search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    இந்தியாவின் முன்னணி மொபைல் போன் விற்பனையாளராக இருக்கும் பூர்விகா மொபைல்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறது. #offers



    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூர்விகா மொபைல்ஸ் ஷோரூம்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை பூர்விகா மொபைல்ஸ் வழங்கியது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூர்விகா விற்பனையகங்களில், நவம்பர் 7ம் தேதி வரை, 'தீபாவளி பரிசு மழை' சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. 

    இதில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு கார், புல்லட், ஸ்கூட்டி உள்ளிட்ட ரூ.5 கோடி மதிப்பிலான பரிசுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.



    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட மொபைல் போன் மாடல்களுக்கு, 20 சதவீத வரை கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மொபைல் மாடல்களில் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம், 60 சதவிகிதம் தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று ஒருமுறை ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் ஆபர் போன்ற சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 

    மேலும், வாடிக்கையாளர்களுக்கு, பூர்விகா மொபைல்ஸ் குறித்து, வாசகம் எழுதும் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது; 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள மொபைல் போன் வாங்குவோர், இப்போட்டியில் பங்கேற்க முடியும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தீபாவளி தமாகா ஆஃபர் விலை ரூ.1,699 மற்றும் ரூ.2,099 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறது. ரூ.1,699 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங்பேக் டோன் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படுகிறது.

    ரூ.2,099 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 4 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படுகிறது.

    இத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு இலவச சிம் சலுகைகள் எஸ்.டி.வி.399 உடன் வழங்கப்படுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் போர்ட்-இன் செய்வோருக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், எல்.பி.ஜி. பில்களில் அச்சிடப்பட்டு இருக்கும் பி.எஸ்.என்.எல். கூப்பன்களை வழங்கும் போது பெற முடியும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய சலுகையை குறுகிய காலத்திற்கு அறிவித்துள்ளது. #BSNL #diwalispecial



    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் மூலம் பயனர்களுக்கு கூடுதல் டாக்டைம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அக்டோபர் 25ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    புதிய சலுகையில் கூடுதல் டாக்டைம் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதால் மொபைல் டேட்டா அல்லது எஸ்.எம்.எஸ். போன்றவை வழங்கப்படவில்லை. அதன்படி புதிய சலுகையின் கீழ் ரூ.180 சலுகையில் ரூ.190 டாக்டைம், ரூ.410 சலுகையில் ரூ.440 டாக்டைம், ரூ.510 சலுகையில் ரூ.555 மதிப்பிலான டாக்டைம் வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் பயனர்களுக்கு வருடாந்திர சலுகையை அறிவித்தது. பி.எஸ்.என்.எல். புதிய பிரீபெயிட் சலுகைகள் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. பி.எஸ்.என்.எல். ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகையில் பயனர்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மற்றும் பிரத்யேக ரிங்பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    பி.எஸ்.என்.எல். ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ்., உள்ளிட்டவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.2,099 சலுகையில் தினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 80kbps ஆக குறைக்கப்படும்.

    டேட்டாவுடன் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங்பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரண்டு சலுகைகளும் அக்டோபர் 29ம் தேதி முதல் கிடைக்கிறது. இந்த சலுகையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
    சியோமி இந்தியா தீபாவளி விற்பனையின் இரண்டாவது நாளில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போனினை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. #DiwaliWithMi



    சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையில் மொபைல் போன்கள், தொலைகாட்சி, உபகரணங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது நாளான இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi ஏ2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    முதல் நாள் விற்பனையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஒரு ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ கோல்டு நிற வேரியன்ட் ஒரு ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.14,999 எனும் துவக்க விலையில் கிடைக்கிறது. 

    ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை மட்டுமின்றி பண்டிகை கால சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை சியோமியின் Mi.com வலைதளத்தில் இன்று (அக்டோபர் 24) மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.



    இன்று மாலை நடைபெறும் ஃபிளாஷ் விற்பனையில் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 5 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை ஒரு ரூபாய் விலையில் வாங்கிட முடியும். விற்பனை துவங்கும் முன் பயனர்கள் தங்களது Mi அக்கவுன்ட்டில் லாக் இன் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் பயனர்கள் தங்களது கார்டு விவரங்கள் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை ஃபிளாஷ் விற்பனை துவங்கும் முன் பதிவு செய்து கொள்ளலலாம். இதனால் விரைவில் பரிமாற்றத்தை நிறைவு செய்து சலுகையை பெறும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம். 

    தீபாவளி விற்பனை காலத்தில் வாடிக்கையாளர்கள் Mi பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும். அந்த வகையில் Mi ஏ2 ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ 43-இன்ச் மாடல் ரூ.1,000 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #Xiaomi #DiwaliWithMi
    ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கும் பண்டிகை கால சிறப்பு சலுகையின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #Airtel



    ஏர்டெல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகை புதிதாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் வழங்கும் கேஷ்பேக் தொகை வாடிக்கையாளரின் மைஏர்டெல் அக்கவுன்ட்டில் ரூ.50 மதிப்பு கொண்ட 40 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. கேஷ்பேக் மற்றும் கூடுதல் டேட்டா வழங்க ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு மொபைல் போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது.

    இந்த டிஜிட்டல் கூப்பன்களை தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் சலுகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். பயனர்கள் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளையும் போஸ்ட்பெயிட் பயனர்கள் ரூ.399 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தும் போது டிஜிட்டல் வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சலுகையை பெறுவது எப்படி?

    ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை வாங்க வேண்டும்

    அக்டோபர் 31ம் தேதிக்குள் புதிய 4ஜி ஸ்மாரட்போனி்ல் 4ஜி சிம்கார்டினை செருக வேண்டும்

    மைஏர்டெவ் செயலி மூலம் ரீசார்ஜ் அல்லது பில் செலுத்தும் போது கேஷ்பேக் கூப்பன்கள் தானாக சேர்க்கப்படும் 

    டிஜிட்டல் கூப்பன்கள் வாடிக்கையைளருக்கு வழங்கியதில் இருந்து 40 மாதங்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது

    ஒரு சமயத்தில் ஒரே கூப்பனை மட்டுமே பயன்படுத்த முடியும்

    முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டினை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கியது. கடந்த வாரம் ஏர்டெல் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.499 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்திருக்கிறது. #Nokiamobile


     
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்து இருக்கிறது. அதன் படி தேர்வு செய்யப்பட்ட என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரையும், நோ்கியா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி்.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுடன் நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 5.1 மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல், 18:9 ரக டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர் கொண்டுள்ளது.

    நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் ரூ.1500 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1080x2160 பிக்சல் ஐ.பி.எஸ். எல்.சி.டி., 18:9 ரக டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டா-கோர் மீடியாடெக் MT6755 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.



    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே ரூ.1,500 மற்றும் ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 ஜி.பி. ரேம் நோக்கியா 6.1 விலை ரூ.13,499 மற்றும் 4 ஜி.பி. ரேம் கொண்ட நோக்கியா 6.1 விலை ரூ.16,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. ரேம் வேரியன்ட் விலை ரூ.1,500 குறைக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 5.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2280 பிக்சல் 19:9 ரக டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் கொண்டுள்ளது.

    இறுதியில் நோக்கியா 8 சிரோகோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.36,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஒற்றை சிம் கொண்ட நோக்கியா 8 சிரோக்கோ மாடலில் 5.5 இன்ச் QHD 1440x2560 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய சலுகையை அறிவித்துள்ளது. #jio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.1,699 விலையில் ஜியோ புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் பனர்களுக்கு மொத்தம் 547.5 ஜி.பி. டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    இதில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை ஏற்கனவே வழங்கப்படுகிறது. கூடுதலாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயனர்களுக்கு 100 சதவிகித கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ரிலையன்ஸ் டிஜிட்டல் கூப்பன் வடிவில் மைஜியோ செயலியில் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ புதிய ரூ.1699 சலுகையுடன் ரூ.4,999 மற்றும் ரூ.9,999 சலுகைகளிலும் பயனர்களுக்கு ஒரு வருட வேலிடிட்டி வழங்கப்படுகிறது.



    ஜியோ தீபாவளி 100 சதவிகித கேஷ்பேக் சலுகை

    புதிய சலுகை மட்டுமின்றி, பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜியோ பயனர்களுக்கு 100 சதவிகித கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. 100 சதவிகித கேஷ்பேக் சலுகை பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.100 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது.

    முன்னதாக இந்த கேஷ்பேக் சலுகை ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.498, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1,699, ரூ.1,999, ரூ.4,999 மற்றும் ரூ.9,999 சலுகைகளில் வழங்கப்பட்டது. கேஷ்பேக் தொகை ரிலையன்ஸ் டிஜிட்டல் கூப்பன் வடிவில் மைஜியோ செயலியில் சேர்க்கப்படும்.

    ஜியோ வழங்கி இருக்கும் கேஷ்பேக் வவுச்சர்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் பயன்படுத்தலாம், எனினும் இதற்கு குறைந்தபட்சம் ரூ.5,000 விலையில் பொருட்களை வாங்க வேண்டும்.

    ரூ.500-க்கும் அதிக ரீசார்ஜ்களை செய்யும் போது அதிகப்படியான வவுச்சர்கள் வழங்கப்படும், எனினும் பயனர்களால் ஒரே சமயத்தில் இரண்டு வவுச்சர்களை பயன்படுத்த முடியாது. உதாரணத்திற்கு ரூ.1,699 சலுகையில் நான்கு வவுச்சர்கள் (மூன்று ரூ.500 மதிப்பிலான வுவச்சர்களும், ரூ.200 மதிப்பிலான ஒரு வவுச்சர்) வழங்கப்படுகிறது.

    ஜியோ வழங்கும் வவுச்சர்களின் வேலிடிட்டி டிசம்பர் 31, 2018 வரை செல்லுபடியாகும் மேலும் இந்த கேஷ்பேக் சலுகை நவம்பர் மாதம் 30ம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் உள்ள சில பொருட்களுக்கு கூப்பன்களை பயன்படுத்த முடியாது. 



    ஜியோ ரூ.1,699 சலுகை:

    புதிய ஜியோ ரூ.1,699 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா என மொத்தம் 547.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ பொழுதுபோக்கு செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    ரூ.1,699 ஜியோ சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் நிலையில், ரூ.4,999 மற்றும் ரூ.9,999 விலையில் கிடைக்கும் ஜியோ சலுகைகளில் தினசரி டேட்டா பயன்படுத்த எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இரண்டு சலுகைகளிலும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் மொத்தம் 350 ஜி.பி. மற்றும் ரூ.750 ஜி.பி. டேட்டா வழங்குகிறது.
    ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.295 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Idea



    ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஐடியா அறிவித்து இருக்கும் புதிய சலுகை விலை ரூ.295 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    42 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள ஐடியா செல்லுலார் புதிய பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 5 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் வழங்கப்படுகிறது. எனினும் வாய்ஸ் கால் அளவு தினசரி அடிப்படையில் 250 நிமிடங்களும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவுற்றதும், வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா என்றும், சலுகையில் வழங்கப்படும் 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், 10 கே.பி. டேட்டா கட்டணம் 4 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஏர்டெல் நிறுவனம் ரூ.299 விலையில் வழங்கும் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகையில் டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. சில வட்டாரங்களில் மட்டும் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ரூ.299 சலுகையில் எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது.

    வோடபோன் நிறுவனம் ரூ.279 விலையில் வழங்கும் சலுகை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. அதிக வேலிடிட்டி வழங்கும் விலை குறைந்த சலுகையாக இது இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    எனினும் ஐடியா சலுகையை போன்று வோடபோன் சலுகையிலும் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வதிமாக புதிய சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. #airtelthanks



    பாரதி ஏர்டெல் நிறுவனம் #airtelthanks மூலம் தனது பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    புதிய திட்டத்தின் மூலம் மாதம் ரூ.100-க்கும் அதிக கட்டணம் செலுத்தும் பயனர்களுக்கு கூடுதல் சலுகை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும் என பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது. அந்த வகையில் யனர்களுக்கு பிரீமியம் டிஜிட்டல் தரவுகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வவுச்சர்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.1500 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. விரைவில் #airtelthanks சலுகை வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என ஏர்டெல் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஏர்டெல் நிறுவனம் பிளிப்கார்ட் தளத்துடன் இணைந்து ரூ.4,500 மதிப்புள்ள சலுகைகள், 100 ஜி.பி. போனஸ் டேட்டா உள்ளிட்டவற்றை பிளிப்கார்ட் பிரத்யேக ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற சலுகைகளுடன், ஏர்டெல் நிறுவன இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகையில் ரூ.499 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட திட்டங்களை தேர்வு செய்வோருக்கு ரூ.1500 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

    நெட்ஃபிளிக்ஸ் சந்தாவினை ஏர்டெல் டி.வி. ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலமாகவும் பெற முடியும். இத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஜீ5 தரவுகளை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளை பயனர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
    தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. சேவையில் தமிழ் மொழியுடன் தெலுங்கு, மலையாளம், கன்னட சேனல்களை கண்டுகளிக்க மாத சந்தா 175 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #TamilNadu



    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 205 சேனல்கள் கொண்ட தொகுப்பினை ரூ.125 (வரிகள் தனி)க்கு மாத சந்தா கட்டணத்திலும், 287 சேனல்கள் பேக்கினை ரூ.175-க்கும், 407 சேனல்களைக் கொண்ட ஹெச்.டி. பேக்கினை ரூ.225க்கும் வழங்கி வருகிறது.

    தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் வாடிக்கையாளர்கள் தேவையினை கருத்தில் கொண்டு அவர்களது தாய்மொழியில் ஒளிபரப்பப்படும் டி.வி. சேனல்களை கண்டு களித்திட தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 3 தனித்தனி சேனல் பேக்களை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் தெலுங்கு சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் கன்னட சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் மலையாள சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் ரூ.175 (வரிகள் தனி) என்ற மாத சந்தா கட்டணத்தில் வழங்கப்படும்.

    இந்த சந்தா கட்டணத்தில் கேபிள் டிவி. ஆபரேட்டர்களுக்கு ரூ.100-ம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு ரூ.75-ம் பங்கீடு செய்யப்படும்.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. #Airtel



    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 90 எஸ்.எம்.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களில் உள்ள பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

    தற்சமயம் ரூ.399 பிரீபெயிட் சலுதையில் ஏர்டெல் நிறுவனம் தினமும் 1 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. புதிய சலுகை போன்று இல்லாமல், ரூ.399 சலுகையின் வேலிடிட்டி ஒவ்வொரு வட்டாரங்களிலும் வேறுபடுகிறது.

    சில வட்டாரங்களில் 70 நாட்கள் வேலிடிட்டியும் சில வட்டாரங்களில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதால், பழைய சலுகை தொடர்ந்து வழங்கப்படுமா அல்லது நிறுத்தப்பட்டு விடுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ அறிவித்து இருக்கும் ரூ.398 சலுகையில் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.
    பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிக் பில்லியன் டேஸ் சேல் விற்பனையில் பிரபல ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிகபட்ச சலுகைகள் வழங்கப்படுகிறது. #FlipkartBigBillionDaySale



    பிளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கான சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் 11) நள்ளிரவு முதல் மொபைல் போன்களுக்கான சலுகை வழங்கப்படுகிறது. 

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் XS 64 ஜி.பி. மாடலின் விலை ரூ.5,000 குறைக்கப்பட்டு ரூ.94,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    இத்துடன் எக்சேஞ்ச் முறையில் ரூ.18,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.2500 தள்ளுபடி பெற முடியும். ஐபோன் XS மேக்ஸ் வாங்குவோருக்கும் இந்த சலுகை பொருந்தும்.

    ஆப்பிள் ஐபோன் X 64 ஜி.பி. வேரியன்ட் ரூ.22,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.69,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.18,000 வரை தள்ளுபடி பெற முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ.5000 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். 

    சியோமியின் பிரபல ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்து கூடுதலாக ரூ.11,700 வரை தள்ளுபடி பெற முடியும். Mi மிக்ஸ் 2 (128 ஜி.பி.) வேரியன்ட் ரூ.15,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.18,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகமான நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.2700 குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.13,199 விலையில் விற்பனையாகி வந்த நோக்கியா 5.1 பிளஸ் தற்சமயம் ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.2601 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.11,700 வரை தள்ளுபடி பெற முடியும்.

    ஒப்போ நிறுவனத்தின் எஃப்9 (64 ஜி.பி.) வேரியன்ட் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.18,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.15,700 வரை தள்ளுபடி பெற முடியும். அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. வேரியன்ட் ரூ.9,999 விலையிலும், 4 ஜி.பி. ரேம் வேரியன்ட் ரூ.10,999-க்கும் 6 ஜி.பி. ரேம் வேரியன்ட் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுமட்டுமின்றி பிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி கள்ளுபடியும் ரூ.40,000-க்கும் அதிக விலையில் பொருட்களை வாங்கும் போது ரூ.2,500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் தேர்வு செய்யப்பட்ட கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
    ×