search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை"

    கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். மேலும் 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.

    தொடர்ந்து, சன்னிதானத்தில் புதிய மேல்சாந்திகளாக பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சம்பு நம்பூதிரி பதவி ஏற்றுக்கொண்டனர்.

    பின்னர் நேற்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு அரிவராசனம்பாடி நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். இன்று முதல் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமை ஏற்று நடத்துவார்.

    தினசரி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்சபூஜைக்கு பின்பு 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

    கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    இன்று திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மேலும் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து கொல்லம் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு கேரள அரசு விடுமுறை அளித்து உள்ளது.

    நேற்று பெய்த கன மழையால் இடுக்கி, பம்பா அணைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரியாறு, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகள், வீடுகள் மூழ்கும் தருவாயில் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மந்திரிகள், மாவட்ட காலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின்னர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தற்போதுள்ள நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) வரை முன்பதிவு செய்த பக்தர்களுக்கு வேறு தேதியில் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். தற்காலிக அவசர முன்பதிவு தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 10-ந் தேதி முதல் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் இல்லை. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சபரிமலைக்கு செல்ல தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பம்பையில் புனித நீராடலாம் எனவும் சன்னிதானத்தில் தங்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதி நடக்கிறது.

    இதற்காக சபரிமலை கோவில் நடை நாளை மறுநாள் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று மாலை புதிய மேல் சாந்திகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் (16-ந் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கும்.

    கடந்த ஆண்டு கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    அதன்படி தினமும் 25 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கையை 30 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் தினமும் 30 ஆயிரம் பேர் கோவிலுக்கு செல்லலாம்.

    சபரிமலையில் வருகிற 15-ந் தேதி முதல் 2022 -ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி வரை 5 கட்டங்களாக பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும். குறிப்பாக சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு 7,500 போலீசார் நியமிக்கப்படுவார்கள்.

    இதற்காக பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களுக்கு தனித்தனியாக போலீஸ் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இம்முறை பம்பை ஆற்றில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் காலை முதல் பகல் 12 மணி வரை சாமிக்கு நெய்யபிஷேகம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதே நேரம் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டும் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லிலேயே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 90 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக 15-ந்தேதி மாலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 16-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம்போர்டு அறிவித்து இருந்தது. இப்போது வரை கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்துள்ளது.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள், பயணிக்கும் சாலை, அதற்கான வாகன வசதி பற்றிய தகவல்களையும் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.

    அதன்படி சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதில் சொகுசு மற்றும் விரைவு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதில் குளிர்சாதன வசதி கொண்ட 100 பஸ்களும், குளிர்சாதனவசதி இல்லாத 80 பஸ்களும் அடங்கும். இந்த சிறப்பு பஸ் போக்குவரத்து பம்பையில் இருந்து நாளை (12-ந்தேதி) முதல் இயக்கப்பட உள்ளது.

    இதுமட்டுமல்லாது ஆன்லைன் மூலம் பதிவு செய்தும் பஸ்களில் பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு குழுக்களாக வரும் பக்தர்கள் 40 பேர் வரை ஒன்றாக முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 90 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆவர்.
    இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமிதரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மகரவிளக்கு பூஜை தினத்தில் மட்டும் 30ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
    கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் மிகக்குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு, கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக வந்த மாதாந்திர பூஜை நாட்களிலும் கடைபிடிக்கப்பட்டன.

    அதேவேளையில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. மேலும் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக வருகிற 15-ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் (16-ந்தேதி) அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமிதரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மகரவிளக்கு பூஜை தினத்தில் மட்டும் 30ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சாமி தரிசனத்துக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்தனர்.

    இந்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும் புத்தாண்டு தரிசனத்துக்கான முன்பதிவு நிறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் முன்பதிவு செய்துள்ள நாட்களில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பக்தர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ‘நெகட்டிவ்’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்த விதிகளை பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்தவர்கள் வராமல் இருக்கும் நாட்களில், சபரிமலை சென்று உடனடியாக முன் பதிவு செய்தும் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் உடனடி முன் பதிவுக்கு பாஸ்போர்ட் நகல் மட்டும் கொடுத்தால் போதும். மற்றவர்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் கொடுக்க வேண்டும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போட்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
    இந்த ஆண்டு மண்டல பூஜை நாட்களில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சபரிமலைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    இந்த விழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பிரச்சனை குறைந்து வருவதால் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மண்டல பூஜை நாட்களில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சபரிமலைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றிலிருந்து மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    நேற்று முன்தினம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை ஆட்ட திருநாள் விழா நடந்தது. அன்று மாலை சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் களப அபிஷேகம் கலசாபிஷேகம் ஆகியவை நடந்தன. அன்று இரவு 9 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

    இதற்கிடையே கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் சபரிமலைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதுபோல சபரி மலையிலும் மழையால் சேதம் ஏற்பட்டுள்ளது. மண்டல பூஜை தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் .அதிகாரிகள் சபரிமலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பத்தனம்திட்டா, கொல்லம் ,எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சாலைகளில் மேற்கொள்ளவேண்டிய சீரமைப்பு பணிகள், பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். இது தொடர்பான அறிக்கை வருகிற 7-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
    சித்திரை ஆட்ட சிறப்பு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. சாமி தரிசனத்துக்கு 15 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை ஆட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை ஆட்ட சிறப்பு பூஜை இன்று (புதன்கிழமை) சபரிமலையில் நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு தந்திரி பிரசாதம் வழங்கினார்.

    தொடர்ந்து இன்று சித்திரை ஆட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. அதன்பின்னர் வழிபாடுகளுக்கு பின் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    நடை திறக்கப்படுவதை முன்னிட்டு சாமி தரிசனத்திற்கு முன்பதிவு அடிப்படையில் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால், பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ததற்கான நெகட்டிவ் சான்றிதழ் (72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டது) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 16-ந் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
    சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைக்காக நாளை ஒருநாள் மட்டுமே கோவில் சபரிமலை நடை திறந்திருக்கும். இந்த பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

    இந்த ஆண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பக்தர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    கொரோனா கட்டுப்பாடுகளின் படி தற்போது வரை நடைமுறையில் உள்ள 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை பக்தர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், அவை இல்லாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜை நாளை (3-ந்தேதி) நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை ஒருநாள் மட்டுமே கோவில் நடை திறந்திருக்கும்.

    இந்த பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சாமி தரிசனம் செய்ய 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பூஜைகளுக்கு பிறகு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

    தேர்தல் தோல்வியால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

    கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. ஏனைய 19 தொகுதிகளையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.



    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்சினையே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு தீவிரமாக அமல்படுத்தியது.

    இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தின் வெளிப்பாடுதான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் கேரள சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றியும், சபரிமலை பிரச்சினை குறித்தும் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

    கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் ஒருபோதும் பின்வாங்காது. நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை. அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது அரசின் முடிவல்ல. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த கடமையைதான் கேரள அரசு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால் கோர்ட்டை அவமதித்த வழக்கை சந்திக்க நேரிடும்.

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்வியை சந்தித்ததை சிலர் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இப்போது வேண்டுமானால் சிரிக்கலாம். அந்த சிரிப்பு தற்காலிகமானதே. விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மீண்டு எழும்.

    பெண்களுக்காகவும், மக்களுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பாதுகாப்பாக உள்ளது என்று தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். காணிக்கையாக செலுத்தப்படும் பணம் அவ்வப்போது கணக்கிடப்பட்டு வங்கியில் செலுத்தப்படும். தங்கம், வெள்ளி பொருட்கள் பத்தனம்திட்டை மாவட்டம், ஆரன்முளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 3 கணக்கு தணிக்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த நகைகள் ஆண்டுக்கு ஒரு முறை தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அறையில் பாதுகாக்கப்பட்டு வந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மாயமானதாக தேவஸ்தானத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அந்த அறையில் சோதனை நடத்தினர்.

    அப்போது தங்கம் வெள்ளி உள்பட விலை உயர்ந்த பொருட்களின் கணக்கு விவரங்கள் பல ஆண்டுகளாக முறையாக தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் நேற்று கணக்கு தணிக்கை அதிகாரிகள் மீண்டும் அந்த அறையில் சோதனை நடத்தி தங்கம், வெள்ளி உள்பட பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்து தேவஸ்தானத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்தனர்.

    பத்மகுமார்

    அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து, நேற்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆரன்முளையில் பாதுகாக்கப்பட்டு வரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாகவே உள்ளது. இதில் இருந்து ஒரு கிராம் தங்கம் கூட மாயமாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கடிதம் கிடைக்காததால் சபரிமலைக்கு ரோப் கார் தூண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டப்படி பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு ரோப் கார் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. ரோப் கார் அமைக்கப்பட்டால் கோவிலுக்கு தேவையான பொருட்கள் ரோப்கார் மூலம் வேகமாக கோவிலுக்கு கொண்டு சென்று விடலாம் எனவும் கூறப்பட்டது.

    இதையடுத்து பம்பை-சன்னிதானம் இடையே ரோப் கார் அமைக்க ஏதுவான பாதை ஆய்வு செய்யப்பட்டது.

    ரோப் கார் செல்லும் பாதை கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் சரணாலயம் பகுதி வழியாக அமைக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கான ஆய்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது.

    கேரள வனத்துறை அனுமதி வழங்கி விட்ட நிலையில் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகள் இதுவரை ரோப் கார் அமைப்பதற்கான அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே ரோப் கார் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்ய கொல்கத்தா குழுவினர் கடந்த 11-ந்தேதி கேரளா வந்தனர்.

    சில நாட்கள் தங்கியிருந்த அவர்கள் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கடிதம் கிடைக்காததால் ரோப் கார் தூண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் கொல்கத்தா திரும்பினர்.

    சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்காக 14-ந்தேதி மாலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தினமும் விசே‌ஷ பூஜைகள் நடந்தன. ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டமும் அலைமோதியது.

    கோவிலுக்கு இளம்பெண்கள் வருவார்கள் என்று தகவல் வெளியானதால் மலை பாதையில் இந்து அமைப்பினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை அடைக்கப்படுகிறது. இன்று சகஸ்கரகலசாபிஷேகம், அத்தாள பூஜை நடக்கிறது.

    நாளை இரவு 10.30 மணிக்கு ஐயப்பனுக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது.


    ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல 2 இரண்டு இளம்பெண்கள் மீண்டும் முயற்சி செய்த சம்பவத்தை அறிந்த இந்து அமைப்பினர், பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது திரளான அய்யப்ப பக்தர்கள் குவிவார்கள்.

    இது போல ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சபரி மலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும். தற்போது வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படுகிறது. சில நாட்களே சபரிமலை கோவில் நடை திறந்து இருக்கும் என்பதால் தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. காலம் காலமாக இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலை நடை திறக்கும் போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.

    தற்போது சபரிமலை கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். ஏற்கனவே சபரிமலை சென்று வந்த இளம்பெண்ணான பிந்துவும் சபரிமலைக்கு மீண்டும் செல்வதற்காக போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டார்.

    தற்போது சபரிமலைக்கு பிந்து உள்பட 3 பெண்களும் சென்றால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அது பற்றி அந்த பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட அந்த 3 பெண்களும் அங்கிருந்துச் சென்றனர்.

    இதற்கிடையில் இந்த தகவல் கிடைத்து சபரிமலையில் இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்லாமல் இருக்க மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ×