search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 96.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone #offers



    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

    69 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் ரூ.396 விலையில் 96.6 ஜி.பி. டேட்டா பெற முடியும். இச்சலுகையில் வழங்கப்படும் தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும், பயனர்களுக்கு அதிவேக டவுன்லோடுகளுக்கு ஒரு எம்.பி. டேட்டாவிற்கு 50 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும்.

    டேட்டா தவிர புதிய வோடபோன் சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் அழைப்புகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இத்துடன் தேசிய ரோமிங் சேவையும் வழங்கப்படுகிறது.



    முதற்கட்டமாக ரூ.396 சலுகை டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதேபோன்ற பலன்களை வழங்கும் மற்றொரு சலுகை கொல்கத்தாவில் ரூ.398 விலையில் வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் வோடபோன் தனது ரூ.399 சலுகையை மாற்றியமைத்து வேலிடிட்டியை 84 நாட்களாக அதிகரித்தது. எனினும், தினசரி டேட்டா அளவு 1.4 ஜி.பி.யில் இருந்து 1 ஜி.பி.யாக குறைக்கப்பட்டது. இதே சலுகையில் தினமும் 100 உள்ளூர், வெளியூர் எஸ்.எம்.எஸ்.கள் வழங்கப்படுகிறது. 

    ஆண்டு சலுகையை பொருத்தவரை வோடபோன் ரூ.1499 சலுகை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இச்சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 1 ஜி.பி. அதிவேக டேட்டா மற்றும், அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் அழைப்புகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
    ப்ளிப்கார்ட் தளத்தில் அசுஸ் சிறப்பு விற்பனை துவங்கியது. அசுஸ் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ.8000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. #ASUS #Flipkart



    அசுஸ் இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் இணைந்து அசுஸ் டேஸ் எனும் சிறப்பு விற்பனையை நடத்துகின்றன. இன்று (ஜனவரி 9) துவங்கியிருக்கும் சிறப்பு விற்பனை ஜவனரி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    ப்ளிப்கார்ட் அசுஸ் டேஸ் சிறப்பு விற்பனையில் அசுஸ் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் அசுஸ் அறிமுகம் செய்த சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2, சென்ஃபோன் மேக்ஸ் எம்2 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.



    அசுஸ் டேஸ் விற்பனையில் தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

    - அசுஸ் சென்ஃபோன் 5 இசட் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,000 குறைக்கப்பட்டு ரூ.28,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    - அசுஸ் சென்ஃபோன் 5 இசட் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,000 குறைக்கப்பட்டு ரூ.24,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    - அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 6 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    - அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    - அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 3 ஜி.பி. + 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    - அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.4,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    இதுதவிர மொபைல் பாதுகாப்பு திட்டம் அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 (ரூ.1,299) மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 (ரூ.799) தற்சமயம் ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது. புதிய சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Idea #offer



    வோடபோன் நிறுவனத்தின் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் மாற்றம் செய்யப்பட்டு தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐடியா நிறுவனம் தனது ரூ.399 சலுகையை மாற்றியமைத்து, வோடபோன் வழங்கும் அதே சலுகைகளை வழங்கியது.

    இதைத் தொடர்ந்து ஐடியா நிறுவனம் ரூ.392 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.189 விலையில் ஐடியா சலுகையை அறிவித்தது.

    வோடபோன் போன்றே ஐடியா சலுகையிலும் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் கட்டுப்பாடுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 2 ஜி.பி. 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.



    ரூ.392 சலுகையில் ஐடியா பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 84 ஜி.பி. டேட்டா இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்ற கட்டுப்பாடுடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வோடபோனை போன்றே ஐடியா நிறுவனம் தனது ரூ.399 சலுகையை மாற்றியமைத்தது. இதில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் ரூ.399 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    வோடபோன் ஐடியா சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரீசார்ஜ் செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. #Vodafone #offers



    வோடபோன் ஐடியா நிறுவன பயனர்களுக்கு அந்நிறுவனம் புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகையின் கீழ் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.30 மதிப்புடைய அமேசான் பே வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. இந்த வவுச்சர்களை பயன்படுத்தி மொபைல் பில், டி.டி.ஹெச். ரீசார்ஜ், அமேசான் தளத்தில் வாங்கும் பொருட்களுக்கு செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

    புதிய சலுகையை பெற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.95 சலுகையை தேர்வு செய்ய வேண்டும், எனினும் அமேசான் பே வவுச்சர் பெறும் போது, ரீசார்ஜ் கட்டணம் ரூ.65 விலையில் கிடைக்கும். 

    புத்தாண்டு சலுகையின் கீழ் வோடபோன் ஐடியா ரூ.95 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30 அமேசான் பே வவுச்சர் வழங்குவதாக டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர் கொண்டு வாடிக்கையாளர்கள் மொபைல் பில், டி.டி.ஹெச். ரீசார்ஜ் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.



    வோடபோன் மற்றும் ஐடியா பிரீபெயிட் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் ரூ.95 விலை சலுகையை தேர்வு செய்து அதற்கான பலன்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை ஜனவரி 10 ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் புதிய புத்தாண்டு சலுகை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக வோடபோன் மற்றும் அமேசான் இணைந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சேவைக்கான சந்தாவில் 50 சதவிகித தள்ளுபடியை வழங்கின. தற்சமயம் வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளை பயன்படுத்துவோருக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
    பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிவித்து இருக்கும் ரூ.169 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் தேசிய அழைப்புகள் வழங்கப்படுகிறது. #Airtel #offers



    பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.169 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே விலையில் வோடபோன் நிறுவனமும் தனது பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்தது.

    ஏர்டெல் ரூ.169 பிரீபெயிட் சலுகையின் பலன்களை பார்க்கும் போது, பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் தேசிய ரோமிங், தினமும் 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 28 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை நாடு முழுக்க ஏர்டெல் பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தி வரும் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    வோடபோன் வழங்கும் ரூ.169 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

    எனினும் தினசரி டேட்டா அளவை கடந்ததும் ஒரு எம்.பி. டேட்டாவிற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்ததும் வாய்ஸ் கால் செய்ய நொடிக்கு 1.2 பைசா அல்லது நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 

    ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இந்த சலுகையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ஸ்மார்ட்போன் பயன்பாட்டை ஒரு வருடத்திற்கு தியாகம் செய்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. #NoPhoneForaYearContest



    ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வருவதைத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் தனியார் நிறுவனம் புதுவித போட்டியை அறிவித்துள்ளது.

    ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக விட்டமின்வாட்டர் எனும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டை தியாகம் செய்யும் முனைப்பு கொண்டவர்களுக்கு சவால் விடும் வகையில், புதிய போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டியில் பங்கேற்க விரும்புவோர் விட்டமின்வாட்டர் நிறுவனத்திடம் ஸ்மார்ட்போனில் இருந்து ஏன் உங்களுக்கு இடைவெளி வேண்டும் என்பதை விளக்கும் தகவல் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை டைப் செய்து அதனை ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும்.



    பங்கேற்போர் கேள்விக்கான பதில்களுடன் #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஷ்டேக் சேர்த்து பதிவிட வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள ஜனவரி 8, 2019க்குள் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட வேண்டும். பின் நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட மொபைல் போன் வழங்கப்படும்.

    போட்டியில் கலந்து கொள்வோர் 365 நாட்களுக்கு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மொபைல் போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுதவிர லேப்டாப், டெஸ்க்டாப், அமேசான் அலெக்சா, கூகுள் ஹோம் போன்ற சாதனங்களை பயன்படுத்தலாம். எனினும், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. 

    விட்டமின்வாட்டர் சார்பில் போட்டியாளர் ஜனவரி 22ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மொபைல் போன் வழங்கப்படும். ஒரு வருடம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை என்பதை விட்டமின்வாட்டர் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டே பரிசு தொகை வழங்கப்படும்.
    வோடபோன் நிறுவனம் ரூ.199 மற்றும் ரூ.399 விலையில் வழங்கி வரும் பிரீபெயிட் சலுகையை மாற்றி, தற்சமயம் கூடுதல் பலன்களை வழங்குகிறது. #Vodafone #Offer



    வோடபோன் நிறுவன பயனர்களுக்கு ரூ.169 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்ட சில தினங்களில் வோடபோன் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.199 மற்றும் ரூ.399 விலையில் வழங்கி வரும் பிரீபெயிட் சலுகைகளை மாற்றுவதாக வோடபோன் அறிவித்துள்ளது.

    புதிய மாற்றங்களின் படி இரு சலுகைகளிலும் பயனர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். வோடபோன் ரூ.199 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 42 ஜி.பி. டேட்டா கிடைக்கும். 

    டேட்டா தவிர அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் வரம்பற்ற ரோமிங் வழங்கப்படுகிறது. முன்னதாக தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 100 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.



    வோடபோன் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் சலுகையில் பயனர்களுக்கு 84 ஜி.பி. டேட்டா கிடைக்கும். 

    முன்னதாக இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு, தினசரி டேட்டா அளவு குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு சலுகைகளிலும் தினசரி வாய்ஸ் கால் அளவு 250 நிமிடங்களுக்கும், வாரம் 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    நிர்ணயிக்கப்பட்ட அளவு கடந்ததும், வாய்ஸ் கால் மேற்கொள்ள பயனர்கள் நொடிக்கு 1.2 பைசா அல்லது நிமிடத்திற்கு ஒரு ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும். இதேபோன்று நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு கடந்ததும், ஒரு எம்.பி. டேட்டா பயன்படுத்த 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். 
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பம்ப்பர் ஆஃபரை ஜனவரி 31, 2019 வரை நீட்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பயனர்களுக்கு தினமும் 2.1 ஜி.பி. டேட்டா கிடைக்கும். #BSNL
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பம்ப்பர் ஆஃபரை ஜனவரி 31, 2019 வரை நீட்டிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து டெலிகாம் டாக் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபரில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் முன்னதாக தினமும் 2.2 ஜி.பி. டேட்டா வழங்கிய சலுகையில் தற்சமயம் 2.1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் இரண்டு பிரீபெயிட் சலுகைகளில் சேர்க்கப்படுகிறது.

    முன்னதாக 11 பிரீபெயிட் சலுகைகளுக்கு பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ரூ.1,699 மற்றும் ரூ.2,099 ஆண்டு பிரீபெயிட் சலுகைகளில் பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு சலுகைகளும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. மேலும் இவை முறையே தினமும் 2 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. டேட்டா வழங்குகின்றன.

    அந்த வகையில் பி.எஸ்.என்.எல். ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகைகள் தற்சமயம் முறையே தினமும் 4.1 ஜி.பி. மற்றும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்குகின்றன.



    பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் முதலில் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சலுகையின் கீழ் பழைய சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது. உதாரணத்திற்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை தேர்வு செய்திருப்போருக்கு பம்ப்பர் ஆஃபரின் கீழ் தினமும் 3.1 ஜி.பி. டேட்டா வழங்கப்படும்.

    முன்னதாக பி.எஸ்.என்.எல். ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 மற்றும் எஸ்.டி.வி. சலுகைகளான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444 மற்றும் ரூ.448 உள்ளிட்ட சலுகைகளுக்கு பம்ப்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டது.

    சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேன்ட் சலுகைகளை மாற்றி முன்பை விட கூடுதல் பலன்களை, பழைய விலைக்கே வழங்கியது. இந்த நடவடிக்கை அந்நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட சில அன்லிமிட்டெட் சலுகைகளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    கூடுதல் டேட்டா மட்டுமின்றி சில சலுகைகளில் டேட்டா பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது, எனினும் டேட்டா அளவு அதிகபட்சமாக ஆறு மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். பிராட்பேன்ட் ரூ.675, ரூ.845, ரூ.999, ரூ.1,495, ரூ.1,745 மற்றும் ரூ.2,295 உள்ளிட்ட சலுகைகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் அதிக பிரீமியம் சலுகையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 35 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #BSNL
    பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புது சலுகையை அறிவித்துள்ளது. #Airtel



    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.289 விலையில் புது சலுகையை அறிவித்துள்ளது. 48 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புது சலுகை அதிகளவு வாய்ஸ் மேற்கொள்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் அறிவித்திருக்கும் புது சலுகை வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

    ஏர்டெல் ரூ.289 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங்) வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வாய்ஸ் கால் மேற்கொள்ள பயனர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. வாய்ஸ் கால் சலுகையுடன் பயனர்களுக்கு 1 ஜி.பி. மொபைல் டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    இந்த சலுகைக்கு போட்டியாக வோடபோன் ரூ.279 விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ஐடியா செல்லுலார் வழங்கும் ரூ.295 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 5 ஜி.பி. மொபைல் டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    ஐடியா பிரீபெயிட் சலுகையில் அதிகளவு மொபைல் டேட்டா வழங்கப்படுகிறது என்றாலும், பெருமளவு வாய்ஸ் கால் மேற்கொள்வோர் எனில், ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகை பயனுள்ளதாக இருக்கும். ஐடியா சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது என்றாலும், இதில் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #Airtel
    ஃபோர்டு இந்தியா தனது நள்ளிரவு சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் அந்நிறுவன வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. #Ford



    ஃபோர்டு இந்தியா தனது நள்ளிரவு சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இந்த சிறப்பு விற்பனையின் போது ஃபோர்டு விற்பனை மையங்கள் நள்ளிரவு வரை திறக்கப்பட்டு இருக்கும். இதில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசுகளாக- தங்க நாணயங்கள், ஐபோன் X மற்றும் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய வாகனம் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நள்ளிரவு சிறப்பு விற்பனையில் நிச்சய பரிசு வழங்கப்படும். அந்த வகையில் ஃபோர்டு நள்ளிரவு சிறப்பு விற்பனை இன்று (டிசம்பர் 7) துவங்கி, டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 



    ஃபோர்டு இந்தியா நள்ளிரவு சிறப்பு விற்பனையில் கலந்து கொண்டு புது வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஃபோர்டு நள்ளிரவு சிறப்பு விற்பனை சலுகைகள் ஃபோர்டு ஃபிகோ, புதிய ஃபோர்டு ஆஸ்பையர், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு என்டேவர் என அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். 

    மேலும் புது ஃபோர்டு வாகனங்களை டிசம்பர் மாதத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு குலுக்கல் நடத்தப்படுகிறது. குலுக்கலில் வெற்றி பெறும் வாடிக்கையாளருக்கு ஃபோர்டு ஃபிகோ பரிசாக வழங்கப்படுகிறது. #Ford
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட ஆறு மடங்கு அதிக டேட்டா பழைய விலைக்கே வழங்கப்படுகிறது. #BSNL
     


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேன்ட் சலுகைகளை மாற்றி முன்பை விட கூடுதல் பலன்களை, பழைய விலைக்கே வழங்குகிறது. புது நடவடிக்கை அந்நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட சில அன்லிமிட்டெட் சலுகைகளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    கூடுதல் டேட்டா மட்டுமின்றி சில சலுகைகளில் டேட்டா பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது, எனினும் டேட்டா அளவு அதிகபட்சமாக ஆறு மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். பிராட்பேன்ட் ரூ.675, ரூ.845, ரூ.999, ரூ.1,495, ரூ.1,745 மற்றும் ரூ.2,295 உள்ளிட்ட சலுகைகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் அதிக பிரீமியம் சலுகையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 35 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.675 சலுகையில் ஏற்கனவே தினமும் 5 ஜி.பி. டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இதே சலுகையில் மாதம் 150 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.845 சலுகையில் தற்சமயம் தினமும் 10 ஜி.பி. டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 300 ஜி.பி. டேட்டா கிடைக்கும். முன்னதாக இதே சலுகையில் பயனர்களுக்கு 50 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டேட்டா மட்டுமின்றி இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியும் வழங்கப்படுகிறது.



    இதேபோன்று ரூ.999 மற்றும் ரூ.1199 சலுகைகளில் தற்சமயம் முறையே தினமும் 15 ஜி.பி. மற்றும் 20 ஜி.பி. டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ.1,495 சலுகையில் முன்னதாக 140 ஜி.பி. டேட்டா மாதம் முழுக்க வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் தினமும் 25 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பனர்களுக்கு மொத்தம் 750 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    அதிக விலை கொண்ட பி.எஸ்.என்.எல். ரூ.2,295 பிராட்பேன்ட் சலுகையில் தற்சமயம் தினமும் 35 ஜி.பி. டேட்டா 24Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் 24Mbps வேகத்தில் மொத்தம் 200 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பி.எஸ்.என்.எல். ரூ.1745 பிராட்பேன்ட் சலுகையில் தற்சமயம் தினமும் 30 ஜி.பி டேட்டா 16Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் மொத்தம் 140 ஜி.பி. டேட்டா 16Mbps வேகத்தில் வழங்கப்பட்டு இருந்தது. தினசரி டேட்டா அளவு கடந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும்.

    பி.எஸ்.என்.எல். வழங்கும் அனைத்து அன்லிமிட்டெட் சலுகைகளிலும் தினசரி அல்லது நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு கடந்ததும், டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. புதிய மாற்றங்கள் பி.எஸ்.என்.எல். பிராட்பேன்ட் சேவை கிடைக்கும் அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும். #BSNL #broadband 
    பிளிப்கார்ட் தளத்தில் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கியது. சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் மின்சாதன உபகரணங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. #flipkartoffers



    பிளிப்கார்ட் தளத்தில் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கியிருக்கிறது. சிறப்பு விற்பனையில் போகோ எஃப்1, மோட்டோ X4, மோட்டோரோலா ஒன் பவர், ஹானர் 10, அசுஸ் சென்ஃபோன் 5இசட், கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL, எல்.ஜி. ஜி7 தின்க் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள், டேப்லெட் மற்றும் பல்வேறு இதர மின்சாதனங்கள் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    சிறப்பு விலை மட்டுமின்றி ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களை வாங்குவோருக்கு எளிய மாத தவணை முறை வசதி, எக்சேஞ்ச் சலுகை உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை இன்று (நவம்பர் 6) துவங்கி நவம்பர் 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.



    இந்தியாவில் கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,000 தள்ளுபடி மற்றும் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனையில் ரூ.18,000 வரை விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.36,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    எல்.ஜி. ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முந்தைய விலையில் இருந்து ரூ.20,000 வரை குறைக்கப்பட்டு இருப்பதோடு, ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.17,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் விலை ரூ.3,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    போகோ எஃப்1 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட மாடல் ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் முந்தைய விலையில் இருந்து ரூ.3,000 வரை குறைவு ஆகும். இதனுடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.3,000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.13,850 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    முன்னணி ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டுமின்றி ஹானர், மோட்டோராலா, நோக்கியா, அசுஸ் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்குவோருக்கும் சிறப்பு சலுகை மற்றும் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. 

    இத்துடன் ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது உடனடி தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, இன்சூரன்ஸ் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ×