search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94462"

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. #Xiaomi



    சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் சியோமி புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டிருந்தார். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில், சியோமி மற்றொரு புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டிருக்கிறது. இந்த டீசரின் படி புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பது பற்றிய விவரம் இடம்பெற்றிருக்கிறது. 



    முன்னதாக வெளியான தகவல்களில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.



    சியோமியின் மனு குமார் ஜெயின் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் ஆகியோர் ப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரியை சந்தித்ததை மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் விரைவில் சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றை அறிவிக்க இருப்பதாகவும் இதில் வெற்றி பெறுவோர் Mi 9 ஸ்மார்ட்போனை வென்றிட முடியும் என சியோமி தெரிவித்துள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டது. #Google



    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களிலும் முறையே 5.5 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்தடன் இவை ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், டைட்டன் எம் செக்யூரிட்டி சிப், 12.2. எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS), டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு கேமராக்களிலும் ஏ.ஐ. சார்ந்த கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    கூகுளின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், பிக்சலின் டூ-டோன் வடிவமைப்பு, பாலிகார்பனைட் பாடி, ஆக்டிவ் எட்ஜ் ஸ்குவீஸ் ரெஸ்பான்ஸ், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கின்றன. 

    இத்துடன் இவை முறையே 3000 எம்.ஏ.ஹெச். மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளன.



    கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL சிறப்பம்சங்கள்:

    - பிக்சல் 3ஏ: 5.6 இன்ச் 1080x2220 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 441 PPI, HDR
    - டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு
    - பிக்சல் 3ஏ XL: 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே, 400 PPI, HDR
    - டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 615 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm, ƒ/1.8,  76° FOV, OIS, EIS
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84° FOV,  1.12μm
    - கைரேகை சென்சார்
    - ஆக்டிவ் எட்ஜ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 LE
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 என்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று (மே 8) காலை 10.00 மணிக்கு துவங்கி இவற்றின் விற்பனை மே 15 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. 

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இசிம் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஸ்மார்ட்போன்களுடன் மூன்று மாதங்களுக்கான யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக கேமராவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Redmi



    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டிருக்கிறது. இதில் பாப்-அப் ரக முன்புற கேமரா மற்றும் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.

    முன்னதாக ரெட்மி தலைவர் லு வெய்பிங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இதில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இடம்பெறும் என தெரிவித்திருந்தார். இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அதிவேக செயல்திறன், நீண்ட பேட்டரி பேக்கப், சிறப்பான கேமரா உள்ளிட்டவை இருக்கும் என தெரிகிறது.



    இத்துடன் 6.39 இன்ச் FHD பிளஸ் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுகிறது.

    முன்னதாக சியோமி இந்தியா துணை தலைவர் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே வெளியான விவரங்களில் சியோமி நிறுவனம் பாப்-அப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்பட்டிருந்தது.

    ரெட்மியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீனாவில் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 48 எம்.பி. கேமராவுடன் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Realme



    ஒப்போவின் ரியல்மி பிராண்டு இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களும் TENAA வலைதளத்தில் RMX1851 மற்றும் RMX1901 மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று ரியல்மி 3 ப்ரோ என அழைக்கப்படலாம். பெயருக்கு ஏற்றார்போல் இது ரியல்மியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம். இதே பிராசஸர் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ், சியோமி Mi 9 மற்றும் இதர டாப் எண்ட் ஸ்மார்ட்பன்களில் வழங்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, மற்றும் இரண்டாவது பிரைமரி கேமரா ஒன்றும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த ஸ்மார்ட்போன் 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மியின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மற்ற நாடுகளில் வெளியிடுவது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவில் ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விலை RMB 2999 (இந்திய மதிப்பில் ரூ.31,100) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி 3 ப்ரோ மாடலில் 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், அட்ரினோ 616 GPU கிராஃபிக்ஸ், கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை) இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ வசதி மற்றும் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″ வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: TENAA
    ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஒரு பிரிவை கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் சிப் வியாபாரத்தை கைப்பற்ற திட்டமிட்டதாகவும், இதுபற்றி இரு நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்மூலம் ஐபோன்களுக்கான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆப்பிள் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் இருநிறுவனங்களிடையே கடந்த ஆண்டு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தற்சமயம் இது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக சிப்செட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. இன்டெல் தொழில்நுட்பத்தை கைப்பற்றுவதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இதனை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் என நினைத்திருந்தது. தற்சமயம் இன்டெல் நிறுவனம் வியாபாரத்தை விற்பனை செய்வதற்கு மாற்றாக புதிய வழிகளை கண்டறிந்து இருப்பதாக கூறப்படுகிறது.



    குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே சமீபத்தில் கையெழுத்தாகி இருக்கும் சுவாரஸ்ய சமாதான ஒப்பந்தம் காரணமாக இன்டெல் நிறுவனம் மொபைல் 5ஜி போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. இரு நிறுவனங்களின் அறிவிப்பு காரணமாக இந்த தொழில்நுட்பத்தை விநியோகம் செய்து லாபம் ஈட்டுவது தற்சமயம் சரியாக இருக்காது என இன்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார். 

    ஏப்ரல் 16 ஆம் தேதி இன்டெல் நிறுவனம் 5ஜி மொபைல் மோடெம் தொழில்நுட்ப வியாபாரத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. முன்னதாக குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே கையெழுத்தான ஒப்பந்தம் பற்றிய செய்தி வெளியானது. 

    இதுதவிர இன்டெல் நிறுவனம் ஐபோன்களுக்கென சிப்செட்களை உருவாக்கி வந்தது. இன்டெல் சிப்செட் கொண்ட ஐபோன்கள் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #GalaxyS10



    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி புதிய ஸ்மார்ட்போன்களை ரூ.46,900 முதல் வாங்க முடியும். அந்த வகையில் பயனர்களுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

    சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.9,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மற்ற வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 கேஷ்பேக் பெறலாம். அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.9000 வரை கேஷ்பேக் பெறலாம்.



    கேலக்ஸி எஸ்10 (128 ஜி.பி.) வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 கேஷ்பேக்கும், மற்ற கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 வரை கேஷ்பேக் பெற முடியும். இதேபோன்று 512 ஜி.பி. மாடல் வாங்கும் போது ரூ.8,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. வேரியண்ட்களை வாங்கும் போது ரூ.9000 அப்கிரேடு போனஸ் மற்றும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்து்ம போது ரூ.6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இச்சலுகையின்றி கேல்கஸி எஸ்10 பிளஸ் 1000 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.1,17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கேலக்ஸி எஸ்10 (512 ஜி.பி.) மாடல் ரூ.84,900 என்றும் 128 ஜி.பி. மாடல் விலை ரூ.66,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10இ 128 ஜி.பி. மாடல் விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவை சேர்ந்த பிராண்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Smartphone



    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன பிராண்டுகளின் ஆதிக்கம் 2019 ஆண்டின் முதல் காலாண்டில் மிக வேகமாக அதிகரித்து இருக்கிறது. 2019 முதல் காலாண்டு காலத்தில் மட்டும் சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் இந்திய சந்தையில் சுமார் 66 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.

    இதில் சியோமி பிராண்டு முன்னணி இடம் பிடித்துள்ளது. கவுண்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் இந்திய சந்தையில் சீன பிராண்டுகள் 20 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு விவோ, ரியல்மி மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.

    விவோ நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 119 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்போ 28 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை பெற்றிருக்கிறது. இந்திய சந்தையில் சியோமி பிராண்டு 29 சதவகித பங்குகளுடன் முதலிடத்திலும் சாம்சங் பிராண்டு 23 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.



    தொடர் வியாபாரம் செய்ய சர்வதேச அளவில் மட்டுமின்றி சீன நிறுவனங்களுக்கு இந்தியா மிகச்சிறந்த சந்தையாக விளங்குகிறது. இந்தியாவில் டேட்டா பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மற்ற பகுதிகளை விட பயனர் மிக வேகமாக தங்களது சாதனங்களை அப்கிரேடு செய்கின்றனர்.

    இந்திய சந்தையில் ரெட்மி 6ஏ அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 6 ப்ரோ, ரெட்மி வை2, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி ஏ50 உள்ளிட்டவை அடுத்தடுத்து அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன.

    இந்தியாவில் விற்பனையாகும் மொத்த ஸ்மார்ட்போன்களில் டாப் 10 மாடல்கள் மட்டும் சுமார் 32 சதவிகிதமாக இருக்கின்றன. இந்தியாவில் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான ஸ்மார்ட்போன்களின் விற்பனை 240 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்டிருக்கும். #Xiaomi



    சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் குவால்காம் இந்தியா தலைவர் ராஜன் வகேடியாவை தான் சந்தித்து பேசியதாக தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். இச்சந்திப்பில் சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர் வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    அந்த வகையில் குவால்காம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை.



    எனினும், கடந்த வாரம் வெளியான விவரங்களில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் பாப்-அப் கேமரா மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் புதிய மாடலில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம்.

    புதிய சியோமி ஸ்மார்ட்போன் Mi 9எஸ்.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் சீனாவில் இது Mi 9X என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Realme



    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை ரியல்மி பிராண்டு கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    அறிமுகத்தின் போது ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ரியல்மி 3 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை)
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4045 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் கிரே, நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படம் லீக் ஆகியுள்ளது. #Google



    கூகுள் நிறுவனத்தின் பிகசல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. இவற்றில் ஸ்மார்ட்போனின் ரென்டர்களிலேயே இதன் தோற்றம் பற்றிய விவரங்கள் வெளியாகின. 

    இதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி அறிமுகமாகலாம் என்ற வாக்கில் புதிய டீசர்களை வெளியிட்டது. இந்நிலையில், பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் பர்ப்பிள் நிற வேரியண்ட் அதிகாரப்பூர்வ ரென்டர் புகைப்படங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

    ட்விட்டரில் வெளியாகியிருக்கும் புதிய புகைப்படஙகளில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் பர்ப்பிள் மற்றும் வெள்ளை நிறம் கொண்டிருக்கிறது. பின்புறம் கீழ்பக்கம் ஜி லோகோ போனின் மற்ற பகுதிகளை விட அதிக தெளிவாக காட்சியளிக்கிறது. இதன் கீழ் இருக்கும் பகுதிகளில் மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளது.



    வழக்கமாக கூகுள் தனது ஸ்மார்ட்போன்களுக்கு நாட் பின்க் மற்றும் கின்டா புளு என வித்தியாச நிறங்களின் பெயர்களை சூட்டி வருகிறது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களின் பெயர்களும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியான தகவல்களில் ஒரு வேரியண்ட் ஐரிஸ் என அழைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

    இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் இதில் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என தெரிகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்த நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்கள் நோக்கியா இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களும் வலைதளத்தில் இடம்பெற்றிருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் நோக்கியா 3.2 ஜெர்மனியில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இடம்பெறாத நிலையில், இன்னும் சில தினங்களில் ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கலாம் என தெரிகிறது.



    நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm
    - பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - மைக்ரோ யு.எஸ்.பி. 
    - ஃபேஸ் அன்லாக்
    - கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)

    சர்வதேச சந்தையில் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 139 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,873) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


     
    நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:

    - 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, F2.2/1.75µm பிக்சல் 2 பேஸ் டிடெக்‌ஷன் மற்றும் பிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0/1.12µm பிக்சல்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

    சர்வதேச சந்தையில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) முதல் துவங்குகிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய வை17 ஸ்மார்ட்போன் மூன்று ஏ.ஐ. கேமரா சென்சார்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. #Vivo



    விவோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய விவோ வை17 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P35 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது.

    புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் பேக் கொண்டிருக்கும் விவோ வி17 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வை17 சிறப்பம்சங்கள்:

    - 6.35 இன்ச் 1544x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.3:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P35 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ வை17 ஸ்மார்ட்போன் மினரல் புளு மற்றும் மிஸ்டிக் பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×