search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94511"

    பப்புவா நியூ கினியா நாட்டின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    மாஸ்கோ:

    பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. டாரன் என்ற மலை பகுதிக்கு தென்மேற்கே 95 கி.மீட்டர் தொலைவில் இதன் அதிர்வுகள் பதிவாகி உள்ளன.

    இந்த நிலநடுக்கம் 25.3 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

    பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் நேற்று முன்தினம் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    சந்திரனில் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    சந்திரன் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கடந்த 1969 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது.

    அவை சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொண்டன. அதில் சந்திரனின் மேற்பரப்பு திராட்சை பழம் போன்று சுருக்கங்கள் நிறைந்து காணப்பட்டது.

    அதை வைத்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் சந்திரன் நாளுக்கு நாள் சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.



    சந்திரனில் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. மேலும் சந்திரனின் உட்பரப்பில் வெப்பமும், குளிரும் மாறி மாறி நிலவுகிறது. இதன் காரணமாக சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது என விஞ்ஞானி தாமஸ் வாட்டர்ஸ் கூறினார்.
    பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் இன்று மாலை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கான்பெர்ரா:

    அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர், பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன.

    இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டின் கோக்கோப்போ என்ற நகரின் வடகிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சாலமன் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலும், நேபாளத்திலும் இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது. #Earthquake
    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சியாங்குக்கு மேற்கு பகுதியில் உணரப்பட்ட ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திப்ருகார்க் மாவட்டத்திற்கு வடமேற்கில் 114 கி.மீ தூரத்தில் திபெத் எல்லைக்கு அருகே 40 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதுகுறித்த சேதங்கள் பற்றிய முதற்கட்ட தகவல் ஏதும் இல்லை. இந்த நிலநடுக்கம் திபெத்திலும் உணரப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.



    அதேபோல் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இன்று காலை 6.14 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டது.

    தொடர்ந்து நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள நவுபிஸில் காலை 6.29, 6.40 மணிக்கு அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 4.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். #Earthquake #ArunachalPradesh #Nepal

    பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் நேற்று மாலை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. #Philippinequake
    மணிலா:

    புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகள் போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள் அட்டைப்பெட்டிகளைப் போல் சரிந்து விழுந்தன.

    லுஸான் தீவின் போராக் நகரில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 20-க்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மூன்று பிரேதங்களும் வெளியே எடுக்கப்பட்டன. இதேபோல், லுபாவ் நகரில் இடிந்து விழுந்த மற்றொரு கட்டிடத்தில் இருந்து ஒரு குழந்தை உள்பட இருவரின் பிரேதங்கள் மீட்கப்பட்டதாக பம்பாங்கா மாகாண கவர்னர் லிலியா பினேடா நேற்று மாலை தெரிவித்தார்.

    நிலநடுக்கத்தின் எதிரொலியாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் ஜெனரேட்டர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக்குழுவின் இயக்குனர் ரிக்கார்டோ சாலட் தெரிவித்துள்ளார். மேலும் நிலநடுக்கம் சார்ந்த விபத்துகளில் 81 பேர் காயமடைந்ததாகவும், காணாமல்போன 14 பேரை இடிபாடுகளுக்கு இடையில் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். #Philippinequake #Philippinequaketoll 
    பிலிப்பைன்சில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துடுபிகான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. அங்கு 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது. #PhilippinesEarthquake
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பத்பன்கா மாகாணத்தில் பல நகரங்கள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

    இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தில் போரக், லுபாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இங்கு அடுக்குமாடி வீடுகள், காங்கிரீட் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    போரக் நகரில் 4 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி தவித்த பலர் மீட்கப்பட்டனர்.

    இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

    நிலநடுக்கம் 6.1 ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துடுபிகான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. அங்கு 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் வெளியாகவில்லை. #PhilippinesEarthquake
    இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக கடல் பகுதியில் ஏற்பட்ட அதிர்வினால் மக்கள் பீதியில் உறைந்தனர். #Indonesianisland #Sulawesi
    ஜகர்தா:

    புவியியல் அமைப்பின்படி ஆபத்தான  நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகி வருகின்றன.

    அவ்வகையில், இங்குள்ள சுலவேசி தீவில் (உள்ளூர் நேரப்படி) இன்றிரவு 7.40 மணியளவில்  6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக கடல் பகுதியில் ஏற்பட்ட அதிர்வினால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

    பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Indonesianisland #Sulawesi
    அந்தமான் தீவு பகுதிகளில் இன்று 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. #Earthquake #AndamanIslands
    போர்ட்பிளேர்:

    அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தாக்கம் அருகில் உள்ள தீவுகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.



    மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடைசியாக ஏப்ரல் 1-ம் தேதி 4.7 ரிக்டர் முதல் 5.2 ரிக்டர் வரையில் 9 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    இந்தோனேசியா நாட்டில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. #Indonesiaquake
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இன்று அதிகாலை 4.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

    இதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. #Indonesiaquake
    ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து வெளியேறினர். #Earthquake
    நியூபிரிட்டன்:

    ஆஸ்திரேலியா அருகே பசிபிக்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூகினியா, நேற்று அங்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள நியூபிரிட்டன் தீவு அதிரடியாக குலுங்கியது.

    இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து வெளியேறினர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

    அங்கு 6.1 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. கான்டீரியன் கிழக்கே 186 கி.மீ தொலைவில் நியூபிரிட்டன் தீவை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம், உயிரிழப்பு மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    பப்புவா நியூகினியா பசிபிக் பிராந்தியத்தில் நிலநடுக்க அபாய பகுதியில் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. #Earthquake
    ரஷியாவின் கிழக்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் வெளியாகவில்லை. #Earthquake #KamchatkaPeninsula
    மாஸ்கோ:

    ரஷியா நாட்டின் எல்லைக்குட்பட்ட தொலைதூர கிழக்கு பகுதியில் சுமார் 1250 கிலோமீட்டர் நீளமுள்ள காம்சட்கா தீபகற்பம் பகுதி அமைந்துள்ளது.

    பசிபிக் பெருங்கடல் மற்றும் ஒகோட்ஸ்க் கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த தீபகற்பம் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டதாகும். இப்பகுதியில் பூர்வகுடிகள் உள்பட சுமார் 3 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை இங்குள்ள தலைநகரம் பெட்ரோபாவ்கோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவானது.

    இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. #Earthquake #KamchatkaPeninsula 
    ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. #Miyazakiquake
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவுக்குட்பட்ட மியாசாக்கி மாவட்டத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 3.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்துக்கு முன்னதாக இன்று காலை சுமார் 9 மனியளவில் மியாசாக்கி, எஹைம், கோச்சி, குமாமொட்டோ, ஓய்ட்டா உள்ளிட்ட பகுதிகளில் 3 முதல் 4 ரிக்டர் வரையிலான நில அதிர்வுகளும் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Miyazakiquake  
    ×