search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94530"

    சிக்கன் குழம்பு வகைகளில் தனியா (கொத்தமல்லி) சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. இதை சப்பாத்தி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் துண்டுகள் - 1 கிலோ
    கொத்தமல்லி இலை - 2 கட்டு
    புதினா இலை - 1 கட்டு
    வெங்காயம் - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    தயிர் - 250 மில்லி லிட்டர்
    தனியா தூள் - 3 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி இலை, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு, இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் அதில் பச்சைமிளகாய், சீரகத்தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.

    சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    மீதமுள்ள மிளகாய் தூள், தயிரை சேர்க்கவும்.

    அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும்.

    அடுத்து மூடி போட்டு சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும்.

    வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒரு குடும்பத்துக்கு அரை கிலோ ஆட்டிறைச்சி எடுத்து சமைப்பதே குதிரைக்கொம்பாக உள்ள நிலையில் உட்கார்ந்த இடத்தில் ஒருவர் 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக தின்று தீர்த்துள்ளார். #22KgMutton #Muttoneatingchallenge
    சென்னை:

    நோய்களுக்கு பயந்து அசைவப் பிரியர்கள் பலர் சைவத்துக்கு மாறிவிட்டாலும், சிலருக்கு உணவில் அசைவம் இல்லாவிட்டால் சாப்பிட இயலாது. என்னதான் அசைவப் பிரியர்களாக இருந்தாலும் அதிகபட்சமாக ஒருவரால் அரை கிலோ இறைச்சிக்கு மேல் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.

    ஆனால், பந்தயத்துக்காக ‘கிரில் மட்டன்’ என்றழைக்கப்படும் வெறும் சுட்ட ஆட்டிறைச்சியை தேனில் துவைத்து, இவர் சப்புக்கொட்டி சாப்பிடும் காட்சி, இவர் நவயுக பகாசுரனாக இருப்பாரோ.., என பார்ப்பவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

    22 கிலோ எடையுள்ள முழு ஆட்டையும் விழுங்கி முடித்த பிறகும் திருப்தி அடையாத இந்நபர் எலும்பு இடுக்கில் ஒட்டிக்கிடக்கும் துணுக்களவு இறைச்சியையும் சோற்றுத்தட்டில் உதறி எடுத்து, ரசித்து சுவைக்கும் சுகமே அலாதியானது. #22KgMutton  #Muttoneatingchallenge

    இதை வீடியோ வடிவில் காண..,



    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டலில் கிடைக்கும் ஃபிஷ் டிக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சதுரமாக வெட்டப்பட்ட மீன் துண்டுகள் - 1/2 கிலோ,
    தயிர் - 1 கப்,
    கடுகு பவுடர் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    பெருஞ்சீரக தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    வினிகர் - 4 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர், கடுகு பவுடர், உப்பு, சீரகத் தூள், பெருஞ்சீரக தூள், மிளகாய்த் தூள், கடுகு, மஞ்சள் தூள், வினிகர், இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த இந்த மசாலாவில் மீனை சேர்த்து நன்கு கலந்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

    பிறகு ஸ்க்யூவர் குச்சியில் ஒவ்வொரு துண்டுகளாக குத்தி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஃபிஷ் டிக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் நன்றாக தாய்ப்பால் சுரக்கும். இன்று இந்த சுறா புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுறா மீன் - 300 கிராம்,
    நறுக்கிய இஞ்சி - 1½ டேபிள்ஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 5,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 100 கிராம்,
    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 50 மி.லி.,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தோலுரித்து உதிர்த்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சுறா மீனை சேர்த்து நன்றாக கிளறவும்.

    மீன் நன்றாக உதிர்ந்து நன்கு வதங்கியதும் இறக்கி, கொத்தமல்லித்தழையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சுறா புட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    பன்னீர்  - 100 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி சாஸ்  - 1 ஸ்பூன்
    சோயா சாஸ்  - 1 ஸ்பூன்
    தனியாத்தூள்  - 1 ஸ்பூன்
    சீரகத்தூள்  - 1 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
    மிளகாய்த்தூள்  - 1 ஸ்பூன்
    குடைமிளகாய்  - 1



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வாணலியில் சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீரை எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளுடன், தனியா, சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும்.

    பின் வட்டமாக நறுக்கிய குடைமிளகாய், வறுத்த பன்னீர் துண்டுகளை போட்டு வதக்கவும்.

    இறுதியாக தக்காளி சாஸ், சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும்.

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிஷ் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீனை வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்பினால், கறிவேப்பிலை மீன் வறுவலை செய்து சுவையுங்கள். இதை வறுவலை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் (Pomfret Fish) - 1 பெரிய கையளவு
    தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    கறிவேப்பிலை - 1 கையளவு
    மிளகு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2-3
    பூண்டு - 4 பற்கள்
    பச்சை மிளகாய் - 3-4
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 3-4 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு அதனுடன் அரைத்த மசாலாவை மீனில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். இப்போது மட்டன் கீமா சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 150 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    துவரம் பருப்பு - 50 கிராம்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    நெய் - 3 டீஸ்பூன்
    புதினா - சிறிது
    கொத்தமல்லி - சிறிது
    ஏலக்காய் - 2
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    துவரம் பருப்பு, மட்டன் கீமாவை நன்றாக கழுவி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் துவரம் பருப்பு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மட்டன் கீமா சேர்த்து பிரட்டிய பின் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    கடைசியாக அதில் புதினா சேர்த்து கிளறி, மிளகாய் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    சுவையான மட்டன் கீமா சூப் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    முட்டை - 4
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 4
    உருளைக்கிழங்கு - 2
    கறிவேப்பிலை
    வெங்காயம் - 1
    வெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..

    நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேக விடவும்.

    இப்பொழுது ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து தட்டில் வைத்து முக்கோணமாக கேக் வெட்டுவது போல் வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பஞ்சாபி சிக்கன் கறி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்புடன் சிக்கன் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
    ஏலக்காய் - 2
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    தயிர் - கால் கப்
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    பட்டை - ஒரு சிறுத் துண்டு
    லவங்கம் - 3
    பிரியாணி இலை - ஒரு சிறுத் துண்டு
    கொத்தமல்லி இலை
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி



    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.

    இந்த அதை நன்றாக ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    பின் மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவேண்டும்.

    அடுத்து அதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவேண்டும்.

    பின் விழுதாக அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி பச்சை வாசம் போய் எண்ணெய் பிரியும் போது சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வேக விடவும்..

    சிக்கன் வெந்து மீண்டும் கலவை திரண்டு வரும் போது தயிர் சேர்த்து கலந்து நன்றாக கலவை கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் குழம்பு. இன்று இந்த மட்டன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
    மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
    தேங்காய் துருவல் - கால் கப்
    கசகசா - அரை மேசைக்கரண்டி
    சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
    பட்டை - அரை அங்குலத் துண்டு
    கல் உப்பு - 2 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி



    செய்முறை :

    மட்டனைத் துண்டுகளாக்கி கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

    தேங்காய் துருவலுடன் கசகசா சேர்த்து மிக்ஸி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும்.

    பிறகு உப்பு சேர்த்து பிரட்டவும். (உப்பு சேர்த்து பிரட்டுவதால் கறியில் நன்கு உப்பு சேர்ந்துவிடும்) மட்டன் சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    மிதமான தீயில் வைத்து மட்டன் தூள் வகைகள் ஒன்றாக சேரும்படி நன்கு 2 நிமிடங்கள் பிரட்டவும்.

    அடுத்து மட்டனுடன் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

    சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும். இப்போது சுவையான மட்டன் குழம்பு ரெடி.

    சுவையான மட்டன் குழம்பு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இடியாப்பத்தை வைத்து வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். இன்று இடியாத்துடன் சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 300 கிராம்
    இடியாப்பம் - 3 கப்
    பட்டை - இரண்டு
    லவங்கம் - இரண்டு
    ஏலக்காய் - இரண்டு
    பிரிஞ்சி இலை - ஒன்று
    வெங்காயம் - இரண்டு
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - இரண்டு
    தக்காளி - ஒன்று
    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    தண்ணீர் - அரை டம்ளர்
    உப்பு - தேவைகேற்ப
    கொத்தமல்லி - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லிபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் கடாயில் சேமியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் கலந்த பின்னர் சிக்கன், தண்ணீர் அரை கப் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    தண்ணீர் வற்றி சிக்கன் நன்றாக வெந்ததும் வறுத்த சேமியாவை அதில் சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும்.

    கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடங்கள் தம்மில் வைக்கவும் பிறகு பரிமாறவும்.

    சூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு முட்டை சேர்த்து சூப்பரான மேகி முட்டை மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2
    வெங்காயம் - 1
    மேகி பாக்கெட் - 1
    ப.மிளகாய் - 2
    முட்டை - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    சிக்கன் மசாலா - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சிக்கன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக உதிரியாக வந்தவுடன் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மேகி மசாலா சேர்க்கவும்.

    அடுத்து அதில் மேகி நூடுல்ஸை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    மேகி நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்

    சூப்பரான மேகி முட்டை மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×