழிபடப்படுவதால், அஷ்டலட்சுமியின் அருளும் பெற, அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபடுவது மேலும் சிறப்பு.

    இப்படிப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற மகாகால பைரவருக்கு செம்பாக்கம் என வழங்கும் வட திருவானைக்கா அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு அருகில் தனிக்கோயிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருப்போரூர் செங்கல்பட்டு வழித்தடத்தில் திருப்போரூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் இராஜராஜ சோழன் காலத்தில் அமைக்கப்பட்டதாக, பெருந்தண்டலம் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

    கார்த்திகை மாதம் வருகின்ற தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு பெற்றது. இப்பெருவிழாவில் சிவன் அம்சமான மகா கால பைரவரை வழிபட்டால் கால சர்ப்பதோஷம், நவகிரக தோஷம் நீங்கி அஷ்டலட்சுமி கடாட்சமும் பெறலாம்.
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் கால பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அஷ்டமி நாள் - அஷ்டமியின் பெயர் - பூஜை பலன்கள் :

    வைகாசி 24 (7-6-2018) வியாழக்கிழமை பகல் : ஆனி 22 (6-7-2018) வெள்ளிக்கிழமை : பகவதாஷ்டமி  = கடன் சுமை தீரும். அடியார்களுக்குச் செய்த தீமைகள் நீங்கும்.

    ஆடி 19 (4-8-2018) சனிக்கிழமை இரவு : நீலகண்டாஷ்டமி = கல்வியில் மேன்மை ஏற்படும்.

    ஆடி 20 (5-8-2018) ஞாயிற்றுக்கிழமை பகல் : சகல துறைகளிலும் வெற்றி ஏற்படும்.

    ஆவணி18 (3-9-2018) திங்கட்கிழமை : ஸ்தானு அஷ்டமி = லட்சுமி கடாட்சம் ஏற்படும். விஷ பயம் விலகும்.

    புரட்டாசி 16 (2-10-2018) செவ்வாய்க்கிழமை : சம்புகாஷ்டமி = ஆயுள் விருத்தி ஏற்படும். தாய், தந்தையர்க்கு செய்த இன்னலால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

    ஐப்பசி 14 (31-10-2018) புதன்கிழமை : ஈஸ்வராஷ்டமி = சகோதர பகை நீங்கும். கைலாச பதவி கிடைக்கும்.

    கார்த்திகை 14 (30-11-2018) வெள்ளிக்கிழமை : ருத்ராஷ்டமி = தனவரவு உண்டாகும்.

    காலபைரவாஷ்டமி : கோபத்தால் செய்த பாபங்கள் விலகும்.

    மார்கழி 14 (29-12-2018) சனிக்கிழமை : சங்கராஷ்டமி = தொழில் விருத்தி ஏற்படும். தொழில் முறையில் செய்த பாபங்கள் விலகும்.

    தை 13 (27-1-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு : தேவதேவாஷ்டமி = மன பயம் விலகும்.

    தை 14 (28-1-2019) திங்கட்கிழமை பகல்  = உயர் பதவி கிடைக்கும்.

    மாசி 14 (26-2-2019) செவ்வாய்க்கிழமை : மகேஷ்வராஷ்டமி = போட்டிகளில் வெற்றி, தொழில் துறையில் புது யுக்தி, முன்னேற்றம் ஏற்படும்.

    பங்குனி 14 (28-3-2019) வியாழக்கிழமை : திரியம்பகாஷ்டமி = திருமணத்தடை விலகும். யமபயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலையில் காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து மாலையில் பைரவருக்கு சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் சுவாமியின் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதேபோல் பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் அருகே மீனாட்சி மண்டபத்தில் உள்ள ஷேஸ்திரபால பைரவர், சண்டிகாதேவி ஆகியோருக்கு பூஜை நடந்தது. அப்போது, சிறப்பு அலங்காரத்தில் பைரவர்-சண்டிகாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், பால் உள்ளிட்ட பொருட்களால் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திண்டுக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பட்டிவீரன்பட்டியில் உள்ள சுயம்பு நாகேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதில் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உள்பட 16 வகையான பொருட் களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் குடைமிளகாய் தீபம், எலுமிச்சை தீபம், தேங்காய் விளக்கு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர். இதே போல் சாவடி பஜாரில் பகவதியம்மன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
    ×