search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94433"

    ரெட் ஒயின் பேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தால், நிறைய செலவாகும். ஆனால் இந்த பேஷியலை வீட்டிலேயே எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம்.
    சிவப்பு ஒயினை வைத்து பேஷியல் செய்தால் சருமம் நன்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும். சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கிவிடுகிறது. மேலும் இந்த ஃபேஷியல் சருமத்தை இறுக்கமடையச் செய்கின்றன என்று அழகு நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஒயினில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு ஒயினும் சருமத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். இத்தகைய ஃபேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தால், நிறைய செலவாகும். சொல்லப்போனால், இதை வைத்து தான் முகத்திற்கு பேஷியல் செய்வார்கள். ஆனால் இப்போது எப்படி வீட்டிலேயே அத்தகைய ஒயின் ஃபேஷியல் செய்வதென்று பார்க்கலாம்.

    கிளென்சிங்: ஈரமான துணியால் முகத்தை துடைத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கரண்டி ரெட் ஒயினுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து வைத்து கொள்ளுங்கள். அதை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும். நன்கு மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

    ஷகரப்: ரெட் ஒயினை, காபி, அரிசி போன்ற இயற்கையான ஷகரப்புடன் கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். உங்கள் உலர்ந்த சருமத்தையும், டெட் செல்களையும் நீக்கி விடும்.

    மசாஜ்: கற்றாழை அல்லது பன்னீர், இவற்றுடன் ஒரு தேக்கரண்டி ரெட் ஒயின் கலந்து முகத்தில் நன்கு மசாஜ் செய்ய உங்கள் முகம் அட்டகாசமாக ஜொலிக்கும்.

    * இனிப்பான ரெட் ஒயின் 3 டேபிள் ஸ்பூன், 1/2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை ஊற்றி, கலந்து முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். இந்த ஃபேஷியலை வறண்ட சருமம் உள்ளவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

    * 3 டேபிள் ஸ்ழுன் ரெட் ஒயினுடன், தயிர் மற்றும் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீங்கி, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கும். இந்த ஃபேஷியல் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது.
    இயற்கை முறையில் தேவையற்ற முடியை நீக்கும் போது வலி இருக்காது. நிரந்தர தீர்வு இருக்கும். பக்க விளைவுகள் இருக்காது. இந்த குளியல் பொடியை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையற்ற முடியை நீக்க பெண்கள் சிரமப்படுகின்றனர். முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்தது. ஆதலால் இயற்கையாகவே கால், கைகளில் அதிக முடி வளர்ச்சி பெண்களுக்கு இருக்காது. இதனால் வாக்சிங் செய்ய அவசியம் இல்லை. ஆனால், வாக்சிங் செய்ய வேண்டிய அவசியத்துக்கு தற்போது அதிகம் தள்ளப்படுகின்றனர்.

    இயற்கை சிகிச்சையில் தேவையற்ற முடியை நீக்கும் போது வலி இருக்காது. நிரந்தர தீர்வு இருக்கும். பக்க விளைவுகள் இருக்காது. இதெல்லாம் ப்ளஸ். மைனஸ் என்னவென்றால் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். குறைந்தது 6 மாதம் - 1 வருடம் ஆகலாம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கால கட்டம் எடுக்கும். சிலருக்கு 3 மாதத்தில் ரிசல்ட் தெரியலாம். சிலருக்கு 6 மாதம் ஆகலாம். சிலருக்கு ஒரு வருடமும் ஆகலாம். ஆனால், நிச்சயம் தீர்வு கிடைக்கும். அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து தாமதம் ஆகும். ஆனால், தீர்வு நிச்சயம் உண்டு.

    தேவையான பொருட்கள்

    பச்சைப்பயறு - 250 கிராம்
    கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
    வெட்டி வேர் - 100 கிராம்
    விலாமிச்சை வேர் - 100 கிராம்
    சீமை கிச்சலி கிழங்கு - 100 கிராம்
    கோரை கிழங்கு - 100 கிராம்

    இவற்றை பொடித்து வைத்து குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். அல்லது தேவையான இடங்களில் பேக் போல போட்டு, அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இதைத் தினமும் செய்யலாம்.

    6 மாதத்தில் ரிசல்ட் தெரிய தொடங்கும். முடியின் வளர்ச்சி குறைந்திருக்கும். சில முடிகளும் உதிரும். ரெடிமேடாக கடையில் பவுடராக விற்பதை வாங்க வேண்டாம். தரமாக இல்லையெனில் பலன் அளிக்காது. நீங்கள் பொருட்களை வாங்கி அரைத்துப் பயன்படுத்துவதே நல்லது.

    தேவையற்ற முடியை நீக்கும் பொடி

    கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் - ஒரு பங்கு
    அம்மான் பச்சரிசி - பாதி பங்கு

    இவற்றை நன்கு அரைத்துப் பொடித்துக் கொள்ளவும். தண்ணீரில் குழைத்துத் தேவையான இடங்களில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவவும். தினமும் செய்யலாம். அம்மான் பச்சரிசி சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் ஒருமுறை செக் செய்துவிட்டு பயன்படுத்தவும்.
    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சருமம் வறண்டு போகும். கோடையின் போது நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து அறிந்து கொள்ளலாம்.
    ‘கோடையில் சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் சூரியக் கதிர்களில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிக்கும். இதனால் எரிச்சல், வெள்ளைத் தழும்பு, வெடிப்பு ஏற்படும். சருமம் கருப்பாகவும் மாறும். மங்கு பிரச்சனையும் ஏற்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சருமம் வறண்டு போகும்.

    அதை தடுக்க இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொள்ளலாம். கை மற்றும் கால்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பருத்தியாலான கிளவுஸ் மற்றும் சாக்ஸ் அணியலாம். ஹெல்மேட் அணிவதால் அது தலைமுடி வறண்டு போகாமல் பாதுகாக்கும். அதே சமயம் ஹெல்மெட் அணியும் போது தலையில் ஒரு பருத்தி துணியை போட்டு அதற்கு மேல் ஹெல்மெட்டை அணியலாம்.



    பெண்கள் மத்தியில் தலைமுடிக்கு டை பூசுவது அதிகரித்துவிட்டது. அவ்வாறு பூசும் போது ரசாயன டைகளை தவிர்த்து விட்டு மருதாணி மற்றும் ஆர்கானிக் டைகளை பயன்படுத்தலாம். உடைகளில், உடலை இறுக்கிப் பிடிக்காத மற்றும் உறுத்தாத பருத்தி ஆடைகள் அணியலாம். பனியன் துணியாலான டிஷர்ட் இந்த காலத்தின் சிறந்த உடை. வெளியே செல்லும் போது பிங்க், நீலம், வெளிர் மஞ்சள் போன்ற மெல்லிய நிற உடைகளை அணியலாம். கோடைக் காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக அணியும் உடை உள்ளாடைகள் தான்.

    சரியான முறையில் தேர்வு செய்து அணியாவிட்டால் சரும பிரச்னைகள் வரும். கருப்பு, சிவப்பு மற்றும் அடர்த்தியான நிறங்கள் கொண்ட உள்ளாடைகளை அணியக்கூடாது. வெள்ளை மற்றும் சரும நிற பருத்தி உள்ளாடைகளை அணிவதே நல்லது. குறிப்பாக வியர்வை அதிகமாக வெளியாகும் போது மங்கு, அரிப்பு போன்ற பிரச்சனை ஏற்படும். எலாஸ்டிக் மற்றும் வயரிங் கொண்ட உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். உள்ளாடைகளையும் மாற்றுங்கள்’’.     

    மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், பேஸ்பேக் போடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.

    மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.

    மஞ்சள் கொண்டு ஃபேஸ் பேக் போட்ட பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு கழுவி, பின் துணியால் தேய்த்து துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.

    ஃபேஸ் பேக் போடும் போது பலரும் முகத்திற்கு மட்டும் தடவி, கழுத்தை மறந்துவிடுவோம். இதனால் கழுத்துப் பகுதி மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே எப்போதும் மாஸ்க் போடும் போது, கழுத்துப் பகுதியிலும் மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் முகம் மற்றும் கழுத்து ஒரே நிறத்தில் இருக்கும்.

    எத்தனைப் பொருட்களைக் கொண்டு மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நீரைக் கொண்டு பயன்படுத்துவதற்கு ஈடாகாது. ஏனெனில் நீரைக் கொண்டு பயன்படுத்தும் போது தான், உண்மையிலேயே மஞ்சளின் முழு நன்மையையும் பெற முடியும்.

    முதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும். எனவே முதலில் அதைத் தவிர்க்க வேண்டும்.

    பேஸ் பேக் போடும் போது, அதை ரொம்ப நேரம் காய வைத்து நன்றாக காய்ந்ததும் கழுவினால் கூடுதல் அழகு பெறலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று... முகத்தில் சிறிதளவு ஈரப்பதம் இருக்கும் போதே முகத்தை ஸ்கிரப் செய்வது போல செய்து அந்த மாஸ்க்கை கழுவி விட வேண்டும்.
    சருமத்தின் அழகையும், பொலிவையும் பாதுகாக்க வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்தாலே போதுமானது. அழகை பாதுகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.
    தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

    முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

    நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

    கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

    தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

    வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

    இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

    கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

    இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

    ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.

    முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

    பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

    ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

    பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

    தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

    தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.

    தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

    எண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவர்கள் நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தியை மட்டும் பின்பற்றினால் போதுமானது.
    எண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவரா? நீங்கள்..என்ன கிரீம் வாங்கிப் போட்டாலும் அந்த பிரச்னையை சரிசெய்யவே முடியவில்லையா? கவலையை விடுங்க.. சின்ன சின்ன உத்தியை மட்டும் பின்பற்றினால் போதும். சூப்பர் ஃபேஸ் கிடைக்கும்.

    பொதுவாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மேக்கப் போட்டாலும், சிறிது நேரத்தில், முகத்தில் எண்ணெய் மினுமினுக்கத் தொடங்கி, முகம் களையிழந்து விடும். அதனால், எண்ணெய் சருமம் உடையவர்கள், முகத்துக்கு மேக்கப் போடும் முன் ஐஸ்கட்டியை ஒரு காட்டன் துண்டு அல்லது துணியில் சுற்றி முகத்தில் பரவலாக ஒற்றி எடுங்கள்.

    பிறகு, உலர்ந்த துண்டை பயன்படுத்தி, முகத்தை மிக மென்மையாகத் துடைத்து, முகம் உலர்ந்தபின், உங்களது வழக்கமான மேக்கப்பைத் தொடங்குங்கள். இவ்வாறு செய்வதால், மேக்கப் நீண்டநேரம் கலையாமலும் இருக்கும். எண்ணெய் பிசுபிசுப்பும் இருக்காது. முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    சருமத்தில் உள்ள நுண்ணிய துளைகள் இறுக்கமாக்கப்படும். கண்கள் பூத்துப்போனது போல் இல்லாமல் பிரகாசமாகத் தெரியும். முகத்தில் உள்ள மெல்லிய சுருக்கங்கள் மறையும். முகத்தில் ரத்தஓட்டம் அதிகரிப்பதால் பொலிவான சருமத்தை பெறலாம். சாத்துக்குடி சாறு அல்லது எலுமிச்சைசாறு கலந்த நீர் ஏதாவது ஒன்றை ஐஸ்கட்டி டிரேயில் ஊற்றி, கட்டி ஆனதும் முகத்துக்குப் பயன்படுத்தலாம்.

    கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். இந்த கோல்டன் ஃபேஷியல் கிட்டை கடைகளிலும் பெற்று கொள்ளலாம். இருப்பினும் வீட்டிலேயே தயாரிப்பது என்பது மிகவும் எளிமையான மற்றும் சிறந்த வழி.

    தேவையான பொருட்கள் :

    ஆரஞ்ஜ் - கற்றாழை - முல்தானிமட்டி - காட்டன் துணி - தண்ணீர்

    முதலில் ஆரஞ்சை எடுத்துக்கொண்டு அதனை பாதியாக அறுத்துக்கொள்ளவும். பின்பு 1 கற்றாழையை எடுத்து அதனில் உள்ள ஜெல்லி போன்ற பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும். அதன்பிறகு இந்த 3 முறையை கடைபிடிக்கவும்.

    மிதமான சூட்டில் தண்ணீரை கொதிக்கவைத்து அதனை காட்டன் துணியில் ஒத்தி முகம் முழுக்க மசாஜ் செய்ய வேண்டும். இதன்மூலம் நாம் போடும் இந்த பேக் நன்கு முகத்தில் இறங்கும். அதனால் இந்த கோல்டன் ஃபேஷியல் அதிக பலனை தரும்.

    அடுத்து முல்தானிமட்டியை ஆரஞ்சின் மேல் தடவி முகத்தில் பூசி கொள்ளவும். குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளோர்க்கு முல்தானிமட்டி சிறந்த ஒன்று. மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவை பயன்படுத்தலாம். இதனை கண்கள், மூக்கு, நெத்தி, தாடை ஆகிய அனைத்து பகுதிகளிலும் நன்கு தடவி மசாஜ் செய்யவும். பின்பு 5 நிமிடம் கழித்து முகத்தை உலர்த்த தண்ணீரில் கழுவி விடவும்.

    அடுத்து கற்றாழை ஜெல்லை 1/4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, அத்தோடு ஆரஞ்ஜ் சாற்றை 5 முதல் 10 சொட்டு சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பிறகு அதனை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் பண்ணவும். பிறகு இதனை 10 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவி விடவும். கடைசியாக காட்டன் துணியில் துடைத்துவிடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வர சொர சொரப்பாக இருந்த முகம் மிகவும் பொலிவுடனும், அழகாகவும் மாறும்.
    பண்டைக்காலம் முதலே ரோஸ் வாட்டர் அழகு கலைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஸ் வாட்டரை சருமத்திற்கு எப்படியொல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
    1. தினசரி மேக்கப் செய்த பிறகு ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இதனால் முகம் பளிச்சென்று இருக்கும். தினமும் காலையில் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி வந்தால் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

    2. ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து பஞ்சில் நனைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு பின் கூந்தலை அலசி வந்தால், கூந்தல் மென்மையாக இருக்கும்.

    3. ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவிய பின், சில துளிகள் க்ளிசரின் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வரலாம். இது முகத்திற்கு சிறந்த க்ளென்சராக இருக்கும்.

    4. குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கலாம். இதனால் கண்களில் சோர்வு மற்றும் வறட்சி மறைந்துவிடும்.

    5. ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசிய பிறகு ஒரு கப் ரோஸ் வாட்டரால் கூந்தலை மேலும் ஒரு முறை அலசலாம். இது கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.

    6. குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவலாம். அப்படி தடவினால் சரும துளைகள் சுருங்கி முகம் பளபளக்கும்.

    7. ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். பின் முல்தானி மிட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பிரகாசிக்கும்.

    8. சில துளிகள் தேங்காய் எண்ணெயுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம்.

    9. இரண்டு மேஜைக்கரண்டி கடலை மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்துவிடும்.

    10. ரோஸ் வாட்டர், பாதாம் எண்ணெய் மற்றும் நீங்கள் விரும்பும் மாய்சுரைசிங் க்ரீம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து சருமம் முழுவதும் தடவிக் கொள்ளலாம். இது உடலுக்கு சிறந்த மாய்சுரைசிங் க்ரீமாக செயல்படும்.
    கோடைக்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். அவகேடோவில் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கோடைக்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். முகம், கை கால்கள், ஸ்கால்ப் ஆகியவற்றில் இருக்கக்கூடிய சருமத்தை வறண்டு போக செய்யும். சரியான முறையில் பராமரிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். க்ரீம்களை பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் பழங்களை வைத்து உங்கள் சருமத்தை பராமரிக்கலாம்.

    சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ சிறந்தது. இதில் இருக்க கூடிய எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். நன்கு பழுத்த அவகாடோவை அரைத்து முகம் மற்றும் கூந்தலுக்கு தடவலாம். இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் இளமை தோற்றத்தை அள்ளித்தரும். மேலும் அவகாடோவில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

    முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ பெரிதும் உதவுகிறது. நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
    சில முக்கிய காரணங்களை கவனிக்கத் தவறி விடுவதால்தான் சீக்கிரம் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படுகின்றது. அக்காரணங்களை அறிந்து தவிர்த்து விட்டால் முகத் தோற்றத்தினைக் காக்க முடியும்.
    எல்லோருக்கும் (அ) அநேகருக்கு தனது முகத்தினை கண்ணாடியில் பார்க்கும் பொழுது பல மனக்குறைகள் ஏற்படும். கரும்புள்ளி, முக சுருக்கம், வயதான தோற்றம். ஏன் தனக்கு வயதுக்கு மீறின முதுமையாகத் தோன்றுகின்றது என வருந்துவர். 40 வயதில் 20 வயது போல் இருக்க வேண்டும் என படாதபாடுபடுபவர் பலர் உண்டு. இவர்கள் எப்பொழுதும் முகத்தில் எதையாவது தேய்ப்பதும், பார்ப்பதுமாக காலத்தினை செலவழிப்பர். ஆனால் சில முக்கிய காரணங்களை கவனிக்கத் தவறி விடுவதால்தான் சீக்கிரம் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படுகின்றது. அக்காரணங்களை அறிந்து தவிர்த்து விட்டால் முகத் தோற்றத்தினைக் காக்க முடியும்.

    * சூரிய ஒளி உடலுக்குத் தேவைதான். வைட்டமின் டி சத்திற்கு அது மிகவும் அவசியமானது. அதுவே மிக அதிக நேரம் கடும் வெயிலில் இருப்பது சருமத்தினை வெகுவாய் பாதிக்கும். சரும பாதுகாப்பு லோஷனை தடவி வெளியில் செல்வதே நல்லது.

    * காரமான சோப்புகளை உபயோகிப்பது தேவையான ஈரப்பதத்தினை நீக்கி வறண்ட சருமம் ஆக்கிவிடும். இது முதுமைத் தோற்றத்தினைக் கூட்டும். சருமத்திற்கு மாஸ்ட்ரைஸர் உபயோகிப்பது நல்லது.

    * பலருக்கு குப்புற படுத்து முகத்தினை புதைத்து தூங்கும் பழக்கம் உண்டு. காலப்போக்கில் தலையணை, பெட்ஷீட் போன்றவைகளால் முகத்தில் தேய்க்கும் காரணத்தால் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படலாம்.

    * கண்களை அடிக்கடி சுருக்கி படிப்பது முதுமையை கூட்டும்.

    * உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் இவை உண்டால் முதுமை துள்ளி ஓடும். கார்ப்போஹைடிரேட் அதிகமுள்ள உணவு, அதாவது எப்பொழுதும் சாதம், இட்லி, தோசை போன்ற மாவு சத்து உணவினையே உண்பவர்கள் முகம் எளிதில் முதுமை அடைந்து விடும்.

    * புகை பிடிப்பவர்களுக்கும், மது அருந்துவபவர்களுக்கும் முகத்தில் அதிக சுருக்கங்கள் ஏற்படும்.

    * உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு முதுமைத் தோற்றம் எளிதில் ஏற்படும்.

    * தூசு, மாசு நிறைந்த சூழல் சரும பாதிப்பினை ஏற்படுத்தும்.

    * இரவில் செல்போனிலேயே காலம் கடத்துபவர்களுக்கு அதிலிருந்து வெளிப்படும் ஒளி தூக்கத்தினை கெடுத்து விடும். இதனால் முகம் வயதான தோற்றத்தினைக் காட்டும்.
    வெயில் காலம் வந்துவிட்டாலே முகத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. வெயில் காலத்தில் அன்றாடம் ஏற்படும் சருமம் பிரச்சனைகளை வீட்டிலேயே சரி செய்ய முடியும்.
    வெயில் காலம் வந்துவிட்டாலே முகத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. வெயில் காலத்தில் அன்றாடம் ஏற்படும் சருமம் பிரச்சனைகளை வீட்டிலேயே சரி செய்ய முடியும்.

    சன்டேனிங் பேக்குகள்:

    முல்தானிமெட்டி - 2 டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், பட்டை - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 8 சொட்டு.

    இவற்றைச் சுத்தமான பவுல் ஒன்றில் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக் போட்டுக்கொள்ளவும். 20 நிமிடத்திற்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ கருமை நீங்கி முகம் பிரகாசமாய் இருக்கும்.

    கடலை மாவு - ரெண்டு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - ஒரு சிட்டிகை, க்ளசரீன் - சில சொட்டு, தயிர் - ஒரு டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன். சுத்தமான காட்டன் துணியை பாலில் நனைத்து முகத்தை ஒரு முறை சுத்தம் செய்து கொள்ளவும். பின் பேக்கிற்காக மேலே கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக்காக அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ முகம் டால் அடிக்கும்.

    கற்றாழையின் சதைப்பகுதி - 2 டீஸ்பூன், ரெட் ஒயின் - 2 டீஸ்பூன் இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்தால் ஜெல்லி பதம் கிடைக்கும். அதை முகத்தை அப்ளை செய்து 10 நிமிடத்திற்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளிச்சென்று இருக்கும்.

    புதினாச் சாறு - 2 டீஸ்பூன்.கஸ்தூரி மஞ்சள் - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 4 டீஸ்பூன் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ முகம் ஃப்ரெஷாக இருக்கும்.

    பேக் போட நேரம் இல்லையென நினைப்பவர்கள் வெயிலில் போய் வந்தவுடன் பால் - 4 டீஸ்பூன்,தேன் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் கலந்து சுத்தமான பஞ்சால் முகத்தைத் துடைத்து எடுக்க அழுக்குகள், இறந்த செல்கள் உடனடியாக நீங்கும்.

    அன்றாடம் பேஸ் பேக் போட முடியாது என்பவர்கள்... தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன், முல்தானிமெட்டி - 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - கால் டீஸ்பூன் நான்கையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து கால் மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவ வெயிலினால் கறுத்த உங்கள் முகம் தகதகவென மின்னும்.
    எலுமிச்சை சேர்த்து செய்யப்படும் ஸ்க்ரப் வறண்ட, சென்சிட்டிவான, எண்ணெய் தன்மையுள்ள சருமத்திற்கு என எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
    எலுமிச்சை சேர்த்து செய்யப்படும் ஸ்க்ரப் வறண்ட, சென்சிட்டிவான, எண்ணெய் தன்மையுள்ள சருமத்திற்கு என எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். எலுமிச்சை சேர்த்து முகத்திற்கான ஸ்க்ரப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

    எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. சர்க்கரை மற்றும் எலுமிச்சை இரண்டையும் சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் செய்தால், முகத்தில் உள்ள துளைகள் சுத்தமாவதோடு சருமத்தின் நிறம் கூடும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றிவிடும்.

    தேவையான பொருட்கள்

    எலுமிச்சை சாறு - 6 மேஜைக்கரண்டி
    சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி

    செய்முறை

    ஒரு பௌலில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் வட்டமாக தேய்த்து மசாஜ் செய்யலாம். சர்க்கரை கரையும் அளவிற்கு முகத்தில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஸ்க்ரப் செய்து முடித்த பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    குறிப்பு: கரும்புள்ளிகள் மற்றும் கருமைநிறத்தை போக்க இந்த ஸ்க்ரப் பயன்படுத்தலாம்.

    வறண்ட சருமத்திற்கு - தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஸ்க்ரப்


    தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள வறண்ட செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாக்கிவிடும். தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
    சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி

    செய்முறை

    ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஸ்க்ரபை முகத்தில் 8-10 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்து முடித்தபின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். 
    ×