search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ராக்கி ரீசார்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. #BSNL #offer


    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ராக்கி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்கு பின் மற்ற நிறுவனங்களை போன்றே பி.எஸ்.என்.எல். தனது சலுகைகளை மாற்றியமைத்து, குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. 

    அந்த வகையில் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்டவை ரூ.399 விலையில் வழங்கப்படுகிறது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை 74 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. பி.எஸ்.என்.எல். STV399 சலுகையை பயனர்கள் இன்று (ஆகஸ்டு 26) முதல் பெற முடியும். எனினும் இந்த சலுகை எதுவரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    பி.எஸ்.என்.எல். ரூ.399 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் மெசேஜ் உள்ளிட்டவை 74 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. கூடுதலாக பிரத்யேக ரிங் பேக் டோன் மற்றும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. புதிய சலுகை தேசிய ரோமிங் வழங்கப்பட்டாலும் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் வழங்கப்படவில்லை.

    பி.எஸ்.என்.எல். புதிய ரூ.399 சலுகையைப் போன்று ஜியோ ரூ.349 விலையில் சலுகையை வழங்கி வருகிறது. ஜியோ வழங்கும் ரூ.349 சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., 1.5 ஜிபி டேட்டா, ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதிகள் 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ஜியோ ரூ.398 சலுகையில் இதே சலுகைகளுடன் தினமும் 2 ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போன்று ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டாவும், ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    விஜய் மல்லையாவுக்கு மும்பை ஜெயிலில் டி.வி., காற்றோட்ட வசதி கொண்ட அறை ஒதுக்கப்படுவதாக லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ வீடியோ தாக்கல் செய்துள்ளது. #VijayMallya #UKCourt #CBI
    லண்டன்:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9500 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சி.பி.ஐ. முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பினால் அவர் அங்குள்ள சிறைச்சாலையில் அடைக்கப்படுவார். ஆனால் அங்குள்ள சிறைகளில் போதிய வசதி கிடையாது. அவர் மோசமாக நடத்தப்படுவார் என விஜய் மல்லையாவின் வக்கீல் வெஸட் மினிஸ்டர் கோர்ட்டில் தெரிவித்து இருந்தார்.

    அதைத் தொடர்ந்து இந்திய சிறைச்சாலையின் தன்மை குறித்தும், அதில் உள்ள வசதிகள் குறித்தும் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

    அதற்கு பதில் அளிக்கும் வகையில் மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள ஜெயிலில் அறை எண் 12-ல் உள்ள வசதிகள் குறித்த வீடியோவை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் அவர் அடைக்கப்படும் அறையில் உள்ள அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.

    அங்கு டி.வி.செட், தனியாக கழிவறை வசதி, இயற்கையான சூரிய ஒளி அவர் அறைக்குள் வருவது போன்ற அமைப்பு உள்ளது. அவர் நூல் நிலையம் சென்று படிப்பதற்கான வசதிகள் நடை பயிற்சிக்கான இட வசதி குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


    இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்து விட்டனர். அதே நேரம் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, “இந்திய சிறைகளில் சுகாதார வசதி இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து அறிய இங்கிலாந்து கோர்ட்டு விரும்பியது.

    இந்திய சிறைகள் சுகாதாரமாக இருக்கிறது என்ற ஆதாரத்துக்காக அந்த வீடியோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. விஜய் மல்லையா அடைக்கப்பட இருக்கும் சிறை கிழக்கு பார்த்து உள்ளது. இதனால் அங்கு சூரிய வெளிச்சம் நன்றாக கிடைக்கும் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, “சிறை அறையில் எதிர் எதிராக ஜன்னல்கள் மற்றும் காற்றோட்ட வசதி உள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நடைபயிற்சிக்கு ஏற்ற வகையில் இடவசதி உள்ளது. எனவே அவரை இந்தியாவுக்கு அனுப்புவதில் எந்தவித தடையும் இருக்காது.

    இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் இன்னும் 2 மாதத்தில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். #VijayMallya #UKCourt #CBI
    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.159 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களின் சலுகைக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அமைந்துள்ளது. #Vodafone #offers


    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடனான போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் வோடபோன் இந்தியா புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

    புதிய வோடபோன் சலுகை ரூ.159 விலையில் கிடைக்கிறது. புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிகளவு டேட்டா வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.159 சலுகை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கி வரும் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    வோடபோன் ரூ.159 புதிய சலுகையில் 28 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அனைத்து 4ஜி வட்டாரங்களிலும் வோடபோன் புதிய சலுகை வழங்கப்படுகிறது, மேலும் இந்த சலுகை அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய சலுகை வோடபோன் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை.

    இத்துடன் புதிய சலுகை சென்னை, ஆந்திரா, மும்பை, டெல்லி மற்றும் குஜராத் போன்ற வட்டாரங்களிலும் இதுவரை வழங்கியதாக தகவல் இல்லை. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வோடபோன் ரூ.159 சலுகையில் 28 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும், முழு வேலிடிட்டிக்கும் 100 பிரத்யேக நம்பர்களுக்கு அழைக்க முடியும் என வோடபோன் தெரிவித்துள்ளது. 28 ஜிபி டேடட்டா, தினமும் 1 ஜிபி வீதம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வெவ்வேறு வட்டாரங்களில் எஸ்.எம்.எஸ். சலுகையை மாற்றுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். சில இடங்களில் முழு சலுகைக்கும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து வழங்கி வரும் ரூய149 சலுகையில், எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. 

    ஏர்டெல் வழங்கும் ரூ.149 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றியும், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் வரை இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
    கேரளாவில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஏர்டெல் போன்றே ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFlood #TelecomOffers


    கேரளாவில் கனமழை பெய்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் மக்களுக்கு இலவச சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. ஏர்டெல் நிறுவன சலுகை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வோடபோன், ஜியோ, பி.எஸ்.என்.எல். மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது.

    பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகைகளும், போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு தங்களது கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் சார்பில் பல்வேறு பகுதிகளில் இலவச வைபை, வாய்ஸ் கால் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் ஸ்டோர்களில் பயனர்கள் தங்களின் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ சார்பில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா சலுகை ஒரு வாரத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 


    கோப்பு படம்

    வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.30 டாக்டைம், 1 ஜிபி மொபைல் டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு டேட்டா தானாக தங்களது அக்கவுன்ட்-இல் கிரெடிட் செய்யப்படுகிறது.வாய்ஸ் கால் சேவையை ஆக்டிவேட் செய்ய CREDIT என டைப் செய்து 144 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியோ அல்லது *130*1# டையல் செய்ய வேண்டும். வோடபோன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகள் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.

    ஐடியா பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.10 கிரெடிட் வழங்கப்படுகிறது. பயனர்கள் *150*150# என டையல் செய்து உடனடியாக டாக்டைம் பெறலாம். அனைத்து பிரீபெயிட் பயனர்களுக்கும் 1 ஜிபி இலவச டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச டேட்டா பயனர்களுக்கு தானாக ஆக்டிவேட் செய்யப்படும். ஐடியாவும் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகள் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். சார்பில் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா அடுத்த ஏழு நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
    கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் ஏர்டெல் பயனர்களுக்கு இலவச அட்வான்ஸ் டாக்டைம், 1 ஜிபி டேட்டா மற்றும் இதர சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. #KeralaFloods


    ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு இலவச அட்வான்ஸ் டாக்டைம் கிரெடிட், 1 ஜிபி டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகள் கேரளாவில் உள்ள பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் புதிய அறிவிப்பு கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கித்தவிக்கும் கேரள பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.

    மேலும் இலவச வைபை மற்றும் அழைப்புகளை வழங்க ஏதுவாக கேரளாவில் ஐந்து முக்கிய இடங்களில் VSAT (மிகச்சிறிய அப்ரேச்சர் டெர்மினல்) மையங்களை செட்டப் செய்ய திட்டமிட்டுள்ளது.



    - ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.30 வரை டாக்டைம் கிரெடிட் முறையில் பெறும் வசதி
    - அனைத்து ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கும் 1 ஜிபி இலவச டேட்டா (ஏழு நாட்கள் வேலிடிட்டி)
    - ஏர்டெல் போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் பயனர்கள் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம்
    - மக்களுக்கு இலவச வைபை மற்றும் வாய்ஸ் கால் வழங்க ஐந்து ஏர்டெல் சிறிய அப்ரேச்சர் போர்ட் அமைக்கப்படுகிறது
    - மின் இணைப்பு சீரற்ற பகுதிகளிலும் ஏர்டெல் சேவை தொடர்ந்து கிடைக்க நெட்வொர்க் குழுவினர் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    மேலும் திர்ச்சூர், கோழிக்கோடு, மல்லப்புரம், கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏர்டெல் ஃபிளாக்ஷிப் மையங்களில் மக்கள் தங்களது மொபைல் போன்களை சார்ஜ் செய்து, இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். #KeralaFloods
    ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel #Amazon


    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது 23-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அமேசான் பே உடன் இணைந்து பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. 

    புதிய சலுகையின் படி ரூ.100-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கும், இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்யும் பயனருக்கும் அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

    இலவசமாக வழங்கப்படும் அமேசான் கிஃப்ட் கார்டு கணக்கில் ஏற்கனவே ரூ.51 சேர்க்கப்பட்டிருக்கும். பயனர்கள் இந்த கார்டு மூலம் அமேசான் பே கணக்கில் பணத்தை சேர்த்துக் கொண்டு அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பொருட்களை வாங்கவோ, ரீசார்ஜ் மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

    கிஃப்ட் கார்டை பெற ஏர்டெல் பயனர்கள் தங்களது மைஏர்டெல் செயலிக்கு சென்று ஏர்டெல் தேங்ஸ் (Airtel Thanks) பேனரை க்ளிகி செய்ய வேண்டும். இனி பேனரை க்ளிக் செய்து கிஃப்ட் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த சலுகையை பெற பயனர் செய்யும் ரீசார்ஜ் ஏர்டெல் செயலி, அமேசான் மற்றும் பேடிஎம் மூலமாகவும் மேற்கொள்ளலாம். 

    அமேசான் பே கிஃப்ட் கார்டை இலவசமாக பெற பயனர்கள் தங்களது ஏர்டெல் எண்களுக்கு ரீசார்ஜ் அல்லது போஸ்ட்பெயிட் சலுகைக்கு அடுத்த 30 நாட்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் சுதந்திர தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. #BSNL


    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 72-வது சுதந்திர தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சலுகைகள் ரூ.9 மற்றும் ரூ.29 விலையில் கிடைக்கிறது. இவை முறையே ஒரு நாள் மற்றும் ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.

    பி.எஸ்.என்.எல். ரூ.9 விலையில் வழங்கும் சலுகையில் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மற்றொரு சலுகையான ரூ.29 விலையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.



    சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகைகளில் அன்லிமிட்டெட் அழைப்புகள் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களுக்கு மட்டும் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர தேசிய ரோமிங் சேவை இரண்டு சலுகைகளுக்கும் பொருந்தும்.

    ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் ரூ.47 விலையில் சலுகைகளை வழங்குகின்றன. ஏர்டெல் ரூ.47 சலுகையில் 125 நிமிடங்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், உள்ளூர், வெளியூர் மற்றும் தேசிய ரோமிங், 500 எம்பி டேட்டா, 50 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.47 சலுகையில் 125 நிமிடங்கள் அழைப்புகள், 50 எஸ்.எம்.எஸ். மற்றும் 500 எம்பி டேட்டா வழங்குகிறது.

    சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.27 விலையில் சலுகையை அறிவித்தது. ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இதன் வாய்ஸ் கால் அளவில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
    அமேசான் வலைதளத்தில் ஃப்ரீடம் விற்பனையில் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் பல்வேறு இதர சாதனங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. #AmazonFreedomSale #AmazonPrimeDay


    அமேசான் வலைதளத்தில் ஃப்ரீடம் விற்பனை துவங்கியது. இன்று (ஆகஸ்டு 9-ம் தேதி) துவங்கிய சிறப்பு விற்பனை ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறன்றன.

    ஸ்மார்ட்போன்கள், நுகர்வோர் மின்சாதனங்கள், தொலைகாட்சி மற்றும் இதர பிரிவுகளில் சுமார் 17 கோடி பொருட்களுக்கு 20,000-க்கும் அதிகமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஒன்பிளஸ், ஹூவாய், ஹானர், சாம்சங், விவோ, ரியல்மி, ஜெ.பி.எல்., சோனி மற்றும் பல்வேறு பிரான்டுகளின் சாதனங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமேசான் எக்கோ சாதனங்கள், ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் கின்டிள் இ-ரீடர்கள் நான்கு நாட்களுக்கும் சிறப்பு விலையில் வழங்கப்படுகின்றன. இத்துடன் மொபைல் போன், உபகரணங்களுக்கு 40% மற்றும் நுகர்வோர் மின்சாதனங்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.



    ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள்

    - ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.59,999 (ரூ.5000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)
    - நோக்கியா 6.1 (4 ஜிபி) ரூ.15,999 (ரூ.2000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)
    - ஹூவாய் P20 லைட் - ரூ.16,999 (ரூ.3000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)
    - ஒன்பிளஸ் 6 - எக்சேன்ஜ் செய்து ரூ.2000 கூடுதல் தள்ளுபடி, 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி
    - ரியல்மி 1 - எக்சேன்ஜ் முறையில் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி, 6 மாதங்களுக்கு வட்டில்லா மாத தவனை முறை

    சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,700 வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் முறையில் ரூ.10,000 வரை கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறை வசதி சலுகைகள். விவோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து ரூ.6000 கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறையில் ரூ.6000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதேபோன்று மோட்டோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.5700 வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை, வட்டியில்லா மாத தவனை முறை வசதியும், ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேன்ஜ் முறையில் ரூ.8,000 வரை கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.
    இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ அறிவித்திருக்கும் சிறப்பு விற்பனையில் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1947 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #VivoNEX


    இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ ஃப்ரீடம் கார்னிவல் ஆன்லைன் விற்பனை நடைபெறுகிறது. விவோவின் ஆன்லைன் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனை ஆகஸ்டு 7-ம் தேதி துவங்கி ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. விவோ விற்பனையின் கீழ் ஃபிளாஷ் சலுகைகள், பிரத்யேக தள்ளுபடி போன்றவை வழங்கப்படுகிறது.

    மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 5% கேஷ்பேக், தேர்வு செய்யப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ப்ளூடூத் இயர்போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவனை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஜியோ பயனர்களுக்கு ரூ.4,050 வரை சலுகை வழங்கப்படுகிறது.

    பிளாஷ் விற்பனையின் படி விவோ நெக்ஸ் மற்றும் விவோ வி9 ஸ்மார்ட்போன்கள் ரூ.1947 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஃபிளாஷ் விற்பனை சிறப்பு விற்பனை நடைபெறும் மூன்று தினங்களிலும் மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. இந்தியாவில் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,990 என்றும் விவோ வி9 விலை ரூ.20,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.



    இத்துடன் விவோ XE100 இயர்போன்கள், விவோ யுஎஸ்பி கேபிள், விவோ XE680 இயர்போன்கள் உள்ளிட்டவை ரூ.72 விலையில் ஆகஸ்டு 7, 8 மற்றும் 9-ம் தேதிகளில் தினமும் மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது.

    பிரத்யேக தள்ளுபடிகளை பொருத்த வரை விவோ வை66 ஸ்மார்ட்போன் ரூ.8490 விலையிலும், விவோ வை69 ஸ்மார்ட்போன் ரூ.9,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பல்வேறு இதர விவோ ஸ்மார்ட்போன்களான விவோ வி9 யூத், வை83 மற்றும் வை71 ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    பதிவு செய்திருக்கும் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் உபகரணங்களை வாங்கும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் போட்டிகளின் அடிப்படையில் பயனர்களுக்கு ரூ.500, ரூ.1000 மதிப்பிலான கூப்பன்களும், ரூ.500 மதிப்புள்ள புக்மைஷோ கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. #VivoNEX #smartphone #offers
    ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கும் புதிய ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் பேக் பயனர்களுக்கு 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்குகிறது. #RelianceJio #offers


    ஜியோ நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய ஆட்-ஆன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையுடன் 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். மைஜியோ செயலியில் காணப்படும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    ஆகஸ்டு 6-ம் தேதி வரை வழங்கப்படும் இந்த சலுகையில் கூடுதல் டேட்டா, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அன்லிமிட்டெட் காலிங் மற்றும் எஸ்.எம்.எஸ். சலுகைகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ டிஜிட்டல் சலுகை பிரீபெயிட் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது, மேலும் இவர்கள் ஏற்கனவே ரீசார்ஜ் சலுகையை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்.



    மைஜியோ செயலியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகவல்களின் படி சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, மேலும் இதற்கான வேலிடிட்டி ஆகஸ்டு 6 வரை மட்டுமே. 

    கூடுதல் டேட்டா அனைத்து வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகளுக்கும் வழங்கப்படுகிறதா என்ற விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை, எனினும் இதுகுறித்து வெளியாகியிருக்கும் புகைப்படங்களின் படி ரூ.399 ரீசார்ஜ் சலுகையில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர சலுகையில் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் மான்சூன் ஹங்காமா சலுகையை அறிவித்தது. இதில் பயனர்கள் தங்களது பழைய ஃபீச்சர்போனினை எக்சேஞ்ச் செய்து புதிய ஜியோபோனினை ரூ.501 விலையில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொகையும் முழுமையாக திரும்ப பெறமுடியும்.
    ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BSNL #offers


    பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் இலவச எஸ்.எம்.எஸ். வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போஸ்ட்பெயிட் சலுகைகளில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கப்படவில்லை.

    பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதிக விலையில் கிடைக்கும் சலுகைகளுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ். இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் ரூ.399 மற்றும் அதற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சலுகைகளில் குறிப்பிட்ட வேலிடிட்டிக்கு மொத்தம் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    புதிய அறிவிப்பு ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கிறது. பி.எஸ்.என்.எல் பிரீமியம் சலுகைகளிலும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படாமல் இருந்தது.

    பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் சேவைகள் தற்சமயம் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய மாற்றங்கள் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அமலாகியிருக்கிறது. அந்த வகையில் இதேபோன்ற அறிவிப்பு இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சில மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஜூன் மாதத்தில் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளிலும் அன்லிமி்ட்டெட் டேட்டா வழங்குவதாக அறிவித்தது. ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகள் மற்றும் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளில் அன்லிமி்ட்டெட் டேட்டா வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. #BSNL #offers
    ஜியோ நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு 2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம். #offers


    ஜியோ நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய ஆட்-ஆன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையுடன் 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். மைஜியோ செயலியில் காணப்படும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    மேலும் ஜியோ டிஜிட்டல் சலுதையுடன் எவ்வித அழைப்புகளோ அல்லது எஸ்.எம்.எஸ். போன்றவை வழங்கப்படவில்லை. புதிய சலுகை ஜூலை 31-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுவதாக ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ பயனர் ஏற்கனவே தினமும் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படும் ரூ.399 பிரீபெயிட் சலுகையை தேர்வு செய்திருந்தால் டிஜிட்டல் சலுகை செயல்படுத்தியதும் தினமும் 3.5 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். எனினும் இந்த சலுகை ஜூலை 31 வரை வழங்கப்படுவதால், பெரும்பாலும் பயன்பாடற்றதாகவே பார்க்கப்படுகிறது. எனினும் டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் இந்த சலுகை சில பயனர்களுக்கு ஆகஸ்டு 2-ம் தேதி நிறைவுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இதே மாதம் ஜியோ போன் மான்சூன் ஹங்காமா சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்கள் தங்களது பழைய ஃபீச்சர்போனினை எக்சேஞ்ச் செய்து புதிய ஜியோபோனினை ரூ.501 விலையில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொகையும் முழுமையாக திரும்ப பெறமுடியும்.

    எனினும் திரும்ப பெற ரூ.99 சலுகையை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அந்த வகையில் எக்சேஞ்ச் சலுகையின் படி பயனர்கள் ரூ.1095 (ரூ.501 + ரூ.594) செலுத்த வேண்டியிருக்கும். ரூ.99 ஜியோபோன் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 0.5 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. #jio #offers
    ×