என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94500
நீங்கள் தேடியது "slug 94500"
சாம்சங் நிறுவனம் 70 நாட்களில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பற்றிய சுவாரஸ்ய தகவலை தெரிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் 70 நாட்களில் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிக கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் 100 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,000 கோடி) மதிப்பிலான வியாபாரம் செய்திருக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் மட்டும் சுமார் 400 கோடி டாலர்கள் இலக்கை எட்ட முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது. கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களில் இருந்து மட்டும் ரூ.28,000 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டிருப்பதாக சாம்சங் பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது.
“தற்சமயம் கேலக்ஸி ஏ சீரிசில் மொத்தம் ஆறு மாடல்களை விற்பனை செய்கிறோம். இவற்றுக்கு நாடு முழுக்க அமோக வரவேற்பு கிடைக்கிறது. கேலக்ஸி ஏ2 கோர் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனையாகிறது. 70 நாட்களில் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறோம்,” என சாம்சங் இந்தியா மூத்த துணை தலைவர் மற்றும் மூத்த விளம்பர அதிகாரி ரஞ்சிவ்ஜித் சிங் தெரிவித்தார்.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தை பிடிக்க சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி மற்றும் சாம்சங் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து கேலக்ஸி ஏ சீரிசில் ஒவ்வொரு மாதமும் புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் வரும் வாரங்களில் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 போன்ற ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இவற்றை தொடர்ந்து சாம்சங் மற்றொரு புதிய கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேலக்ஸி எம்40 என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வழக்கமாக சாம்சங் ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் அறிமுகமாகும் என தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா, 128 ஜி.பி. மெமரி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் இல் சாம்சங் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் அம்சங்கள் புதிய கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என தெரிகிறது.
அந்த வகையில் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் ஹோல்-இன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ.25,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.
சாம்சங் நிறுவனம் 2018 கேலக்ஸி ஏ7 மற்றும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. சத்தமில்லாமல் விலை குறைக்கப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களின் புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.28,990 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ.31,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலும் ரூ.3000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முன்னதாக ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களின் விலை ஏப்ரல் மாதத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனத்தை பின்தள்ளி சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளில் சீன ஸ்மார்ட்போன் நிறுவமான ஒன்பிளஸ் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், 2019 ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதாக கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் விற்பனையே சாம்சங் மீண்டும் முதலிடத்தை பிடிக்க காரணமாக அமைந்தது என கவுன்ட்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மட்டும் சுமார் 90 சதவிகித பங்குகளை பெற்றிருக்கின்றன.
2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனங்கள் 95 சதவிகித பங்குகளை பெற்றிருந்தன. முதலிடத்தை இழந்த நிலையிலும், 2019 முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக ஒன்பிளஸ் 6டி இருக்கிறது. “கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் 6டி மாடல்களின் வெற்றி இந்திய பிரீமியம் சந்தையின் டிரெண்ட் ஆக பார்க்கப்படுகிறது.” என கவுன்ட்டர்பாயின்ட் நிறுவன ஆய்வாளர் கரன் சவுஹான் தெரிவித்தார்.
“கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மூலம் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தில் அவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அம்சங்களை வழங்கினோம். கேலக்ஸி எஸ்10 மாடலின் பல்வேறு முதல்முறை அம்சங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை” என சாம்சங் இந்தியா மொபைல் பிரிவு தலைவர் ஆதித்யா பப்பர் தெரிவித்தார்.
மற்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ஹூவாய் பத்து சதவிகித பங்குகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. ஹூவாயின் மேட் மற்றும் பி சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் சமீபத்தில் களமிறங்கியிருக்கின்றன. இவை இதுவரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் அதிக விலை காரணமாக சரிவை சமாளிக்க தொடர்ந்து போராடி வருகிறது.
சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இது தற்சமயம் கிடைக்கும் சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டதாகும். #Samsung
சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 எம்.பி. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று 0.8 மைக்ரான் பிக்சல்களை பயன்படுத்துகிறது.
பிக்சல் அளவு ஒன்று தான் என்ற வகையில், புதிய 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் அளவில் பெரியதாக இருக்கிறது. இதன் காரணமாக புகைப்படம் எடுக்கும் போது அதிக வெளிச்சத்தை உள்வாங்கும். இதனால் புகைப்படம் வழக்கமான சென்சார்களை விட அதிக தெளிவாக இருக்கும். இந்த சென்சார் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.
அந்த வகையில் புதிய 64 எம்.பி. சென்சார் சாம்சங்கின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் இந்த கேமரா சென்சாரை எதிர்பார்க்கலாம். சாம்சங் நிறுவனம் வழக்கமாக தனது கேலக்ஸி நோட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஒவ்வொரு ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
புதிய சாம்சங் கேமரா சென்சார் குறைந்த வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இவ்வாறு வழங்க டெட்ராசெல் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுகிறது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒரே புகைப்படமாக வழங்கும்.
சாம்சங்கின் 48 எம்.பி. கேமராவும் 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இந்த கேமரா சென்சார் 64 எம்.பி. தரத்திலும் புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. சாம்சங் புதிய 64 எம்.பி. ISOCELL சென்சார் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். வசதி கொண்டிருக்கிறது. இது அதிகபட்சம் 100 டெசிபல் திறன் கொணிடிருப்பதால் நிறங்களை மிக நுட்பமாக பிரதிபலிக்கும்.
புதிய சென்சார் உற்பத்தி பணிகள் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்கும் என்றும் இது ஸ்மார்ட்போன்களிலும் அதே காலக்கட்டத்தில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் புதிய தகவல் வழங்கி இருக்கிறது. #Samsung
சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி புதிய தகவலை வழங்கி இருக்கிறது. முன்னதாக கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டதாக விமர்சகர்கள் தகவல் தெரிவித்த நிலையில், இதன் வெளியீடு அமெரிக்காவில் தள்ளிவைக்கப்பட்டது.
அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி இறுதி முடிவெடுக்கும் கட்டத்தில் சாம்சங் இருப்பதாக அந்நிறுவனம் தற்சமயம் தெரிவித்திருக்கிறது. இதனால் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்டதை விட சீக்கிரமே வெளியாகும் என தெரிகிறது.
“கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் கண்டறியப்பட்டு விட்டது. இதனை சரி செய்வது பற்றி ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியாக அதிக காலம் ஆகாது.” என சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜே. கோ தெரிவித்தார்.
கேலக்ஸி ஃபோல்டு வெளியீடு பற்றி டி.ஜே. கோ சரியான தேதியை இதுவரை அறிவிக்கவில்லை என்றபோதும், அவர் வழங்கியிருக்கும் தகவல் சாம்சங்கின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதை உணர்த்துவதாக அமைந்து இருக்கிறது. சாம்சங் தனது கேல்கஸி ஃபோல்டு வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போது டிஸ்ப்ளே பிரச்சனையை எப்படி சரி செய்தது பற்றி விவரங்களை வழங்கும் என தெரிகிறது.
முன்னதாக கேல்கஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்தவர்களுக்கு வெளியீடு பற்றிய தகவல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என சாம்சங் தெரிவித்திருந்தது. தற்சமயம் டி.ஜே. கோ வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு வெளியீட்டு தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #GalaxyS10
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி புதிய ஸ்மார்ட்போன்களை ரூ.46,900 முதல் வாங்க முடியும். அந்த வகையில் பயனர்களுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.9,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மற்ற வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 கேஷ்பேக் பெறலாம். அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.9000 வரை கேஷ்பேக் பெறலாம்.
கேலக்ஸி எஸ்10 (128 ஜி.பி.) வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 கேஷ்பேக்கும், மற்ற கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 வரை கேஷ்பேக் பெற முடியும். இதேபோன்று 512 ஜி.பி. மாடல் வாங்கும் போது ரூ.8,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. வேரியண்ட்களை வாங்கும் போது ரூ.9000 அப்கிரேடு போனஸ் மற்றும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்து்ம போது ரூ.6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இச்சலுகையின்றி கேல்கஸி எஸ்10 பிளஸ் 1000 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.1,17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்10 (512 ஜி.பி.) மாடல் ரூ.84,900 என்றும் 128 ஜி.பி. மாடல் விலை ரூ.66,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10இ 128 ஜி.பி. மாடல் விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி சாம்சங் முக்கிய முடிவெடுத்திருக்கிறது. #Samsung
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,38,314) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் வரலாற்றில் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு இருக்கிறது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற வகையில் வடிவமைப்பு மற்றும் புதுமையில் பலரையும் கவர்ந்த கேலக்ஸி ஃபோல்டு எளிதில் உடைந்து போன விவகாரம் விமர்சகர்கள் மற்றும் செய்தியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவின் மேல் ஒட்டப்பட்ட மெல்லிய ஸ்கிரீனை நீக்கியதும் டிஸ்ப்ளே உடைந்து செயலிழந்து போனது.
புத்தம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே உடைந்து போனதைத் தொடர்ந்து இன்று ஷாங்காயில் நடைபெற இருந்த கேலக்ஸி ஃபோல்டு வெளியீட்டு நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட இருந்தது.
பல்வேறு விமர்சகர்கள் கேலக்ஸி ஃபோல்டு டிஸ்ப்ளே எளிதில் சேதமடைவதாக தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்களை முழுமையாக புரிந்து கொள்ள உள்புற சோதனை செய்யப்பட வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக கேலக்ஸி ஃபோல்டு வெளியீட்டை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என சாம்சங் தெரிவித்துள்ளது.
கேலக்ஸி ஃபோல்டு புதிய வெளியீட்டு தேதி வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்றும் டிஸ்ப்ளேவின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளவோம் என்றும் சாம்சங் தெரிவித்திருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் வைபை வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. #Samsung
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து முழுமையாக மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் சாம்சங் தனது கேலக்ஸி ஏ70 மற்றும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்களை பாங்காக்கில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் கேலக்ஸி ஏ70 அறிமுகமான நிகழ்வையொட்டி அந்நிறுவனம் இந்தியாவில் 40 நாட்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததாக அறிவித்தது. சாம்சங் ஏற்கனவே கேலக்ஸி ஏ10, கேல்கஸி ஏ20, கேலக்ஸி ஏ20இ, கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ40, கேலக்ஸி ஏ50, கேலக்ஸி ஏ60, கேலக்ஸி ஏ70 மற்றும் கேலக்ஸி ஏ80 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது.
இந்நிலையில், இதே சீரிசில் சாம்சங் மற்றொரு ஸ்மார்ட்போனை இணைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் விலை குறைந்த மாடலை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ10இ என்ற பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கேலக்ஸி ஏ20 மற்றும் கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சாம்சங் SM-A102U என்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போனிற்கு வைபை அலையன்ஸ் சான்று பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ10இ என்ற பெயரில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.
வைபை அலையன்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இதில் டூயல் பேண்ட் வைபை 802.11 a/b/g/n/ac வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் டூயல் பேண்ட் வசதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் வேறு சிப்செட் வழங்கப்படலாம் என தெரிகிறது. கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 7884 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் சிறிய டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7884 சிப்செட், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் புதிதாக இரண்டு கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. #Samsung
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ60 மற்றும் கேலக்ஸி ஏ40எஸ் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. புகைப்படம் எடுக்க 32 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா, கிரேடியன்ட் பேக், பின்புறம் கைரேகை சென்சார், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ60 சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 32 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
- 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது கேமரா, 5 எம்.பி. 123° அல்ட்ரா வைடு லென்ஸ், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ40எஸ் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
- மாலி-G71 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 5 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,685) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,510) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #GalaxyFold
சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு மாடலை இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் துவங்கியது. அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைத் தொடர்ந்து கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போதே அந்நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டி.ஜே. கோ கேலக்ஸி ஃபோல்டு மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தார்.
சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் QXGA பிளஸ் டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 7.3 இன்ச் அளவிலும், மடிக்கக்கப்பட்ட நிலையில், 4.6 இன்ச் அளவில் பயன்படுத்தலாம்.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், மூன்று பிரைமரி கேமராக்கள், இரண்டு செல்ஃபி கேமராக்கள் மற்றும் முன்புற கவர் டிஸ்ப்ளேவில் 10 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:
- 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே
- 4.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 12 ஜி.பி. ரேம்
- 512 ஜி.பி. மெமரி
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், AF, OIS, f/1.5 - f/2.4
- 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9
- 8 எம்.பி. இரண்டாவது டெப்த் கேமரா, f/2.2
- 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2
- AKG டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
- 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)
- 5ஜி சப்6/எம்.எம். வேவ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் சில்வர், காஸ்மோஸ் பிளாக், மார்ஷியன் கிரீன் மற்றும் ஆஸ்ட்ரோ புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,40,760) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி அறிமுகமாகும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #GalaxyA70
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3D கிளாஸ்டிக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ70 சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20: 9 இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
- டூயல் சிம் ஸ்லாட்
- 32 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
- 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் வைட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.28,990 என நிரணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு சாம்சங் யு ஃபிளெக்ஸ் ப்ளூடூத் ஹெட்செட்டை ரூ.999 விலையில் வாங்கிட முடியும்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X