search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்தும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை கொளத்தூரில் மழை-வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது.

    ஏற்கனவே “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இதில் கமி‌ஷன் வாங்கி உள்ளனர். பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.

    “ஸ்மார்ட் சிட்டி” திட்ட பணிகள் முடிந்த பிறகு இதில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும். இதில் ஸ்மார்ட் சிட்டி காண்டிராக்ட் எடுத்தவர்கள் மீதும் நிச்சயமாக நடவடிக்கை பாயும்.

    எஸ்.பி. வேலுமணி


    உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதுவும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

    குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. தாக்கப்பட்டதால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார். மேலும் குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி(47) என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.

    அப்போது வீட்டில் பெண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம், கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவரை கோபி தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்ததாக கூறி குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதையடுத்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்தது குறித்து குன்னூர் நகர போலீஸ் நிலையத்தில் கோபி புகார் அளித்தார். மேலும் தன்னை தாக்கியதாக கோபி மீது கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    திருவேற்காடு நகர கழக செயலாளர் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    திருவள்ளூவர் தெற்கு மாவட்டம் திருவேற்காடு நகர கழக செயலாளர் எஸ்.சத்தியநாராயணன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

    அ.தி.மு.க. மீதும், தொடர்ந்து அ.தி.மு.க. தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு அ.தி.மு.க. பணிகளை ஆற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு சத்திய நாராயணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட உள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்.

    2014-ம் ஆண்டு ஜெயலலிதா இருந்த போது
    அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்தினார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு உள்கட்சி தேர்தலை நடத்தி இருக்க வேண்டும்.

    அப்போது கொரோனா பரவிய காலமாக இருந்ததால் உள்கட்சி தேர்தல் அ.தி.மு.க.வில் நடைபெறவில்லை. அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்த முயற்சி செய்யும் போதெல்லாம் ஒவ்வொரு பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்தது.

    சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சிமன்ற தேர்தல், கொரோனா காலகட்ட ஊரடங்கு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட சலசலப்பு என பல்வேறு வி‌ஷயங்கள் காரணமாக உள்கட்சி தேர்தல் நடைபெறுவது காலதாமதமாகிக் கொண்டே சென்றது.

    இந்தநிலையில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருகிற டிசம்பர் 31-ந்தேதிக்குள் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் உள்கட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க.வில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட தி.மு.க. அரசு தவறிவிட்டதாகக் கூறி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வருகிற 9-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

    இந்த ஆர்பாட்ட நிகழ்ச்சி முடிந்ததும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

    இது குறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்துவதற்கு கோர்ட்டு கெடு விதித்துள்ளதால் இந்த மாதம் உள்கட்சி தேர்தலை நடத்த தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகும்.

    அ.தி.மு.க. கிளை கழக தேர்தல் முதலில் நடத்தப்படும். அதன் பிறகு ஒன்றிய கழகம், பேரூர், நகர கழகம், மாவட்டம் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இறுதியாக தலைமைக்கு தேர்தல் வரும்.

    கட்சியில் இப்போதுள்ள நடைமுறைப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த சூழலில் அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    சசிகலா


    இந்த வி‌ஷயத்தில் சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று கூறி இருந்தார்.

    இவர்கள் இருவரும் சொன்ன கருத்தால் அ.தி.மு.க.வில் ஆளாளுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது இந்த வி‌ஷயத்தை விவாதப்பொருளாக ஆக்கக் கூடாது என்பதற்காக தனிப்பட்ட முறையில் யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது என்று தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    அதனால் சசிகலா விவகாரத்தில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் உள்ளது. இந்த சூழலில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

    கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டப்பட வேண்டும். இவை அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் நடத்த முடிவு செய்ய வேண்டும் என்பதால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தலைமைக் கழகத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு வருடத்திற்கு ஒருமுறையும், செயற்குழு 2 முறையும் நடத்தப்பட வேண்டும். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு (2020) அ.தி.மு.க. பொதுக்குழு நடத்தப்படவில்லை. தேர்தல் கமி‌ஷனில் கால அவகாசம் கேட்கப்பட்டு இருந்தது.

    எனவே வருகிற டிசம்பர் 31-ந்தேதிக்குள் பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும். அதற்கு முன்னதாக உள்கட்சி தேர்தலையும் நடத்த வேண்டும். இதனால் வருகிற 10-ந்தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை வந்தார்.
    அவனியாபுரம்:

    முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு விதியை மீறி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இது குறித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 9-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவரிடம் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தை அறிவித்துள்ளார்களே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு துரைமுருகன் பதில் அளிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் முல்லை பெரியாறு அணையை எப்போதாவது நேரில் சென்று பார்த்தாரா? என்பதற்கு பதில் சொல்லிவிட்டு போராட்டம் நடத்தட்டும் என்றார்.

    முல்லை பெரியாறு அணை


    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருக்கிறதே என்று கேட்டபோது, முல்லை பெரியாறு அணையை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்றார்.

    பேட்டியின் போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், தி.மு.க. நிர்வாகிகள் இளைஞரணி ராஜா, வாடிப்பட்டி பால்பாண்டி, திருப்பரங்குன்றம் ஒன்றிய சேர்மன் வேட்டையன் உள்பட பலர் இருந்தனர்.

    மாவட்ட தலைவர்கள் இதற்குரிய பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விருப்பமனுக்களை பெற வேண்டும்.
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் 7-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம். 7-ந் தேதி சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான மனுக்கள் வழங்கலை நான் தொடங்கிவைக்கிறேன். இதர மாநகராட்சிகளில் 10-ந் தேதி காலை முதல் மாநில நிர்வாகிகள் நேரில் சென்று விருப்பமனுக்களை பெற உள்ளார்கள். நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான விருப்பமனுக்கள் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பெறப்படும். விருப்பமனு பரிசீலனைக்கு பிறகு இறுதியாக வேட்பாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.

    அந்தந்த மாவட்ட தலைவர்கள் இதற்குரிய பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விருப்பமனுக்களை பெற வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    முகவர்கள் நியமிக்கப்படாத வாக்கு சாவடியில் உடனடியாக முகவர்கள் நியமித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்காக வருகிற 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், வாக்குச்சாவடி நிலை முகவர்களும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    18 வயது பூர்த்தியானவர்களையும், பட்டியலில் இடம் பெறாதவர்களையும் புதியதாக குடிவந்தவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பட்டியலில் உள்ள தவறுகளையும் சரி செய்ய வேண்டும்.

    இதற்காக முகாம்களுக்கு சென்று இந்த பணியை முழுமையாக செய்ய வேண்டும். முகவர்கள் நியமிக்கப்படாத வாக்கு சாவடியில் உடனடியாக முகவர்கள் நியமித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும்.

    இதற்கான பணிகளை முடித்து அதன் விவரங்களை தலைமை கழகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ஒரே பணியாளர் வருகைப் பதிவேட்டின் கீழ், ஒரே இடத்தில், ஒன்றாக, குறிப்பிட்ட நாட்களுக்கு பணியாற்றியவர்களுக்கான ஊதியம் ஒரு சில பிரிவினருக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் அளிக்கப்பட்டு விடுவதாகவும், ஒருசில பிரிவினருக்கு இரண்டு மாதங்கள் ஆகின்றன என்றும், இதன் காரணமாக பணியாளர்களிடையே சந்தேகமும், கசப்பு உணர்வும் ஏற்படுவதாகவும், இது குறித்து ஊராட்சி அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், அனைவருக்குமான ஊதியம் ஒன்றாகத்தான் சமர்ப்பிக்கப்படுகிறது என்றும், ஆனால் அதற்கான ஊதியம் பிரித்து அனுப்பப்படுவதாகவும், இந்தப் பிரச்சனை ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவுவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

    இது குறித்து தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித்துறை மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிந்ததற்கான ஊதியம் மற்ற பிரிவினரைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் தாமதமாக கிடைத்ததாக ஏராளமான புகார்கள் வந்திருப்பதாக கூறியுள்ளார் என பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல் ஆகும்.

    இந்த நிலை நீடித்தால் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் கடுமையாக இருப்பதோடு, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்து விடும்.

    ஊதியத்தை ஒரு பிரிவினருக்கு முன்னதாகவும் மற்றொரு பிரிவினருக்கு தாமதமாகவும் அளித்தால் பணிபுரிபவர்களிடையே மனக்கசப்பை உண்டாக்குவதோடு, தாமதமாக ஊதியம் பெறுபவர்களின் பணிபுரியும் ஆர்வமும் குறைந்துவிடும்.

    இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்கு சரியாக எவ்வளவு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு புதிய முறையை நடப்பாண்டு முதல் செயல்படுத்தி உள்ளது தான் இதற்கு காரணம்.

    இதில் உள்ள சாதக பாதகங்களை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு. நேற்றுகூட முதல்-அமைச்சர் இத்திட்டத்தின் கீழ் நிலுவையாக உள்ள 1,178 கோடி ரூபாயை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    ஆனால் மத்திய அரசு தற்போது பின்பற்றி வரும் நடைமுறையில் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து, அனைத்துப் பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    5 மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால் மட்டுமே கடைமடைப் பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீர் உறுதி செய்யப்படும் என்பதை, யதார்த்த நிலை தெளிவுபடுத்துகிறது.

    கேரள அரசு மீண்டும், மீண்டும் முல்லைப் பெரியாறு அணை குறித்து உண்மைக்குப் புறம்பாகவும், தவறான தகவல்களின் அடிப்படையிலும் எழுப்பி வரும் பிரச்சனைகளுக்குப் பணிந்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையில் நீர் 138 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரள அமைச்சர்கள், அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு நீரை திறக்க மதகுகளை உயர்த்தி இருக்கிறது.

    முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கம். அந்த அணையில் நீர் இருப்பை கண்காணிப்பது போல, கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில் மதகுகளைத் திறந்தது, முல்லைப் பெரியாறு அணையின் மீது தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயல் என்பதை நீண்ட அரசியல் அனுபவமுடைய அமைச்சர் துரைமுருகனுக்கு நினைவூட்டுகிறோம்.

    முல்லை பெரியாறு அணை


    முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு, அதன்மூலம் தென் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில், குறிப்பாக கடைமடைப் பகுதியான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதற்கு ஜெயலலிதா முன்னெடுத்த சட்ட ரீதியிலான போராட்டங்களை நினைவில் கொண்டு, அப்போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில், தற்போதைய தமிழ்நாடு அரசு உறுதித் தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    காவேரி நீர்ப்பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளையும், பாலாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களிலும், எந்தச் சூழ்நிலையிலும் உறுதி குலைந்து விடாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத கடமை என்பதை தி.மு.க. அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையும், மாநில மக்களின் உரிமைக்காகப் போராடுவதில் தி.மு.க. அரசு காட்டும் ஏனோதானோ மனநிலையையும் கண்டித்து, அ.தி.மு.க.வின் சார்பில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத் தலைநகரங்களில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

    எனவே 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க, அ.தி.மு.க.வின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


    நாடெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலாதீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



    கொரோனா வைரஸ்


    பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளி திருநாளில், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசியையும் தவறாமல் செலுத்தி கொண்டு கவனமாக சந்தோசத்துடன் இந்த தீப ஒளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளில், சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும், அன்பும் நாடி வர இன்பமாய் கொண்டாடுவோம் தீபாவளியை.

    இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ‘மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல’ என்பதைக் கருத்தில் கொண்டு, காவேரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவேரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை எம்.எஸ்.எம்.இ. வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எந்தத் தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோ அந்தத் தொழிலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் அரசாக தி.மு.க. அரசு மாறி விட்டது.

    இது குறித்து தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தடை செய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோ கெமிக்கல் இல்லை என்று பதிலளித்ததாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

    2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் பிரிவு 22(2)-ல் இரண்டாவது அட்டவணையில் உள்ள தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. சட்டத்தில் இடமில்லை என்றால் அதற்கான விதிகளை சேர்க்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்து காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும் என்பதும், சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதும் தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலைப்பாடும் இது தான்.

    ‘மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல’ என்பதைக் கருத்தில் கொண்டு, காவேரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... கோவில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

    அ.தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் 2 பணிமனை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனைகளை சேர்ந்த புதிய நிர்வாகிகளுக்கு நியமனம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.

    சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினர்.

    கூட்டத்தில் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள். திடீரென்று வந்தவர்கள் திடீரென்று போய் விட்டார்கள்.

    அ.தி.மு.க. என்றும் சாகா வரம்பெற்ற இயக்கம். அ.தி.மு.க.வுக்கு 96-ல் ஏற்படாத சோதனையா தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில்கூட திருத்தங்கல் நகராட்சியில் நான் வைஸ் சேர்மனாக வெற்றி பெற்றேன்.

    சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல. சோதனைகள் வரும்போது தான் எறிகின்ற பந்து எப்படி துள்ளி எழுந்து வருமோ அதே போன்று அ.தி.மு.க. மீண்டும் எழும். இங்கிருந்த பலபேர் வேறு இடத்திற்கு சென்றிருப்பார்கள்.

    பழத்தோட்டத்தை நாடி அவர்கள் பறந்து சென்றிருக்கின்றனர். ஆனால் நாம் தோட்டக்காரர்கள். நாம் நல்ல விதைகளை விதைத்து, விளைவித்து தோட்டத்தை பாதுகாக்க முடியும். பழங்களை உற்பத்தி செய்ய முடியும். ஆகையால் பழத்தோட்டக்காரர்களாக நாம் இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×