search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94456"

    • திருப்பூர் மாவட்ட சப் - கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
    • முகாமில் 41 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு நாள் முகாம் திருப்பூர் மாவட்ட சப் - கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    பல்லடம் தாசில்தார் நந்தகோபால், வடுகபாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 41 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 24 மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.17 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வில்சன்,அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்டாக்டர் ராமசாமி, மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாதுவங்கியது.
    • முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    பல்லடம் :

    பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாதுவங்கியது.பல்லடத்தில் உள்ள தண்டாயுத பாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.வருடம்தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்கள். 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரவிழா நடைபெறும். நேற்று சஷ்டி விரதம் ஆரம்பநாள்.

    இதன்படி பல்லடத்தில் உள்ள தண்டாயுத பாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சுவாமிக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர், மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாராதனை நடைபெற்றது இதன் பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டனர்.

    • பல்லடம் நகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் நகராட்சி பணியாளர்கள் 350 பேருக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபாவளி பரிசை நகராட்சி தலைவர் கவிதா மணி ராஜேந்திரகுமார் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், நகராட்சி பொறியாளர் ஜான் பிரபு,வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார், மதிமுக. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் அருள்புரத்தில் உள்ள தி.மு.க. கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில். ஒன்றிய திமுக. செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் 126 கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு உள்ளிட்ட தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணைத் தலைவர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாணவரணி சேகர்,திமுக. நிர்வாகிகள் மேனகா துரைசாமி, ஸ்ரீ சிவா, கந்தசாமி, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி ஊராட்சியை சேர்ந்த கரடிவாவிபுதூர் ஏ.டி. காலனி, இந்திரா நகர், கிருஷ்ணாநகர் உள்ளிட் பகுதியில் வசிக்கும் 500 குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து60 ஆயிரம் மதிப்பில் வேட்டி,சட்டை, சேலை, இனிப்பு, காரம் அடங்கிய தீபாவளி பரிசு தொகுப்பை கரடிவாவி ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன் தனது சொந்த செலவில் வழங்கினார்.

    • 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • 320 மாணவன் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அவினாசிபாளையத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை கல்லூரி முதல்வர் ரமேஷ் குமார் வரவேற்றார். கல்லூரியின் தாளாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் துணைத் தலைவர் டி. கே. கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தார். விழாவில் கோவை அக்வா சப்என்ஜினீயரிங் நிறுவனத்தின் நரேந்திரன் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார்.

    விழாவில் 286 இளநிலை பிரிவு மாணவ- மாணவிகளுக்கும், 34 முதுநிலை பிரிவு மற்றும் மேலாண்மை துறை மாணவன் மாணவிகளுக்கும் என மொத்தம் 320 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நாஸ்காம் துணைத் தலைவர் உதயசங்கர் மற்றும் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேர்வுத்துறை தலைவர் லட்சுமி பிரியா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், பிரதீப் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் கல்லூரியின் நிர்வாக அதிகாரி அன்பரசு நன்றி கூறினார்.

    • குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன.
    • 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,62,600 வசூலிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.

    இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில், பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 204 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 14 பேர், மேலும் சிக்னலை மதிக்காமல் செல்வது, நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,62,600 வசூலிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 93 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகரில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அதனை சரி செய்ய போலீசார் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளன. குறிப்பாக பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது. இதனால் குற்றசம்பவங்கள், விபத்துகளை ஏற்படுத்தி விட்டுச் செல்லும் வாகனங்களை கண்டறிய முடியாத நிலை உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், கண்காணிப்பு கேமராக்களின் உதவியால் பல்வேறு இடங்களை போலீசார் கண்காணிக்கலாம். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து பழுதாகி உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ. 1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடத்தி பணி துவக்கி வைக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ. 1கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி அங்குள்ள லட்சுமி நகரில் ரூ.6லட்சத்து66 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிக்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடத்தி பணி துவக்கி வைக்கப்பட்டது.

    இதில் ஒன்றிய குழு தலைவர்கள் தேன்மொழி( பல்லடம்), வக்கீல் குமார் (பொங்கலூர்), பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள் சோமசுந்தரம்,கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்குவாரியை தற்காலிகமாக மூடக்கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
    • மேல்முறையீடு செய்து தடையை நீக்கி கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த குவாரி இயக்கப்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்பட்டுவரும் தனியார் கல்குவாரி நிறுவனம் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். இதையடுத்து கல்குவாரியை தற்காலிகமாக மூடக்கோரி கடந்த செப்.8ந்தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். இந்நிலையில் மேல்முறையீடு செய்து தடையை நீக்கி கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த குவாரி இயக்கப்பட்டு வருகிறது எனவும், அபராதம் விதிக்கப்பட்டதாகவும், விசாரணையின்முழுவிபர நகலை கேட்டு பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாசில்தார் நந்தகோபால், கலெக்டர் அலுவலக கூட்டத்திற்கு சென்றுவிட்டதால், துணை தாசில்தார் பானுமதி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன்ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உத்தரவு நகலை எங்களிடம் தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
    • பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள் கணபதிபாளையம் ஊராட்சி பெத்தாம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி. இவரது மனைவி கல்யாணி(வயது 48). இவர் வீட்டின் அருகேயுள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் முகவரி கேட்பது போல் நடித்து கல்யாணியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
    • 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ முகாமில் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 2020ல் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    பல்லடம் :

    தமிழகத்தில் கிராமபுறங்களில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும்,உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆர்வம் ஏற்படுத்தவும், கடந்த 2006 தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டது.

    மேலும் பல்வேறு விளையாட்டு சாதனங்களும், ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த திட்டம் சில ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மைதானங்கள் பராமரிப்பு குறித்து சில ஆண்டுகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர் கடந்த, 2020ல் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், கிராமம்தோறும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.

    தற்போது அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதர் மண்டி மாயமாகி வருகிறது.

    மேலும் விளையாட்டு, பயிற்சி உபகரணங்கள், துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது கிராமப்புற இளைஞர்களிடமும், விளையாட்டு ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. பெருந்தொற்று காலத்துக்குப்பிறகு, மொபைல்போனில் மூழ்கி, அடிப்படை உடற்பயிற்சிக்கு கூட இளைஞர்களும், மாணவர்களும், முக்கியத்துவம் அளிப்பதில்லை.அதே போல், விளையாட்டில், சாதிக்க நினைப்பவர்களுக்கும், கிராமங்களில், எவ்வித வசதியும் இல்லை. எனவே, கிராமப்புற மைதானங்களை பராமரித்து, உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறப்புக்குழு அமைத்து, மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை ஒப்படைக்க வேண்டும்.கிராமம் வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தி இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருட்கள் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சேரன் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் பாலாஜி(28) என்பதும், கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சப்ளை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருட்கள், அவைகளை கொண்டு செல்ல பயன்படுத்திய ஒரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×