search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை மன்னிக்க முடியாது என்று திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார். #pchidambaram #congress #admk #bjp

    திருப்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருப்பூர் ராயபுரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கட்சிகளுக்கு கொள்கை அளவில் பல்வேறு ஒற்றுமைகள் உண்டு. ஜாதி, மத, மொழி இன வேறுபாடு இல்லாமல் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே இரு கட்சிகளின் கொள்கை. தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.

    ஆனால் அ.தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றசாட்டுகளை கவர்னரிடம் கூறிய பா.ம.க. இன்று அதே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அப்படியென்றால் அது ஊழல் கூட்டணி தான் என்று சொல்ல வேண்டும்.

    அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூட்டணி அமைத்ததை கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தமிழகத்தில் மதவாதம் காலூன்ற எப்போதும் பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பா.ஜனதா தமிழகத்தில் காலூன்றவும் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மோடிக்கு முதல்முறை வாக்களித்தவர்கள் நாடு முழுவதும் வெகுண்டெழுந்து உள்ளனர்.

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பா.ஜனதா அரசு சொல்லி வாக்கு கேட்டது. விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்கப்போகிறேன் என்று சொன்ன மோடி இன்று) விவசாய குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் ஓட்டுக்காக லஞ்சம் கொடுக்கப்போகிறார். விவசாய குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரத்தில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கொடுக்கப்போகிறார்.


    இது ஓட்டுக்காக கொடுக்கிற லஞ்சம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்த பணத்தை 12 கோடி இந்திய விவசாயிகளுக்கு கொடுக்கப்போகிறார். ஆனால் இந்த பணம் நிலம் வைத்துள்ள பெரும் விவசாயிகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் கிடைக்கப்போகிறது. விவசாய தொழிலாளர்களுக்கு, நகர்ப்புற ஏழைக்கு கிடைக்கப்போவது இல்லை. ரபேல் போர் விமானம் வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

    இந்த அரசுக்கு அமைச்சர், அமைச்சரவை தேவையில்லை. தனி மனிதர் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்.நேரு, இந்திரா காந்தி, மொராஜ் தேசாய், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் அலங்கரித்த நாற்காலியில் சர்வாதிகாரி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். நாடு சர்வாதிகார நாடாகி வருகிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று அதே இந்திய விவசாயி ஒருவருக்கு கடன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரமாக உள்ளது. அந்த கடனை விவசாயி எப்படி அடைக்க முடியும். அதனால் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கடன் ரத்து என்பது விவசாயியை காப்பாற்றும் வேலை. அதைத்தான் காங்கிரஸ் அரசு செய்து வருகிறது.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. உணவு பாதுகாப்பு சட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது, பட்டினியை ஒழித்தது காங்கிரஸ் அரசு.

    இந்தியாவில் இன்னும் வறுமை ஒழியவில்லை. அதை ஒழிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கல்விக்கடன் கொடுத்தது காங்கிரஸ் அரசு. 34 கோடி பேருக்கு ‘ஜீரோ பேலன்ஸ்’ வங்கிக்கணக்கு தொடங்கிய அரசு காங்கிரஸ் அரசு. இப்போது வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ‘ஜீரோ பேலன்ஸ்’ முறை மீண்டும் வரும். பறிமுதல் செய்த பணத்தை திருப்பி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.ஜனநாயக திருவிழாவாக தேர்தல் வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் வெற்றியை பெற்றுக்கொடுக்கும் வகையில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #pchidambaram #congress #admk #bjp

    பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து உள்ளதால் நிச்சயமாக தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை பிரிப்பார் என்று கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். #Karunas #dinakaran #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 27-ந்தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு எடுக்கும். அது மக்கள் நலன் சார்ந்ததாகவே நிச்சயம் இருக்கும்.

    ஏற்கனவே நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளதால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் குறித்து கலந்தாலோசனை செய்து அதன் பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும்.

    பதவி என்பது மக்கள் கொடுத்தது. மக்களுக்காக எதையும் இழக்க நான் தயாராக உள்ளேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளை பெற்று எம். எல்.ஏ.வாக வருவேன்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து உள்ளதால் நிச்சயமாக தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை பிரிப்பார். அது அ.தி.மு.க.விற்கு பாதகமாக அமையும்.


    கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறி வந்த பா.ஜ.க., அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் தனித்து நிற்க வேண்டியது தானே.

    இதேபோன்று கடந்த மாதம் வரை பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர். அவர்கள் தற்போது அ.தி. மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? தைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி மற்றும் மர்மம் என்ன?

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைப்பதில் மத்திய மாநில அரசுகள் அரசியல் செய்து வருகிறது. உடனடியாக விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்காவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயம் மத்திய, மாநில அரசுக்கு தகுந்த பதில் அளிப்பார்கள்

    அனைத்து அரசியல் கட்சிகளும் தினகரனின் வளர்ச்சியை பொறுக்காமல் அவரை பலவீனப்படுத்த நினைக்கின்றனர். ஆனால் அவர் மேலும் பலம் பெற்று தான் வருகிறார். அவரை பா.ஜ.க. திகார் ஜெயிலுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.

    நான் தமிழன் என்று சொல்வதில் அது மட்டுமே தகுதியாக இருக்கிறது என்று கமல் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழன் என்று கூறுவது தான் தகுதி என்றார். #Karunas #dinakaran #admk

    புதுவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என அதிமுக எம்எல்ஏ கூறியுள்ளார். #ADMK #MLA

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் எங்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். எங்களின் நண்பரும் ஆவார். அவரது சமீபத்திய செயல்பாடுகள் சபாநாயகருக்குரிய நடுநிலையை தவறுகிறாரோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். முதல்- அமைச்சர் நாராயணசாமி நடத்திய தர்ணா போராட்டத்திலும் பங்கேற்றார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக தனக்கு புகார் வந்துள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார். இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

    இந்த ஆட்சி அமைந்த காலம் முதல் 3 பேர் கட்சி மாறுகின்றனர், 2 பேர் கட்சி மாறுகின்றனர் என்ற தகவல் வந்துகொண்டேதான் இருந்தது. தகுதியற்றவர்களை எம்.எல்.ஏ. ஆக்கியதால் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள நிலை இது.

    அ.தி.மு.க.வை பொறுத்த வரை குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர ஒருபோதும் விரும்பமாட்டோம். ஆட்சி கவிழ்க்கும் நிகழ்ச்சிக்கு துணைபோக மாட்டோம். எங்கள் கட்சி எம்.எல்ஏ பேரம் பேசினார் என கூறும் புகார்கள் பொய்யானது.

    ஆதாரமற்ற இந்த புகாரை வைத்துக்கொண்டு எங்களை மிரட்ட முடியாது. இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. புதுவையில் புதிதாக குரோத, விரோத அரசியலை புகுத்த வேண்டாம். அப்படி புகுத்தினால் அதை விதைத்தவர்களே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

    ஒருபோதும் முதல்- அமைச்சர் பயப்பட தேவையில்லை. அவர் ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். எங்களுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை புதுவை மக்கள் அளித்துள்ளனர்.

    நாங்கள் எதிர்க்கட்சியாக சரியாக செயல்பட்டு வருகிறோம். அரசியல் கண்ணோட்டத்தோடு சபாநாயகர் வைத்திலிங்கம் செயல்பட்டால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்.

    காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தறிகெட்டு நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதை கைவிடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MLA

    வருகிற பாராளுமன்ற தேர்தலோடு எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் காணாமல் போய் விடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். #ministersellurraju #admk

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு நீதிபதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர்ராஜூ ஆலோசனைகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. இதனை எதிர்க்கட்சிகள் பார்த்து அச்சம் கொள்கிறது. இன்னும் சில கட்சிகள் நம் அணிக்கு வர உள்ளது. நாம்தான் மெகா கூட்டணி அமைத்துள்ளோம்.

    மக்களும் நம்மை ஆதரிக்கிறார்கள். எனவே வெற்றியுடன் பிறந்த இயக்கம் அ.தி.மு.க.வுக்கு இனி ஒருபோதும் தோல்வி கிடையாது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணி அமைப்பதில் அம்மாவின் செயல்பாட்டை காண்பித்து விட்டனர். இதனால் எதிர்க்கட்சிகளுக்கு இப்போதே தோல்வி பயம் வந்து விட்டது. நாம் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற உழைக்க வேண்டும். நமது தேர்தல் பணி மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் காணாமல் போக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் எப்படியாவது பொய்யை கூறி இந்த அரசை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு நிறைவேறாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் அம்மாவின் ஆட்சியை, கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். எனவே அம்மாவின் இலட்சிய பணி இன்னும் 100 ஆண்டுகள் தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. நிரந்தர சேவை செய்யும்.

    அந்த வகையில் தான் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க. நம்பி வந்தவர்களை வாழ வைக்கும் இயக்கம். இந்த இயக்கம் நம்பியவர்களை கைவிட்டது இல்லை. ம.தி.மு.க., தே.மு. தி.க., பா.ம.க. போன்ற கட்சிகளுக்கு அங்கீகாரம் பெற்று தந்தவர் ஜெயலலிதா. அதனை மறந்து விடக்கூடாது.

    எனவே அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி கழக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், மதுரை புறநகர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், தேனி மாவட்ட பேரவை செயலாளர் ரவீந்திரநாத் குமார், நிலையூர் முருகன், எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் விரகனூர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் தவசி, பூமாராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #admk

    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க உறுதி ஏற்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளனர். #opsandeps #admk
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர்,  அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாளில் அவரைப் பற்றிய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்கவும், கழக உடன்பிறப்புகளை அழைக்கும் இந்த அன்பு மடல் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய தன்னிகரில்லாத மக்கள் இயக்கமாகிய நம் அ.தி.மு.க.வை தனது வாழ்வின் மூச்சாகக் கொண்டு, கழகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்த அற்புதமான அரசியல் ஞானி நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவருடைய அறிவையும், ஆற்றலையும், உழைப்பையும், பன்முகத் திறமைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அனைவரையும் உள்ளார்ந்த அன்புடன் அவர் நேசித்ததையும் கழக உடன்பிறப்புகளாகிய நாம், அவரோடு நேரடியாகப் பழகிய அனுபவத்தால் எண்ணி, எண்ணி வியந்துபோகிறோம். ``அம்மா’’ அவர்களைப் போல இன்னும் ஓர் அதிசயப் பிறவி, இனி ஒருவர் தோன்ற முடியுமா? என்று திகைத்து நிற்கிறோம்.

    ஒரு பள்ளி மாணவியாக அம்மா நிகழ்த்திய சாதனைகளையும், படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு, நாட்டியம், இசை போன்ற திறன் வளர்க்கும் துறை களிலும் புரட்சித் தலைவி அம்மா தன்னிகரின்றி திகழ்ந்ததையும் அவருடன் பள்ளிப் பருவத்தில் உடன் இருந்தவர்கள் இப்பொழுதும் நினைவுகூர்ந்து வியக்கிறார்கள்.

    இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா தனது 15-வது வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்த போது, வயதிலும், அனுபவத்திலும், திறமையிலும் மூத்தவர்கள் பலர் கோலோச்சி வந்தனர். இருப்பினும் தனது தனித் தன்மையால் கலை உலகின் தங்கத் தாரகையாக நம் அம்மா மிளிர்ந்தார்கள்.

    புரட்சித் தலைவி அம்மா தன்னுடைய சிறப்புமிக்க குணநலன்களால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மதிப்பிற்கு உரியவரானார். புரட்சித் தலைவி அம்மாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்; எப்படி இருக்க வேண்டும் என்று துல்லியமாகக் கணித்த கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். , 1982-ம் ஆண்டு அவரை கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி, நம் இயக்கத்தை வழிநடத்தத் தேவையான பயிற்சிகளை வழங்கினார்.

    1984-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். , நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பின ராக, அம்மாவை புதுடெல்லிக்கு அனுப்பி, அரசியல் அனுபவங்களைப் பெறவைத்தார்.

    நாடாளுமன்ற அனுபவங்களால் அரசியல் வாழ்வுக்குத் தேவையான பயிற்சிகள் பலவற்றைப் பெற்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள், புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஆற்றிய பணிகளால் இன்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய அரசியல் அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறது.

    தமிழகத்தின் முதல்- அமைச்சராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணியாற்றிய புரட்சித் தலைவி அம்மாவின் மனிதாபிமானம் மிக்க ஆட்சி முறையாலும், தொலை நோக்குப் பார்வை கொண்ட திட்டங்களை அவர் செயல்படுத்தியதாலும், இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு வளர்ந்திருக்கிறது.

    கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு வசதி, பெண்கள் முன்னேற் றம், விவசாயிகள் நலன் காத்தல் என்று ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தும் மாநிலமாக தமிழ் நாடு திகழ்கிறது.

    புரட்சித் தலைவி அம்மாவால் பயிற்றுவிக்கப்பட்ட அவருடைய அன்பு உடன் பிறப்புகளாகிய நாம், அம்மாவின் நினைவைப் போற்றி, புகழ்ந்து, நினைத்து, நெஞ்சம் உருகி அவரை வணங்கும் இந்த வேளையில், நாம் அவருக்கு ஆற்ற வேண்டிய நன்றிக் கடமைகள் பல உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.

    நம்மையெல்லாம் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி விட்டு நம் இதய தெய்வம் அம்மா மறைந்தாலும், பக்குவத்தோடும், ஒற்றுமை யோடும் செயல்பட்டு, நம் புரட்சித் தலைவி அம்மா விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். பல்வேறு சோதனைகளுக்கிடையே கழகத்தைக் காத்திருக்கிறோம். புரட்சித் தலைவர் நமக்க ளித்த வெற்றிச் சின்னமாம் ``இரட்டை இலை’’ சின்னத்தை மீட்டிருக்கிறோம்.

    கழக அரசை மக்கள் அனைவரும் போற்றும் வகையில் மக்கள் நலன் காக்கும் அரசாக நடத்தி வருகிறோம்.

    அம்மா காட்டிய பாதையில், அவர் செய்த சாதனைகள் தொடரும் வகையில் எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறோம். இந்த சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்திட உறுதி ஏற்று உழைக்கிறோம். அதுவே நாம், நம் இதய தெய்வம் அம்மா அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன்.

    நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 1998-ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அமைத்தது போன்று, தேச நலன் காக்கும் வெற்றிக் கூட்டணியை இந்தத் தேர்தலுக்காக நாம் உருவாக்கியுள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தனது அடிப்படைக் கொள்கை களான மாநில சுயாட்சி, மதச் சார்பின்மை, சமூக நீதி, பெண்களுக்கு முக்கியத் துவம், ஏழை, எளியோர் உழைக்கும் மக்களுக்கு சமூகபொருளாதார பாதுகாப்பு, தமிழ் இன எழுச்சி ஆகியவற்றில் உறுதியோடு அரசியல் பயணத்தைத் தொடரும். அதுதான், எத்தகைய களமாக தேர்தல் களம் அமைந்தாலும் நமது நிலைப்பாடு. அப்படித்தான் இப்பொழுதும் தனது பாதை யையும், பயணத்தையும் தேர்வு செய்து களத்தில் வலிமையோடு கழகம் நிற்கிறது.

    புரட்சித் தலைவி அம்மா பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றிகளை எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் பெற்று அந்த வெற்றியை புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வெற்றி மாலையாக அவர் நீடு துயில் கொள்ளும் நினைவிடத்தில் சமர்ப்பிக்க நாம் உறுதி பூண வேண்டும்.

    நம்மை எல்லாம் அன்புடன் அரவணைத்து, அரசியல் பாடம் சொல்லி, வழிநடத்திய நம் அன்பு அம்மா அவர்களின் பிறந்த நாளில் நாம், கழகம் காக்கவும், கழகத்தை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், அயராது உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்! என்று உளமார உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #opsandeps #admk
    சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார். #Tamilisai #edappadipalanisamy #vijayakanth
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. 

    அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று பாஜக தலைவர் தமிழிசை சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். 

    இந்த சந்திப்பிற்கான காரணம், அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறியவும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. #Tamilisai #edappadipalanisamy #vijayakanth
    பாரதீய ஜனதாவுக்கு துணைபோகும் அதிமுக-பா.ம.க. கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ப.சிதம்பரம் பேசியுள்ளார். #PChidambaram #pmk #admk #congress

    சென்னை:

    மத்திய அரசின் ரபேல் ஊழலை கண்டித்தும், ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கியும் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    மோடி தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சிறு, குறு தொழில் துறை உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படும் வகையில் வருமான வரி, ஜி.எஸ்.டி., சுங்கவரி ஆகியவற்றில் இருந்து நோட்டீசுகளை அனுப்பி கதறவைக்கின்றனர். இது தான் வரி பயங்கரவாதம்.

    ஜி.எஸ்.டி. வரியை சிதைத்ததால் ஏராளமான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதாரரீதியாக இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு பின்னாக தள்ளி இருக்கிறது பா.ஜ.க. அரசு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 31 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு ஏற்றுமதி இருந்தது. இதை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தாண்டியதே இல்லை. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு சென்றது அதைவிட கேவலமானது.

    ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று கூறும் பா.ஜ.க.வுக்கு துணைபோகும் அ.தி.மு.க., பா.ம.க.வை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஒருபோதும் வரவேற்பு இருக்காது.


    மாணவர்கள், விவசாயிகள், குடும்ப தலைவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் தெரிவித்த கருத்துகள், கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். நாங்கள் செய்ய முடிந்தவைகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு முன்பு தந்ததுபோல 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், விஜயதரணி எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார்.

    மாங்கா சேகர், தரமணி கோபி, நாச்சிக்குளம் சரவணன், கோடம்பாக்கம் ராஜசேகர், விருகை ராமசந்திரன், சைதை முத்தமிழ், கிண்டி லோகநாதன், கோபால் சுந்தரம், ஆதிநாராயணன், இஸ்மாயில்

    அடையார் துரை, சாந்தி, மலர்கொடி, மகேஷ்வரி, மயிலை நாராயணன், திருவான்மியூர் சீத்தாராமன், காலனி சரவணன், ராயப்பேட்டை ஆரிப், சைதை கோகுல், சைதை சசிகுமார், பி.டி.சி. ஏழுமலை, நொச்சிக்குப்பம் பாண்டியன், மயிலை தாமஸ், அப்பு ஜெயபால், சீனிவாசபுரம் ரகுகுமார், வக்கீல்கள் சித்தார்த்தன், மயிலை பாலு, மீனா வெங் கட்ராமன், சுசீலா கோபாலகிருஷ்ணன், மகேஸ்வரி, கோட்டூர் ஜான்சன், விக் னேஷ்வரன்,

    திருவான்மியூர் கதிரேசன், பழனி, சீத்தாராமன், தரமணி சீனு,, அடையார் மாதவன், தங்கராஜ், பட்டினபாக்கம் பன்னீர் செல்வம், கவுரிசங்கர், தங்கம், விஜி, சிவகுமார், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். #PChidambaram #pmk #admk #congress 

    ஸ்டாலின் விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #MKStalin #Vijayakanth #ADMK
    வேலூர்:

    வேலூர் ஊரிசு கல்லூரியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வேலூர் வந்தார்.


    ஸ்டாலின் விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளேன்.

    கூட்டணியை உருவாக்கி பல மாதங்களாக தி.மு.க.வுடன் செயல்பட்டு வருகிறோம். எனவே தி.மு.க. கூட்டணியில் தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    தி.மு.க கூட்டணியில் நாங்கள் போட்டியிட விரும்பும் பட்டியலை வழங்கி உள்ளோம்.

    இறுதி பட்டியலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #MKStalin #Vijayakanth #ADMK
    திண்டிவனம் அருகே இன்று சாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். #RajendranMP
    திண்டிவனம்:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் டாக்டர் ராமதாசின் பா.ம.க. இடம்பெற்றுள்ளது.

    அந்த கட்சிக்கு 7 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது.

    இதையொட்டி அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விருந்து அளிக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சி திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்னைக்கு புறப்பட்டு வந்து விட்டனர்.

    ராஜேந்திரன் எம்.பி. திண்டிவனத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை 6 மணிக்கு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். காரை அருமைச்செல்வம் என்பவர் ஓட்டினார்.


    ராஜேந்திரன் எம்.பி.யுடன் அவரது உறவினர் தமிழ்ச்செல்வன் வந்தார். திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை திண்டிவனம் பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ராஜேந்திரன் எம்.பி. கார் திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது பனி மூட்டம் காரணமாக சாலையில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த ராஜேந்திரன் எம்.பி., கார் டிரைவர் அருமைச்செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    திண்டிவனம் போலீசார் அவர்களை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராஜேந்திரன் எம்.பி. பரிதாபமாக இறந்தார். அவருக்கு வயது 62.

    காயம் அடைந்த அருமைச் செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் திண்டிவனம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்தில் இறந்த ராஜேந்திரன் எம்.பி.யின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு கார் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.


    அவர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள ராஜேந்திரன் எம்.பி.யின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்களும் ராஜேந்திரன் எம்.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்பு அவர்கள் ராஜேந்திரன் எம்.பி.யின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    ராஜேந்திரன் எம்.பி.யின் சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள ஆதனப்பட்டு. சாந்தா என்ற மனைவியும், விக்னேஷ்வரன் என்ற மகனும், திவ்யா, தீபிகா ஆகிய மகள்களும் உள்ளனர். #RajendranMP #ADMK #Edappadipalaniswami #OPS
    ஏழை மக்கள் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ACBus #MRVijayabaskar
    கரூர்:

    கரூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 2000 மின்சார பஸ்களும்,12,000 காற்று மாசுபடாத அதி நவீன புதிய பஸ்களும் இயக்கப்பட உள்ளது. 3 வருட காலத்திற்குள் இந்த பஸ்கள் இயக்கப்படும். முதல் கட்டமாக 500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சியில் விரைவில் இயக்க முதல்வர் சி.40 அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    குறைந்த தூரத்தில் ஏழை மக்கள் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பொதுவாக குளிர் சாதன பஸ்கள் 2-2 சீட்டுகள் அமைப்பில் உள்ளன. ஆனால் இந்த புதிய குளிர் சாதன பஸ்கள் 3-2 என்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவை குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட உள்ளது.



    முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் 50 குளிர் சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ACBus #MRVijayabaskar
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 35 தொகுதிகளை கைப்பற்றும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். #kushboo #vijayakanth #mkstalin #bjp

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா, பா.ம.க. கூட்டணி அமைத்து இருப்பதை தலைவர்கள் விரும்பலாம். மக்கள் விரும்ப மாட்டார்கள். மோடி அரசு சரி இல்லை என்று 4 நாட்களுக்கு முன்பு வரை தம்பித்துரை விமர்சனம் செய்து வந்தார்.

    நாங்கள் ஏற்கனவே சொல்லி வந்தோம். அ.தி.மு.க. அரசை பா.ஜனதா தான் இயக்குகிறது என்று. அரசியல் சதுரங்கத்தில் அ.தி.மு.க. வெறும் சிப்பாய் தான். மத்தியில் என்ன சொன்னார்களோ அதைத் தான் எடப்பாடி அரசு செய்து வந்தது.

    இப்போது எப்படியாவது நாற்காலியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்.


    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வுக்கு பூஜியத்துக்கு கீழ்தான் மதிப்பு கொடுக்க முடியும் என்றார். சூடு, சொரணை இல்லாதவர்கள் தான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பார்கள் என்று அன்புமணி சொன்னார். இப்போது எதுவும் இல்லாமல் கூட்டணி வைத்து, விருந்தும் வைக்கிறார்கள்.

    முரண்பட்ட இந்த கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று பா.ஜனதா முயற்சிக்கிறது. அதனால் தான் பா.ம.க.வை விட குறைவாக இருந்தாலும் கூட பரவாயில்லை என்று கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்.

    கோட்டா கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கினாலும் பரவாயில்லை. எப்படியாவது தமிழகத்தில் நுழைய வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள்.

    முன்பு தாம்பரத்தை தாண்டினால் தாமரையை தெரியாது என்றேன். இப்போதும் சொல்கிறேன் தமிழகத்தில் எங்குமே தாமரை மலரப் போவதில்லை.

    தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பது பற்றி தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஒரு தலைவர் இந்த மாதிரி சூழலில் இருக்கும் போது தலைவர்கள் போய் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் அரசியல் கோணத்தில் பார்க்க கூடாது.

    எந்த கூட்டணியில் சேருவது என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார்.

    எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும்.

    தேர்தலில் நான் போட்டியிடுவேனா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் நான் போட்டியிட போவதாக இப்படித்தான் தேர்தல் நேரத்தில் பரபரப்பு கிளம்பி விடும். அதேபோல் தான் இப்போதும் கிளப்பி விட்டுள்ளார்கள்.

    நான் எப்போதும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதில்லை. ராகுல் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். பிரசாரம் மட்டும் செய்ய சொன்னால் பிரசாரம் செய்வேன்.

    எங்கள் கூட்டணிக்கு தமிழகத்தில் 35 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    குறிப்பிட்ட தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற வேண்டும் என்பதல்ல. அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #kushboo #vijayakanth #mkstalin #bjp

    தனக்கு பின்னால் திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் என தஞ்சை மாநாட்டில் கி.வீரமணி அறிவித்துள்ளார். #KVeeramani #KaliPoongundran
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு பின்னால் திராவிடர் கழக தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும். மாநிலம் மற்றும் மத்தியில் ஆளும் கட்சிகள் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம், 6 ஆயிரம் கொடுக்கின்றனர். அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது.

    பாம்பு வந்தால் எப்படி தடியைகொண்டு அடித்துவிரட்டுவோமோ அதேபோல் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். எனும் பாம்பை அடித்துவிரட்டவேண்டும். பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிஉள்ளார்.



    40க்கு 40 என அ.தி.மு.க. கூறிவருகிறது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் வாங்க முடியாது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிதான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது. ஆனால் யார் வரவேண்டும் என வெளிச்சம்போட்டு காட்டுவோம். இந்த மாநாடு சாதி, மத ஓழிப்பு குறித்த மாநாடு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KVeeramani #KaliPoongundran
    ×