search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94462"

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சியோமியின் முதல் ஆண்ட்ரய்டு கோ ஸ்மார்ட்போன் ஆகும். #RedmiGo



    சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும். 

    புதிய ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 5 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 4ஜி எல்.டி.இ., பிரத்யேக சிம் கார்டு ஸ்லாட்கள் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:

    - 5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
    - அட்ரினோ 308 GPU
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.12μm பிக்சல்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ். 
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி கோ முதல் விற்பனை மார்ச் 22 ஆம் தேதி ப்ளிப்கார்ட், Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் துவங்குகிறது.

    புதிய ரெட்மி கோ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 100 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
    ஹூவாய் துணை பிராண்டு ஹானர் இந்தியாவில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Honor10Lite



    ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே , கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை, EMUI 9.0, 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 24 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ் மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் 710 12 என்.எம். பிராசஸர்
    - ARM மாலி-G51 MP4 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் ஹானர் 10 லைட் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் கிரேடியன்ட் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போன் அறிமுகமானது. புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் ஏ.ஐ. டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. #Redmi7



    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ரெட்மி 7 ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த MIUI 10 இயங்குதளம் வழங்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் மற்றும் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் P2i நானோ கோட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் கார்டு ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி 7 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14nm பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.12um, f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் புளு, ரெட் மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.7,150) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,170) என்றும் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,215) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வேண்டாம் என்று பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். #ActorVivek
    சென்னை:

    நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:–

    மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கி தரும் ‘ஸ்மார்ட்’ செல்போனில் உள்ள கேமரா மற்றும் இணையதள வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ActorVivek
    சியோமி நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. #RedmiGo



    சியோமி நிறுவனம் தனது ரெட்மி கோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மார்ச் 19 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இது சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும். 

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 4ஜி எல்.டி.இ. மற்றும் பிரத்யேக சிம் ஸ்லாட்கள், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.



    சியோமி ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. 16:9 டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
    - அட்ரினோ 308 GPU
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிஷன்)
    - டூயல் சிம்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.12μm
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி கோ ஸ்மாரட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இதன் விலை 75 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,240) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹூவாய் நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #HUAWEINova4e



    ஹூவாய் நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் நோவா 4இ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.15 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 2.0, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு 32 எம்.பி. கேமரா மற்றும் ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் புளு வெர்ஷனில் கிளாஸ் பேக், கிரேடியன்ட் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. 

    இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ, 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.



    ஹூவாய் நோவா 4இ சிறப்பம்சங்கள்:

    - 6.15 இன்ச் 2312x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் 710 12 என்.எம். பிராசஸர்
    - ARM மாலி-G51 MP4 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு கேமரா
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஹூவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், பியல் வைட் மற்றும் கிரேடியண்ட் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,720) என்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் 2299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.23,835) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் சுமார் 1.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #Realme3



    ஒப்போவின் துணை பிராண்டு ரியல்மி இந்தியாவில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நேற்று (மார்ச் 12) நடைபெற்றது. மதியம் சரியாக மதியம் 12 மணிக்கு துவங்கிய விற்பனை சில நிமிடங்களில் நிறைவுற்றது.

    ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற்ற விற்பனையில் சுமார் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக ரியல்மி அறிவித்துள்ளது. முதல் விற்பனையில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. 



    பின் நேற்று இரவு 8 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வந்தது. இதில் ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்பட்டது. இத்துடன் ஜியோ சார்பில் ரூ.5,300 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டது.

    இத்துடன் மார்ச் 13 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை ரியல்மி ஹோலி விற்பனை நடைபெறுகிறது. இதில் ரியல்மி சி1 (2019) ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.99 மதிப்புள்ள மொபைல் பாதுகாப்பு சலுகை வழங்கப்படுகிறது. இந்த ஸ்மாரட்போனின் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.7,499, 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    தள்ளுபடி விற்பனையில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் ரூ.1000 உடனடி தள்ளுபடி, ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் மொபிக்விக் மூலம் பணம் செலுத்துவோர் 20 சதவிகிதம் சூப்பர்கேஷ் வழங்கப்படுகிறது.

    முதல் நாளில் மட்டும் இரண்டு முறை நடைபெற்ற விற்பனையில் மொத்தம் சுமார் 2,10,000 ரியல்மி 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கின்றன. ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை மார்ச் 19 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. 
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம். #Redmi7



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மார்ச் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி தலைவர் லு வெய்பிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரெட்மி 7 ஸ்மார்ட்போனுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    வெளியீடு பற்றிய அறிவிப்புடன் ஸ்மார்ட்போனின் பிளாக், புளு மற்றும் ஆரஞ்சு கிரேடியன்ட் நிற எடிஷன்களின் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஏ.ஐ. வசதி கொண்ட டூயல் பிரைமரி கேமராக்கள், டாட் வடிவ நாட்ச் இடம்பெற்றிருக்கிறது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் வியட்நாம் வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இவற்றில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சியோமி ரெட்மி 7 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், புளு, பின்க் மற்றும் பல்வேறு புதிய நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ தவிர மின்விசிறி, வெப் கேமரா, ஸ்மார்ட் கேமரா, வாக்யூம் கிளீனர், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களையும் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
    ஒப்போ நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Reno



    ஒப்போ நிறுவனம் தனது ரெனோ சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 10 ஆம் தேதி அறிமுகமாகிறது. 

    ரெனோ சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஆர் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒப்போவின் ஃபைன்ட் எக்ஸ் சீரிஸ்-க்கு மாற்றாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இது ரியல்மி போன்று துணை பிராண்டாக இருக்காது என ஒப்போ தெரிவித்துள்ளது.

    புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் வசதி வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 4065 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது.



    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் 10எக்ஸ் வசதியுடன் லாஸ்லெஸ் சூம் கேமரா ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக ஒப்போ அறிவித்தது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், 120 டிகிரி அல்ட்ரா-வைடு லென்ஸ், 159 எம்.எம். அளவு சமமான டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் தனிப்பட்ட அசிஸ்டண்ட் சேவையான பிரீனோவினை வணிக ரீதியில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் ஒப்போ சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிவித்திருந்தது. அந்த வகையில் இதுகுறித்த அறிவிப்பும் இவ்விழாவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2,000 குறைத்திருக்கிறது. #MiA2



    சியோமி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைத்திருக்கிறது. அதன்படி Mi ஏ2 ஸ்மார்ட்போனின் துவக்க விலை தற்சமயம் ரூ.11,999 ஆகும். இதற்கான அறிவிப்பை சியோமி துணை தலைவர் மனு குமார் ஜெயின் வெளியிட்டார்.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை Mi ஏ2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 20 எம்.பி. பிரைமரி கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 4 பிளஸ் வசதி கொண்டிருக்கிறது.  சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் கிடைப்பதால் இந்த ஸ்மார்ட்போனிற்கு பியூர் ஆண்ட்ராய்டு அனுபவம் மற்றும் வேகமான அப்டேட்களை பெற முடியும்.

    சியோமி Mi ஏ2 புதிய விலை 

    இந்தியாவில் தற்சமயம் விலை குறைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் ரூ.11,999 விலையில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை தற்சமயம் மாற்றப்படவில்லை. இதன் விலை ரூ.15,999 ஆகும்.



    சியோமி Mi ஏ2 சிறப்பம்சங்கள்:

    –  5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    –  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    –  ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    –  அட்ரினோ 512 GPU
    –  4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    –  64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    –  ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
    –  டூயல் சிம் ஸ்லாட்
    –  12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
    –  20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
    –  20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    –  கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    –  டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    –  3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    –  குவால்காம் க்விக் சார்ஜ் 4+

    இந்தியாவில் சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் முதற்கட்டமாக ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் 6 ஜி.பி. ரேம் மாடல் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. #Oppo



    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் அமைந்திருக்கும் தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தில் சர்வதேச சந்தை மற்றும் இந்தியாவுக்கான 5ஜி மொபைல் போன் உபகரணங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

    வியாபாரத்திற்கு ஏற்ப தற்சமயம் இருப்பதை விட இருமடங்கு புதிய ஊழியர்களை அடுத்த மூன்றாண்டுகளில் பணியமர்த்த ஒப்போ திட்டமிட்டுள்ளதாக ஒப்போ மொபைல் இந்தியா துணை தலைவர் மற்றும் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் தலைவர் தஸ்லீம் ஆரிஃப் தெரிவித்தார்.

    இந்திய சந்தை வளர்ந்து வருகிறது. இந்திய சந்தையில் அதிக கவனம் செலுத்துகிறோம். இந்திய நுகர்வோருக்கென பிரத்யேக புதுமைகளை அறிமுகம் செய்யவே இந்தியாவின் ஐதராபாத் நகரில் சொந்தமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை துவங்கி இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



    ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் மூலம் பல்வேறு புதுவித தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகம் செய்ய முடியும். இத்துடன் இவை இந்திய நுகர்வோரின் பிரச்சனைகளை சரிசெய்யும் விதமாகவும் இருக்கும் என அவர் ஆரிஃப் தெரிவித்தார். இந்திய சந்தைக்கான சாதனங்கள் மட்டுமின்றி சர்வதேச சந்தைக்கு தேவையான 5ஜி சார்ந்த அம்சங்களுக்கான பணிகளும் ஐதராபாத் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தில் நடைபெறுகிறது.

    இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கில் அதிகளவு பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். மேலும் எங்களது நிறுவனம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொருந்தும் வகையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் ஒப்போ நிறுவனம் ஸ்டார்ட்-அப் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
    இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு சுமார் 72.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #MobileData



    இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 72.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த விலையில் மொபைல் டேட்டா கிடைப்பதும், ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் வீடியோ ஆன் டிமாண்ட் சந்தை அதிக பலனடையும் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் இணைய பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அசோகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் டேட்டா பயன்பாடு 10,96,85,793 மில்லியன் எம்.பி.யாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 2017 இல் டேட்டா பயன்பாட்டு அளவு 71,67,103 மில்லியன் எம்.பி.யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



    2013 ஆம் ஆண்டு வரை இந்தியர்கள் மொபைல் டேட்டாவை தவிர வாய்ஸ் சேவைகளையே அதிகம் பயன்படுத்தி வந்தனர். தற்சமயம் பெரும்பாலான மொபைல் கட்டணங்களில் டேட்டா பயன்பாடு ஆதிக்கம் செலுத்துகிறது. மொபைல் டேட்டா பயன்பாட்டில் 65 முதல் 75 சதவிகிதம் வீடியோ ஸ்டிரீமிங் செய்யப்படுவதாக நோக்கியா மொபைல் பிராண்ட்பேண்ட் இன்டெக்ஸ் 2018 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2022 ஆம் ஆண்டு மொபைல் இண்டர்நெட் பயன்பாடு 56.7 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017 இல் இந்த வளர்ச்சி 30.2 சதவிகிதமாக இருந்தது. 
    ×