search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94528"

    காலை வேளையில் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிட நினைத்தால், பசலைக்கீரை ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 2
    பசலைக்கீரை - 1 கப்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    பால் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பசலைக்கீரையை போட்டு, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்னர் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, கையால் அதனை லேசாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதில் பசலைக்கீரை மற்றும் கொத்தமல்லியைப் போட்டு, மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை ஆம்லெட் ரெடி!!!

    காலையில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, இந்த பசலைக்கீரை ஆம்லெட்போட்டு சாப்பிட்டால், வயிறு நிறையும்.

    கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று சத்தான சுவையான கீரை ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்
    நாட்டு முட்டை - 3
    வெங்காயம் - ஒன்று
    ப.மிளகாய் - 2
    மிளகுதூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அரைடீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும். ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் சுத்தம் செய்த கீரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

    கீரை பாதியளவு வெந்ததும் இறக்கி முட்டை கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும்.

    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, சுவையான கீரை ஆம்லெட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    முட்டை - 4
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 4
    உருளைக்கிழங்கு - 2
    கறிவேப்பிலை
    வெங்காயம் - 1
    வெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..

    நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேக விடவும்.

    இப்பொழுது ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து தட்டில் வைத்து முக்கோணமாக கேக் வெட்டுவது போல் வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த முட்டை அடையை சைடிஷ்ஷகாவும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். இன்று இந்த முட்டை அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை -  4
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
    புதினா - 1 /2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    சோம்பு - 1 /4 ஸ்பூன்
    பொட்டுக் கடலை - 2 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    மிக்சியில் தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, சோம்பு, கறிவேப்பிலை, புதினா இவற்றை நைசாக அரைத்த பின்னர், வெங்காயத்தை வைத்து ஒரு சுற்று சுற்றி (கொரகொரப்பாக) எடுத்துக்கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு போட்டு நன்றாக கலக்கவும்

    அடுப்பில் தோசைகல்லை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஒரு கரண்டியை அதில் ஊற்றவும். தீயை மிதமாக வைத்து, கருகவிடாமல் வெந்ததும் திருப்பி போடவும். பின்புமறு பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.. எல்லா முட்டைக் கலவையையும் இப்படியே ஊற்றி எடுக்கவும்.

    சூப்பரான முட்டை அடை ரெடி.

    இதனை எந்த சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். சூடாக சாப்பிட்டால், சுவை சூப்பரோ..சூப்பர். மாலைநேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு காய்கறிகள் சேர்த்து கொடுத்தால் வைட்டமினும் நார்ச்சத்தும் கிடைக்கும். இந்த ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3,
    துருவிய கேரட், கோஸ், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்ந்த கலவை - கால் கப்,
    கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
    சீரகத்தூள் -கால் டீஸ்பூன்,
    பொட்டுக்கடலை பொடி - 2 டீஸ்பூன்,
    பால் - 2 டீஸ்பூன்,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், மிளகுத்தூள், சீரகத்துள், முட்டை, பொட்டுக்கடலை, பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்த மாவை சிறிய ஆம்லெட்டுகளாக ஊற்றி சுற்றிலும் நெய் விடவும்.

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும்.

    சூப்பரான முட்டை வெஜிடபிள் ஆம்லெட் ரெடி.

    வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகள் கலந்து செய்து கொடுப்பதால் வைட்டமினும் நார்ச்சத்தும் அதிகமாக கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×