search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94462"

    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதற்குள் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    சியோமி நிறுவம் தனது ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த மாதம் சியோமி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒரு மாதத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்து இருந்தது.

    இந்நிலையில், சியோமி தற்சமயம் புதிய ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இருபது லட்சத்தை கடந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இத்தனை ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் சேர்த்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



    புதிய விற்பனை மைல்கல் அறிவிப்புடன் சியோமி புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 48 எம்.பி. கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 12 எம்.பி. + 2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக், நெபுளா ரெட் மற்றும் நெப்டியூன் புளு நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், சஃபையர் புளு, ரூபி ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடல்களில் நிச்சயம் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் தாய்வான் நாட்டு நிறுவனம் புதிய ஐபோன்களில் வழங்குவதற்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய துவங்கி விட்டதாக தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஏ13 என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய சிப்செட்கள் உற்பத்தியானதும் அவை சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.

    புதிய சிப்செட்கள் இம்மாத துவக்கத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது. ஆப்பிள் ஏ13 சிப்செட் 2019 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. புதிய 2019 ஐபோன் மாடல்கள் ஐபோன் 11 என்ற பெயரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாத பட்சத்தில் இம்மாத இறுதியில் புதிய சிப்செட்கள் அதிகளவு உற்பத்தி பணிகள் துவங்கலாம்.

    ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது ஐபோன்களில் புதிய சிப்செட்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதன் மூலம் புதிய ஐபோன்களின் வேகம் மற்றும் பேட்டரி பயன்பாட்டை மேம்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஐபோன்கள் D43 மற்றும் D44 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2019 ஐபோன் XR N104 என்ற பெயரில் உருவாகிறது.


    புதிய 2019 ஐபோன்களின் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்ற வகையில், புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் மொத்தம் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஐபோன் XR மாடலின் 2019 வெர்ஷனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    அந்த வகையில் 2019 ஐபோன்களில் கேமரா அம்சம் அதிகளவு மாற்றங்களை பெற இருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை மிக தெளிவாக படம்பிடிக்க அல்ட்ரா-வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஐபோன் XR மாடலின் மேம்பட்ட மாடலில் கூடுதல் சென்சார் சூம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி
    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.



    சாம்சங் நிறுவனம் 2018 கேலக்ஸி ஏ7 மற்றும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. சத்தமில்லாமல் விலை குறைக்கப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களின் புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.28,990 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ.31,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.



    கேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலும் ரூ.3000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முன்னதாக ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களின் விலை ஏப்ரல் மாதத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் தான் அதற்கு சரியானதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை கூகுளின் விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன. 

    புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன்களில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிய காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் (iFixit) தெரிவித்துள்ளனர். iFixit விமர்சகர்கள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL மாடல்களுக்கு சரி செய்யக்கூடிய வசதிகள் நிறைந்த விஷயத்திற்கு 6/10 புள்ளிகளை வழங்கியிருக்கின்றனர். 



    2019 விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் உபகரணங்கள் அதிநவீனமாக இருப்பதால், இவற்றை எளிதில் சரி செய்திட முடியும் என தெரிவித்திருக்கின்றனர். புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே மட்டுமே கடினமாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

    மேலும் சோதனையின் போது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான வைப்ரேட்டர் மோட்டார் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் பேட்டரியை மாற்றுவது எளிமையான காரியமாகவே இருக்கிறது.

    பிளாஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கும் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.39,999 மற்றும் ரூ.44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனத்தை பின்தள்ளி சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.



    இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளில் சீன ஸ்மார்ட்போன் நிறுவமான ஒன்பிளஸ் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், 2019 ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதாக கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் விற்பனையே சாம்சங் மீண்டும் முதலிடத்தை பிடிக்க காரணமாக அமைந்தது என கவுன்ட்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மட்டும் சுமார் 90 சதவிகித பங்குகளை பெற்றிருக்கின்றன.

    2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனங்கள் 95 சதவிகித பங்குகளை பெற்றிருந்தன. முதலிடத்தை இழந்த நிலையிலும், 2019 முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக ஒன்பிளஸ் 6டி இருக்கிறது. “கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் 6டி மாடல்களின் வெற்றி இந்திய பிரீமியம் சந்தையின் டிரெண்ட் ஆக பார்க்கப்படுகிறது.” என கவுன்ட்டர்பாயின்ட் நிறுவன ஆய்வாளர் கரன் சவுஹான் தெரிவித்தார். 



    “கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மூலம் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தில் அவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அம்சங்களை வழங்கினோம். கேலக்ஸி எஸ்10 மாடலின் பல்வேறு முதல்முறை அம்சங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை” என சாம்சங் இந்தியா மொபைல் பிரிவு தலைவர் ஆதித்யா பப்பர் தெரிவித்தார். 

    மற்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ஹூவாய் பத்து சதவிகித பங்குகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. ஹூவாயின் மேட் மற்றும் பி சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் சமீபத்தில் களமிறங்கியிருக்கின்றன. இவை இதுவரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் அதிக விலை காரணமாக சரிவை சமாளிக்க தொடர்ந்து போராடி வருகிறது.
    அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.



    அசுஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போனின் டம்மி யூனிட் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.

    அதன்படி புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனில் மேனுவல் ஸ்லைடர் வடிவமைப்பு, கிளாஸ் பேக், பின்புறம் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் முன்புறம் ஸ்லைடு செய்யும் போது டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இதில் ஒரு சென்சார் வைடு ஆங்கிள் கேமராவாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்லைடரின் மேல் ஸ்பீக்கர் கிரில் காணப்படுகிறது. இதன் ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் டியூன் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது.



    கேமரா சென்சாரின் அருகில் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ்புறம் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது. இதேபோன்ற புகைப்படங்கள் கடந்த மாதமும் வெளியானது. எனினும், இதன் பிளாக் நிற வெர்ஷன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், நோட்டிஃபிகேஷன் எல்.இ.டி. மற்றும் பிரத்யேக ஸ்மார்ட் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படும் என அசுஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது.

    அசுஸ் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுக நிகழ்வு அந்நிறுவன வலைதளத்தில் நேரலை செய்யப்படும் என அசுஸ் தெரிவித்திருக்கிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் ரெட்மி லேப்டாப் ஒன்றும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    எனினும், புதிய ரெட்மி லேப்டாப் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது ரெட்மி பிராண்டின் முதல் லேப்டாப் மாடலாக இருக்கும். இதுவரை ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    ஹூவாய் நிறுவனமும் தனது லேப்டாப்களை துணை பிராண்டான ஹானர் பெயரில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. ஹூவாய் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இதுவரை மேட்புக் சீரிஸ் பெயரிலும் ஹானர் பிராண்டு மேஜிக்புக் சீரிஸ் பெயரில் கணினி சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது.


    கோப்பு படம்

    புதிய ரெட்மி லேப்டாப் மாடல்கள் சியோமியின் Mi நோட்புக் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய லேப்டாப்பில் பிரத்யேக கிராஃபிக்ஸ், விலை உயர்ந்த சேசிஸ் உள்ளிட்டவை நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இருவித மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ரெட், புளு மற்றும் கார்பன் ஃபைபர் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, MIUI 10 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் ரெட்மி போனில்: 48 எம்.பி., 8 எம்.பி. மற்றும் 13 எம்.பி. என மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும், முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஒப்போ நிறுவனம் தனது ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய ரெனோ ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அதன் 10X லாஸ்-லெஸ் சூம் வசதி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. 

    ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 28 ஆம் தேதி அறிமுகமாகும் என ஒப்போ அறிவித்திருக்கிறது. ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் மற்றும் 10x லாஸ்-லெஸ் சூம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெனோ ஸ்டான்டர்டு எடிஷனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதன் 10x லாஸ்-லெஸ் சூம் வெர்ஷன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    இரண்டு ரெனோ போன்களிலும் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX286 பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு எடிஷனில் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. 



    உயர்-ரக மாடலில் 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வித்தியாசமாக பாப்-அப் ஆகும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை பொருத்தவரை ரெனோ ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. 

    இத்தனை சிறப்பம்சங்களை இயக்க ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இ்ததுடன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இது தற்சமயம் கிடைக்கும் சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டதாகும். #Samsung



    சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 எம்.பி. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று 0.8 மைக்ரான் பிக்சல்களை பயன்படுத்துகிறது. 

    பிக்சல் அளவு ஒன்று தான் என்ற வகையில், புதிய 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் அளவில் பெரியதாக இருக்கிறது. இதன் காரணமாக புகைப்படம் எடுக்கும் போது அதிக வெளிச்சத்தை உள்வாங்கும். இதனால் புகைப்படம் வழக்கமான சென்சார்களை விட அதிக தெளிவாக இருக்கும். இந்த சென்சார் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    அந்த வகையில் புதிய 64 எம்.பி. சென்சார் சாம்சங்கின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் இந்த கேமரா சென்சாரை எதிர்பார்க்கலாம். சாம்சங் நிறுவனம் வழக்கமாக தனது கேலக்ஸி நோட் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை ஒவ்வொரு ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.



    புதிய சாம்சங் கேமரா சென்சார் குறைந்த வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இவ்வாறு வழங்க டெட்ராசெல் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுகிறது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒரே புகைப்படமாக வழங்கும்.

    சாம்சங்கின் 48 எம்.பி. கேமராவும் 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இந்த கேமரா சென்சார் 64 எம்.பி. தரத்திலும் புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. சாம்சங் புதிய 64 எம்.பி. ISOCELL சென்சார் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். வசதி கொண்டிருக்கிறது. இது அதிகபட்சம் 100 டெசிபல் திறன் கொணிடிருப்பதால் நிறங்களை மிக நுட்பமாக பிரதிபலிக்கும்.

    புதிய சென்சார் உற்பத்தி பணிகள் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்கும் என்றும் இது ஸ்மார்ட்போன்களிலும் அதே காலக்கட்டத்தில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் மிகமுக்கிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. #Realme



    ரியல்மி பிராண்டு தனது புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை டீசர் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் ரியல்மி X ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில் சோனி IMX586 48 எம்.பி. சென்சார், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் 91.6 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என ரியல்மி டீசரில் வெளிப்படுத்தியது. தற்சமயம் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.



    ரியல்மி X ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்குவது மட்டுமின்றி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மே 15 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும் தெரிகிறது. ரியல்மி X ஸ்மார்ட்போனுடன் ரியல்மி X லைட் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ரியல்மி X லைட் ஸ்மார்ட்போன் ரியல்மி 3 ப்ரோ மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட மாடலாகவும் இருக்கலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி X ஸ்மார்ட்போனில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, கிரேடியண்ட் பேக் பேனல் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதேபோன்று ரியல்மி X லைட் ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு பை சார்ந்த கலர் ஓ.எஸ். 6.0, 48 எம்.பி. மற்றும் 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் XR கேமரா அம்சங்கள் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. #Apple



    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் புதிய ஐபோன்களில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் இத்துடன் சிறிய ஐபோன் மாடல் பற்றிய விவரங்களும் வெளியாகின. 

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் 2019 ஐபோன் XR மாடலில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் XR மாடலின் பின்புறம் பெரிய சதுரத்தினுள் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. 

    இந்த ஸ்மார்ட்போன் 150.9 x 76.1 x 7.8 எம்.எம். அளவு கொண்டிருக்கும் என்றும் இதன் கேமரா பம்ப் 8.5 எம்.எம். அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஐபோன்களின் நாட்ச் அளவில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோனும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போன்ற நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது. 



    புதிய ஐபோன் XR மாடலில் ஆப்பிள் ஏ13 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டு, முன்புறம் டெப்த் கேமரா சிஸ்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர 2019 ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் மூன்று பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    2019 ஐபோன்களில் முன்புறம் 12 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன்களில் 7 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: @OnLeaks @Pricebaba
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Nokia



    நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    அறிமுகமானது முதல் நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய விலை நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.

    நோக்கியா 6.1 பிளஸ் 4 ஜி.பி. ரேம் வேரியண்ட் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் 3 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.1,750 குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. விலை குறைப்பை பெற வாடிக்கையாளர்கள் DEAL1750 குறியீடை பயன்படுத்த வேண்டும்.



    விலை குறைப்பு மட்டுமின்றி ஏர்டெல் பயனர்களுக்கு கூடுதலாக ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதற்கு பயனர்கள் ரூ.199, ரூ.249 அல்லது ரூ.448 சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இந்த சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் போது 240 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

    விலைகுறைப்பின் படி நோக்கியா 5.1 பிளஸ் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.8,849-க்கும், நோக்கியா 6.1 பிளஸ் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.13,749-க்கும் கிடைக்கிறது. இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் புதிய விலை நோக்கியா வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் பிரத்யேக குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
    ×