search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94462"

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. டீசர் வீடியோவில் கேமரா மட்டும் தோன்றுகிறது. இந்த டீசர் நோக்கியா மொபைல் இந்தியா மற்றும் நோக்கியா குளோபல் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது.



    அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் இத்தாலி மற்றும் இந்தியாவில் ஒரே நாளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் TA-1183 எனும் மாடல் நம்பர் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் FCC மற்றும் BIS சான்றிதழ்களை பெற்றது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இது நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் என்றும் இது நோக்கியா வாஸ்ப் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இது ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதுதவிர ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 1 பிளஸ் மற்றும் நோக்கியா 210 ஃபீச்சர் போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களையும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்கிரீனினை உருவாக்குவதற்கென புதிய காப்புரிமையை வென்று இருக்கிறது.



    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் முயற்சிகளில் ஆப்பிள் புதிய காப்புரிமையை பெற்றிருக்கிறது. புதிய காப்புரிமையின் படி ஆப்பிள் தனது சாதனங்களில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்களை பயன்படுத்த முடியும்.

    அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய காப்புரிமையில் மடிக்கக்கூடிய அல்லது வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே கொண்ட சாதனம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த விண்ணப்பத்தை ஆப்பிள் நிறுவனம் 2018 ஜனவரி மாதத்தில் சமர்பித்து இருந்தது.

    இத்துடன் அந்நிறுவனம் பல்வேறு இதர தொழில்நுட்பங்களுக்கும் காப்புரிமை வழங்க விண்ணப்பித்து இருந்தது. இவற்றில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவிற்கும் அந்நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. முன்னதாக டச் சென்சார்கள் கொண்ட மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களுக்கு ஆப்பிள் காப்புரிமை கோரியிருந்தது.



    பிப்ரவரி 2019 இல் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு அல்லது மூன்று பாகங்களில் மடியக்கூடிய வகையில் இருப்பது பற்றிய வரைப்படங்களை சமர்பித்து இருந்தது. இந்த டிஸ்ப்ளே மொபைல் போன், டேப்லெட், லேப்டாப், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மொபைல் அக்சஸரீகளில் பயன்படுத்த முடியும்.

    சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய சாதனத்தை 2021 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.



    சியோமி நிறுவனம் விரைவில் Mi 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் வெளியீட்டு முன் அதன் புகைப்படத்தை அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அதில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், கிரேடியண்ட் வடிவைப்பு கொண்டிருப்பது உறுதியாகி விட்டது.

    புகைப்படத்துடன் ஸ்மார்ட்போனின் பெயரை கண்டுபிடிக்க சியோமி தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனில் பாப்-அப் கேமரா வழங்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. புதிய Mi 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், Mi 9டி ஸ்மார்ட்போன் தாய்லாந்து மற்றும் தாய்வானில் சான்று பெற்றிருக்கிறது.



    சியோமி வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சியோமி Mi 9 ஃபிளாக்‌ஷிப் மாடலின் ஸ்டேன்டர்டு வேரியண்ட்டில் கிரேடியன்ட் வடிவமைப்பு, மூன்று பிரைமரி கேமரா சென்சார் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் கிரேடியன்ட் ஃபினிஷ் பார்க்க ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் ஓசன் புளு வேரியண்ட் போன்று காட்சியளிக்கிறது.

    சியோமியின் புதிய Mi 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு, பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. Mi 9 ஸ்டான்டர்டு வேரியண்ட் வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போன் எந்த பெயரில் அறிமுகமாகும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எனினும், சியோமி Mi 9டி ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் NBTC சான்றிதழயைும், தாய்வானில் NCC சான்றையும் சமீபத்தில் பெற்றது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி K20 ஸ்மார்ட்போன் Mi 9டி என்ற பெயரில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
    சாம்சங் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.



    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை 2019 ஆண்டின் முதல் காலாண்டில் 2.7 சதவிகிதம் சரிவை சந்தித்ததாக கார்ட்னர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ள போதும் ஹூவாய் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பதாக கார்ட்னர் அறிவித்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    2019 முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் 19.2 சதவிகித பங்குகளுடன் முதலிடம் பிடித்து இருப்பதாக கார்ட்னர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் ஐந்து இடங்களை பிடித்த நிறுவனங்கள் பட்டியலில் ஹூவாய் நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



    குறைந்தளவு புதிய தொழில்நுட்பங்களும், அதிகளவு விலை நிர்ணயிக்கப்பட்டதால் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை சரிந்துள்ளது. 2019 முதல் காலாண்டில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விற்பனை முறையே 15.8 சதவிகிதம் மற்றும் 3.2 சதவிகிதம் குறைந்துள்ளது.

    ஐரோப்பா மற்றும் சீனாவில் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இரு நாடுகளில் ஹூவாய் ஸ்மார்ட்போன் விற்பனை முறையே 69 சதவிகிதம் மற்றும் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சீனாவில் மட்டும் ஹூவாய் நிறுவனம் 29.5 சதவிகித பங்குகளை கொண்டிருக்கிறது.
    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ரெனோ ஸ்மார்ட்போனை ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது.



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ரெனோ 10x சூம் எடிஷன் ஸ்மார்ட்போனுடன் ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், 8 ஜி.பி. ரேம், கேம் பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி கேமரா சென்சார், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. சைடு-லிஃப்டிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ ரெனோ சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 8 ஜி.பி. ரேம் 
    - 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX586 சென்சார், 0.8um பிக்சல், f/1.7, PDAF, CAF
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 79.3° வைடு ஆங்கிள் லென்ஸ்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் ஜெட் பிளாக் மற்றும் ஓசன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.32,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் முன்பதிவு செய்யப்படும் ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் ஜூன் 7 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரெனோ 10x சூம் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.



    ஒப்போ நிறுவனத்தின் ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரெனோ 10x சூம் வெர்ஷனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், கேம் பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், 10x லாஸ்-லெஸ் சூம் வசதியுடன் 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா-வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. ஷார்க் ஃபின் ரைசிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 



    ஒப்போ ரெனோ 10x சூம் எடிஷன் சிறப்பம்சங்கள்

    - 6.6 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் கலர் ஒ.எஸ். 6.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586 சென்சார், f/1.7, 0.8um பிக்சல், OIS, PDAF, CAF
    - 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், f/3.0
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2, 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டால்பி ஆட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி
    - 4065 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் 

    ஒப்போ ரெனோ 10x சூம் எடிஷன் ஸ்மார்ட்போன் ஜெட் பிளாக் மற்றும் ஓசன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட ரெனோ 10x சூம் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், விற்பனை ஜூன் 7 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.



    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டீசரை சாம்சங் தனது அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது.

    இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா உள்ளிட்டவை புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. 



    சாம்சங் எம் சீரிசில் நான்காவது மாடலாக கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    இத்துடன் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் சாம்சங் தனது வலைதளம் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.



    ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்படலாம்.

    இதுவரை சாம்சங் வெளியிட்ட எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் வழங்கப்பட்ட நிலையில், இவற்றுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கும் பணிகளை சாம்சங் துவங்கி இருக்கிறது. 



    முதற்கட்டமாக கேலக்ஸி எம்30 மாடலுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற இரு ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் இந்த அப்டேட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தயை கேலக்ஸி எம் மாடல்களில் எக்சைனோஸ் பிராசஸர்கள் வழங்கப்பட்ட நிலையில், ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் வெளியாக இருக்கும் முதல் கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எம்40 இருக்கும். இத்துடன் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 128 ஜி.பி. மெமரி மற்றும் வைபை 802.11ac. கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.
    சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது புதிய டாப்-எண்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி K20 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 124.8 டிகிரி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, சஃபையர் லென்ஸ் கவர் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஏழாம் தலைமுறை ஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3P லென்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் கைரேகை இயங்கும் பகுதி 15 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் 3D வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.



    ரெட்மி K20 ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 1/2″ சோனி IMX586, 0.8μm பிக்சல், 6P லென்ஸ்
    - 8 எம்.பி. 1/4″ OV8856 டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4 
    - 13 எம்.பி. 1/3″ சாம்சங் S5K3L6 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5எம்.எம். ஆடியோ ஜாக், குவால்காம் அக்யூஸ்டிக் WCD9340 ஹை-ஃபை ஆடியோ சிப்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளேம் ரெட், கிளேசியர் புளு மற்றும் கார்பன் ஃபைபர் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 2499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.25,200) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.26,220) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.28,230) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,245) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்ட ரெட்மி K20 ஸ்மார்ட்போனினை சியோமி அறிமுகம் செய்துள்ளது.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.



    சாம்சங் நிறுவனம் தனது கேல்க்ஸி ஏ50 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.19,990 மற்றும் ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கேலக்லஸி ஏ 50 ஸ்மார்ட்போனின் இருவித வேரியண்ட்களின் விலையில் ரூ.1500 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் ரூ.1500 விலை குறைக்கப்பட்டு ரூ.18,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ.21,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9610 10 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இவற்றுடன் பிக்ஸ்பி விஷன், பிக்ஸ்பி வாய்ஸ், பிக்ஸ்பி ஹோம் மற்றும் பிக்ஸ்மி ரிமைன்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்க 25 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா, லைவ் ஃபோகஸ் மற்றும் 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் அதற்குள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை ஜனவரி மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் பின் பிப்ரவரி மாதத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்சமயம் சந்தையில் விற்பனைக்கு வந்து வெறும் 129 நாட்களில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையை கடந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    முன்னதாக ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு மாதங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனையானதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது. மார்ச் 29 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்குள் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வெறும் 55 நாட்களில் அந்நிறுவனம் சுமார் 60 லட்சம் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 

    இதுதவிர சியோமி நிறுவனம் தனது ரெட்மி K20 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்கிறது. இதே ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு பட்ஜெட் பிரிவில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    பாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி 7ஏ சிறப்பம்சங்கள்

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i நானோ கோட்டிங்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மே 28 ஆம் தேதி நடைபெறும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்படும்.
    இந்தியாவில் விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.4000 குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.



    விவோ நிறுவனம் தனது வி15 மற்றும் வை17 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமாகி இருமாதங்கள் நிறைவுற்றிருக்கும் நிலையில், விவோ வை15 மற்றும் விவோ வை17 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை குறைக்கப்படுகிறது.

    இந்தியாவில் விவோ வி15 ஸ்மார்ட்போன் ரூ.23,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வி15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி15 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ LCD மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர் கொண்டிருக்கும் விவோ வி15 ஸ்மார்ட்போன் 32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    பின்புறம் 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா-வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. விவோ வை17 ஸ்மார்ட்போனில் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த ஃபன் டச் ஓ.எஸ்., அல்ட்ரா கேம் மோட், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 12 எம்.பி. டெப்த் கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
    ×