search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94433"

    காபியை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும்.
    காபி உங்களை எப்படி உற்சாகமாக வைத்து கொள்கிறதோ அதேபோல காபியை கொண்டு உங்கள் அழகையும் அதிகரிக்க முடியும். காபியை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும். மேலும் சருமத்தை இறுக செய்யும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கம், சூரிய கதிரால் ஏற்பட்ட கருமை நிறம் ஆகியவை அகன்று முகம் பிரகாசிக்கும்.

    காபி பட்டை ஸ்க்ரப்

    காபி தூள் மற்றும் பட்டை பொடி இரண்டையும் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்து வந்தால் இறந்த செல்கள் அகன்று முகம் பிரகாசமாகும். காபி முகத்தில் அதிகபடியாக சுரக்கும் எண்ணெய் பிசுக்கை குறைக்கும். பட்டை தூள் சருமத்தில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
     
    தேவையானவை

    காபி தூள் - ஒரு கப்
    பட்டை பொடி - 2 தேக்கரண்டி
    தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
    சர்க்கரை - ஒரு கப்

    செய்முறை

    ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். அதில் காபி தூள், பட்டை தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்த கொண்டு வாரத்தில் மூன்று முறை உடலுக்கு ஸ்க்ரப் செய்து கொள்ளலாம்.

    காபி ரோஸ் வாட்டர் ஃபேஸ் ஸ்க்ரப்

    ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் உண்டு. சருமத்தில் பிரச்சனைகளுக்கான தீர்வாக இருக்கும் இந்த ரோஸ் வாட்டர். இது சருமத்திற்கு சிறந்த க்ளென்ஸராக செயல்படும். சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்யும்.
     
    தேவையானவை

    காபி தூள் - ஒரு கப்
    ரோஸ் வாட்டர் - 2 தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு பௌலில் காபி தூள் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டியும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் உடல் முழுவதும் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

    காபி கற்றாலை ஸ்க்ரப்

    எல்லாவகை சருமத்திற்கும் சிறந்தது கற்றாலை. இதில் வைட்டமின் சி, ஈ, பீட்டா கெரோட்டின் போன்றவை நிறைந்திருக்கிறது. இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். மேலும் இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.
     
    தேவையானவை

    காபி தூள் - ஒரு கப்
    கற்றாலை ஜெல் - 5 தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு பௌலில் காபி தூள் மற்றும் கற்றாலை ஜெல் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் மசாஜ் செய்ததும் பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.
    பிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கலாம்.
    சருமம் பிரகாசமாக இருக்க நாம் தொடர்ச்சியாக சரும பராமரிப்பில் ஈடுப்படுவது அவசியம். குறிப்பாக ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் சருமத்தை பளிச்சென்று வைத்து கொள்ள பெரிதளவு மெனக்கெட வேண்டும். ஆயில் ஸ்கின் உள்ளவர்களை தான் பருக்கள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் மற்றும் கரும்புள்ளிகள் அதிகம் தாக்கும். இந்த பிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். மேலும் சருமத்தை சொரசொரப்பாக மாற்றிவிடும்.  மூக்கு, தாடை, கன்னம் போன்ற இடங்களில் தான் இந்த பிளாக் ஹெட்ஸ் அதிகம் உருவாகும். வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 1
    ஓட்ஸ் - 2 மேஜைக்கரண்டி
    தேன் - 1 மேஜைக்கரண்டி

    செய்முறை

    வாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்து கொள்ளவும். அதேபோல ஓட்ஸை பொடித்து கொள்ளவும். ஒரு பௌலில் பொடித்து வைத்த ஓட்ஸ் சேர்த்து அத்துடன் தேன் மற்றும் மசித்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். தொடர்ந்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை இந்த கலவையை கொண்டு ஸ்க்ரப் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். பிறகு உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்சுரைசர் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள துளைகளை மூட உதவும். வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள பிளாக் ஹெட்ஸ் மறைந்து முகம் பிரகாசிக்கும்.

    ஓட்ஸ், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சுத்தம் செய்யும். மேலும் முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை அகற்றிவிடும். தேனில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். வாழைப்பழமும் சருமத்தை மாய்சுரைஸ் செய்து முகத்திலுள்ள அழுக்குகளை அகற்றி மென்மையாக வைத்திருக்கும்.  ஆயிலி ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த ஸ்க்ரப் மிகவும் நல்லது. 
    இங்கே பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்யக்கூடிய எளிமையான ஃபேஸ் பேக் செய்முறையை உங்களுக்குத் தருகிறோம். சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க இது நிச்சயம் உதவும்.
    பாதாம் விட்டமின் ஈ நிறைந்த ஒன்று. இது உங்களின் சருமத்தை வறண்டு போகாமல் வைத்துக் கொள்ளும். உங்கள் சருமத்தை சுருக்கம் இல்லாமல் இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது. இங்கே பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்யக்கூடிய எளிமையான ஃபேஸ் பேக் செய்முறையை உங்களுக்குத் தருகிறோம். சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க இது நிச்சயம் உதவும்.

    1. பாதாம் மற்றும் பால் கலந்த ஃபேஸ் மாஸ்க்

    1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்
    2 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்

    ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் மேலே சொன்ன இரண்டு பொருட்களையும் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவி விட்டு முகத்திலும் கழுத்திலும் இந்த ஃபேஸ்பேக்கை போடவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவேண்டும். இதை உங்களில் கை மற்றும் கால்களில் கூட இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

    2. பாதாம், பால் மற்றும் அரைத்த ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்

    2 டேபிள்ஸ்பூன் பாதாம்
    1 டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்ஸ்
    3 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்

    ஒருபவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். தூங்குப் போவதற்கு முன் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடலாம். ரோஜா தண்ணீரை பஞ்சினால் தொட்டு முகம் முழுவதும் துடைத்துவிட்டு. இந்த மாஸ்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்தோ அல்லது முழு இரவு வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம். பின் நைட் கிரீம்மை பயன்படுத்தவும்.

    3. பாதாம், மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்

    1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்
    2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
    1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்

    ஒரு பவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து ரோஸ் வாட்டர் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்துப் பின் முகம் கழுவவும். 
    முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். இந்த முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
    முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். முல்தானி மெட்டியானது, மாவு போல பிசைய பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது பவுடர் வடிவில் கிடைக்கும். இது போக வெள்ளை, பச்சை, பழுப்பு மற்றும் ஆலிங் என பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

    நம் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்திட இயற்கை இந்த அதிசய பொருளை நமக்கு வழங்கியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சும், சுத்தப்படுத்தும் மற்றும் கிருமிநாசினி குணங்களை இது கொண்டுள்ளதால், பல்வேறு சரும நிலைகளை குணப்படுத்த உதவிடும். சிக்கனமான இந்த இயற்கை பொருள் பயன்படுத்த பாதுகாப்பானது. இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்த முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

    சரும நிறம் மேம்படும் : முல்தானி மெட்டி சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக செயல்படுவதால், சரும நிறம் மேம்படும். 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியை தயிருடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் புதினா பொடியை சேர்த்து, அதனை நன்றாக கலந்திடவும். இந்த கலவையை உங்கள் முகத்திலும் கழுத்து பகுதிகளும் தடவும். 20-30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள்.இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், உங்கள் சருமத்தின் நிறம் மேம்படும்.

    சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை உறிஞ்சிடும் :

    இயற்கையாக உறிஞ்சக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால், சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை நீக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம். சரும துவாரங்களின் அடைப்பை நீக்கி, சருமத்தின் இயற்கையான பிஎச் அளவை சமநிலைப்படுத்தும். இது பொதுவாக வீட்டில் செய்யப்படும் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தப்படுகிறது.

    தழும்புகளை நீக்கும் :

    புண்களால் ஏற்பட்டுள்ள தழும்புகள், சிறிய தீப்புண் அடையாளங்கள் அல்லது இதர தழும்பு வகைகளை பெரிய அளவில் குறைக்க முல்தானி மெட்டி உதவும்.
    சில பெண்களுக்கு மூக்கின் மேல் இருக்கும் பிளாக் ஹெட்ஸ் முகத்தின் அழகை கெடுக்கும். இன்று எளிய முறையில் மூக்கின் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது, ரெகுலரான பேஷியல் கூட போதும். வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப் பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் கிரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்கவாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும்.

    இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம்.

    இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். மூக்கிற்கு மேக்கப்போடும் போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்யவேண்டும். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முகநிறத்தை விடகொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இருபுருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடி வரை, நேராக தடவ வேண்டும்.

    இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும். நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும்.

    பக்க விளைவுகள் ஏதுமின்றி கருமையான அக்குளை வெள்ளையாக்கும் இயற்கை முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி கருமையான அக்குளில் இருந்து விடுபடுங்கள்.
    இன்றைய பேஷன் உலகில் பெரும்பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை.

    இயற்கையான முறையில் பக்க விளைவுகள் ஏதுமின்றி கருமையான அக்குளை வெள்ளையாக்கும் இயற்கை முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி கருமையான அக்குளில் இருந்து விடுபடுங்கள்.

    * அதிமதுர வேரை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து அதனை அக்குளின் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைக்க வேண்டும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

    * எலுமி்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி அக்குள் வெள்ளையாவதோடு அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

    * கற்றாலையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து சுமார் ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.

    * குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து பின் நீரில் கழுவவேண்டும். இதை தினமும் செய்து வந்தால் அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி அக்குள் வெள்ளையாகிவிடும்.



    * இயற்கையாகவே மஞ்சள் மற்றும் தயிரில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே முகத்தில் உள்ள கருமையைப் போக்க மஞ்சளை தயிரில் கலந்து அக்குளில் தேய்த்து ஊறைவத்து கழுவினால் அக்குள் கருமையை நிச்சயம் போக்கிவிடும்.

    * தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவவேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * வெள்ளரிக்காயை அரைத்து அரை கப் சாறு எடுத்து அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து அக்குளில் தடவி சிறிதுநேரம் ஸ்கரப் செய்து 10-15 நிமிடம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

    * உருளைக்கிழங்கை அரைத்து அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து பின் குளித்தால் கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்

    * கடலைமாவு, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து குளிக்கும் முன் அக்குளில் தடவி பத்து நிமிடம் ஊறவைத்து பின் குளித்தால் அக்குள் கருமை நீங்கிவிடும். 
    முகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. கருவளையத்தை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன.
    முகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. பிரசவத்துக்குப் பின் சரியாக தூங்காமல் பல தாய்மார்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். அதை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

    ஹோம்மேட் தேன் ஐ பேக்

    வெள்ளரிக்காய் துண்டு - 3
    உருளைக்கிழங்கு துண்டுகள் - 3
    தேன் - 1 டீஸ்பூன்
    கற்றாலை ஜெல் - 1 டீஸ்பூன்

    வெள்ளரிக்காய், உருளைக்கிழங்களையும் தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.

    இதில் தேனும் கற்றாலை ஜெல்லும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    ஹோம்மேட் தேன் ஐ பேக் ரெடி. இதைக் கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போடவும். மறுநாள் காலை கழுவி விடலாம். ஒரு வாரத்திலே கருவளையம் மறைய ஆரம்பிப்பதை பார்க்க முடியும்.

    ஹோம்மேட் கிரீன் டீ ஐ பேக்

    homemade green tea eye cream


    பாதாம் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கற்றாலை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
    கிரீன் டீ - 1 டீஸ்பூன்

    இவற்றை ஒரு பவுலில் போட்டு, நன்கு கலந்து சுத்தமான டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் இரவில் உங்கள் கண்களை சுற்றி தடவிய பின், மோதிர விரலால் கிளாக் வைஸ் மற்றும் ஆன்டி கிளாக் வைஸாக சுற்றி மசாஜ் செய்யவும். 10 நாட்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
    வெயிலில் சருமம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். வெந்தயத்தை எந்த முறையில் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    வெந்தயததைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண  முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.

    வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து  வரலாம்.
     
    வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.
     
    வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.
     
    வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.
     
    வெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம் கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
    முகத்தில் உள்ள அழுக்கையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். இத்தகைய பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். பொதுவாக இத்தகைய பிளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்யலாம். சருமத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம்.

    * ப்ளீச்சிங் செய்யும்போது முகக்கலவை புருவத்திலோ அல்லது தலை முடியிலோ படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * ப்ளீச்சிங் செய்யும் முன் முகத்தை கிளன்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குகிறது. அதுமட்டுமின்றி கிளன்சிங் செய்வதால் முகத்தில் மேக்அப் போட்டிருந்தால் அதுவும் நீங்கிவிடும். எனவே பால் அல்லது கிளன்சரைக் கொண்டு பஞ்சு மூலம் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

    * முகத்திற்கான ப்ளீச் கிரீம் மற்றும் கால் ஸ்பூன் ஆக்டிவேட்டர் பவுடரை போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ப்ளீச் கிரீமுடன் ஆக்டிவேட்டர் பவுடர் கலந்து உள்ள பேக்குகளை பயன்படுத்தலாம்.

    * பின் அதனை நன்கு கட்டி இல்லாதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். புருவம் மற்றும் தலைமுடியில் படாதவாறு முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.

    * பின்னர் ரோஸ் வாட்டரில் காட்டன் துண்டுகளில் எடுத்து கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

    * பின்னர் மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

    * அடுத்து ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழங்கள் அல்லது ஆப்பிள் பழத்தை குழைத்து பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து மெல்லிய காட்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும்.

    * இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ளநச்சுகள் நீங்கி சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும்.
    முகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
    முகத்தை சுத்தம் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. ஆனால் அவற்றில் பாலை வைத்து சுத்தம் செய்வது தான் சிறந்தது. மேலும் தற்போது கிளின்சிங் மில்க் என்று கடைகளில் விற்கப்படுகிறது. அவற்றை பயன்படுத்தினால் மட்டும் நல்ல பலனை அடைய முடியாது. அதற்கு இயற்கையாக பாலை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனல் பாலில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இதனை வைத்து சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். இப்போது அந்த பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதைப் பார்க்கலாம்!!!

    பால் மற்றும் ரோஸ் வாட்டர் :

    முகத்திற்கு பாலை பயன்படுத்தும் விதங்களில் இது மிகவும் சிறந்த முறை. அதற்கு பாலுடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் நன்கு அழகாக காணப்படும்.

    ஓட்ஸ் மற்றும் பால் :

    இது ஒரு ஸ்கரப் மற்றும் ஃபேஸ் கிளின்சர். அதிக நேரம் இல்லை, உடனே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த முறை மிகவும் சிறந்தது. அதற்கு ஓட்ஸ் பவுடருடன், பாலை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் தேய்த்து, பிறகு கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.



    பால் மற்றும் தேன் :

    பாலை தனியாக பயன்படுத்துவதை விட, தேனுடன் கலந்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். தேனில் நிறைய ஆன்டி-ஆக்ஸ்டன்ட்கள் இருக்கின்றன. ஆகவே முகத்தை அழகாக்குவதற்கு தேனைப் பயன்படுத்தினால், சருமத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து, சருமத்தில் இருக்கும் கிருமிகள் அழிந்து வெளியேறி, சருமம் நன்கு பொலிவாக காணப்படும். மேலும் முகத்தில் முகப்பரு இருப்பவர்கள், இதனுடன் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து தடவினால் நல்லது.

    பால் மற்றும் பப்பாளி :

    பப்பாளியில் சருமத்துளைகளில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும் நொதிப் பொருள் அதிகமாக உள்ளது. ஆகவே பப்பாளி பேஸ்ட் உடன் சிறிது பாலை விட்டு, முகத்திற்கு தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவற்றால் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.

    கேரட் மற்றும் பால் :

    கேரட்டை பேஸ்ட்டாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டு, அத்துடன் பாலை கலந்து, முகத்திற்கு தடவி, மசாஜ் செய்து, 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதால், இவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் இறுக்கமடைவதுடன், ஈரப்பசையுடன் இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், இந்த முறையை செய்த பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்த வேண்டும்.

    ஆகவே மேற்கூறியவாறு சருமத்திற்கு பாலைப் பயன்படுத்தி வந்தால், சருமம் நன்கு பொலிவோடு, அழகாக பட்டுப்போன்று இருக்கும்.
    நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.
    நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.

    நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து உடலில் இல்லாததால் இந்த கொலாஜன் சுருங்கும். வயது முதிரும் போது இந்தச் சுருக்கம் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் உள்ளே சாப்பிடுவதற்கும் நல்ல சத்துணவு வேண்டும். அத்துடன் முகத்தில் பூசுவதற்குக்கூட கொலாஜன் தேவையாக இருக்கிறது. இது கடைகளில் கொலாஜன் என்றே கிடைக்கிறது. ஜெல் டைப்பில் கிடைக்கும் கொலாஜனை முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உபயோகிக்கலாம். வயதானவர்கள் அனைவருமே கொலாஜனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகச்சுருக்கம் போய் இளமை திரும்புவது நிச்சயம்.

    கொலாஜன் மாஸ்க் என்றுகூடக் கடைகளில் கிடைக்கிறது. அதை அப்படியே முகத்தில் போட்டு அரைமணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

    மேலும் உண்மையான ஆரஞ்சை வட்டவடிவத்தில் ‘கட்’ செய்த தோற்றத்துடன், ஆரஞ்சு ப்ளேவருடன் கூடிய கொலாஜன் மாஸ்க்கும் வந்திருக்கிறது. இதை முகத்தில் போடும்பொழுது ‘ப்ரெஷ்ஷான லுக்’ கிடைக்கும். இதை ஒரு பாக்கெட் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.

    தற்பொழுது heat maskம் புதிதாக வந்திருக்கிறது. இது வயதானவர்களுக்கு மிகவும் உகந்தது. கொலாஜன் ஃபேஷியலுக்கு முன் இந்த ஹீட் மாஸ்க்கைப் போடலாம். இது சின்னச் சின்ன ட்யூப் வடிவத்தில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை ஒரு நிமிடம் மசாஜ் செய்தாற்போல் தடவி ஒரு நிமிடம் விட்டுவிட வேண்டும். இது லேசான சூடாக இருக்கும். ஆனால் உடனடி எஃபக்ட் கிடைக்கும். இது துவாரங்களின் உள்ளே போய் அழுக்கு வெளியே வந்துவிடும். தோல் நல்ல பளிச்சென்று இருப்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். சில நிமிடங்களிலேயே ஃபேஷியல் செய்த பலன் கிடைத்துவிடும்.

    கொலாஜன் ஃபேஷியல் தசையை இறுகச் செய்து தோலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கக் கூடியது. முக்கியமாக குறிப்பிட வேண்டுமென்றால் இந்த முறையைக் கடைப்பிடித்தால் சீக்கிரமே வயதான தோற்றத்தை அடையாமல் தடுக்கப்படுவீர்கள். அப்புறம் உங்களைப் பார்த்து நாலு பேராவது, ‘எக்ஸ்க்யூஸ் மீ! எந்தக் காலேஜில் படிக்கிறீங்க?’ என்று கேட்கப் போகிறார்கள்!
    முக‌த்‌தி‌ல்தா‌ன் எ‌த்தனை எ‌த்தனை ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌‌கி‌ன்றன. அத‌ற்கான ‌தீ‌ர்வுகளை தேடி பெ‌ண்க‌ள் அ‌லு‌த்து‌ப் போ‌ய்‌விடு‌கிறா‌ர்க‌ள். முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளையு‌ம், அத‌ற்கான ‌தீ‌ர்வையு‌ம் பார்க்கலாம்.
    முக‌ம்தா‌ன் அழகு‌க்கு ‌பிரதானமாகு‌ம். அழகான, அமை‌தியான முகமே ‌சிற‌ந்த அழகை எடு‌த்து‌க் கா‌ட்டு‌ம். ஆனா‌ல் அ‌ந்த முக‌த்‌தி‌ல்தா‌ன் எ‌த்தனை எ‌த்தனை ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌‌கி‌ன்றன. அத‌ற்கான ‌தீ‌ர்வுகளை தேடி பெ‌ண்க‌ள் அ‌லு‌த்து‌ப் போ‌ய்‌விடு‌கிறா‌ர்க‌ள். இ‌ப்படி முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளையு‌ம், அத‌ற்கான ‌தீ‌ர்வையு‌ம் கூறுவதே இ‌ந்த க‌ட்டுரை‌யி‌ன் நோ‌க்க‌ம்.

    முக‌ம் எ‌ன்பது எ‌ப்போது‌ம் ப‌ளி‌ச்செ‌ன்று இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக பலரு‌ம் அ‌திக‌ப்படியான மே‌க்க‌ப்பை போடு‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல் நமது சரும‌ம் அ‌திகமாக பா‌தி‌ப்படை‌ந்து சோ‌ர்வடை‌கிறது. இதுபோ‌ன்றவ‌ர்களது முக‌த்தை மே‌க்க‌ப் இ‌ன்‌றி பா‌ர்‌க்கவே முடியாத அள‌வி‌ற்கு மோசமடைவது பலரு‌ம் அ‌றி‌ந்த உ‌ண்மை.

    எனவே, மே‌க்க‌ப் போடுவது தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் சரும‌த்தை பா‌தி‌க்காத மே‌க்க‌ப் சாதன‌ங்களை வா‌ங்‌கி அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ள நேர‌த்‌தி‌ற்கு ம‌ட்டு‌ம் பய‌ன்படு‌த்தவு‌ம். இர‌வி‌ல் தூ‌ங்க‌ச் செ‌ல்லு‌ம் போது முக‌த்தை ந‌ன்கு சு‌த்த‌ப்படு‌த்‌தி‌வி‌‌ட்டு தூ‌ங்குவது சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்லது.

    மேலு‌ம், அ‌திகமாக மே‌க்க‌ப் போ‌ட்டதா‌ல் சரும‌ம் இழ‌ந்த ஈர‌ப்பத‌த்தை‌ப் பெற தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ முக‌ம் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்து‌வி‌ட்டு தூ‌ங்குவது சரும‌த்‌தி‌ற்கு‌ம் ந‌ல்லது.

    அடு‌த்ததாக முக‌ப்பரு. இது டீ‌‌ன் ஏ‌ஜ் பெ‌ண்க‌ளி‌ன் பெரு‌ம் கவலை. பொதுவாக முக‌ப்பரு எ‌ன்பது உட‌ல் த‌ன்மையை‌ப் பொரு‌த்து ஏ‌ற்படுவது. இதனை சமா‌ளி‌க்க பல வ‌ழிக‌ள் உ‌ள்ளன.

    எலு‌ம்‌பி‌ச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து இர‌வி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் பருக்கள் நீங்கும்.

    பரு‌க்க‌ள் வ‌ந்தது‌ம் கை ‌விர‌ல் நக‌ங்களா‌ல் பருவை ‌கி‌ள்ளவதை‌த் த‌வி‌ர்‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது. ‌விர‌ல்களா‌ல் ‌கி‌ள்ளு‌ம் போதுதா‌ன் முக‌ப்பரு வ‌ந்த இட‌த்‌தி‌ல் அடையாள‌ம் ‌விழு‌கிறது. மேலு‌ம் சரும‌த்‌தி‌ன் பல இட‌ங்களு‌க்கு‌ம் பரவு‌கிறது.
    ×