search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94530"

    சிக்கனில் கொழுப்பு இருப்பதால், எங்கு அது உடல் எடையை அதிகரித்துவிடுமோ என்று அஞ்சுகிறீர்களா? அப்படியெனில் தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடலாம்.
    உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? சிக்கனில் கொழுப்பு இருப்பதால், எங்கு அது உடல் எடையை அதிகரித்துவிடுமோ என்று அஞ்சுகிறீர்களா? அப்படியெனில் தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுங்க. இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. ஆனால் சத்துக்களோ ஏராளம். ஆகவே இது அனைவருவம் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான ஓர் அசைவ உணவுப் பொருளாகும். முக்கியமாக சிக்கனின் நெஞ்சுக்கறியில் புரோட்டீன், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

    தோல் நீக்கப்பட்ட சிக்கன் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் சாப்பிட ஏற்றது. அதோடு இந்த சிக்கனை சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். இக்கட்டுரையில் தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    தோல் நீக்கப்பட்ட சிக்கனில் அமினோ அமிலமான ட்ரிப்டோஃபேன் அதிகளவில் உள்ளது. இது உடலுக்கு உடனடியாக ரிலாக்ஸ் அளிக்கும். நீங்கள் ஒருவேளை மன இறுக்கத்தில் இருந்தாலோ அல்லது மனக்கவலையுடன் இருந்தாலோ, தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுங்கள். இதனால் மூளையில் செரடோனின் அளவு அதிகரித்து, மன இறுக்கத்தில் இருந்து நிவாரணம் அளித்து, மனநிலையை மேம்படுத்த உதவும்.



    தோல் நீக்கப்பட்ட சிக்கனில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது. புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் அவசியமானது. ஆகவே நீங்கள் கட்டுமஸ்தான உடலைப் பெற நினைத்தால், தோல் நீக்கப்பட்ட சிக்கனைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

    தோல் நீக்கப்பட்ட சிக்கனில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களுடன், பி வைட்டமின்களும் அதிகம் உள்ளது. இது கண் புரை, பல்வேறு சரும பிரச்சனைகள், உடல் பலவீனம் போன்றவற்றை தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி, இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கும். ஆகவே தினமும் சிறிது தோல் நீக்கப்பட்ட சிக்கனை சிறிது சாப்பிட மறக்காதீர்கள்.

    டயட்டில் இருப்போர் தோல் நீக்கப்பட்ட சிக்கனை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தோல் நீக்கப்பட்ட சிக்கனில் புரோட்டீன் அதிகமாகவும், கொழுப்புக்கள் குறைவாகவும் உள்ளது. எனவே எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்போர், அசைவ உணவை சாப்பிட நினைத்தால் தோல் நீக்கப்பட்ட சிக்கனை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

    தோல் நீக்கப்பட்ட சிக்கனில் மற்ற இறைச்சிகளை விட சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவு. இதனை ஒருவர் உட்கொண்டு வந்தால், சாச்சுரேட்டட் கொழுப்புக்களால் ஏற்படும் அபாயம் குறையும் மற்றும் பல்வேறு வகையான இதய நோயின் அபாயமும் குறையும். முக்கியமாக தோல் நீக்கப்பட்ட சிக்கன், பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

    தோசை, இட்லி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் தொக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 3
    எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்)
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - ஒன்று
    சோம்பு - அரை டீஸ்பூன்
    பிரிஞ்சி இலை - ஒன்று
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெரிய வெங்காயம் - அலங்கரிக்கத் தேவையான அளவு
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    பெரிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். 5 விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து மட்டன் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொதிவரத் தொடங்கும் முன்பு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.

    கலவை சுண்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு வேகவிடவும்.

    கலவையில் தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவியானதும், அடுப்பை அணைத்துக் கொத்தமல்லித்தழை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    “ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் மீனில் உள்ளது. மீன் பஜ்ஜி மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட்ட அருமையாக இருக்கும். இன்று மீனில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    முள் இல்லாத துண்டு மீன் - முக்கால் கிலோ
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
    சோள மாவு - ஒரு கைப்பிடி அளவு
    கடலை மாவு - இரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை பழச்சாறு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ போல் அனைத்து மீனையும் செய்யவும்.

    இதோ சுவையான மீன் பஜ்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த முட்டை அடையை சைடிஷ்ஷகாவும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். இன்று இந்த முட்டை அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை -  4
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
    புதினா - 1 /2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    சோம்பு - 1 /4 ஸ்பூன்
    பொட்டுக் கடலை - 2 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    மிக்சியில் தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, சோம்பு, கறிவேப்பிலை, புதினா இவற்றை நைசாக அரைத்த பின்னர், வெங்காயத்தை வைத்து ஒரு சுற்று சுற்றி (கொரகொரப்பாக) எடுத்துக்கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு போட்டு நன்றாக கலக்கவும்

    அடுப்பில் தோசைகல்லை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஒரு கரண்டியை அதில் ஊற்றவும். தீயை மிதமாக வைத்து, கருகவிடாமல் வெந்ததும் திருப்பி போடவும். பின்புமறு பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.. எல்லா முட்டைக் கலவையையும் இப்படியே ஊற்றி எடுக்கவும்.

    சூப்பரான முட்டை அடை ரெடி.

    இதனை எந்த சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். சூடாக சாப்பிட்டால், சுவை சூப்பரோ..சூப்பர். மாலைநேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்)
    பச்சை மிளகாய் - 3
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - அரை டீஸ்பூன்
    பட்டை - மிகச் சிறிய துண்டு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 +1/2  டீஸ்பூன்
    மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு.

    அரைக்க....

    தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
    முந்திரிபருப்பு 10



    செய்முறை :


    மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    மீனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு பொரித்து எடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும். தக்காளி நன்கு  வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு ஒரு சேர வதக்கவும்.

    அடுத்து அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 

    அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

    வறுத்த மீன் குருமா ரெடி.

    இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். சீலா, வாவல், பாறை மீன் பொருத்தமாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆட்டு மூளையில் கொழுப்பு மிகவும் குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு மிகவும் நல்லது.
    தேவையான பொருள்கள்:

    ஆட்டு மூளை - 2
    மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
    ப.மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    வெங்காயம் - 1
    வெங்காயம் - 1/2 கப்
    சோம்பு - 1/2 ஸ்பூன்
    எண்ணெய் - 3 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் ஊற்றி மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.

    அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

    மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

    வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம்.ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்த மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

    மசாலா அனைத்து ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.

    சூப்பரான ஆட்டு மூளை பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இறாலை வறுவல், குழம்பு, கிரேவி, பிரியாணி என பலவகைகளில் சமையல் செய்து உண்ணுகிறார்கள். அதில் இறால் மசாலா தொக்கு செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 1/2 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி -2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    சோம்பு தூள் - 1/ 2டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
    மல்லித்தூள் -2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு லேசாக நிறம் மாறியதும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு குழைய நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் அதில் இறாலை போட்டு 10 நிமிடம் வதக்கியதும் சோம்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறி விடவும்.

    தொக்கு சுருள வதங்கி வந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    ருசியான இறால் மசாலா தொக்கு ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் கருவாட்டு குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று வாளைக்கருவாட்டுடன் மொச்சை, முருங்கைக்காய் சேர்த்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாளை கருவாடு - 6 துண்டுகள்,
    வெந்தயம், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
    நசுக்கிய பூண்டு - 5 பல்,
    சாம்பார் வெங்காயம் - 6,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
    நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை யாவும் கலந்தது - 1 கப்,
    உப்பு - தேவைக்கு.
    புளி - நெல்லிக்காய் அளவு,
    நல்லெண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    வாளை கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் வெந்தயம், மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

    பின்பு கரைத்த புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், மொச்சை, கருவாடு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெத்திலி மீன் - 1/2 கிலோ,
    நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
    கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
    காய்ந்தமிளகாய் - 5,
    சாம்பார் வெங்காயம் - 6,
    பச்சைமிளகாய் - 2,
    இடிச்ச பூண்டு - 5 பல்,
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
    தனியாத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
    மிளகுத்தூள், கொத்தமல்லி - சிறிது,
    உப்பு -  தேவைக்கு.



    செய்முறை :

    நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், ப.மிளகாய், இடிச்ச பூண்டு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேங்காய்த்துருவல், நெத்திலி மீன், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான நெத்திலி மீன் பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை ஆந்திராவில் கோழி வெப்புடு என்று சொல்வார்கள். இது சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல சைடிஷ்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 200 கிராம்
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1 சிறியது
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 20 கிராம்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
    மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 40 மில்லி
    இஞ்சி - பூண்டு விழுது - 15 கிராம்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    தக்காளி, சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் ததக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து வதக்கவும்.

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லித்தழையைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை ரெடி.

    தயிர் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல சைடிஷ்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனில் மிளகு தூள், தேங்காய் சேர்த்து குழம்பு செய்தால் அருமையாக இருக்கும். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சின்னவெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2
    மிளகுதூள் - 4 ஸ்பூன்
    சீரகத்தூள் - 2 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    தயிர் - 3 ஸ்பூன்
    தேங்காய்பால் - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய் - 3 ஸ்பூன்



    செய்முறை :

    சிக்கனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.

    கழுவிய சிக்கனில் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.

    சிக்கன் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

    சுவையான தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், தோசை, பரோட்டா, சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மதுரை ஸ்பெஷல் மட்டன் சால்னா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு..

    தேங்காய் - 3 ஸ்பூன்
    சோம்பு - அரை ஸ்பூன்
    சீரகம் - அரை ஸ்பூன்
    மிளகு -  கால் ஸ்பூன்
    எண்ணெய் - 5 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    பட்டை
    கிராம்பு
    ஏலக்காய்
    பிரியாணி இலை



    செய்முறை :

    மட்டனை கழுவி சுத்தம்செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து தக்காளியின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 7 விசில் விட்டு இறக்கவும்

    10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்பெஷல் மட்டன் சால்னா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×