search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    பிரதமரை மோசமாக விமர்சித்த விவகாரத்தில் ராகுலை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று பா.ஜனதா பெண் எம்.பி. கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் பற்றி ஆவணங்களின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று சுப் ரீம்கோர்ட்டு கடந்த மாதம் 10-ந்தேதி அறிவித்தது.

    இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நாட்டின் காவலாளி (பிரதமர் மோடி) திருடன் என்பதை சுப்ரீம் கோர்ட்டே ஒப்புக் கொண்டு விட்டது” என்றார்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ராகுல் தனக்கு சாதகமாக திரித்து கூறுவதாக பா.ஜனதா பெண் எம்.பி. மீனாட்சி லெகி, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ராகுலிடம் விளக்கம் கேட்டு கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது.

    அதற்கு பதில் அளித்த ராகுல், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க வில்லை. இதையடுத்து 2-வது தடவையாக ஒரு மனு மூலம் ராகுல் பதில் அளித்தார்.

    அந்த விளக்கமும் சுப்ரீம் கோர்ட்டுக்கு திருப்தி தர வில்லை. இதைத் தொடர்ந்து மோடியை திருடன் என்று கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக ராகுல் பதில் அளித்தார். இதைத் அடுத்து இந்த வழக்கை முடித்து வைக்குமாறு ராகுல் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

    ஆனால் இதை பா.ஜனதா பெண் எம்.பி. மீனாட்சி லெகி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஏற்கவில்லை. அவர் வாதாடுகையில் சில கோரிக்கைகளை முன் வைத்தார். அவர் கூறியதாவது:-


    பிரதமரை மோசமாக விமர்சித்த விவகாரத்தில் ராகுல் கேட்டுள்ள மன்னிப்பை இந்த கோர்ட்டு ஏற்க கூடாது. அவரது மனுவை நிராகரிக்க வேண்டும்.

    ராகுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இல்லையெனில் அவரை கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் ராகுல் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு வக்கீல் முகுல் ரோத்தகி வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

    பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும் என்றும், கடந்த தேர்தலை விட பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அமித்‌ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் பா.ஜனதா தனி பெரும்பான்மை பெறும். கடந்த 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றதை விட அதிக தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

    கடந்த தேர்தலில் வெற்றி பெறாத 120 தொகுதிகளில் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கணித்தேன். அவற்றில் 55 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். பா.ஜனதா பலவீனமாக இருந்த கடலோர மாநிலங்களிலும், கிழக்கு மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் வெற்றி பெற்றுள்ளேன்.

    அதன்படி, மேற்கு வங்காளத்தில் 33 தொகுதிகளுக்கு மேலும், ஒடிசா மாநிலத்தில் 12 முதல் 15 தொகுதிகளும் கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் கடந்த முறை பெற்றதை விட அதிகமாக, அதாவது, 73 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும்.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், அதை வரவேற்போம்.



    பிரதமர் மோடி, மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு புறப்பட தயாராக இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். யார் கிளம்ப வேண்டும் என்று 23-ந்தேதி தெரியும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சிக்கக்கூடாது என்றால், அவர் இந்திரா குடும்பத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தாலா? கடந்த காலத்தில் செய்த தவறுகளில் இருந்து ராகுலும், பிரியங்காவும் எவ்வளவு முயன்றாலும் தப்ப முடியாது.

    தேசியவாதம்தான் பா.ஜனதா தொடங்கியதில் இருந்தே எங்களது உந்துசக்தி. அதை ஓட்டுக்காக நாங்கள் பயன்படுத்தவில்லை. முப்படைகளை நாங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். மோடி அரசு முடிவு எடுத்ததன் பேரிலேயே விமானப்படை தாக்குதலில் ஈடுபட்டது.

    மோடி ஆட்சியில், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில், விலைவாசி பற்றி பேசப்படாத ஒரே தேர்தல் இதுவாகும். இந்த பெருமை மோடி அரசையே சாரும்.

    இவ்வாறு அமித்‌ஷா கூறினார்.
    காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதனால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பது உறுதி என்றும் எடியூரப்பா பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி களின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஆனால் 104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பா.ஜனதா கட்சி, ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு முன்பு பா.ஜனதா நடத்திய ஆபரேஷன் தாமரை திட்டம் தோல்வியில் முடிந்தது.

    அதே நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதிகளை ஒதுக்கியது தொடர்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதுபோல் மந்திரி பதவி கிடைக்காமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு, பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில், கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக எடியூரப்பா மீண்டும் தெரிவித்திருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-



    குந்துகோல் மற்றும் சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலை பா.ஜனதா தீவிரமாக எடுத்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறது. அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா வசம் தற்போது 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் பட்சத்தில், எம்.எல்.ஏ.க்களின் பலம் 108 ஆக உயரும்.

    கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும். அதன்மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது உறுதி.

    இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெறுவது போல, பாராளுமன்ற தோ்தலில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். மண்டியா, துமகூரு, கலபுரகி, சிக்பள்ளாப்பூர் தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைவது உறுதி. மண்டியா, துமகூரு பாராளுமன்ற தொகுதிகளில் தோல்வி அடைந்து விடுவோம் என்பதால் தான் முதல்-மந்திரி குமாரசாமியும், தேவேகவுடாவும் ரெசார்ட் ஓட்டல்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முதல்-மந்திரி குமாரசாமியோ, மந்திரிகளோ ஆர்வம் காட்டவில்லை. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    இந்தியாவின் ஒற்றமையை பிரதமர் மோடியும், அவருடைய பாரதீய ஜனதா கட்சியும் அழிக்க மக்கள் அனுமதிக்க கூடாது என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பிரசாரத்தின்போது பேசினார்.
    சங்ரூர்:

    பஞ்சாப் மாநிலம் சுனாம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கேவல் சிங் தில்லனை ஆதரித்து மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் மோடி என்னுடைய ராணுவம் என அழைக்க தொடங்கி விட்டார். ஆனால் ராணுவம் மோடிக்கு சொந்தமானது கிடையாது. இந்திய நாட்டுக்கு சொந்தமானது. நானும் இந்திய ராணுவத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்தேன். நான் இந்திய தேசத்திற்காக பணியாற்றினேன், மோடிக்காக பணியாற்றவில்லை.

    இந்தியாவின் மிகப்பெரிய வலிமையே, ஒற்றுமைதான். அதனை பிரதமர் மோடியும், அவருடைய பாரதீய ஜனதா கட்சியும் அழிக்க மக்கள் அனுமதிக்க கூடாது. 

    வகுப்புவாத அரசியலில் ஈடுபடுவோருக்கும், மதச்சார்பற்ற இந்தியாவை கட்டியெழுப்ப விரும்புவோருக்கும் இடையிலான போட்டியில், நாட்டின் எதிர்காலத்தை இந்த பாராளுமன்றத் தேர்தல் தீர்மானிக்கும். 

    இவ்வாறு அவர் பேசினார். 
    சீக்கியர்களுக்கு எதிராக 1984-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறை தொடர்பாக சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு கண்டிக்கும் வகையில் ராகுல் காந்தி வீட்டின் அருகே டெல்லி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #BJPprotests #RahulGandhi #SamPitroda #antiSikhriots
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இந்த பிரச்சனையை மையப்படுத்தி பாஜகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா ’அது 1984-ம் ஆண்டில் நடந்து முடிந்துப்போன கதை. நீங்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதித்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    ‘ஆனது ஆகிப்போனது, முடிந்துப்போன கதை’ என சீக்கிய மக்களின் உயிரிழப்பை துச்சப்படுத்தும் வகையில் சாம் பிட்ரோடா தெரிவித்த இந்த கருத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் சில சீக்கிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விவகாரத்தை மையப்படுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி வீட்டின் அருகே பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  #BJPprotests #RahulGandhi #SamPitroda #antiSikhriots
    கீர்த்தி சுரேஷ் பா.ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுந்த சர்ச்சையையடுத்து அவரது தாயார் மேனகா சுரேஷ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். #MenakaSuresh #KeerthiSuresh
    நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா. தமிழில் ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். கீர்த்தி சுரேசின் தந்தை சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளர். கீர்த்தி சுரேஷின் பாட்டியும் நடித்து வருகிறார். இந்நிலையில் மேனகா சுரேஷ் டெல்லியில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்தது பரபரப்பாகி இருக்கிறது.

    இதுகுறித்து மேனகா சுரேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    ‘என் கணவர் சுரேஷ் பா.ஜனதா கட்சியில் இருக்கிறார். ஆனால் நான் இப்போதுவரை எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கீர்த்தியும் இந்த வி‌ஷயத்தில் என்னை மாதிரிதான்.

    கணவர் சார்ந்திருக்கிற கட்சி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டெல்லி சென்று இருந்தேன். பிரசாரம் முடிந்த உடன் சினிமா பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கேட்டார்கள்.

    சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் நானும் கலந்துகொண்டேன். பா.ஜனதா அலுவலகத்திலேயே அந்த சந்திப்பு நடந்தது. குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த செய்திதான் நடிகை மேனகாவும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார்’ என்ற அர்த்தத்தில் வெளியாகி இருக்கிறது.



    கொஞ்சம் ஓவராக போய் ‘கீர்த்தியும் பா.ஜனதாவுல சேர்ந்துட்டாங்களாமே’ என்றுகூட விசாரித்திருக்கிறார்கள். ஒரு வி‌ஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன். எனக்கோ என் மகளுக்கோ அரசியல்ல ஈடுபடணும் என்ற எண்ணம் எல்லாம் இப்போதுவரை இல்லை’.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MenakaSuresh #KeerthiSuresh
    பெண் வேட்பாளருக்கு எதிராக மோசமான துண்டுச்சீட்டை நான் வெளியிட்டேன் என நிரூபித்தால் அரசியலைவிட்டு விலக தயார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார். #gautamgambhir #aap #bjp
    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக அங்கு பிரசாரம் செய்கிறார்கள். அண்மையில் பா.ஜனதாவில் இணைந்த கவுதம் கம்பீர், கிழக்கு டெல்லியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளரான அதிஷி போட்டியிடுகிறார். கவுதம் கம்பீர் 2 வாக்காளர் அட்டை வைத்துள்ளதாக ஆம் ஆத்மியை சேர்ந்த அதிஷி குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், அதிஷியை மோசமாக விமர்சனம் செய்து துண்டுச் சீட்டு ஒன்று அங்கு வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ஜனதாதான் காரணம் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டுகிறது. பா.ஜனதா கட்சியோ அதனை நிராகரித்துள்ளது, இது ஆம் ஆத்மியின் மோசமான பிரசாரம் என கூறியுள்ளது. இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால், கவுதம் கம்பீரை விமர்சனம் செய்தார்.

    இப்போது பெண் வேட்பாளருக்கு எதிராக மோசமான துண்டுச் சீட்டை நான் வெளியிட்டேன் என நிரூபித்தால் அரசியலைவிட்டு விலக தயார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.  “அவர்களிடம் நான் இதனை செய்தேன் என்று நிரூபித்தால், ஆதாரம் வழங்கினால் இப்போதே அரசியலில் இருந்து விலகுகிறேன். 23-ம் தேதி சமர்பித்தாலும் நான் விலகுவேன். இதே சவாலை கெஜ்ரிவாலும் ஏற்கவேண்டும். ஆதாரத்தை சமர்பிக்கவில்லை என்றால் 23-ம் தேதிக்கு பின்னர் கெஜ்ரிவால் அரசியலில் இருக்க கூடாது,” எனக் கூறியுள்ளார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது யாருக்கு எதிராகவும் நான் எதிர்மறையான அறிக்கையை கொடுத்தது கிடையாது. நான் கண்டிப்பாக அவதூறு வழக்கு தொடருவேன் எனவும் கம்பீர் குறிப்பிட்டார். #gautamgambhir #aap #bjp
    ராஜீவ் காந்தி பற்றிய மோடியின் பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், சாம்ராஜ நகர் தொகுதி வேட்பாளருமான சீனிவாச பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #Rajivgandhi #PMModi
    பெங்களூர்:

    பிரதமர் மோடி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ்காந்தியை விமர்சனம் செய்தார்.

    மோடி பேசும்போது, “உங்கள் தந்தை (ராஜீவ்காந்தி), அவரது விசுவாசிகளால் கறைபடியாதவர் என்று புகழப்பட்டார். ஆனால் அவரது வாழக்கை இறுதியில் ஊழல்வாதி என்றே முடிந்தது” என்றார்.

    மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “மோடியின் போர் முடிந்து விட்டது. உங்கள் கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தை மீதான உங்களது உள் நம்பிக்கைகளை பரவுவது உங்களை பாதுகாக்காது” என்று பதிலடி கொடுத்தார்.

    இந்த நிலையில் ராஜீவ் காந்தி பற்றிய மோடியின் பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், சாம்ராஜ நகர் தொகுதி வேட்பாளருமான சீனிவாச பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    சீனிவாச பிரசாத் முதலில் காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சிகளில் இருந்தார். 2016-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

    வாஜ்பாய் அமைச்சரவையில் மந்திரியாகவும் இருந்தார். அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தியை எனக்கு நன்றாக தெரியும். அவர் எப்போதுமே ஊழலில் ஈடுபட்டது கிடையாது. மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் ராஜீவ்காந்தியை ஊழல்வாதி என்று கூறியதை ஏற்று கொள்ள முடியாது.

    போபர்ஸ் வழக்கில் ராஜீவ்காந்தி மீதான லஞ்ச குற்றச்சாட்டை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. மோடியின் குற்றச்சாட்டு பொருத்தமானதல்ல. ராஜீவ்காந்தியுடன் நான் அருகில் இருந்து பழகியவன். மோடி குற்றச்சாட்டை நாட்டில் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ராஜீவ்காந்தி பற்றி மோடி இப்படி பேசியிருக்க கூடாது. அதற்கான அவசியமும் இல்லை.

    ராஜீவ்காந்தி சிறிய வயதிலேயே மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்றார். அவரை குறித்து வாஜ்பாய் போன்ற அரசியல் தலைவர்கள் நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவர் உயிரிழக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா வேட்பாளரான சீனிவாச பிரசாத்தை ஆதரித்து கடந்த ஏப்ரல் 9-ந் தேதி மோடி பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajivgandhi #PMModi
    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் உரைக்கு, 5 ஆண்டுகளில் பிரதமர் வெளிநாடுகளுக்கு டூர் தான் சென்றார் என பதிலடி கொடுத்துள்ளார். #AravindKejriwal #PMModi
    புது டெல்லி:

    இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் புது டெல்லியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,  ‘டெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மியின் ஆட்சி செயல் திறனற்று இருக்கிறது. மேலும் கெஜ்ரிவால் ஆட்சியில் சிறந்த செயல்கள் ஏதும் செய்யவில்லை. அங்கு ஒர் அராஜக ஆட்சி நடைபெறுகிறது’ என கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டிருப்பதாவது:



    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது, கருத்து சொல்வது போன்ற பணிகளில் தான் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதை தவிர எவ்வித பணிகளும் செய்து முடிக்கவில்லை. இதன் காரணமாகவே பொய்யாக தேசியவாதம் எனும் பெயரில் வாக்கு சேகரித்து வருகிறார்.   

    நீங்கள் பதிலே சொல்லமுடியாத மூன்று முக்கிய கேள்விகளை டெல்லி மக்கள் கேட்கிறார்கள்.

    முதல் கேள்வி: டெல்லி சரியாக இயங்கவில்லை என்றால் ஏன் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை?

    இரண்டாவது கேள்வி: 2014ல் பாஜக, டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்குவோம் என கூறியது.  ஏன் வழங்கவில்லை?

    மூன்றாவது கேள்வி: இம்ரான் கான் ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். #AravindKejriwal #PMModi

    சூரத்தை சேர்ந்த பாரதிய ஜனதா ஆதரவாளர் ராகுல் காந்தி போல இருந்ததால் தனது தோற்றத்தை மாற்ற 20 கிலோ வரை தன்னுடைய எடையை அதிகரித்திருக்கிறார். #PrashantSethi
    சூரத்:

    சூரத் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் சேத்தி, ஓட்டல் உரிமையாளர். கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது இவர் சமூக வலைதளங்களில் பரபரப்பான மனிதர் ஆனார்.

    பிரசாந்த் பார்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலவே இருப்பார். இவரது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களும் நண்பர்களும் இதை அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்த தகவல் வெளியே தெரிய பத்திரிகை, டிவி சேனல், சமூக வலைதளம் என்று வைரல் ஆனார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இப்போதும் அவர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். காரணம் தான் ராகுல் காந்தி போன்று தோற்றமளிக்க விரும்பவில்லை என கூறியதுதான். அதற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். மேலும் தனது தோற்றத்தை மாற்ற 20 கிலோ வரை தன்னுடைய எடையை அதிகரித்திருக்கிறார்.

    இது தொடர்பாக பிரசாந்த் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘நான் ராகுல் காந்தி போன்று தோற்றத்தில் இருக்க விரும்பவில்லை. அவர் ஒரு தேசிய தலைவர். அவரை நான் மதிக்கிறேன். ஆனால் நான் ஒரு பா.ஜனதா ஆதரவாளர். மோடியின் ஆதரவாளர். ராகுல் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அவர் தனது சாதனைகளாக எதைப் பற்றிப் பேச முடியும்? ஆனால் நாட்டின் குடிமகனாக எனக்கும் அவர் மீது மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தில் ராகுல் காந்தியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

    ஆனால் நான் மறுத்து விட்டேன். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்களுக்கு நான் எதிரானவன். ராகுலை போல் நடிக்க கூட விரும்பவில்லை’ என்று அவர் கூறியுள்ளார். பிரசாந்தின் தந்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் பிரசாந்தை இளைஞர் காங்கிரசில் சேருமாறும், அதன்மூலம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறும் பல முறை கூறியும் பிரசாந்த் மறுத்துவிட்டாராம். #PrashantSethi
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார். #veerappamoily #rahulgandhi #bjp #congress
    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,  2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும். 

    எதிர்க்கட்சிகளில் நாங்கள் முன்னிலை வகிப்போம். மாநில வாரியாக பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து பகுப்பாய்வு செய்து பாருங்கள். பாரதீய ஜனதா கூட்டணி அரசு வீழ்ந்து விடும் என்ற முடிவுக்கு நிச்சயம் நீங்கள் வருவீர்கள் எனக் கூறியுள்ளார்.

    பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி களம் இறக்குமா? என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் பெரிய கட்சி, குறிப்பாக எதிர்க்கட்சிகளில் பெரிய கட்சி. நிச்சயமாக எதிர்க்கட்சி முன்னணிக்கு நாங்கள் தலைமை வகிப்போம். அதற்கான வாய்ப்பு சாதகமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிற எதிர்க்கட்சிகள் தங்களுடன் கூட்டணிக்கு வரும் எனவும் நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.  #veerappamoily #rahulgandhi #bjp #congress

    ராஜீவ் காந்தி குறித்த மோடியின் விமர்சனத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. #Modi #AmitShah #SushmitaDev
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நம்பர் ஒன் ஊழல்வாதியாக மரணம் அடைந்தார்’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. ராகுல்காந்தியும் பதிலடி கொடுத்து இருந்தார்.

    இந்த நிலையில் ராஜீவ் காந்தி குறித்த மோடியின் விமர்சனத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    அவரது மனுவில், ‘பிரதமர் பதவி போன்ற உயரிய பொறுப்பில் இருந்து கொண்டு, ராஜீவ்காந்தி குறித்து தரக்குறைவான, அருவறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

    இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,  மோடி மற்றும் அமித் ஷா மீதான புகார்கள் குறித்து எடுத்த நடவடிக்கை குறித்த நகலுடன், கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுஷ்மிதா தேவ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி  ஆஜராகி வாதாடினார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிரான புகார்களை முழுமையாக விசாரிக்காமல், அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது என அவர் கூறினார். தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.



    ஆனால், மோடி மற்றும் அமித் ஷா மீதான 11 புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்துவிட்டதாகவும், அந்த உத்தரவு மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி குறிப்பிட்டார்.

    இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததும், நடத்தை விதிமீறல் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்துவிட்டதால், புதிய வழக்கு தேவையில்லை எனக் கூறி சுஷ்மிதா தேவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #Modi #AmitShah #SushmitaDev

    ×