search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் போது உரிய நேரத்தில் அ.தி.மு.க.வையும் மந்திரி சபையில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று இல.கணேசன் தெரிவித்தார்.
    சென்னை:

    மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

    இந்தநிலையில் டெல்லியில் மோடி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    முறைப்படி மத்திய மந்திரி சபை பதவி ஏற்றுள்ளது. இது முழுமையான மந்திரி சபை அல்ல. மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் போது உரிய நேரத்தில் அ.தி.மு.க.வையும் மந்திரி சபையில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மோடி தலைமையிலான புதிய மந்திரிசபையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் வழங்கப்படவில்லை.
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. 

    எனவே, தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது மேல்-சபை எம்.பி.யான வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் என பேசப்பட்டது. 

    ஆனால், இன்று மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்றபோது, அதிமுகவைச் சேர்ந்த யாரும் அதில் இடம்பெறவில்லை. 

    இதேபோல் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அவருக்கும் மந்திரிசபையில் இடம் வழங்கப்படவில்லை. 
    தினகரனை பொருத்தவரை கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்து ஜீரோ ஆகிவிட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
    சென்னை:

    டெல்லியில் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    பதவி என்பது எங்களுக்கு இரண்டாம் பட்சம். மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.

    மத்திய மந்திரி பதவிக்கு அ.தி.மு.க.வில் 2 பேர் இடையே போட்டி என்ற அனுமான கேள்விக்கு பதில் அளிக்க இயலாது.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பொருத்தவரை சந்தர்ப்பவாதி என்பது தெளிவாகிறது. இன்று ஜெகன்மோகன் ரெட்டியை சந்திப்பது ஆதாயத்திற்கு. குளம் தேடி பறந்து வல்லமை படைக்கும் கொக்கு என்பது தி.மு.க.விற்கு பொருந்தும்.

    நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த ஸ்டாலின் பதிலுக்கு, நானும் சொல்கிறேன், ‘பொறுத்து இருந்து பாருங்கள்’. அடுத்த இரண்டு ஆண்டுகளில் எங்களுடைய காட்சியை அவர்கள் பார்ப்பார்கள். நிச்சயமாக நதி நீர் இணைப்பு திட்டம் சாத்தியமாகும்.

    கமலை பொருத்த வரை, பதவி கொடுத்தால் நான் செயல்படுவேன். இல்லை என்றால் எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகளில் ஈடுபடுவேன் என்பதுதான். இது தான் அவர் அரசியல். தமிழகத்திற்கு வருத்தம் தரக் கூடியதாக இருக்கிறது.



    தினகரனை பொருத்தவரை, கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு, கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்தார், ஆனால் அந்த ஹீரோ, ஜீரோ ஆகிவிட்டார். பூஜ்ஜியம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

    காவிரி நீர் வழங்குவது நீதிமன்ற உத்தரவு. அதை முறைப்படி கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மத்திய அமைச்சரவையில் அதிமுக எம்பி வைத்திலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், அவர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற சந்திப்பின்போது, அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் தேனி எம்.பி. ப.ரவீந்திரகுமார் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம். அல்லது இருவரில் ஒருவருக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வைத்திலிங்கம் எம்பி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 
    பாராளுமன்ற தேர்தல் முடிவால் பாதிப்பு இல்லை என்றும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபித்துக்காட்டும் என்றும் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், அதை தி.மு.க.வும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பா.ம.க. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

    தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி 7 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க வாங்கிய வாக்குகளின் விழுக்காடு 5.40 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம் ஆகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய அதே அளவிலான வாக்குகளை, இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 7 இடங்களில் போட்டியிட்டு பா.ம.க. பெற்றுள்ளது.

    மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எவ்வகையிலும் இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

    தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம்.

    தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.

    பாட்டாளி மக்கள் கட்சி சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு.

    இதற்கு காரணம் பா.ம.க.வை உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்... இளைஞர்கள்... இளைஞர்கள் என்பது தான். கடந்த காலத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம்.

    இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக்காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

    பாட்டாளி இளைஞர்களும் போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்..... புதிய வரலாறுகளை படைக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
    ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை வீழ்த்த துணைபோக மாட்டேன் என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர் விளக்க நோட்டீஸ் மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க. 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உயர்ந்து ஆட்சியை காப்பாற்றி உள்ளது. அது போல் தி.மு.க. கூட்டணி கட்சியின் பலம் 110 ஆனது.

    இவர்களில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணியின் பலம் 109 ஆகும்.

    தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக கருதப்படும் பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி மற்றும் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க. முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகத்தான் உள்ளேன். நான் அ.தி.மு.க. தொண்டன்தான். நான் எப்போதும் அம்மாவின் விசுவாசிதான். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் நான் அ.தி.மு.க.வின் கொறடா உத்தரவு படிதான் செயல்படுவேன்.


    ஜெயலலிதா உருவாக்கிய அ.தி.மு.க. ஆட்சியை விழ்த்த நான் துணைபோக மாட்டேன். எனக்கும் மாவட்ட செயலாளராக இருக்கும் குமரகுருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் நான் ஒதுங்கியே இருக்கிறேன்.

    தற்போது நடந்து முடிந்து உள்ள பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு காரணம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுருதான். அ.தி.மு.க. தொண்டர்களை அவர் சரியாக வழிநடத்தவில்லை. இதன் காரணமாக தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

    இனிமேலாவது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க. வெற்றிபெற முடியும். கட்சி தலைமையில் உள்ளவர்கள் இனியாவது தொண்டர்கள் விருப்பப்படி செயல்படவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாரதிய ஜனதா கூட்டணியில் இருப்பதால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக பெற்றுத்தருவோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக வளாகத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை. இந்தியா முழுவதும் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் இங்கு தமிழகத்துக்கு எதிராக பாரதிய ஜனதா இருப்பது போல சித்தரிப்பு, தொடர்ந்து பல்வேறு வகையில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் செய்த காரணத்தால் தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தேசிய நீரோட்டத்தோடு சேர்ந்து நாமும் வாக்களித்து இருக்கலாம் என்று இன்று மக்கள் வருத்தப்படுகின்றனர்.

    அதேபோல மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர்.

    தி.மு.க.வை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றம்தான். மே 23-ந் தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என ஸ்டாலின் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். ஆனால் மாற்றம் வரவில்லை. ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.

    தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும், நாங்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் தமிழர்களின் நலன் கருதி தமிழர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறாமல் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை கண்டிப்பாக பெற்றுத் தருவோம்.

    இந்த பணியை நாங்கள் தான் செய்ய முடியும். தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும் அவர்களால் இதனை செய்ய முடியாது. எப்படி அவர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார்களோ? அதே போல் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம். அதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் சாதிக்க முடியாது. தி.மு.க. பெற்றுள்ளது பயனில்லாத வெற்றி.

    தூத்துக்குடியை பொருத்தவரை கனிமொழி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலுக்கும், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கும் அவர்களால் குரல் கொடுக்க முடியாது. வெற்றி -தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களைப் பெற்று தரும் வகையில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே சாதிப்பது நாங்கள்தான். தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவோம், தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் எங்களது ஸ்லீப்பர் செல்கள் மறுபடியும் வருவார்கள் என தினகரன் கூறியது நல்ல ஜோக்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ந்தேதி சின்னமனூர் அருகே குச்சனூரில் வைக்கப்பட்ட கோவில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

    இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே எப்படி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போடலாம் என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பிறகு அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது. அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேனி நகரில் பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்தியஅமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகும் சர்ச்சைக்குரிய அழைப்பிதழ்.

    இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு அருகில் மத்திய அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிராம மக்கள் சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாராளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சிலர் மாற்றி மத்திய அமைச்சர் என சேர்த்து போலியாக சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதவி வருவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சர் என பெயரிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் மீண்டும் சர்ச்சையில் ரவீந்திரநாத்குமார் சிக்கியுள்ளார்.
    சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இதற்கிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க சட்டசபை செயலகத்திடம் அ.தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 9 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பத்விப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
    சென்னை:

    மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பதவி ஏற்க உள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல வெளிநாட்டுத் தலைவர்கள் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வர இருப்பதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே புதிய அமைச்சரவையில் யார்- யாரை மத்திய மந்திரிகளாக சேர்த்துக் கொள்ளலாம் என்று மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் 303 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால் மத்திய மந்திரி சபையில் முக்கியமான, பெரும்பாலான மந்திரிகள் பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

    என்றாலும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியினரையும் மத்திய மந்திரி சபையில் இடம்பெற செய்ய மோடி முடிவு செய்துள்ளார். எனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., அகாலி தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

    பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா 18 எம்.பி.க்களை வைத்துள்ளது. கடந்த தடவை 3 மந்திரி பதவி பெற்ற சிவசேனா இந்த தடவை 4 மந்திரி பதவிகளை கேட்கிறது. 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், அப்னா தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடன்ட்ஸ் யூனியன், ராஜஸ்தானில் லோக் தந்திரிக் கட்சி, நாகலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி, மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் வென்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் 38 இடங்களில் அ.தி.மு.க. மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அ.தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முடிவு செய்துள்ளார். அந்த ஒருவர் யார் என்பதை தெரிவிக்கும்படி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.


    இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் 2 மத்திய மந்திரி பதவிகளை தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இரு மந்திரி பதவிகளில் ஒரு பதவி, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலாகாவை பெற காய்களை நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வைத்திலிங்கம் மத்திய மந்திரி பதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மேல்- சபையில் எம்.பி. ஆக இருக்கும் வைத்திலிங்கத்தை மத்திய மந்திரியாக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் மேல்-சபையான மாநிலங்கள் அவையில் தற்போது அ.தி.மு.க.வுக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற ஜூலை மாதம் மேல்-சபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும்.

    டெல்லி மேல்-சபையில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் இல்லை. எனவே மேல்-சபையில் அ.தி.மு.க.வின் தயவு பாரதிய ஜனதாவுக்கு தேவை என்ற நிலை உள்ளது. மேல்- சபையில் 12 எம்.பி.க்களை வைத்திருப்பதால் அ.தி.மு.க.வுக்கு இரண்டு மத்திய மந்திரிகள் தருவதுதான் நியாயமானதாக இருக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த வாதத்தை பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க.வுக்கு இரு மந்திரி பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் இருவரும் மந்திரி ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜாங்க இலாகா கொடுக்கப்படலாம்.

    இதற்கிடையே டாக்டர் அன்புமணியையும் மேல்- சபை எம்.பி. என்ற அந்தஸ்துடன் மத்திய மந்திரியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மீண்டும் அவருக்கு சுகாதாரத் துறையை பெற காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால் பா.ம.க.வின் விருப்பத்தை பாரதிய ஜனதா நிறைவேற்றுமா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று மதியம் திருமலைக்கு வந்தார்.

    ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி திருமலையில் இரவு வராகசாமி, ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.


    இன்று காலை அஷ்டதள பாதபத்ம ஆராதனை சேவையில் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    அதைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார். அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.

    தமிழக சட்டசபையில் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடத்தில் வெற்றி பெற்று 122 இடங்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது.

    கடந்த 1½ ஆண்டுகளாக அரசுக்கு இருந்த பெரும்பான்மை குறைவிற்கான சிக்கல் இடைத்தேர்தல் முடிவால் தீர்வு காணப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி அ.தி.மு.க.வினர் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பல கோடி வாக்காளர்கள் தங்கள் பொன்னான வாக்குகளை வழங்கி இருக்கின்றனர்.

    குறிப்பாக, சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சூலூர், நிலக்கோட்டை, மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளில், வாக்காளப் பெருமக்கள் அளித்த மகத்தான வெற்றியின் காரணமாகவே, அம்மாவின் அமைத்த நல்லரசு நிலை பெற்றிருக்கிறது.

    அதே போன்று, பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. குரல் ஒலிப்பதை உறுதி செய்திடும் வகையில், தேனி பாராளுமன்ற மக்களவை தொகுதியில் கழக வேட்பாளர் பெற்றிருக்கும் வெற்றி மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக அமைகிறது.

    தேனி மாவட்ட மக்கள் கழகத்திற்கு அளித்திருக்கும் வெற்றி மாலை, நம் இயக்கத்திற்கு சூட்டப்பட்ட நன்றி மாலையாக அமைந்து, மத்தியில் அமைந்திருக்கும் புதிய அரசை ஆதரித்து வழிமொழியும் வாய்ப்பையும் நமக்கு வழங்கியிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

    வாக்காளப் பெருமக்கள், கழகத்திற்கு துரோகம் செய்தோரை புறந்தள்ளி, உண்மையான மக்கள் இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதையும், மக்கள் மனதில் நிலைபெற்றிருப்பது “இரட்டை இலை” சின்னம் தான் என்பதையும் தங்கள் வாக்குகள் மூலம் உறுதி செய்திருக்கின்றார்கள்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களையும்; சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக அரசையும், அ.தி.மு.க.வையும் தங்கள் பொன்னான வாக்குகளால் கட்டிக் காத்திருக்கும் வாக்காளப் பெருமக்களையும் நேரடியாக சந்தித்து நன்றி கூற வேண்டியது, கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும்.

    எனவே, தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி வாக்காளப் பெருமக்களுக்கு, கழக நிர்வாகிகளும், வேட்பாளர்களும், நேரடி சந்திப்புகள் வழியாகவும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நன்றி தெரிவித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    நமக்கு வாக்களித்தோர் மட்டுமல்லாமல், மற்றவர்களும் மனம் மகிழும் வண்ணம், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இன்னும் சிறப்புடன் மக்கள் பணியாற்றி, அனைவரது இதயங்களையும் வென்றெடுக்க நம் தொண்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×