search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94462"

    ஆப்பிள் நிறுவனம் 4.7 இன்ச் அளவில் புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhone



    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 2017 இல் அறிமுகம் செய்தது. சமீபத்தில் ஐபோன் 7 உற்பத்தி இந்தியாவின் பெங்களூருவில் அமைந்திருக்கும் விஸ்ட்ரன் ஆலையில் துவங்கியது. விரைவில் ஐபோன் X மாடல் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில், ஆப்பிள் ஐபோன் 8 மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தாய்வானில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் 8 மாடலில் 4.7 இன்ச் LCD டிஸ்ப்ளே, ஏ13 சிப்செட், PCB வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புகைப்படம் எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா, 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது. தற்சமயம் ஐபோன் 8 (64 ஜி.பி.) விலை இந்தியாவில் ரூ.41,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ஐபோனின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களின் எண்ணிக்கை விரைவில் இரண்டு கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 8 மாடல் மார்ச் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #HONOR



    ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் ஹானர் 20 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 

    புதிய ஹானர் 20i ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை EMUI 9.0, 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 20i சிறப்பம்சங்கள்:

    - 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
    - ARM மாலி-G51 MP4 GPU
    - 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 20i ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் புளு, கிரேடியன்ட் ரெட் மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.16,580) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.22,807) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #GalaxyA70



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3D கிளாஸ்டிக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி ஏ70 சிறப்பம்சங்கள்

    - 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20: 9 இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 32 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் வைட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.28,990 என நிரணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு சாம்சங் யு ஃபிளெக்ஸ் ப்ளூடூத் ஹெட்செட்டை ரூ.999 விலையில் வாங்கிட முடியும்.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #OPPO



    ஒப்போ நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒப்போ எஃப்11 ப்ரோவினை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் எடிஷனை ஏப்ரல் 24 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    இந்நிலையில், ஒப்போ புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஒப்போ ஏ5எஸ் என அழைக்கப்படும் இந்த மாடலில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1520x720 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 ஆக்டா-கோர் சிப்செட், IMG GE8320 GPU, 2 ஜி.பி. / 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. மெமரியை பொருத்தவரை 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, f/2.2 + f/2.4, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓ.எஸ். 8.1 மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. 



    ஒப்போ ஏ5எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
    - IMG PowerVR GE8320 GPU
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 8.1
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஒப்போ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.10,000-க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நாற்பது நாட்களில் சுமார் 20 லட்சம் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. #Samsung



    சாம்சங் நிறுவனம் மார்ச் 1 ஆம் தேதி முதல் இதுவரை மட்டும் சுமார் 20 லட்சம் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் சுமார் ரூ.3,482 கோடிகளை வருவாயாக ஈட்டியிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் இருந்து ரூ.27,700 கோடிகளை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.12,490 விலையில் அறிமுகம் செய்தது. இது சாம்சங் நிறுவனத்தின் நான்காவது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருந்தது. 

    மார்ச் மாதத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ10 ரூ.8,490 விலையிலும், கேலக்ஸி ஏ30 ரூ.16,990 விலையிலும், கேலக்ஸி ஏ50 ரூ.19,990 மற்றும் ரூ.22,990 விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மார்ச் 1 ஆம் தேதி துவங்கி சரியாக 40 நாட்களில் மொத்தம் 20 லட்சம் கேலக்ஸி ஏ மாடல்கள் - கேலக்ஸி ஏ50, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ10 உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது. இவற்றின் மூலம் மொத்தம் ரூ.3,482 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது என சாம்சங் இந்தியா மூத்த துணை தலைவர் ராஞ்சிவ்ஜித் சிங் தெரிவித்தார். 

    கேலக்ஸி ஏ சீரிஸ் மற்ற மாடல்கள் விற்பனைக்கு வரும் போது எங்களது இலக்கை அடைவோம் என அவர் மேலும் தெரிவித்தார். கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ70 மற்றும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.25,000 - ரூ.30,000 என்றும் ரூ.45,000 - ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என சிங் தெரிவித்தார்.
    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் அந்நிறுவன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #Google



    கூகுள் ஸ்டோர் வலைதளத்தில் அந்நிறுவனம் பதிவிட்டிருக்கும் டீசரில் மே 7 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதே நாளில் அந்நிறுவனத்தின் I/O 2019 நிகழ்வும் துவங்குகிறது.

    கடந்த சில வாரங்களாக கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி பிக்சல் 3ஏ, பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போன்களை இந்நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் சமீபத்தில் கூகுள் வலைதளத்திலேயே லீக் ஆனது. புதிய ஸ்மார்ட்போன்கள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL மாடல்களின் குறைந்த விலை சாதனங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புதிய ஸ்மார்ட்போன்களில் ஒரே மாதிரியான கேமரா அம்சங்கள் மற்றும் செயல்திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.



    இவைதவிர ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ரெசல்யூஷன், மிட்-ரேன்ஜ் பிராசஸர் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படலாம் என தெரிகிறது. இவற்றுடன் ஸ்டோர் பக்கத்தில் அவெஞ்சர்ஸ் என்ட் கேம் திரைப்படத்தை சுட்டிக்காட்டும் “help is on the way” எனும் வாசகம் இடம்பெற்றிருக்கிறது. 

    இதனால் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்யேகமாக வார் மெஷின், தார், பிளாக் விடோ, ராகெட், கேப்டன் மார்வெல் உள்ளிட்டவற்றின் ஏ.ஆர். எமோஜி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் பிக்சல் போன்களில் ஐயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், நெபுளா, ஒகேய் உள்ளிட்டவற்றின் எமோஜிக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    சமீபத்தில் வெளியான தகவல்களில் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதன்படி பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் 1080x2160 பிக்சல், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ரா்யடு 9 பை இயங்குதளம் வழங்கப்படலாம். பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது. 
    சியோமி நிறுவனத்தின் 32 எம்.பி. கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய ரெட்மி வை3 ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.



    அறிமுக தேதியுடன் ஸ்மார்ட்போனின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் டாட் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்னதாக சியோமி அறிமுகம் செய்த ரெட்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதே போன்ற டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்தது.



    இந்தியாவில் ரெட்மி  வை3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்படுகிறது. 



    இதுதவிர புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் P2i நானோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், இரண்டு நாட்கள் பேக்கப் வழங்கும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Samsung



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் qHD ஸ்கிரீன், எக்சைனோஸ் 7870 சிப்செட், 1 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை கோ எடிஷன் இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. 



    சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
    - மாலி T830 GPU
    - 1 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மாப்ட்போன் விலை ரூ.5,290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒப்போ நிறுவனத்தின் எஃப்11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #OPPO



    ஒப்போ நிறுவனம் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்சமயம் ஒப்போ தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 24 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் புளு மற்றும் ரெட் நிற அவெஞ்சர்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது. இதில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்டான்டர்டு எடிஷனில் 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அவெஞ்ர்ஸ் லோகோ தவிர புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    அந்த வகையில் ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் பானாரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா நைட் மோட், டேசிள் கலர் மோட் மற்றும் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. என்ஜின், அல்ட்ரா-க்ளியர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 3D கிரேடியன்ட் பேக், தண்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹச். பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.
    எல்.ஜி. நிறுவனம் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. #LG



    ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிடாத நிறுவனங்களில் எல்.ஜி.யும் ஒன்றாக இருக்கிறது. எனினும், இந்நிறுவனம் பத்து காப்புரிமைகளை பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி எல்.ஜி. மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு பதில் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களும் அடங்கும்.

    காப்புரிமைகளில் தி ரோல், பை-ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், ரோல் கேன்வாஸ் மற்றும் இ-ரோல் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதிகப்படியான காப்புரிமைகளில் ரோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவிர மற்ற விண்ணப்பங்களில் சிக்னேச்சர் ஆர், ஆர் ஸ்கிரீன், ஆர் கேன்வாஸ், ரோடோலோ போன்ற பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.



    காப்புரிமை விவரங்களை கொண்டு இந்த சாதனங்கள் உடனே வெளியாகும் என கூறிவிட முடியாது. எனினும், இந்த சாதனங்கள் ஆய்வு அல்லது உருவாக்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான மற்றொரு காப்புரிமை விவரங்களில் எல்.ஜி. ஸ்மார்ட்போன் சுருங்கக்கூடிய தன்மை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    எல்.ஜி. பதிவு செய்திருந்த மற்றொரு காப்புரிமையில், வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காப்புரிமை கொரிய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு அக்டோபர் 23, 2018இல் காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 

    புகைப்படம் நன்றி: LetsGoDigital
    ஹூவாயின் ஹானர் பிராண்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #HONOR8APro



    ஹூவாயின் ஹானர் பிராண்டு ரஷ்யாவில் புதிய ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஹானர் பிளே 8ஏ என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, 87 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஹானர் 8ஏ ப்போ ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும், டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 8ஏ ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
    - 680 MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 217 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,055) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #OnePlus



    இந்தியாவில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 7 இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுவது உறுதியாகி இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது. 

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்த நிலையில், ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் முற்றிலும் பெசல் இல்லாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. இது ஸ்மார்ட்போனிற்கு பிரீமியம் ஃபிளாக்‌ஷிப் தோற்றத்தை வழங்குகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகப்பெரிய டிஸ்ப்ளேவாகும். இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 4 ஜி எல்.டி.இ., வோல்ட்இ வசதி, ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். இயங்குதளம் வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று பிரைமரி கேமரா கொண்டு அறிமுகமாகும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 7 ப்ரோ இருக்கும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ×