search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை மாற்றப்பட்டு தற்சமயம் 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel



    ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.289 பிரீபெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை இந்த சலுகையில் வேலிடிட்டி மற்றும் டேட்டா அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஏர்டெல் ரூ.289 சலுகை தற்சமயம் கொல்கத்தாவில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் 4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.279 விலையில் அறிவித்த சலுகையை தொடர்ந்து ஏர்டெல் தனது சலுகையை மாற்றியமைத்துள்ளது. வோடபோன் சலுகையிலும் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் கிட்டத்தட்ட ஒரே பலன்களை வழங்குகின்றன.

    எனினும் வோடபோன் வழங்கும் சலுகையில், வாய்ஸ் கால் மேற்கொள்ள தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாடு இருக்கிறது. ஏர்டெல் சலுகையில் உண்மையான அன்லிமிட்டெட் சலுகை வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் வரம்பற்ற வாய்ஸ் கால் பேச முடியும்.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலையில் வழங்கும் சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. #Vodafone #offer



    வோடபோன் நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகை ஜியோவுக்கு போட்டியாக அறிவித்துள்ளது. புதிய ரூ.279 சலுகை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய வோடோபன் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவையை நீண்ட நாட்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக டேட்டாவும் வழங்கப்படுகிறது. வோடபோன் வழங்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையில் தினமும் 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    வோடபோனின் புதிய ரூ.279 சலுகை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்குகிறது. கூடுதலாக இந்த சலுகையில் 4 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்குகிறது.

    மேலும் இந்த சலுகை முதற்கட்டமாக கர்நாடகா மற்றும் மும்பை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களில் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    வோடபோன் அறிவித்து இருக்கும் புதிய சலுகை வாய்ஸ் கால் அதிகம் பயன்படுத்துவோரை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வோடபோன் இரண்டு பிரீபெயிட் சலுகையை வாய்ஸ் காலிங் பலன்களுடன் அறிவித்தது. இவை ரூ.99 மற்றும் ரூ.109 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் அதிகபட்சம் 1 ஜி.பி. டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கின.

    இந்திய டெலிகாம் சந்தையில் மற்ற நிறுவனங்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ.300-க்கும் குறைவான விலையில் இதுவரை வழங்கவில்லை. ஜியோவின் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட துவக்க விலை சலுகையின் கட்டணம் ரூ.348 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த மாதம் அறிவித்த ரூ.29 சலுகையை மாற்றியமைத்துள்ளது. இது குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BSNL



    ஆகஸ்டு மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. இவற்றில் ரூ.29 விலையில் அறிவிக்கப்பட்ட சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    தற்சமயம் இந்த சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். ரூ.29 சலுகையில் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ரூ.29 சலுகையுடன் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.9 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் 100 எம்.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் ரோமிங் அழைப்புகளும் அடங்கும், எனினும் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் பொருந்தாது.

    பி.எஸ்.என்.எல். ரூ.29 விலை சலுகையை மாற்றி அதன் பலன்களை குறைத்திருக்கும் நிலையிலும், போட்டி நிறுவனங்கள் வழங்கும் சலுகையை விட சிறப்பானதாக இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.52 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 150 எம்.பி. டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்குகிறது.

    ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் ரூ.59 மற்றும் ரூ.47 விலையில் கிடைக்கின்றன. ஏர்டெல் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. வோடபோன் சலுகையில் தினமும் 125 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், 500 எம்.பி. டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
    ஐடியா செல்லுலார் நிறுவனம் தனது பயனர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இவை தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. #Idea #Offers



    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து இருக்கும் வோடபோன் ஐடியா லிமிட்டெட் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.

    அந்த வகையில் ஐடியா செல்லுலார் மூன்று புதிய சலுகைகளை ரூ.209, ரூ.479 மற்றும் ரூ.529 விலையில் அறிவித்துள்ளது. மூன்று புதிய சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. முன்னதாக வோடபோன் இந்தியா இதே விலையில் மூன்று சலுகைகளை அறிவித்தது.

    ஐடியா செல்லுலார் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் நாட்டின் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.209 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.



    ரூ.479 சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.529 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஐடியா அறிவித்து இருக்கும் சலுகைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் தினமும் 250 நிமிடங்களும், அதன் பின் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

    வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். ஐடியாவின் மூன்று புதிய சலுகைகளிலும் வாய்ஸ் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாய்ஸ் கால் போன்றே நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு பயன்படுத்தியதும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேன்ட் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. #BSNL



    அமேசான் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களின் புதிய ஒப்பந்தத்தின் படி தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்ற சலுகையை தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அறிவித்தது. 

    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக தொகையிலோ அல்லது ரூ.745 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் லேன்ட்லைன் சலுகைகளை தேர்வு செய்யும் போது ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனில் பிரைம் வீடியோ ஆப் டவுன்லோடு செய்யப்பட்டதும் அமேசான் பிரைம் சந்தாவை பி.எஸ்.என்.எல். வலைதளம் மூலம் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். பிரைம் சந்தா மூலம் பிரைம் மியூசிக் சேவையையும் இலவசமாக வழங்குகிறது. இதனையும் ஆப் டவுன்லோடு செய்து ஆக்டிவேட் செய்யலாம்.

    சலுகைக்கு தகுந்த வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ சந்தாவிற்கு பி.எஸ்.என்.எல். ரூ.399 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள போஸ்ட்பெயிட் சலுகை லேன்ட்லைன் பிராட்பேன்ட் சலுகையில் ரூ.745 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள சலுகைக்கு அப்கிரேடு செய்ய பி.எஸ்.என்.எல். வலைதளத்திற்கு சென்ற பி.எஸ்.என்.எல். - அமேசான் விளம்பர பேனரை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யலாம்.

    அமேசான் பிரைம் இலவச சந்தாவை ஆக்டிவேட் செய்யும் போது மொபைல் நம்பர் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.181 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel #Offers
    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.181 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 சலுகை, பி.எஸ்.என்.எல். ரூ.187 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.  

    ஏர்டெல் அறிவித்து இருக்கும் ரூ.181 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 42 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.199 பிரீபெயிட் சலுகையிலும் 42 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் இரண்டு சலுகையிலும் இருக்கும் ஒரே வித்தியாசம் ரூ.181 சலுகை 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    டேட்டா சலுகைகளுடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனம் இணைப்புக்கு பின் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    ஏர்டெல் ரூ.181 சலுகையில் அதிக டேட்டா பயன்படுத்துவோருக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் 42 ஜி.பி. டேட்டா கிடைக்கும். ரூ.200 விலையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் முதல் சலுகையாக இது அமைந்துள்ளது. #Airtel #Offers
    பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு ரூ.18 விலையில் அன்லிமிட்டெட் வீடியோ கால் வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 18-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ரூ.18 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய ரூ.18 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் வீடியோ கால் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். பிரீமியம் ரீசார்ஜ் சலுகைகளில் 18% வரை கூடுதல் டாக்டைம் மற்றும் டேட்டா வழங்குகிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.1,801 சலுகையில் ரூ.2,125 டாக்டைம், 15 ஜி.பி. டேட்டா, ரூ.1,201 சலுகையில் ரூ.1,417 டாக்டைம் மற்றும் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை சலுகைகளுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் ரூ.18 சலுகை ஜியோ வழங்கி வரும் ரூ.19 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ ரூ.19 சலுகையில் 0.15 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 20 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    இதுதவிர, பி.எஸ்.என்.எல். வழங்கும் இதர சலுகைகளில் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.1,801 சலுகையில் ரூ.2,125 டாக்டைம், மற்றும் 15 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.1,201 சலுகையில் ரூ.1,417 டாக்டைம், மற்றும் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.601 சலுகையில் ரூ.709 டாக்டைம் மற்றும் 5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.18 சலுகை அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.299 சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்களுக்கு 31 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. #BSNL #Offers
    ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் புதிய சலுகை ரூ.149 விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சலுகை வழங்கப்படுகிறது. #Idea #offer



    ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள ஐடியா செல்லுலார் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.149 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஐடியா செல்லுலார் ரூ.149 புதிய சலுகையில் மொத்தம் 33 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் வேலிடிட்டி காலத்தில் பயனர்கள் 100 வெவ்வேறு எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

    ஐடியா தற்சமயம் அறிவித்திருக்கும் ரூ.149 சலுகை இதே விலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளன. ஜியோ வழங்கும் ரூ.149 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ பயனர்கள் இந்த சலுகையை 42 நாட்களுக்கு பெற முடியும்.

    ஏர்டெல் வழங்கும் சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஐடியா தற்சமயம் அறிவித்து இருக்கும் புதிய சலுகை முதற்கட்டமாக கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    முன்னதாக வோடபோன் சார்பில் ஆறு புதிய காம்போ ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்ட புதிய சலுகைகளில் டாக்டைம், டேட்டா மற்றும் ரேட் கட் பலன்கள் 28 நாட்கள் துவங்கி அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தன. 
    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 31 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #offer



    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.299 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் பயனர்களுக்கு 31 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்றவை வழங்கப்படுகிறது.

    புதிய பி.எஸ்.என்.எல். சலுகை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் வழங்கி வரும் ரூ.299 போஸ்ட்பெயிட் சலுகைக்கு போட்டியாக அமைகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு ஆட்-ஆன் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்கள் மாதாந்திர டேட்டாவை பயன்படுத்தி முடித்து இருந்தாலும், அதிவேக டேட்டாவை வழங்குகிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.299 சலுகை முதல் முறையாக பி.எஸ்.என்.எல். சேவையில் இணையும் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஏற்கனவே பி.எஸ்.என்.எல். சலுகையை பயன்படுத்தி வருவோருக்கு புதிய சலுகையை பயன்படுத்த முடியாது. மாதம் 31 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகையில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் பொருந்தாது.

    நிர்ணயிக்கப்பட்ட டேட்டா பயன்படுத்தியதும், டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைந்து விடும். எனினும் பயனர்கள் கூடுதலாக பயன்படுத்தும் டேட்டாவிற்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் பயன்படுத்தாமல் இருக்கும் டேட்டாவை அடுத்த மாதத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்கப்படவில்லை.

    ஜியோ வழங்கும் ரூ.199 போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு மாதம் 25 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் கூடுதலாக 500 ஜி.பி. டேட்டாவினை ஜி.பி. ஒன்றுக்கு ரூ.20 கட்டணம் செலுத்தி பெற முடியும்.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்தது. புதிய சலுகையின் படி பயனர்களுக்கு தினமும் 1.25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel4G

     

    ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.195 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.25 ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    எனினும் இந்த சலுகையில் எஸ்.எம்.எஸ். சலுகை வழங்கப்படவில்லை. கூடுதலாக, இந்த சலுகை முதற்கட்டமாக சில வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள ஏர்டெல் வலைதளங்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

    கேரளா வட்டாரங்களிலும் இந்த சலுகை வலைதளத்தில் மட்டுமே பதிவிடப்பட்டு இருப்பதாகவும், மைஏர்டெல் செயலியில் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. புதிய ஏர்டெல் சலுகை இந்தியாவின் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    கடந்த வாரம் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.168 விலையில் புதிய சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்.  உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்பட்டது.

    ரூ.195 ஏர்டெல் சலுகை அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும் நிலையில், ரூ.168 சலுகையை அதிக எஸ்.எம்.எஸ். அனுப்பும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

    ஏர்டெல் ரூ.195 சலுகையை விட ஜியோ சலுகையில் அதிக பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.198 பிரீபெயிட் சலுகையில் 2 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Airtel4G #Offers
    வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. #vodafoneidea #offers



    வோடபோன் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் ஆல்-ரவுன்டர் ரீசார்ஜ் சலுகையை வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 

    டாக்டைம் மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை வழங்கும் புதிய சலுகைகளின் துவக்க விலை ரூ.25 ஆகும். குறைந்த விலையில் கிடைப்பதோடு பயனர்களுக்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை பெற முடியும் என வோடபோன் ஐடியா லிமிட்டெட் அறிவித்துள்ளது.



    ரூ.25 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.245 விலை வரை கிடைக்கும் சலுகைகளின் வேலிடிட்டி 28 நாட்களில் இருந்து 84 நாட்கள் வரை வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக புதிய சலுகைகள் சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள் வெளியாகியுள்ளது. #JioGigafiber #offer



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் ஆகஸ்டு 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் பிராட்பேன்ட் சேவைக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதிகளவு முன்பதிவு பெறும் பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவை வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.

    முழுவீச்சில் சேவைகள் துவங்கப்படும் முன்பாகவே பிரீவியூ சலுகை சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரீவியூ சலுகையின் படி ஜியோ ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்துவோருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு வேகத்தை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. 

    அந்த வகையில் 90 நாட்களுக்கு மொத்தம் 300 ஜிபி டேட்டா பிரீவியூ சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவில் மாதம் 100 ஜிபி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    எனினும், 100 ஜிபி டேட்டாவை ஒரே மாதத்திற்குள் பயன்படுத்திவிட்டால், பிரீவியூ சலுகையை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகிறது. பிரீவியூ சலுகையில் மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளம் மூலம் சேர்பவர்களுக்கு 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.



    ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தில் டேட்டா வேகத்தை பொருத்த வரை நொடிக்கு 1 ஜிபி வேகம் வழங்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அந்த வகையில் பயனர்கள் 4K தரம் கொண்ட வீடியோக்களையும் ஸ்டிரீம் செய்து கண்டுகளிக்க முடியும். முன்பதிவு செய்யக்கோரும் வலைத்தளத்தில் ஜிகாபிட் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் போது விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்களை விளையாட முடியும்.

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை பயன்படுத்த பாதுகாப்பு முன்பணமாக ரூ.4,500 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் ஜிகாஹப் ஹோம் சேவைக்கான நுழைவுத்தளமாக இருக்கும். முதற்கட்ட முன்பண கட்டணம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜியோ மனி அல்லது பே.டி.எம். மூலம் செலுத்த முடியும். மொபைல் வயர்லெஸ் சேவையை போன்றே பிராட்பேன்ட் சேவைகளும் பிரீபெயிட் திட்டங்களுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    90 நாட்கள் பிரீவியூ திட்டம் நிறைவுற்றவுடன் வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் திட்டங்களுக்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் ஆப்ஷன் வழங்கப்படும். சேவையை தொடர விருப்பமில்லாதவர்கள் தங்களது சேவையை துண்டித்து, பாதுபாக்கு முன்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 
    ×