என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94456"
- அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
- சம்பவத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(28) கட்டிடத் தொழிலாளி. நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். பல்லடத்தை அடுத்த அருள்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரோட்டோர மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி திடீரென அறுந்து மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த பாலமுருகன் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக இவருக்கு பின்னால் வந்த வாகனங்கள் இவர் மீது மோதாமல் சென்றன.
மின் கம்பி கழுத்தின் பின்பகுதி மற்றும் முன்பகுதியில் சிராய்த்து பலத்த காயம் ஏற்பட்ட பாலமுருகனை அக்கம்- பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற நிலையில்,அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.இது குறித்து பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் துருப்பிடித்து பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பிகளை, மின்வாரிய அதிகாரிகள் போதிய பராமரிப்பு செய்யாமலும், உரிய காலத்தில் அவைகளை மாற்றாமல் இருந்ததுமே இந்த விபத்துக்கு காரணம் என்றும் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பிகளை மாற்ற வேண்டும் என்றும் தற்போது நடந்துள்ள சம்பவத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
- கரைப்புதுார் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
- 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதுார் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
6 முதல் 10ம் வகுப்பு வரை மொத்தம் மூன்று வகுப்பறைகள் மட்டுமே உள்ள சூழலில் இடப்பற்றாக்குறை உள்ளது. இதனால் போதிய இடம் இல்லாமல், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இரும்பு தகர ஷீட் கூரையின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: காளிநாதம்பாளையத்தில் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஒரே வளாகத்தில் அமைந்து ள்ளன. போதிய கட்டட வசதி இல்லாமல் மாணவர்கள் திறந்த வெளியில் அமர வைக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படும்நிலை உள்ளது. பள்ளிக்கு மாற்று இடத்தில் கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இடப்பற்றா க்குறையால் மாணவர்களும், ஆசிரியர்களும் தவிர்த்து வருகின்றனர். போதிய இடம் இல்லாமல் அருகிலுள்ள ஊராட்சிக்கு சொந்தமான கட்டடமும் தற்காலிகமாக கல்வி கற்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. வகுப்பறை பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிதாக கட்டடம் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணபதியப்பன் மகன் ஜெகதீஸ்வரன்
- இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணபதியப்பன் மகன் ஜெகதீஸ்வரன்,(22) இந்த நிலையில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, இவரது பெற்றோர்கள் அக்கம்-பக்கம் தேடியும், உறவினர்கள் வீடுகளில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது வீடு அருகே உள்ள விநாயகர் கோவில் கிணற்றில் மனித உடல் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து உடலை மீட்டனர். விசாரணையில் அது காணாமல் போன ஜெகதீஸ்வரன் என்பது தெரிய வந்தது இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் திருப்பூர் ஸ்கேட்டிங் அசோசியேன்மற்றும் தனியார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.
- 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் திருப்பூர் ஸ்கேட்டிங் அசோசியேன்மற்றும் தனியார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்லடம், திருப்பூர், தாராபுரம், காங்கேயம், உடுமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.
- ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லடம் மார்க்கெட் முன்புறம் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்தனர்.
- நகராட்சி அதிகாரிகள் கடைகளை போடக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் :
ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லடம் மார்க்கெட் முன்புறம் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்த நிலையில் திடீரென பல்லடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை போடக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,மேலும் நடைபாதை வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்களை பயன்படுத்தி நகராட்சி வாகனத்தில் கொண்டு செல்ல முற்படும்போது சாலை ஓர நடைபாதை வியாபாரிகளுக்கும் பல்லடம் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முக்கியமான பண்டிகை காலங்களில் கடைகளை போடக்கூடாது என தெரிவிப்பதற்கு நூற்றுக்கு மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை கண்டித்து பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடைபாதை வியாபாரிகளுடன், நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர், இதன் காரணமாக மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பல்லடம் நகர நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்லடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உழவாலயத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
- மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பல்லடம் :
பல்லடத்தில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பல்லடம் அருகே உள்ள கோடங்கி பாளையத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகமான உழவாலயத்தில் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- மாதாந்திரப் பாராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
பல்லடம் :
பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை 1-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
பல்லடம் நகரம், வடுகபாளையம், வடுகபாளையம்புதூா், அனுப்பட்டி, சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம், சின்னூா், கொசவம்பாளையம், வெங்கிட்டாபுரம்.
- உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அரசு கால்நடை மருத்துவமனையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சக்திவேல் பாண்டி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் பரிமள்ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் திருப்பூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் கெளசல்யா, கால்நடை முதுநிலை மேற்பார்வையாளர் ரபீக் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதே போல பல்லடம்அருகே உள்ள கரடிவாவி அரசு கால்நடை மருத்துவமனையில் வெறிநோய் தின தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை மருத்துவர் அர்ஜுனன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 200க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
- ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி.
- வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று பல்லடம் கொசவம்பாளையம் ரோடு பிரிவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பச்சாபாளையம், பனப்பாளையம்,ராயர்பாளையம்,நடுப்புதூர், அபிராமி நகர்,கரையாம்புதூர் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நகராட்சி 7வது வார்டு கவுன்சிலர் கனகுமணி துரைகண்ணன், நகர அ.தி.மு.க. செயலாளர் ராமமூர்த்தி. நகர அவைத்தலைவர் தமிழ்நாடு பழனிசாமி, நகர துணை செயலாளர் லட்சுமணன்,மற்றும் துரைகண்ணன், ரமேஷ், நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்ச்சுணன், பா.ஜ.க.சார்பில் கிருஷ்ணபிரசாத், அண்ணாதுரை, பா.ம.க.சார்பில் காளியப்பன், முன்னவன்,பாஸ்கரன், பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அய்யாசாமி,ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
- வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் .
பல்லடம் :
பல்லடம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு 1.12. 2019 முதல் மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பிரிவுகளுக்கு மின் இணைப்பு எண்ணிக்கையையும், வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து மின்வாரிய தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு மின்வாரிய அனைத்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பல்லடம் கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
- சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
- இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு,பின்னர் கைகலப்பாக மாறியது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் எஸ்.ஆர்.சி. நகர் பஸ் நிறுத்தம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு,பின்னர் கைகலப்பாக மாறியது. இதற்குள் ரோட்டில் நடந்து சென்றவர் தரப்பில் இருந்து வந்த நபர்கள், காரில் வந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து காரில் வந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு திரண்டனர். மோதல் ஏற்படும் சூழ்நிலையில் அங்கு வந்த பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அந்தப் பகுதிக்கு நேரில் வந்தார். அப்போது அவரிடம் ஒரு தரப்பினர், எதிர்த் தரப்பினர்,சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களால் சமூகவிரோதச் செயல்கள் அடிக்கடி நடப்பதாகவும், தட்டி கேட்பவர்களை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாகவும் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதன் பின்னர் இரு தரப்பினரும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் இதையடுத்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஹரிதாஸ் மகன் மலைவாசன்(வயது 26) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நீலகிரி எம்.பி. ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்துக்கள் குறித்து அவதுாறாக பேசிய ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடு புரத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில்இந்துக்கள் குறித்து அவதுாறாக பேசிய நீலகிரி எம்.பி. ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் லோகநாதன்,சர்வேஸ்வரன், ராஜ்குமார்,மற்றும் இந்து முன்னணி மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்