search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கயம்"

    • அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரக் கூடும்.
    • பண்டல் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால்.

    காங்கயம் :

    காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா்.இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.சக்திவேல் பேசியதாவது:-

    பஞ்சாப் மாநிலம், சண்டிகா் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் (பேக்கிங்) செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரிஜிஸ்டா் பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி இருந்த சூழ்நிலையில், தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரக் கூடும். ரூ.1,000க்கு விற்கப்படும் 25 கிலோ கொண்ட அரிசிப் பை, இனிமேல் ரூ.1,050 ஆக விலை உயரக்கூடும்.

    இந்த விலை உயா்வு அடித்தட்டு மக்களை பெருமளவில் பாதிக்கும். எந்த அரசும் மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு இதுவரை வரி அறிவிப்பு செய்ததில்லை. எனவே மக்களை பாதிக்கும் இந்த 5 சதவீத வரியை மத்திய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.இதில்காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் செயலாளா்சாமியப்பன், பொருளாளா்சின்னசாமி உள்பட அரிசி ஆலை உரிமையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    • தனியாா் வேலை வேண்டி காத்திருக்கும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
    • மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயம் கரூா் சாலையில் உள்ள ஸ்ரீ மகாராஜா மஹாலில் இன்று நடைபெற்றது.

    இம்முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 15,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.

    இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு படித்தவா்கள் மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் படிப்புகளிலும் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் மற்றும் முந்தைய ஆண்டு படிப்பை முடித்த மாணவா்கள், தனியாா் வேலை வேண்டி காத்திருக்கும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

    முகாமில் வேலை வாய்ப்புகளோடு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன வழங்கப்பட்டது.

    முகாமில் இன்று மாலை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சி.வி.கணேசன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகின்றனர். கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். 

    • மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 103 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
    • சந்தையில் அதிகபட்சமாக ரூ.74 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 103 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் 56 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.74 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
    • அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடபெற்று வருகிறது

    காங்கயம் :

    காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை பலரும் அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது.

    தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

    இந்த நிலையில் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது. இதனால் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.

    • இலவச உணவு தங்குமிடம் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
    • கடனுதவி வழங்க மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

    காங்கயம்:

    காங்கயம், தாராபுரம் சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். காங்கயம் நகர்மன்றத் தலைவர்சூ ரியபிரகாஷ் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் பல்வேறு துறைகள் மூலம் 16 பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதிவாய்ந்த 275 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சிக்கு தேர்வு செய்தனர்.

    இவர்களுக்கு இலவச உணவு தங்குமிடம் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. விழாவில் திட்ட இயக்குனர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன், சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் கே.கே.துரைசாமி, துணைத்தலைவர் டி.சண்முகம்,தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    காங்கயம்:

    காங்கயம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி. குமரேசன் மேற்பார்வையில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

    அப்போது சிக்கரசம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தேங்காய் களத்தில் கூலி வேலை செய்து வந்த மாயி ( வயது 54) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தி கொண்டு பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மாயியை மடக்கி பிடித்தனர். 

    பின்னர் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 11 ஆயிரம் பணம், கஞ்சா கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் விசாரித்த போது அவர் காங்கேயம் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா சப்ளை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    இக்கோவிலில் ஸ்ரீசக்கரத்துடன் கூடிய மகாமேரு வளாகம், வாகனம் இல்லாத பைரவர் சன்னதி உள்ளது கூடுதல் சிறப்பு.
    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா படியூர் - சின்னாரிபட்டியில் ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை மாதேசிலிங்கம் கோவில் உள்ளது. கோவில் 103 டிகிரி தென் கிழக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 4 முதல் 25-ந்தேதி வரை 22 நாட்கள், அக்டோபர் 16-ந்தேதி முதல், நவம்பவர் 8-ந்தேதி வரையிலான, 22 நாட்கள் என 44 நாட்கள் மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது.

    இது தவிர ஆண்டுக்கு 80 நாட்கள் நிலவொளி படும் வகையில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீசக்கரத்துடன் கூடிய மகாமேரு வளாகம், வாகனம் இல்லாத பைரவர் சன்னதி உள்ளது கூடுதல் சிறப்பு. வெள்ளை கல்லால் உருவான நந்தியின் இடது காலில் பாரம்பரிய தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

    கோவிலின் சிறப்பு குறித்து திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன் கூறியதாவது:

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கொங்கண சித்தரால் ஸ்ரீமாதேசிலிங்கம் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் நூற்றாண்டில் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் 300 ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவரால் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோடையிலும் வற்றாத மகாவிஷ்ணு சுனை நீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. சுனையின் வடக்கே, பழஞ்சாமி மாடம் என்று அழைக்கப்படும் இடத்தில் கொங்கண சித்தர் ஸ்தாபித்த சிலைகள் இன்றும் உள்ளன.

    சிவலிங்கம், நந்தி சிலைகளுடன் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘ஜேஷ்டாதேவி’ எனப்படும் மூதேவி சிலை கையில் துடைப்பத்துடன் காணப்படுகிறது. இருபுறமும் மாந்தி, குளிகன் சிலைகளும் உள்ளன. சிலைகளின் பின் மகேந்திர பல்லவனின் தளபதி பற்றிய செய்திகள் வட்டெழுத்து வடிவில் காணப்படுகிறது. 

    அதே பகுதியில் 2,000-ம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி ஒன்று இன்றளவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கோவிலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாக்கவும் வரலாற்றை ஆவணப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    தொடக்க விழா காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில் நடைபெற்றது.
    காங்கயம்:

    இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைப்பயணம் காங்கயத்தில் தொடங்கியது. இல்லம் தேடி கல்வி என்னும் தலைப்பில் இந்த கலைக்குழுவினர் காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 61 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

    இதற்கான தொடக்க விழா காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சிவகுமார், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மகேந்திரன், சுசீலா, சமக்ரா சிக்ஷா மேற்பார்வையாளர் சிவகுமார், இல்லம் தேடிக் கல்விக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    திருப்பூர் சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    காங்கயம்:

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.

    மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம் வருமாறு:

    காங்கயம் துணை மின் நிலைய பகுதிகளில் காங்கயம் நகரம், திருப்பூர் சாலை, கோவை சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.

    சிவன்மலை துணை மின் நிலைய பகுதிகளில்  சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், நாமக்காரன்புதூர், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.

    ஆலாம்பாடி துணை மின் நிலைய பகுதிகளில் ஆலாம்பாடி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம், கல்லேரி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. 

    திருப்பூர் சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம் வருமாறு:

    அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி. புதுர், கரட்டாங்காடு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம். நகர், கே.எம்.ஜி. நகர், பட்டுக்கோட்டையார் நகர்,திரு.வி.க. நகர், கவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.  
    புகார் மனுதாரர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஐ.ஜி., அறிவுரைகள் வழங்கினார்.
    காங்கயம்:

    காங்கயம் போலீஸ் நிலையத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  

    அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்கு கோப்புகளை ஆய்வு செய்து, இதுவரையில் கண்டுபிடிக்காத வழக்குகளை கண்டுபிடிக்குமாறும், நிலுவையில் உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இரவு ரோந்துகளை முறையாக செய்து குற்றங்களை தடுக்குமாறும் உத்தரவிட்டார்.

    மேலும் புகார் மனு மீதான விசாரணை முறையாக நடக்க வேண்டும், புகார் மனுதாரர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    தொடர்ந்து ஊதியூர்காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது காங்கயம் டி.எஸ்.பி. குமரேசன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    காங்கயம் துணை மின் நிலைய பகுதியில் காங்கயம் நகரம், திருப்பூர், கோவை சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
    காங்கயம்:

    காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 20-ந்தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள்  நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார். 

    காங்கயம் துணை மின் நிலைய பகுதியில் காங்கயம் நகரம், திருப்பூர் ,கோவை சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
     
    சிவன்மலை துணை மின் நிலைய பகுதியில் சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர் வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடி பாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், கரட்டுபாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    ஆலாம்பாடி துணை மின்நிலைய பகுதியில்  நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தகாட்டுவலசு, வேலாயுதம் புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பானையம், ஆலாம்பாடி கல்லேரிஆகியபகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    குண்டடத்தில் இருந்து காங்கயம் செல்லும் கே- 8 வழித்தட அரசுப் பேருந்தில் 20 மாணவ, மாணவிகளும் ஏறியுள்ளனர்.
    காங்கயம்:

    காங்கயம் அருகே தாயம்பாளையம் கிராமத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சூரியநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட மரவபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். 

    இதற்காக காலை மற்றும் மாலையில் இந்த கிராமத்திற்கு வரும் அரசுப்பேருந்து மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர். சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்த பின்னர் தங்கள் ஊருக்குச் செல்லும் வழக்கமான பேருந்தான குண்டடத்தில் இருந்து காங்கயம் செல்லும் கே- 8 வழித்தட அரசுப் பேருந்தில் 20 மாணவ, மாணவிகளும் ஏறியுள்ளனர். 

    பேருந்து கிளம்பும்போது பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இந்தப் பேருந்து மரவாபாளையத்துக்கு செல்லாது எனக் கூறி, அந்த மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இதையறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இது குறித்து பேருந்தின் ஓட்டுநரிடம் கேட்டபோது, அவர்களிடமும் இதே பதிலைக் கூறிவிட்டு, மாணவர்களை இறக்கி விட்டு பேருந்து காங்கயம் சென்றுள்ளது.

    இதனால் வேறு வழியில்லாமல் அந்த 20 மாணவ, மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே 3 கி.மீ. தூரம் நடந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மேற்கண்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவ்வப்போது இந்த மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடுவது வழக்கம் என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழக காங்கயம் பணிமனையின் கிளை மேலாளரிடம் ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் பவுத்தன் புகார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அரசுப் போக்குவரத்துக்கழக காங்கயம் பணிமனை கிளை மேலாளர் நடராஜன் கூறியபோது, சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
    ×