search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதத்தில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு உண்மையான அன்லிமிட்டெட் டேட்டா அனுபவத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக பாரதி ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்வோருக்கு உண்மையான அன்லிமிட்டெட் அனுபவத்தை வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.

    புதிய அறிவிப்பை தொடர்ந்து அதிவேக டேட்டா அளவு பயன்படுத்தியதும், டேட்டா வேகம் 128Kbps ஆக இருக்கும், பிஎஸ்என்எல் ஏற்கனவே இதே வேகத்தில் டேட்டா சேவையை வழங்குகிறது, சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தினசரி பயன்பாட்டு அளவை கடந்ததும் டேட்டா வேகம் 128Kbps இல் இருந்து 64Kbps ஆக குறைக்கப்பட்டது. 

    மார்ச் மாதம் ஏர்டெல் அறிவித்த ரூ.995 சலுகையில் முதல்முறையாக உண்மையான அன்லிமிட்டெட் சேவையை வாய்ஸ் கால் சேவைகளில் அறிமுகம் செய்தது. ஏர்டெல் வாடிக்கையாளர்களில் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகையை பயன்படுத்துவோர் தங்களின் தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும் 128Kbps வேகத்தில் டேட்டா பயன்படுத்த முடியும். 


    கோப்பு படம்

    இதனால் தினசரி டேட்டா அளவு கடந்ததும் கூடுதல் டேட்டா வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்ததும், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டேட்டா அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பிராட்பேன்ட் சேவையில் குறிப்பிட்ட அளவை கடந்ததும் டேட்டா வேகம் 512Kbps ஆக மாற்றப்படுகிறது. 

    ஏர்டெல் புதிய அறிவிப்பு தினசரி டேட்டா வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும், இதனால் வழக்கமான இன்டர்நெட் பேக் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும், கட்டணம் வசூலிக்கப்படும். புதிய சலுகையை பெற புதிதாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, ஏற்கனவே ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வேகம் தானாக 128Kbps ஆக மாற்றப்படும்.
    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.118 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    புதிய பிஎஸ்என்எல் சலுகையில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ரூ.98 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் சார்பில் PRBT டியூன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய சலுகையை ரீசார்ஜ் செய்ததும், இந்த சேவை தானாக ஆக்டிவேட் ஆகிவிடும். வாடிக்கையாளர்கள் இந்த டியூன்களை மாற்றும் போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    பிஎஸ்என்எல் புதிய ரூ.118 சலுகை சென்னை, தமிழ்நாடு, கொல்கத்தா மற்றும் பல்வேறு இதர வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரோமிங்கின் போது மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களை தவிர்த்த பகுதிகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. ஏர்டெல் ரூ.93 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஐடியா வழங்கும் ரூ.109 சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழை்ப்புகள், 1 ஜிபி டேட்டா, 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவை கடந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு ஒரு நொடிக்கு ஒரு பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
    வெளிநாட்டு பயணிகள் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய 365 நாட்களுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. #TrainTicketBooking #ForeignTourist
    புதுடெல்லி:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் வாயிலாக தினமும் லட்சக்கணக்கான உள்நாட்டு பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதற்காக ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தற்போது வெளிநாட்டு பயணிகள் 120 நாட்களுக்கு முன்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதை 365 நாட்களுக்கு, அதாவது 1 ஆண்டுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பாஸ்போர்ட் நம்பர், சர்வதேச மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்தின்போது அசல் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றார். 
    ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை திருவிழா இன்று துவங்கியது. இதில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
    புதுடெல்லி:

    ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை திருவிழா துவங்கியது. 

    சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களுக்கு சிறப்பு விற்பனை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கூகுள் பிக்சல் 2, சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 பிளஸ், ஆப்பிள் ஐபோன் X உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை ப்ளிப்கார்ட் மொபைல் செயலியை பயன்படுத்துவோருக்கும் வழங்கப்படுகிறது.



    ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள்

    ஐபோன் X ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் ரூ.13,391 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.81,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
    இதேபோன்று கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.18,001 வரை குறைக்கப்பட்டு ரூ.54,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ரூ.15,000 வரை எக்சேஞ்ச் மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.10,000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ப்ளிப்கார்ட் விற்பனையில் ரூ.43,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.42,999 விலையில் விற்பனை செய்யப்படுவதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.8000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ஹூவாய் ஹானர் 9 லைட் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று ஹானர் 9 லைட் 4 ஜிபி ரேம் ரூ.2000 விலை குறைக்கப்பட்டுள்ளது. ஹானர் 9i ஸ்மார்ட்போன் ரூ.2000 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    ரெட்மி நோட் 5 (4ஜிபி) ஸ்மார்ட்போன் ரூ.1200 தள்ளுபடி செய்யப்பட்டு ப்ளிப்கார்ட் விற்பனையில் ரூ.10,799-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒப்போ எஃப் 7 64 ஜிபி மாடல் ஃபிளாஷ் முறையில் விற்பனைக்கு வரயிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கும் ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், கேமரா மற்றும் பல்வேறு சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.4999 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு பொருட்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இத்துடன் எக்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா மாத தவனை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு பைபேக் கியாரன்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை திருவிழா மே 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

    குறிப்பு: இங்கு தொகுக்கப்பட்டு இருக்கும் சாதனங்களின் விலை எந்நேரத்திலும் ப்ளிப்கார்ட் சார்பில் மாற்றப்படலாம். சலுகைகள் மற்றும் தள்ளுபடி விவரங்கள் ஸ்டாக் இருப்புக்கு தகுந்தார்போல் மாற்றியமைக்கப்படும்.
    ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சீரோ-டச் எனும் போஸ்ட்பெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சீரோ-டச் எனும் புதிய போஸ்ட்பெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய சலுகையில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், இன்டர்நெட், சர்வதேச அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய போஸ்ட்பெயிட் சலுகை விலை ரூ.199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 25 ஜிபி டேட்டா, சர்வதேச அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையில் மற்ற போஸ்ட்பெயிட் திட்டங்களை போன்று இல்லாமல், கட்டணத்தை எப்போது வேண்டுமானாலும் பார்த்து தெரிந்து கொள்ளும் வசதி மற்றும் மாத இறுதியில் கட்டண விவரத்தை இன்பாக்ஸ்-லும் பெற முடியும். புதிய சலுகையை பயன்படுத்துவோர் உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் சேவை சீராக கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது.



    ஒரு கிளிக் மூலம் சர்வதேச ரோமிங் சேவையை ஆக்டிவேட் செய்யும் வசதி கொண்ட ஜியோ சீரோ-டச் சலுகையில் கட்டணங்கள் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வாய்ஸ் கால் மேற்கொள்ள நிமிடத்திற்கு ரூ.2, ஒரு எம்பி டேட்டா ரூ.2, எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.2 என்றும் அன்லிமிட்டெட் சலுகைகள் நாள் ஒன்றுக்கு ரூ.500 (வரிகள் தவிர்த்து) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எவ்வித முன்பணமும் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், லண்டன், ஜெர்மனி, இலங்கை, மலேசியா, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, துருக்கி, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, கிரீஸ், போர்ச்சுகல், ரோமானியா, செக் குடியரசு மற்றும் ஐயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    புதிய ஜியோ போஸ்ட்பெயிட் சலுகை மே 15-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
    பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் சம்மர் சேல் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிளிப்கார்ட் தளத்தின் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அமேசான் தளத்திலும் சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அமேசான் சம்மர் சேல் என பெயரிடப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மே 1-ம் தேதி துவங்கி மே 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதே தினங்களில் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையும் நடைபெறுகிறது. அமேசான் சிறப்பு விற்பனையில் மொபைல் போன்கள், நுகர்வோர் மின்சாதனங்கள், தொலைகாட்சிகள் மற்றும் பல்வேறு இதர பொருட்களுக்கு சிறப்பு விற்பனை மற்றும் சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. 

    சிறப்பு சலுகைகளில் விலை குறைப்பு, தள்ளுபடி மட்டுமின்றி வட்டியில்லா மாத தவனை முறை வசதி, கேஷ்பேக் மற்றும் எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அமேசான் சிறப்பு விற்பனை நாட்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பிரான்டுகளின் 40,000 டீல்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 



    அமேசான் விற்பனை சலுகை முன்னோட்டம்

    அமேசான் சம்மர் சேல் விற்பனையில் மொபைல் போன்களுக்கு அதிகபட்சம் 35% தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. ஹானர் 7X, நோக்கியா 7 பிளஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்பட இருப்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியல்மி 1 ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனையில் முதல் முறையாக விற்பனைக்கு வரயிருக்கிறது. வரும் நாட்களில் சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் சலுகைகளின் மற்ற விவரங்கள் தெரியவரும்.

    இதுமட்டுமின்றி அமேசான் செயலியை பயன்படுத்துவோருக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இவை விற்பனை நாட்களில் இரவு 8 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையில் கலந்து கொள்வோரில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள சிறப்பு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

    மொபைல் போன் உதிரிபாகங்களுக்கு அதிகபட்சம் 80% தள்ளுபடியும், அனைத்து மாடல் மொபைல் போன் கேஸ்களுக்கும் 75% தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதேபோன்று ப்ளூடூத் ஹெட்செட் சாதனங்களுக்கு 35%, பவர் பேங்க் சாதனங்களுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    லேப்டாப் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000 வரை தள்ளுபடியும், கம்ப்யூட்டர் உதிரிபாகங்களுக்கு அதிகபட்சம் 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் கேமராக்கள், ஹெட்போன்கள், ஸ்பீக்கர்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஸ்டோரேஜ் சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

    நான்கு நாட்கள் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரூ.250-க்கும் அதிகமாக பொருட்களை வாங்கி அமேசான் பே பேலன்ஸ் மூலம் பணம் செலுத்துவோருக்கு கூடுதலாக 10 சதவிகிதம் கேஷ்பேக் அதிகபட்சம் ரூ.300 வரை வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    ×