search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94423"

    தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.
    ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
    த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
    நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
    வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

    பொதுப் பொருள் :

    சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான   நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்ரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

    தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.
    விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    அஷ்டமி நாள்    - அஷ்டமியின் பெயர்  -  பூஜை பலன்கள்

    வைகாசி 23 (6-6-2018) புதன்கிழமை இரவு : அதிக அஷ்டமி - தொழில் விருத்தி உண்டாகும்.

    ஆனி 22 (6-7-2018) வெள்ளிக்கிழமை : பகவதாஷ்டமி - கடன் சுமை தீரும். அடியார்களுக்குச் செய்த தீமைகள் நீங்கும்.

    ஆடி 19 (4-8-2018) சனிக்கிழமை இரவு : நீலகண்டாஷ்டமி - கல்வியில் மேன்மை ஏற்படும்.

    ஆடி 20 (5-8-2018) ஞாயிற்றுக்கிழமை பகல்    : சகல துறைகளிலும் வெற்றி ஏற்படும்.

    ஆவணி 18 (3-9-2018) திங்கட்கிழமை : ஸ்தானு அஷ்டமி - லட்சுமி கடாட்சம் ஏற்படும். விஷ பயம் விலகும்.

    புரட்டாசி 16 (2-10-2018) செவ்வாய்க்கிழமை     : சம்புகாஷ்டமி - ஆயுள் விருத்தி ஏற்படும். தாய், தந்தையர்க்கு செய்த இன்னலால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

    ஐப்பசி 14 (31-10-2018) புதன்கிழமை : ஈஸ்வராஷ்டமி    - சகோதர பகை நீங்கும். கைலாச பதவி கிடைக்கும்.

    கார்த்திகை 14 (30-11-2018) வெள்ளிக்கிழமை : ருத்ராஷ்டமி - தனவரவு உண்டாகும். காலபைரவாஷ்டமி  - கோபத்தால் செய்த பாபங்கள் விலகும்.

    மார்கழி 14 (29-12-2018) சனிக்கிழமை : சங்கராஷ்டமி     - தொழில் விருத்தி ஏற்படும். தொழில் முறையில் செய்த பாபங்கள் விலகும்.

    தை 13 (27-1-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு : தேவதேவாஷ்டமி    - மன பயம் விலகும்.

    தை 14 (28-1-2019) திங்கட்கிழமை பகல் :     உயர் பதவி கிடைக்கும்.

    மாசி 14 (26-2-2019) செவ்வாய்க்கிழமை : மகேஷ்வராஷ்டமி - போட்டிகளில் வெற்றி, தொழில் துறையில் புது யுக்தி, முன்னேற்றம் ஏற்படும்.

    பங்குனி 14 (28-3-2019) வியாழக்கிழமை : திரியம்பகாஷ்டமி - திருமணத்தடை விலகும். யமபயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.

    இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபடுதல் வேண்டும்.
    ×