search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    ஐடியா செல்லுலார் பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #offers
    ஐடியா செல்லுலார் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.295 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் அழைப்புகளின் படி தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐடியாவின் ரூ.295 சலுகை ஏர்டெல் வழங்கி வரும் ரூ.299 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ.251 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    மேலும் ஐடியா அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சலுகையின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 100 வெவ்வேறு எண்களுக்கு மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதனால் 100 எண்களை கடந்து அழைப்புகளை மேற்கொள்ளும் போது அழைப்பு கட்டணம் நொடிக்கு ரூ.1 பைசா வீதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று 5 ஜிபி டேட்டா அளவை கடந்ததும், டேட்டா கட்டணமாக 10 கே.பி.-க்கு 4 பைசா வசூலிக்கப்படுகிறது. ரூ.295 ஐடியா சலுகை நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் 4ஜி வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. புதிய ஐடியா சலுகையை பயனர்கள் மைஐடியா ஆப் அல்லது ஐடியா வலைதளம் சென்று ரீசார்ஜ் செய்ய முடியும்.

    ஐடியாவின் ரூ.295 சலுகை ஏர்டெல் ரூ.299 மற்றும் ஜியோ ரூ.251 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. ஏர்டெல் ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இதில் டேட்டா வழங்கப்படவில்லை.

    ஜியோ வழங்கும் ரூ.251 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் ஜியோ சலுகையில் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுவதில்லை.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ரூ.75 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BSNL #offer


    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.75 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 10 ஜிபி டேட்டா மற்றும் 500 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 15 நாட்கள் ஆகும், எனினும் இதனை நீட்டிக்க முடியும்.

    அந்த வகையில் பயனர்கள் ரூ.75 சலுகையின் பலன்களை வேலிடிட்டி நிறைவுற்றதும் ரூ.98 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தி 18 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ள முடியும். பி.எஸ்.என்.எல். புதிய ரூ.75 சலுகை ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே வழங்கி வரும் ரூ.98 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.98 சலுகையில் 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். ரூ.171 சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். தற்சமயம் அறிவித்திருக்கும் ரூ.75 சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுவதாக டெலிகாம் டாக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கு பொருந்தாது.

    புதிய பி.எஸ்.என்.எல். சலுகை மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இதுதவிர பி.எஸ்.என்.எல். ரூ.98, ரூ.99, ரூ.118, ரூ.139, ரூ.187, ரூ.198, ரூ.333, ரூ.339, ரூ.349, ரூ.395, ரூ.444, ரூ.447 மற்றும் ரூ.551 விலையில் சலுகைகளை வழங்குகிறது. #BSNL #offer
    டெல்லியில் இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. #GSTCouncil #taxratesslashed #consumerproducts
    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு  வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு  12 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து பூரண விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    68 சென்ட்டி மீட்டர்கள் வரையிலான தொலைக்காட்சி பெட்டிகள். லித்தியம் இயான் பேட்டரிகள், வேக்கம் கிளீனர்கள், அறைவை இயந்திரங்கள், மிக்சி, வாட்டர் ஹீட்டர்கள், தலை, கைகளுக்கான டிரையர்கள், பெயிண்ட், வார்னீஷ், நறுமணப் பொருட்கள், குளியலறை ஸ்பிரே, ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள், டிரைலர்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் சாதனங்களுக்கான வரி 28-லிருந்து 18 சதவீதமாக இனி குறைக்கப்படும்.

    பளிங்கு, மரம் மற்றும் கற்களால் செய்த சாமி சிலைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து 100 சதவீதம் விலக்கு. (தங்கத்திலான மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்படாத) ராக்கி கயிறுகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து 100 சதவீதம் விலக்கு. 

    5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்பவர்கள் இனி காலாண்டுக்கு பதிலாக மாதந்தோறும் ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்துக்கான வரி 5 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் கூடிய 46 பரிந்துரைகள் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. 

    இந்த அம்சங்கள் யாவும் வரும் 27-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என நிதி மந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். #GSTCouncil #taxratesslashed #consumerproducts
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் மான்சூன் ஹங்காமா எனும் புதிய சலுகையில் ரூ.501 விலையில் ஜியோபோன் விற்பனை செய்யப்படுகிறது. #JioPhone #offers



    ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மான்சூன் ஹங்காமா (Monsoon Hungama) எனும் சலுகையை அறிவித்தார்.

    புதிய சலுகையின் கீழ் பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் பழைய மொபைல் போன்களை எக்சேஞ்ச் செய்து புத்தம் புதிய ஜியோபோனினை ரூ.501 விலையில் வாங்க முடியும். இந்தியாவில் ஜியோபோன் ரூ.1500 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் புதிய சலுகையின் கீழ் ரூ.501 விலையில் ஜியோபோன் விற்பனை செய்யப்படுகிறது.



    ஜியோ அறிவித்திருக்கும் மான்சூன் ஹங்காமா சலுகையின் முழு விவரங்கள்:

    - மான்சூன் ஹங்காமா எக்சேஞ் சலுகையின் மூலம் ஜியோபோனினை ரூ.501 செலுத்தி வாங்க முடியும்.

    - மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கி ரூ.501 கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ள முடியும், அந்த வகையில் ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    - பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்திய வோல்ட்இ வசதியில்லாத பழைய 2ஜி, 3ஜி, 4ஜி மொபைல் போன்களை கொடுத்து ரூ.501 சலுகையை பெற முடியும்.

    - பயனர்கள் வழங்கும் பழைய மொபைல் போன் சீராக இயங்க வேண்டும் என்பதோடு, மொபைலுக்கு உரிய சார்ஜரை வழங்க வேண்டும்.

    - புதிய ஜியோ போன் வாங்கும் விற்பனை மையத்தில் பயனர்கள் தங்களின் பழைய மொபைல் போனை வழங்க வேண்டும்.

    - பயனர்கள் வழங்கும் பழைய மொபைல் போன் சீராக இயங்குவதோடு, அதன் பாகங்கள் உடையாமலும், மற்றபடி எதுவும் ஏற்பட்டிருக்க கூடாது. இத்துடன் பழைய மொபைல் போன் 2015, ஜனவரி 1-ம் தேதி மற்றும் அதற்கும் பின் வாங்கப்பட்டு இருக்க வேண்டும்.

    - ஜியோபோன் அல்லது சி.டி.எம்.ஏ. (CDMA) அல்லது ஆப்பரேட்டர் லாக் (குறிப்பிட்ட நிறுவன சிம் மட்டுமே வேலை செய்யக்கூடிய மொபைல்கள்) செய்யப்பட்ட சாதனங்களை ஜியோ மான்சூன் ஹங்காமா சலுகையின் கீழ் எக்சேஞ் செய்ய முடியாது.

    - பழைய மொபைல் போனுடன் பேட்டரி மற்றும் சார்ஜர் தவிர மற்ற உபகரணங்கள் அதாவது ஹெட்செட் போன்றவற்றை பயனர்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை.



    மான்சூன் ஹங்காமா ஜியோபோன் சிறப்பு சலுகை:

    மான்சூன் ஹங்காமா சலுகை ஜியோபோனினை ரூ.501 விலையில் வழங்குவதோடு அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் 90 ஜிபி டேட்டா (தினமும் 0.5 ஜிபி டேட்டா) 6 மாதங்களுக்கு வழங்குகிறது. இந்த சலுகையை பெற பயனர்கள் புதிய ஜியோபோனை ஆக்டிவேட் செய்யும் போது ரூ.594 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

    கூடுதலாக ஜியோபோன் பயனர்கள் மான்சூன் ஹங்காமா சலுகையுடன் ரூ.101 கூடுதலாக செலுத்தினால் 6 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.99 விலையில் தனி சலுகை ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினமும் 0.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    இன்று (ஜூலை 21-ம் தேதி) முதல் வழங்கப்படும் ஜியோபோன் மான்சூன் ஹங்காமா சலுகையின் மூலம் ஜியோபோன் பயனர்கள் தங்களது டெலிகாம் செலவில் கிட்டத்தட்ட 50% வரை சேமிக்க முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது. #JioPhone #offers
    பேடிஎம் மால் தளத்தில் ஜியோபோன் வாங்குவோருக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jiophone #paytm



    பேடிஎம் மால் தளத்தில் ரிலையன்ஸ் ஜியோபோன் வாங்குவோருக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் தள்ளுபடி தொகை கேஷ்பேக் வடிவில் வழங்கப்படுகிறது. பேடிஎம் மால் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் பெற Monsoon500 எனும் கூப்பன் கோடினை பதிவு செய்து பெறலாம்.

    கேஷ்பேக் சலுகை பேடிஎம் தளத்தின் மான்சூன் லாயல்டி கேஷ்பேக் மூலம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஜியோபோனை ரூ.1,099-க்கு பெற முடியும். பேடிஎம் சலுகைக்கும் ஜியோ சமீபத்தில் அறிவித்த மான்சூன் ஹங்காமா சலுகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 

    ரிலையன்ஸ் ஜியோபோன் பயனர்களுக்கு மான்சூன் ஹங்காமா சலுகை ஜூலை 21-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவித்தார்.



    இத்துடன் பயனர்கள் தங்களின் பழைய ஃபீச்சர்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ஜியோபோனை ரூ.501 விலையில் பெற முடியும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி பயனர்கள் ஜூலை 21-ம் தேதி முதல் தங்களது ஃபீச்சர்போனை எக்சேஞ்ச் செய்து ஜியோபோனை ரூ.501-க்கு பெற முடியும்.

    எனினும், ரூ.501 எக்சேஞ்ச் சலுகையில், ஜியோபோன் இலவசமாக பெற முடியாது. மான்சூன் ஹங்காமா சலுகையில் ஜியோபோன் வாங்கும் போது நீங்கள் செலுத்தும் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஜியோபோனை இலவசமாக வாங்க ரூ.1500 செலுத்த வேண்டும், இதற்கு எக்சேஞ்ச் சலுகை பொருந்தாது.



    ஜியோபோன் சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் QVGA 240x320 பிக்சல் டிஸ்ப்ளே
    - 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் சிப்செட்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 2 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    ஜியோபோனில் ஜியோ அசிஸ்டண்ட் மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது ஜியோபோனினை குரல் மூலமாகவே இயக்க முடியும். இத்துடன் புதிய அப்டேட் மூலம் ஜியோபோனில் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #jiophone #paytm
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.199 சலுகையை மாற்றியமைத்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone



    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் பழைய சலுகையில் பயனர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.199 சலுகையில் தினமும் அதிகபட்சம் 2.8 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

    28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 78.4 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. எனினும் எஸ்.எம்.எஸ். சலுகைகள் வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து டெலிகாம்டாக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வோடபோன் தனது ரூ.199 சலுகையை மேம்படுத்தி தற்சமயம் தினமும் 2,8 ஜிபி டேட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    அன்லிமிட்டெட் அழைப்புகளின் படி பயனர்கள் தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும் பேச முடியும். புதிய மாற்றத்தின் படி வோடபோன் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணத்தை ரூ.2.54 விலையில் வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Vodafone #telecom
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. #BSNL #offers



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் புதிய சலுகைகள் எவ்வித தினசரி கட்டுப்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ரூ.39 விலையில் புதிய சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

    பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் ரூ.39 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. புதிய சலுகையில் பத்து நாட்கள் வேலிடிட்டி கொண்டிருப்பதோடு இந்தியா முழுக்க அனைத்து பி.எஸ்.என்.எல். வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.

    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மட்டுமின்றி, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங்-பேக் டோன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. எனினும் மற்ற பி.எஸ்.என்.எல். சலுகைகளை போன்றே இலவச வாய்ஸ் கால் சேவை மும்பை மற்றும் டெல்லி போன்ற வட்டாரங்களில் பொருந்தாது.

    ரூ.99 விலையில் கிடைக்கும் பி.எஸ்.என்.எல். சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங்-பேக் டோன் 26 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.319 சலுகையில் இதே சலுகைகள் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.  எனினும் இரண்டு சலுகைகளிலும் எஸ்.எம்.எஸ். வசதி வழங்கப்படவில்லை.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.49 விலையில் கிடைக்கும் சலுகையில் 28 நாட்களுக்கு, தினமும் 50 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதே சலுகையில் 1 ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவும், 1 ஜிபி அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படுகிறது.

    இத்துடன் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை தற்சமயம் வரை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்றபடி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இதே போன்ற சலுகைகள் ரூ.98 விலையில் வழங்கப்படுகின்றன. #BSNL #offers
    பி.எஸ்.என்.எல். ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் 50 ஜிபி கூடுதல் டேட்டா வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    ஜிகாஃபைபர் அறிவிப்பை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பி.எஸ்.என்.எல். FTTH ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 விலை சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு 50 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ரூ.1,045 பி.எஸ்.என்.எல். ஃபைப்ரோ ULD 1045 CS48 சலுகையில் மாதம் 150 ஜிபி டேட்டா 30Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. இதே சலுகையில் ஏற்கனவே 100 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.

    ரூ.1,395 ஃபைப்ரோ BBG ULD 1395 CS49 சலுகையில் மாதம் 200 ஜிபி டேட்டா 40Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.1,895 சலுகையில் மாதம் 250 ஜிபி டேட்டா 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகைகள் தற்சமயம் கேரளாவில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் பி.எஸ்.என்.எல். ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.4,999 சலுகையில் 1500 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. முதற்கட்டமாக 1500 ஜிபி வரையிலான டேட்டாவிற்கு 100Mbps வேகமும், அதன்பின் டேட்டா வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும். புதிய ரூ.4999 சலுகையில் பி.எஸ்.என்.எல். எண்களுக்கு இலவச வாய்ஸ் கால், மின்னஞ்சல் வசதி மற்றும் ஸ்டேட்டிக் IP முகவரி வழங்கப்படுகிறது.



    பி.எஸ்.என்.எல். ரூ.999, ரூ.1,299, ரூ.1,699, ரூ.1,999 மற்றும் ரூ.2,999 சலுகைகளும் சமீபத்தில் மார்றம் செய்யப்பட்டன. இத்துடன் 20Mbps வேகத்தில் டேட்டா வழங்கும் நான்கு பிராட்பேன்ட் சலுகைகளை அறிவித்தது. இவற்றின் கட்டணம் ரூ.99 முதல் துவங்குகிறது. இவை ஃபைபர் அல்லாத சலுகைகள் என்பதால் பயனர்கள் பாதுகாப்பு முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.  

    பி.எஸ்.என்.எல். ரூ.99 சலுகையில் ஒரு மாத காலத்துக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக குறைக்கப்படும். 

    பி.எஸ்.என்.எல். ரூ.199 சலுகையில் தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக குறைக்கப்படும்.

    இதேபோன்று ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 10 ஜிபி டேட்டா என மாதம் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.399 சலுகையில் தினமும் 20 ஜிபி டேட்டா என மாதம் 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு விங்ஸ் எனும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்டு முழுக்க அன்லிமிட்டெட் ஆடியோ, வீடியோ கால் வழங்கப்படுகிறது. #BSNL #offer



    பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்டர்நெட் டெலிஃபோனி சேவையான விங்ஸ் (WINGS) அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் டிராய் வழங்கிய பரிந்துரையை ஏற்கும் வகையிலும், இன்டர்நெட் டெலிஃபோனி சேவையை வழங்குவதற்கு மத்திய டெலிகாம் துறையின் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    IMS NGN (மல்டிமீடியா சப்-சிஸ்டம் மற்றும் அடுத்த தலைமுறை நெட்வொர்க்) கோர் ஸ்விட்ச்களின் IP- சார்ந்த அக்சஸ் நெட்வொர்க் வழங்கும் மொபைல் நம்பரிங்-ஐ கொண்டு இந்த சேவை இயங்குகிறது. இதனை பயன்படுத்த பயனர்கள் SIP க்ளையன்ட் (சாஃப்ட் செயலி) ஒன்றை தங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.



    இந்த செயலி SIP போன்று இயங்கி இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் வழி செய்கிறது. இதன் மூலம் மொபைல் போன் அல்லது லேண்ட்லைன் மொபைல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். சந்தாதாரர் IMS கோர் மற்றும் IP நெட்வொர்க்-ஐ பயன்படுத்தி வாய்ஸ் சேவையை பி.எஸ்.என்.எல். விங்ஸ் மூலம் வழங்கும்.

    பி.எஸ்.என்.எல். தனது பயனர்களுக்கு அன்லிமிட்டெட் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் வசதியை ஒரு முறை ஆக்டிவேஷன் கட்டணமாக ரூ.1,099 வசூலிக்கிறது. புதிய இணைப்புகளுக்கான முன்பதிவுகள் துவங்கியிருக்கிறது. ஆகஸ்டு 1, 2018 முதல் இந்த சேவை துவங்கப்பட இருக்கும் நிலையில், பயனர்கள் ஒவ்வொரு டெலிகாம் வட்டாரங்களிலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை தற்சமயம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. #BSNL #offer #telecom
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோஃபை 4ஜி ரவுட்டர் விலை பாதியாக குறைக்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஜியோஃபை 4ஜி ரவுட்டர் விற்பனையை அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோ புதிய கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் பயனர்களுக்கு ரூ.500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் புத்தம் புதிய ஜியோஃபை சாதனத்தை ரூ.499 விலையில் பெற முடியும்.

    முன்னதாக ஜியோஃபை சாதனத்தின் விலை ரூ.1,999-இல் இருந்து ரூ.999 ஆக குறைக்கப்பட்டது. புதிய கேஷ்பேக் சலுகையின் கீழ் பயனர்கள் முதலில் புதிய ஜியோஃபை சாதனத்தை வாங்க வேண்டும், ஏற்கனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.

    ஜூலை 3-ம் தேதி முதல் வழங்கப்படும் புதிய கேஷ்பேக் சலுகையை பெற இறுதி தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஜியோ ஸ்டோர் மட்டுமின்றி அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வலைத்தளங்களிலும் ஜியோஃபை விற்பனை செய்யப்படுகிறது.



    ஜியோஃபை கேஷ்பேக் சலுகையை பெற பயனர்கள் சாதனத்தை வாங்கி, புதிய போஸ்ட்பெயிட் சிம் கார்டை பெற வேண்டும். பின், ரூ.199 எனும் குறைந்தபட்ச தொகையில் உள்ள சலுகையை பெற்று, 12 மாதங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 12 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த தொகையை மற்ற கட்டணங்களில் தள்ளுபடி செய்து கொள்ள முடியும்.

    ஜியோ போஸ்ட்பெயிட் ரூ.199 சலுகையில் பயனர்களுக்கு 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் மெசேஜ்கள், ஜியோ செயலிகளுக்கான பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்னதாக ஜியோ ஒப்போ மான்சூன் சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்களுக்கு ரூ.4,900 மதிப்புடைய சேவைகள் வழங்கப்படுகின்றது.
    வோடபோன் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு குறைந்த கட்டணத்தை உறுதி செய்யும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.




    வோடபோன் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய சலுகைகளுடன் மொபைல் இன்சூரன்ஸ், அன்லிமிட்டெட் சர்வதேச ரோமிங் சலுகைகள், பொழுதுபோகுக்கு தரவுகள் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ரெட் பேசிக் சலுகை விலை ரூ.299 முதல் துவங்கி அதிகபட்சம் சிக்னேச்சர் சலுகை விலை ரூ.2,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    வோடபோன் ரெட் சலுகைகள்:

    குறைந்த மாத கட்டணம் உறுதி - ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளில் பயனருக்கு ஏற்ற மிகச்சிறந்த சலுகையை ஆப்டிமைசேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் உறுதி செய்கிறது. இதனால் ரெட் போஸ்ட்பெயிட் பயனர்கள் எவ்வித அதிர்ச்சியும் கொள்ள வேண்டியதில்லை.

    ரெட் டுகெதர் (RED Together):

    இந்த சலுகையில் பயனர்கள் தங்களின் நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் இதர சாதனங்களை ரெட் சேவையின் கீழ் கொண்டு வந்து, மொத்த கட்டணத்தில் அதிகபட்சம் 20% வரை சேமிக்க முடியும். இதன் மூலம் அனைவருக்கும் ஒரே கட்டணமாக செலுத்த முடியும்.



    என்டர்டெயின்மென்ட் (Entertainment):

    என்டர்டெயின்மென்ட் சலுகையின் கீழ் அமேசான் பிரைம் சேவைகளுக்கு 12 மாத இலவச சந்தா, 12 மாதங்களுக்கு வோடபோன் பிளே இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் அன்லிமிட்டெட் தொலைகாட்சி, புதிய திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும். ரெட் இன்டர்நேஷனல், ரெட் இன்டர்நேஷனல் பிளஸ், ரெட் சிக்னேச்சர் மற்றும் ரெட் சிக்னேச்சர் பிளஸ் சலுகைகளில் அதிகபட்சம் 12 மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.

    சர்வதேச ரோமிங்:

    உலகின் 20 நாடுகளுக்கு அன்லிமிட்டெட் இலவச அழைப்புகள் மற்றும் டேட்டா உள்ளிட்டவை நாள் ஒன்றுக்கு ரூ.180 விலையில் ஆட்-ஆன் பேக் வடிவில் வழங்கப்படுகிறது.

    மொபைல் இன்சூரன்ஸ்:

    ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் சலுகை மற்றும் அதற்கும் அதிக விலையில் சலுகைகளை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மொபைல் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை எவ்வித சேதங்களில் இருந்தும் பாதுகாத்து கொள்ள முடியும். வாழ்நாள் முழுக்க பயனர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தங்களது ஸ்மார்ட்போனினை மாற்றிக் கொண்டு புதிய சாதனத்திற்கும் இன்சூரன்ஸ் பெற முடியும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகள் முழுமையாக மாற்றியமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    அதன்படி அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்பட இருப்பதாகவும், இந்த சலுகை ஜூலை 1-ம் தேதி முதல் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றின் தினசரி டேட்டா அளவில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதால், தினசரி டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.1,999 விலையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை அறவித்தது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகை மற்றும் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெயிட் சலுகைகள் ரூ.99-இல் துவங்கி அதிகபட்சம் ரூ.1,525 வரை கிடைக்கிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.99 சலுகையில் ஒரு மாத காலத்துக்கு 500 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது, ரூ.1,525 சலுகையில் தினசரி டேட்டா அளவில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை என கூறப்படுகிறது. அனைத்து சலுகைகளிலும் மற்றபடி எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதேபோன்று பி.எஸ்.என்.எல். ஆட்-ஆன் சலுகைகள் ரூ,.50 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,711 வரை கிடைக்கிறது. 

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 விலையில் ஒரே ஒரு போஸ்ட்பெயிட் சலுகையை வழங்குகிறது. 25 ஜிபி 4ஜி டேட்டா வழங்கும் இந்த சலுகையில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 25 ஜிபி டேட்டா நிறைவுற்றதும், பயனர்கள் ஒரு ஜிபி டேட்டாவினை ரூ.20 கட்டணம் செலுத்தி பயன்படுத்த முடியும்.
    ×