search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்பன்"

    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி ஐயப்பனை வழிபாடு செய்து வரலாம்.
    இதம் ஆஜ்யம், கமமண்டல
    கால மகரகால பரஹமசியவ்ர
    தேன ஹரிஹர புத்ர தர்ம
    சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

    பொருள்:

    ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.
    கார்த்திகை மாதம் பிறந்தாலே எங்கும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி கோ‌ஷம் கேட்கும். கார்த்திகை முதல் நாளான இன்று அனைத்து கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
    சென்னை :

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

    அவ்வாறு செல்லக்கூடிய பக்தர்கள் கார்த்திகை 1-ந்தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். பின்பு அவர்கள் 41 நாட்கள் அல்லது 60 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்ட இந்த விதி முறைகள் தற்போது வரை நீடித்து வருகிறது.

    கடந்த ஆண்டு தினமும் ஆயிரம், 2 ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தினமும் 30ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு என்ற நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

    மேலும் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை “நெகட்டிவ்” சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கொரோனா கட்டுப்பாடுகளால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், வழக்கமாக கார்த்திகை மாதம் வந்தவுடன் மாலை அணிந்து விரதம் இருந்தே வருகிறார்கள். சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்யமுடியாத பக்தர்கள், தங்களது ஊரின் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் வழக்கம் போல் ஐயப்பனுக்கு மாலை அணிந்து வருகிறார்கள்.

    கார்த்திகை மாதம் இன்று (புதன்கிழமை) பிறந்ததை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், குருசாமிகளிடம் மாலை அணிந்து கொண்டனர்.

    கார்த்திகை மாதம் பிறந்தாலே எங்கும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி கோ‌ஷம் கேட்கும். கார்த்திகை முதல் நாளான இன்று அனைத்து கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    காலையில் இருந்தே பல பக்தர்கள் மாலை அணிந்தபடி இருந்ததால் அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் சரண கோ‌ஷம் கேட்டபடி இருந்தது. பல கோவில்களில் ஐயப்பன் பாடல்கள் ஒலித்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    சென்னை மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில்களில் இன்று பக்தர்கள் திரண்டு சென்று மாலை அணிந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து செல்வது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு 20 லட்சம் பக்தர்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள்

    இந்த ஆண்டு 13 லட்சம் பேர் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் அனைவரும் ஆன்லைனில் முன்பதிவு செய்தே சபரிமலைக்கு செல்ல வேண்டும். முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இந்த ஆண்டு சபரிமலை செல்வதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது.

    அதேநேரத்தில் இன்று மாலை அணிந்து விரதம் இருப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவாகவே காணப்பட்டது. மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் இன்று காலை முதல் சுமார் 3 ஆயிரம் பேர் மாலை அணிந்தனர்.

    பக்தர்களிடம் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா கட்டுப்பாடு ஆகிய காரணங்களால் சபரிமலை செல்வதில் தயக்கம் இருக்கிறது. மேலும் பக்தர்கள் சபரிமலை செல்ல தயக்கம் காட்டுவதில் இன்னொரு காரணமும் இருக்கிறது.

    கொரோனா பரவலுக்கு பிறகு சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்படவில்லை. சபரிமலையில் அதிகாலை 5.30 மணிமுதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் நெய்அபிஷேகம் பிரதானமானது.

    இருமுடி கட்டி நெய் சுமந்து செல்லும் பக்தர்கள் நெய் அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவார்கள். ஒருவேளை 12 மணிக்கு பிறகு பக்தர்கள் சன்னிதானம் செல்ல நேர்ந்தால் அங்கேயே இரவில் தங்கி விட்டு மறுநாள் நெய் அபிஷேகத்தில் பங்கேற்பார்கள்.

    ஆனால் தற்போது சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லாததால் 12 மணிக்கு பிறகு செல்ல நேர்ந்தால் நெய் அபிஷேகத்தில் பங்கேற்க முடியாமல் போய்விடுமோ என்ற தயக்கமும் இருக்கிறது.

    இருந்தாலும் வழக்கம் போல் அவர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். ஒருவேளை சபரிமலை செல்ல அனுமதி கிடைக்காவிட்டாலும் உள்ளூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வரலாம் என்ற எண்ணத்திலும் பலர் மாலை அணிந்து உள்ளனர்.

    வழக்கமாக மகாலிங்கப்புரம் ஐயப்பன் கோவிலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி கட்டி செல்வது வழக்கம். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்பன் கோவில்களில் இருமுடி கட்டி சபரிமலை செல்வார்கள். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சற்றே குறைந்து உள்ளது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் சபரிமலை செல்லும் பக்தர்களின் முன்பதிவும் குறைவாகவே உள்ளது. ஜனவரி 16-ந் தேதி வரை பக்தர்கள் சபரிமலை செல்ல முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் முன்பதிவு காலியாகவே உள்ளது.

    மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும்.
    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 15-ம் தேதி திறக்கப்பட்டுஉள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள். அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில், குமாரகோவில் வேளிமலை சுப்ரமணியசாமி கோவில், பார்வதிபுரம் ஐயப்பன் கோவில், உள்பட பல்வேறு கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறைகடலில் ஐயப்ப பக்தர்கள் நாளை அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து சரணகோ‌ஷம் எழுப்புகிறார்கள்.

    இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக நேற்று முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற்காக படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார்த்திகை மாதம் 30 நாட்களும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் ஐயப்ப சரணகோ‌ஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஐயப்பனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
    த்யானச் லோகம்
    ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
    ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
    ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
    மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
    நீல கௌம வஸம் நவீன் ஜலத
    ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
    பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா ஸகலா
    கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்

    ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். #ParliamentElection #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க மாநில அரசு எடுத்த முடிவால் மாநிலமே போராட்டக்களமானது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலையொட்டி, திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா கூறியதாவது:-

    சபரிமலை என்பது மத வழிபாட்டு தலம். எனவே, கோவில் பெயரிலோ, மசூதி பெயரிலோ யாராவது ஓட்டு கேட்டால், அது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.



    ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். சபரிமலை பிரச்சினையை எந்த அளவுக்கு பிரசாரத்தில் பயன்படுத்தலாம் என்பதை முடிவு செய்வதில் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #Sabarimala
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக நடை நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக நடை நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடை அடைக்கப்பட்டது.

    இன்று முதல், 17-ந்தேதி வரை அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, படிபூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெறும்.

    அதன்பின்பு 17-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். சபரிமலையில் இளம் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்ய இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வம் சாஸ்தா. பூச நட்சத்திரக்காரர்கள் சாஸ்தாவை விரதம் இருந்து வழிபட்டால் சகல யோகங்களும் பெறலாம்.
    பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்தி ஞானம் உடையவர்கள். நல்ல குணம் மிகுந்தவர்கள். எதிலும் நீதி, நியாயம் பார்ப்பவர்கள். வாக்கு தவற மாட்டார்கள். தன்னைப்போல் பிறரும் இருக்கவேண்டும் என விரும்புபவர்கள். தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வார்கள்.

    சிலர் யோசனை முறையில் தீவிர நாட்டம் உடையவராக இருப்பர். பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி. இந்நட்சத்திரத்தின் முழுமையான நாழிகை 52. இந்நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வம் சாஸ்தா. பூச நட்சத்திரக்காரர்கள் சாஸ்தாவை விரதம் இருந்து வழிபட்டால் சகல யோகங்களும் பெறலாம். பூசம் நட்சத்திரக்காரர்கள் சாஸ்தா வழிபாடு நடத்தினால் சகல செல்வங்களையும் பெறலாம். அறிவிற் சிறந்த முன்னோர்கள் நம் தேசத்தின் முக்கியமான சாஸ்திர கருத்துக்களை அழகாக, அய்யப்பப் பூஜை வழிபாட்டு முறையில் வைத்துள்ளார்கள்.

    சபரிமலைக்குச் சென்று செய்யும் அய்யப்பப் பூஜையானது. அனைத்து வழிபாடுகளையும், சாஸ்திர விஷரங்களையும் உள்ள டக்கியதாக இருக்கிறது. பண்டிதர்கள் அறிந்த விசயத்தைப் பாமரரும் அறியும் வண்ணம் அழகாக இந்த பூஜையில் நம் பெரியோர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஓர் அற்புதமான வாழிபாட்டு முறையைக் காண்பது அரிது.

    ஐயப்பன் வழிபாட்டில் பல தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன. மாலை போட்டுக் கொண்டு 48 நாட்களுக்கு விரதம் இருத்தல், நாள் தோறும் வழிபடுதல், உணவு கட்டுப்பாடு முதலிய பல விஷயங்கள் உள்ளன. சபரிமலைக்கு பக்தியோடு கிளம்பிச் செல்லுதல், பார்ப்பவர்களை எல்லாம் சுவாமி என்று அழைத்தல், பெண்களை மாளிகைபுரம் என்று கூறுதல் என நம்முடைய பாவனை மாறுவதை கவனிக்கவேண்டும்.

    அய்யப்பனுக்கு தர்ம சாஸ்தா என்று பெயர். ஐயப்பனின் ஒரு கை வரமளிக்கிறது. மற்றொரு கையில் சின்முதிரை இருக்கிறது. கட்டை விரல் பரமாத்மாவாகிய கடவுளைக் குறிக்கிறது. ஆள் காட்டி விரல் ஜீவாத்மாவாகிய உயிரைக் குறிக்கிறது. ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து விட்டால் நிம்மதி தானாக ஏற்படும்.

    இந்த நிம்மதி உருவாக்கி, நிலைத்து நீடிக்க பூசம் நட்சத்திரக்காரர்கள் தவறாமல் தர்ம சாஸ்தாவான அய்யப்பனை கெட்டியாக பிடித்துக் கொண்டு வழிபட வேண்டும். தர்மத்தை கற்று கொடுப்பவர் தான் அய்யப்பன். மெய்ஞானத் தைக் கற்றுக் கொடுப்பவர் அய்யப்பன். பூச நட்சத்திரக்காரர்கள் ஐயப்பனின் மூல மந்திரமாகிய சுவாமி சரணம் என்பதை ஓதிக்கொண்டே இருங்கள். காரிய தடை நீங்கி சகல யோகங்கள் பெறலாம்.
    மாலை அணியும் சமயத்தில் எவ்வளவு பக்தியும் சுத்தமும் நம்மிடம் இருக்கிறதோ அதே அளவு பக்தியும் சுத்தமும் இருந்தால் மட்டுமே இந்த மந்திரத்தை தினமும் ஜெபிக்கவேண்டும்.
    சபரிமலையில் சாஸ்தாவாக வீற்றிருக்கிறார் ஐயப்பன். அவரை காண பலகோடி பேர் ஐயப்பன். எல்லோராலும் அவரை தரிசிக்கமுடிவதில்லை. காரணம் என்னவென்றால் ஐயப்பன் நம்முடைய பெயரை உச்சரித்து அழைத்தாள் மட்டுமே நம்மால் மலைக்கு செல்லமுடியும் என்று கூறப்படுகிறது. இப்படி பல சிறப்புக்கள் பெற்ற ஐயப்பனின் அருளை பெற ஐயப்ப மாலை அணிந்தோர் விரதம் இருக்கும் 48 நாளும் தினம் தினம் ஜபிக்க வேண்டிய ஐயப்பன் காயத்ரி மந்திரம் இதோ.

    ஐயப்பன் காயத்ரி மந்திரம்:

    ஓம் பூதநாதய வித்மஹே
    பவ நந்தநாய தீமஹி
    தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்

    பொது பொருள்:

    சிவனின் மகனான ஐயப்ப சுவாமியே, என் மனதில் தெளிவை ஏற்படுத்தி எனக்கு நல்லாசி புரிய உங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன். இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக நம் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். நம்மை ஆன்மிக நெறிப்படி இந்த மந்திரம் வழிநடத்தும். பாவங்கள் நம்மை விட்டு நீங்கும், துன்பங்கள் பறந்தோடும். மாலை அணியாத சமயத்திலும் இந்த மந்திரத்தை ஜபிப்பதால் தவறில்லை. ஆனால் மாலை அணியும் சமயத்தில் எவ்வளவு பக்தியும் சுத்தமும் நம்மிடம் இருக்கிறதோ அதே அளவு பக்தியும் சுத்தமும் இருந்தால் மட்டுமே மந்திரத்தை தினமும் ஜெபிக்கவேண்டும்.

    கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் ஜோதி வடிவில் காட்சி தருவார் ஐயப்பன்.









    15-1-2019 அன்று மகர ஜோதி

    திருமால் மோகினியாக அவதாரம் எடுத்தபோது, அவர் மேல் சிவபெருமான் மோகம் கொண்டதால் அவதரித்தவர் ஐயப்பன். ஹரனுக்கும், ஹரிக்கும் பிறந்தவர் என்பதால் ‘ஹரிஹரசுதன்’ என்று அழைக்கப்பட்டார். இவரது அவதார நோக்கம் மகிஷி என்ற அரக்கியின் வதத்திற்காக உருவானதாகும். எனவே பம்பை நதிக்கரையோரத்தில் அந்த குழந்தையை திருமாலும், ஈசனும் விட்டுச் சென்றனர். அப்போது அந்தக் குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றை கட்டி விட்டனர்.

    அந்த நேரத்தில் காட்டுக்கு வேட்டையாட வந்தார், பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியன். மன்னனுக்கு பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாத வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் பம்பா நதிக்கரை பகுதியில் குழந்தை அழுகுரல் கேட்டு அங்கு விரைந்து சென்றான் பந்தள மகாராஜா. அங்கு அழகிய குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்தது கண்டு, அந்த குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார்.

    குழந்தையைப் பார்த்ததும் ராணிக்கு அளவில்லாத சந்தோஷம். கழுத்தில் மணியுடன் கண்டெடுக்கப்பட்டதால் குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். குழந்தைக்கே உரிய குறும்புகளுடனும், அபரிமிதமான அழகுடனும், அறிவார்ந்த கேள்வி ஞானத்துடனும், ஒப்பற்ற அரசகுமாரனாகவும் வளர்ந்து வந்தார் ஐயப்பன்.

    இதற்கிடையில் பந்தளத்து ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்படியிருந்தும் மணிகண்டனின் மீது ராஜசேகர பாண்டியனுக்கு இருந்த பாசம் இம்மியும் குறையவில்லை. தனக்குப் பின் ஐயப்பனுக்கே பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். இது மகாராணிக்கு பிடிக்கவில்லை. தனக்கென்று ஒரு பிள்ளை வந்ததும், இதுவரை இருந்த பிள்ளையை பிடிக்காமல் போய்விட்டது ராணிக்கு. இதனால் அவரது மனது வேறு கணக்கு போட்டது.

    அரசவையின் அமைச்சர்களில் ஒருவருக்கும் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுவதில் விருப்பமில்லை. அந்த அமைச்சர், ராணியிடம் சென்று, ‘மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டால், நீங்கள் பெற்ற பிள்ளைக்கு எதுவும் கிடைக்காமல் போய்விடும்’ என்று தூபம் போட்டார். இதுவரை தனது எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்று எண்ணிக்கொண்டிருந்த ராணிக்கு, அமைச்சரின் வார்த்தைகள் தேனை வார்ப்பது போல் இருந்தது. இருவரும் சேர்ந்து மணிகண்டனை மண்ணுலகை விட்டு அனுப்ப முடிவு செய்தனர். அதற்காக ஒரு நாடகத்தையும் அரங்கேற்றினர்.

    ராணி கடுமையான தலைவலியால் அவதிப்படுவது போல் நடித்தார். தலைவலி தீர அதற்கான மருந்தை புலிப்பாலில் கலந்து கொடுத்தால் தான் குணமாகும் என்று அரண்மனை வைத்தியர்கள் மூலமாக கூறவைத்தார் அமைச்சர். காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டு வருவது என்பது யாரால் முடியும்?. அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றனர்.

    அப்போது, தாயின் தலைவலி தீர தானே காட்டிற்குச் சென்று புலிப்பால் கொண்டுவருவதாக கூறி புறப்பட்டார் மணிகண்டன். மன்னன் ராஜசேகரபாண்டியன் பதறிப்போனார். “வேண்டாம்! புலியின் பாலை கொண்டு வருவது எளிதானதல்ல. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது” என்றார்.

    எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்லாது, அவதாரத்தின் நோக்கம் இறுதி கட்டத்தை எட்டி விட்டதையும் உணர்ந்த மணிகண்டபிரபு, தானே சென்று வருவதாக கூறி காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு தேவர்களை துன்புறுத்தி வந்த மகிஷியை அழுதா நதிக்கரை பகுதியில் சந்தித்தார். இருவருக்கும் கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஐயப்பனின் வில்லுக்கு வீழ்ந்தாள் மகிஷி.

    இறந்த மகிஷி அழகிய பெண்ணாக வடிவெடுத்து ஐயப்பனிடம் வந்தாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினாள். ஆனால், ‘நான் சபரிமலையில் வசிக்க போகிறேன். என்னைத் தேடி ஆண்டுதோறும் பல கோடி பக்தர்கள் வருவார்கள். நாட்டில் சண்டை சச்சரவுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கமே என்னைத்தேடி வரும் பக்தர்களிடம் விதைக்கப்படும். இந்த அவதாரத்தில் நான் பிரம்மசாரியாகவே வாழ்வேன். எனவே நீ என்னருகில் மாளிகைப்புறத்து அம்மனாக வீற்றிருப்பாய்’ என்று கூறி அருளினார்.

    பின்னர் மகிஷியின் துன்பத்தில் இருந்து விடுபட்ட தேவர்கள் தேவேந்திரன் புடைசூழ காட்டிற்கு வந்தனர். அவர்களில் தேவேந்திரன் ஆண் புலியாக மாற, அதில் ஏறி ஐயப்பன் அமர்ந்து கொண்டார். தேவர்கள் அனைவரும் பெண் புலியாக மாறி ஐயப்பனை சூழ்ந்து கொண்டு பந்தளம் நோக்கி படையெடுத்தனர். ஐயப்பன் புலி மீது அமர்ந்து வருவதை பார்த்ததும் அனைவரும் அச்சத்தில் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.

    இதுபற்றி கேள்விபட்டதும் ராஜசேகரபாண்டியன், அமைச்சர், ராணி அனைவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். புலி மீது அமர்ந்திருந்த ஐயனை பார்த்ததும் ராணியும், அமைச்சரும் தங்கள் பிழையை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயப்பன் தனது அவதார நோக்கத்தை அனைவருக்கும் எடுத்துக் கூறி புறப்பட்டார்.

    ஐயப்பனை வணங்கிய ராஜசேகரபாண்டியன், ‘எனது ராஜ்ஜியத்திலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதனை தட்டமுடியாத ஐயப்பன், ‘பரிசுத்தமான சபரிமலையில் நிரந்தரமாக வாசம் செய்வேன். என்னை பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அங்கு வந்து என்னை பார்த்துக் கொள்ளுங்கள். கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு நான் ஆண்டுதோறும் ஜோதி வடிவில் காட்சி தருவேன்’ என்று கூறி மறைந்தார்.

    இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளான, மகர சங்கராந்தி அன்று நடைபெறுகிறது.
    மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று தொடங்கியது.
    சபரிமலையில் உள்ள ஐ யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு திரு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சபரிமலையில் கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை விழா நிறைவடைந்தது. அடுத்து மகர விளக்கு பூஜைக்கான விழா தொடங்கியது.

    வருகிற 14-ந்தேதி மாலையில் மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்று சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள்.

    சபரிமலையில் மகர விளக்கு பூஜை நடக்கும் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு வாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருக்கும். விழாக்காலங்களில் திருவா பரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

    அதன்படி மகர விளக்கு பூஜைக்காக திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று தொடங்கியது. வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது.

    திருவாபரண ஊர்வலத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். இந்த முறை சபரிமலையில் போராட்டங்கள் நடந்ததால் ஊர்வலத்திற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித் துள்ளனர். சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
    சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார் என்று நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபி கூறினார். #Sabarimala #SureshGopi
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபி ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

    பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு மின் கோபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த ஆன்மீக பூமியில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளேன். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

    சபரிமலை வி‌ஷயத்தில் கோர்ட்டு சரியான முடிவை அறிவிக்கவில்லை. வருகிற 22-ந்தேதி மேல்முறையீடு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறிய பிறகே அடுத்து எண்ண செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.

    மாறுவேடம் போட்டு சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது சரிதானா? என்பதற்கு மக்கள் தான் முடிவு சொல்ல வேண்டும், கேரளாவில் கம்யூனிஸ்டு அரசிற்கு ஓட்டு போட்டது தவறாகிவிட்டது என மக்கள் நினைக்கும் நிலை தற்போது உள்ளது. இந்த எண்ணம் நல்ல ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை.

    கம்யூனிஸ்டுகள் உள்ளே புகுந்து சத்தம் போட்டு கடவுளை மதிக்காமல், ஆசாரங்களை மதிக்காமல் செயல்படுகின்றனர்.

    இதுநாள் வரை ஆச்சாரத்துடன் செயல்பட்ட சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார். கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு ஐயப்பன் அதனை திருப்பி கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #SureshGopi

    ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்கள் 4 பேர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சபரிமலைக்கு செல்ல விரும்பும் இளம்பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறியது.

    கேரள அரசின் அறிவிப்பை தொடர்ந்து சபரிமலை சென்ற பெண்கள் பலரும் பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டக்காரர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 கேரள பெண்கள் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.



    கேரள பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பின் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து கேரள அரசுக்கு மனு அனுப்பினர். இதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்கள் 4 பேர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆந்திர பெண்கள் கோட்டயம் வந்துள்ளதாகவும், அங்கிருந்து எரிமேலி வழியாக பம்பை சென்று சன்னிதானம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆந்திராவில் இருந்து ஏற்கனவே பல பெண்கள் சபரிமலை வந்து பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றுள்ளனர். இப்போது மேலும் 4 பெண்கள் சபரிமலை வந்திருப்பதாக வெளியான தகவல் சபரிமலையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SabarimalaTemple

    ×