search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை கமல்ஹாசன் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    விருதுநகர்:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது என அவர் மீண்டும் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

    இந்து மதம் ஆண்டாண்டு பழமையானது- முதன்மையான மதம். கேதர்நாத்தில் உள்ள சிவாலயம் பாண்டவர்கள் வழிபட்டது. அந்த அளவுக்கு இந்து மதம் மிகவும் தொன்மையானது.

    இந்தியாவுக்கு வந்தவர்களும், ஆள வந்தவர்களும், வாழ வந்தவர்களும் இந்து மதத்தின் சிறப்புகளை அழிக்க முற்பட்டனர். அதையெல்லாம் தாண்டி இந்துமதம் தழைத்தோங்கி உள்ளது.


    கமல்ஹாசன் கூறுவது போல இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது அல்ல, இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணியின் சாயம் வெளுத்துவிடும் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறியுள்ளர்.
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியானதும், கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழந்துவிடும். தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு நாள் கூட இந்த அரசு நீடிக்காது. வெளியில் பார்ப்பதற்கு, காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல் தெரிகிறது.

    ஆனால் உள்ளே அவர்கள் மோதிக்கொள்கிறார்கள். முதல்-மந்திரி பதவியில் குமாரசாமி நீடிக்கக்கூடாது என்று சித்தராமையா சதித்திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகவே முதல்-மந்திரி பதவிக்கு எச்.டி.ரேவண்ணாவுக்கும் தகுதி உள்ளது என்று சித்தராமையா கூறி குழப்பத்தை உருவாக்கியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கூட்டணியின் சாயம் வெளுத்துவிடும். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முழுவதுமாக முடங்கிவிட்டது.

    மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. கால்நடைகளுக்கு தீவனம் இல்லை. வறட்சி பகுதிகளில் மந்திரிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. பெங்களூருவில் உட்கார்ந்து கொண்டு முதல்-மந்திரி காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினால் பிரச்சினைகள் தீராது.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் ஆகியோர் கோட்சேவை ஆதரித்து கூறிய கருத்து மன்னிக்க முடியாத குற்றம் என்று எடியூரப்பா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
    பெங்களூரு :

    காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரித்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, நளின் குமார் கட்டீல் எம்.பி. ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.அவர்கள் 2 பேரையும் கண்டித்து இன்று(சனிக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-



    காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரித்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் ஆகியோர் கருத்து தெரிவித்து இருப்பது கட்சியின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவர்களுக்கு விளக்கம் கேட்டு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நோட்டீசு அனுப்பியுள்ளார். 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் மகாத்மா காந்தி.

    ஒருவரை பற்றி பேசும்போது என்ன பேசுகிறோம் என்ற அறிவு இருக்க வேண்டும். இத்தகைய ெபாறுப்பற்ற கருத்துகளை கூறக்கூடாது. காந்தியை பற்றி கீழ்த்தரமாக பேசுவது நல்லதல்ல. அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் கூறிய கருத்து, மன்னிக்க முடியாத குற்றம்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது திங்களன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது.
    சென்னை:

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் ஹாசன் பேசிய விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது கமல் ஹாசன் மீது 76 புகார்கள் அளிக்கப்படிருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. 

    இந்த வழக்கில் நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை வரும் திங்களன்று தீர்ப்பு வழங்குகிறது.

    டெல்லியில் இன்று மாலை கூட்டாக பேட்டியளித்த பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் ‘அபாரமான மெஜாரிட்டியுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்போம்’ என தெரிவித்தனர்.
    புதுடெல்லி:
       
    பாராளுமன்ற தேர்தலில் 7-வது கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் 59 தொகுதிகளில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஒருநாள் முன்கூட்டியே 9 தொகுதிகளில் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தவிர்த்து மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று மாலை செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

    அப்போது, கடந்த 2014-ம் ஆண்டில் பெற்ற வெற்றியைவிட அபாரமான மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த தேர்தலில் 16-5-2014 அன்று முடிவுகள் வெளியானபோது காங்கிரஸ் வெற்றிபெறும் என்று பந்தயம் கட்டி இருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய தொகையை இழந்தனர். இந்த முறையும் அதை காணலாம்.

    இந்த நாட்டின் வரலாறில் நீண்ட காலத்துக்கு பிறகு அபாரமான மெஜாரிட்டியுடன் இரண்டாவது முறையாக தொடர்ந்து நாங்கள் ஆட்சி அமைப்போம் என மோடி தெரிவித்தார்.  
    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்ற சர்ச்சை கருத்தை தெரிவித்த பிரக்யாசிங்கிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை பிரக்யா சிங் தாக்குர் தேசபக்தர் என்று சான்று அளித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பிரக்யா சிங் தாக்குர் கருத்தை பாரதீய ஜனதா கட்சி ஏற்கவில்லை. கட்சியின் தலைமையில் இருந்து நெருக்கடி ஏற்பட்டதால் தனது கருத்துக்காக பிரக்யா சிங் மன்னிப்பு கோரினார். 

    இந்நிலையில் பிரதமர் மோடியும் பிரக்யா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “மகாத்மா காந்தியை அவமதிப்பு செய்த பிரக்யா சிங்கை மன்னிக்க முடியாது,” எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.
    நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கடைசி பேரணியில் பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் அதற்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது.

    பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பாஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தினார்.

    இன்று அவர் மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கோன் பொதுக்கூட்டத்தில் பேசினார். 2019 தேர்தலுக்கான மோடியின் கடைசி பொதுக்கூட்டமாகும். இந்த கூட்டத்தில் ‘‘300 இடங்களுக்கு மேல் உறுதியாக கைப்பற்றுவோம்’’ என்று பேசினார்.

    இதுகுறித்து கார்கோன் கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

    காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குட்ச் (குஜராத்) முதல் கம்ருப் (அசாம்) வரை ஒட்டுமொத்த நாடே, மோடி அரசு 300 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்று சொல்கிறது. 19-ந்தேதி வாக்களிப்பதன் மூலம் புதிய வரலாற்றை படைக்க இருக்கிறீர்கள். பல வருடங்கள் கழித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு ஆட்சியை தேர்வு செய்ய இருக்கிறீர்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது என்று கூறிய குலாம்நபி ஆசாத், மோடியை அகற்றுவதே இலக்கு எனவும் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுலிடம் ஒப்படைத்த பிறகு தீவிர அரசியல் ஈடுபாடுகளில் இருந்து சோனியா சற்று விலகியே இருந்தார். ஆனால் பா.ஜனதா கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டுமானால் 2004-ம் ஆண்டு தடாலடியாக சில எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டியது போல இப்போதும் ஒன்று திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் சோனியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதை கருத்தில் கொண்டே மாநில கட்சிகளின் தலைவர்களை 23-ந்தேதி டெல்லிக்கு வருமாறு சோனியா அழைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்றைய தினம் இரவு தனது வீட்டில் முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் விருந்து கொடுக்க உள்ளார். அவர் விருந்து கொடுக்கும் சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும்.

    அந்த தேர்தல் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க சோனியா வியூகம் வகுத்துள்ளார். சோனியாவின் ஒரே குறிக்கோள், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, பா.ஜனதா ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பது தான். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய அவர் தயாராகியுள்ளார்.

    தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர்களில் யாரை வேண்டுமானாலும் பிரதமராக ஏற்க தயார் என்று சோனியா இறங்கி வந்துள்ளார். இதை அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். 23-ந்தேதி மாலை டெல்லிக்கு வந்து விடுமாறும் அவர் மாநில கட்சி தலைவர்களை அழைத்து வருகிறார்.

    தேவைப்பட்டால் 23-ந் தேதி இரவே மாநில கட்சித் தலைவவர்களுடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்து பேசவும் சோனியா திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒரு நிமிடத்தை கூட வீணாக்கக் கூடாது என்பதற்காக சோனியா இத்தகைய முயற்சிகளை நேரடியாக மேற்கொண்டுள்ளார்.

    எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் அவரது அதிரடி வியூகத்துக்கு முதல் கட்ட வெற்றி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    சோனியாவின் இந்த அதிரடி வியூகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் சிம்லாவில் அளித்த பேட்டி வருமாறு:-

    பாராளுமன்றத் தேர்தலின் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு கட்டத்தில் நாம் இருக்கிறோம். அரசியலில் எனக்கு இருக்கும் அனுபவத்தை அடிப்படையாக வைத்து சொல்கிறேன், நிச்சயமாக பா.ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது இல்லை.



    நரேந்திர மோடியால் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு வர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை நிச்சயம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதை ஏற்று கருத்து ஒற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம். கிடைக்காவிட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.

    பிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரச்சினை ஆக்க மாட்டோம். எங்கள் (காங்கிரஸ்) தலைமை இந்த வி‌ஷயத்தில் மிக, மிக தெளிவாக உள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் விடாப்பிடியாக உரிமை கோராது.

    இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

    காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரசில் தூதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் மூவரையும் அழைத்து வரும் பொறுப்பு கமல்நாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அகமது படேல், குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோர் மாயாவதி, அகிலேஷ், மம்தாவுடன் பேசி வருகிறார்கள். இதன் மூலம் மாநில கட்சிகள் பா.ஜனதா பக்கம் போவது தடுக்கப்பட்டுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு எந்த ரகசிய உடன்பாடும் இல்லை, எங்கள் உறவுகள் வெளிப்படையானது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது .தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி நிலையாக இருக்க வேண்டும். மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தொடர வேண்டும். 23-ந்தேதி தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    மத்தியில் தாமரை மீண்டும் மலரும். தமிழ்நாட்டில் தி.மு.க. பல முறை ஆண்டு இருக்கிறது. ஆனால் அப்போது எல்லாம் தமிழகத்திற்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. இன்று மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார். அவர்கள் அதிகாரத்தில் இருந்த போது அவற்றை எல்லாம் செய்து இருக்கலாம். குறிப்பாக குடிநீர் பிரச்சனையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தொலைநோக்கு எண்ணத்தில் செயல்படாததால் இப்போது பிரச்சனை இருக்கிறது.

    காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது மோடி ஆட்சிதான். காங்கிரஸ், தி.மு.க. பலமுறை ஆட்சியில் இருந்த போதும் இதில் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.


    நடிகர் கமல்ஹாசன் தேவையில்லாத கருத்துக்களை கூறுகிறார். சினிமாவில் பேசினாலே எதிர்ப்புகள் ஏற்படும். இந்நிலையில் யார் எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும். நாம் பிரபலமாக இருப்பதால் பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறார். இப்படி பேசினால் சிறுபான்மை ஓட்டு கிடைக்கும் என்று நினைக்கிறார். நம்முடைய பேச்சுக்கு எதிர் விளைவுகள் வரும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.

    அரசியலில் கமலுக்கு இன்னும் பக்குவம் தேவை. இப்படி பேசினால் இந்துக்கள் மனம் புண்படும் என்று இவர் உணரவில்லை. கமல் பிரசாரத்தில் ஏற்பட்ட சலசலப்பை நாங்கள் வரவேற்கவில்லை . யார் தாக்கப்படுவதையும் நாங்கள் ஆதரிப்பது இல்லை. தேர்தல் பிரசாரத்தில் பல தரப்பட்ட மக்கள் கூடுவார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்தது போல இங்கு நடைபெறவில்லை. நடிகர் கமல்ஹாசன் கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு எந்த ரகசிய உடன்பாடும் இல்லை, எங்கள் உறவுகள் வெளிப்படையானது. தி.மு.க. உறவுதான் ரகசியமானது. தி.மு.க., தினகரனும் ரகசிய உறவு வைத்து உள்ளனர். கோட்சேவை தேசப்பக்தர் என்று எங்கள் கட்சிக்காரர் கூறியதற்கு அவரை கட்சி கண்டித்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கமல்ஹாசன் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் முட்டை மற்றும் கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார். அவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இரவு 9.48 மணியளவில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு அவர் சுமார் 7 நிமிடங்கள் பேசினார்.

    பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பாஜக-வின் கரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.

    இந்நிலையில் அவர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் கலவரத்தை உருவாக்குதல், சட்ட விரோதமாக கூடுவது, பொருட்களை வீசி அவமானம் படுத்துவது, கொலை மிரட்டல் மற்றும் ஆயுதம் வைத்தல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.
    போபால்:

    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.

    அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.



    பிரக்யா சிங்கின் பேச்சுக்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் தெரிவித்தார்.

    மேலும் பிரக்யா சிங் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சிறிது நேரத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டார்.

    மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராகேஷ் சிங் இதுகுறித்து கூறும்போது, “இது ஒரு பிரச்சினை அல்ல. ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். தனது கருத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்” என்றார்.

    வன்முறையால் சேதம் அடைந்த வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
    கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது. அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. சிலையை உடைத்தது பா.ஜனதாவினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பா.ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது.

    இந்நிலையில் கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் என பிரதமர் மோடி கூறினார். வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம், எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் என மம்தா பதில் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறுகையில் “கொல்கத்தாவில் மீண்டும் வித்யாசாகர் சிலையை கட்டமைத்து தருவதாக மோடி உறுதியளித்துள்ளார். எங்களுக்கு ஏன் பா.ஜனதாவின் பணம்? மேற்கு வங்காளத்திடமே போதுமான வளம் உள்ளது. சிலைகளை சிதைப்பது பா.ஜனதாவின் பழக்கமாகும். அவர்கள் திரிபுராவில் அதைதான் செய்தார்கள்.



    பா.ஜனதா மேற்குவங்காளத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை சிதைத்துள்ளது. இதுபோன்ற ஒருகட்சியை ஆதரிப்பவர்களையும் இந்த சமூகம் ஏற்காது. சமூக வலைதளங்களில் போலியான செய்தியை பரவச்செய்து பா.ஜனதா வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது” என்றார்.
    ×